யார் யார்..யார் இவர் யாரோ?

faceless

எல்லா ஊர்லயும்/எல்லா க்ரூப்புலயும் ஐடியா மணின்னு கேரக்டர் இருக்கும். மொகர புக்ல ஐடியா மணி ஆருன்னா இந்தாளை தான் சனம் கை காட்டும்.
தமிழகம் மின் மிகை மானிலமாக – தமிழ் வளர – திமுக செயிக்க – ன்னு எதிர்பாராத சப்ஜெக்டுல எல்லாம் ஐடியாங்கள அள்ளி வீசுவாரு .

தமிழ் வளரனும்னா கலைஞர் கவிதை எழுத தடை போடனும் -ரஜினி சொந்த குரல்ல பேசக்கூடாதுன்னு ஆரம்பிப்பார் .
இடையில சில உபயோகமான யோசனைகளுமிருக்கும்.

இதுல டர்ராக்கற மேட்டரு என்னன்னா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில கத்த வித்தை எல்லாம் இறக்கப்போறேன்னு அடிச்சு விட்டுக்கிட்டிருக்காரு . கடந்த ஜூலை 27 ஆம் தேதி ஒரு தனியார் டிவியில உலக எதிர்காலத்தை பற்றிய குறிப்புகள் அடங்கிய கால ஞானம் என்ற சுவடி நூலை பற்றிய இவரது பேட்டி டெலிகாஸ்ட் ஆகியிருக்குங்கறது ஹைலைட்..

தற்சமயம் ஸ்கை டிஜிட்டல்ங்கற லோக்கல் சேனல்ல இருக்காரு (காப்பிரைட்டர்) அடுத்தது மேஜர் சானல்.அதை வச்சு சினிமா -சினிமால காசு புரட்டி ஒரு பிரச்சார வாகனம் வாங்கிக்கிட்டு ஆல் இண்டியா டூர் .ஷாட் கட் பண்ணா இந்தியாவுல பிரதமர் பதவிக்கு நேரிடை தேர்தல் .நாமதேன் அடுத்த பிரதமர்னு அள்ளி விடறாருன்னு என்னத்த சொல்ல?

பாவம் .. எதையும் தாங்கும் இந்திய மக்களும் தமிழ் ரசிகர்களும் “இதையும்” தாங்க வேண்டி வந்துருமோன்னு மொகறை புஸ்தவமே பீதியில பேதியாகி கிடக்கு .
ப்ளாக் யுகத்துலருந்து மொகரை புக் வரை புதுசு புதுசா கெளப்பி விட்டு ட்ரென்டுல இருக்கிறதுதான் இவரோட பெசாலிட்டி

இவரை என்னதான் கலாய்ச்சாலும் “தம்பீ ..நாம அடிவாங்காத ஏரியாவே இல்லே”ங்கற ரேஞ்சுல ஸ்கிப் பண்ணி போய்ட்டே இருப்பாரு. தன்னை கலாய்க்கற சான்ஸை கூட அடுத்தவனுக்கு கொடுக்காம சேம் சைட் கோல் போடறதுல மன்னன்.

கவிஞர்னு சொல்லிக்குவாரு .படக்குனு விஐபிங்க ஜாதகங்களை எல்லாம் போட்டு பலன் எழுதுவாரு.என்னய்யா இது அக்கிரமம்னா “கணியன் பூங்குன்றனார் “தெரியுமா? கணியன்னா ஜோதிடர்னு அருத்தம்பாரு .

இவரோட ப்ளஸ்ஸா மைனசா தெரியாது ஆனால் தன் சோசிய எழுத்துல வாழ்க்கைய கொண்டு வந்துருவாரு -அரசியல் எழுத்துல சோசியத்தை கொண்டு வந்துருவாரு . எந்த மேட்டரு ட்ரென்ட்ல இருந்தா அதை பத்தின தன் கணிப்பை தில்லா அடிச்சு விடுவாரு .

பௌலிங்குன்னு ஆரம்பிச்சா பவுன்சர் விழறதும் சகஜம் தானே. கனிமொழிக்கு 2 ஜி மேட்டர்ல திகார் வாசமாகட்டும், 2011 த.நா.ச.மன்ற தேர்தல்ல மம்மி சக்ஸசானதாகட்டும் படபடன்னு அடிச்சு விட்டாரு .பச்சக்குன்னு உட்கார்ந்திருச்சு.அந்த சூடு ஆறிப்போறதுக்குள்ள மம்மிக்கு சசியோட முட்டிக்கும் பலான தேதிக்கு பிறவு பேட்ச் அப் நடக்கும்னு அடிச்சு விட்டாரு . நெல்லா போயிட்டிருந்த சமயம் மோடிமேட்டர்ல வாயை வச்சு செம பல்பு ..

இந்த சீரிஸ்ல மோடி பிரதமராகவே முடியாதுன்னு அடிச்சு விட்டாரு .மோடி பிரதமராவே ஆயிட்டாரு .என்னய்யா இப்படி சொதப்பிட்டிங்களேன்னா
அதுக்கும் ஒரு விளக்கம் வச்சிருப்பாரு. சோசியரு ஜட்ஜு கணக்கா விருப்பு வெறுப்பு இல்லாம இருக்கோனம். நமக்கு மோடின்னா செம கடுப்பு.அதான் அந்தாள பத்தின கணிப்பு ஊத்திக்குச்சுன்னுட்டு போயிட்டே இருப்பாரு . ரெம்ப கடுப்பேத்தினா “மோடி பிரதமர் வேலையத்தான் செய்றாரானு கில்லியா கவுண்டர் கொடுப்பாரு.
2011 தேர்தல்ல சுதேசி இதழ்ல இவர் எழுதின நாலு கட்டுரையும் பக்காவா மேட்ச் ஆயிருச்சுன்னா பாருங்களேன்.

இந்த வருசம் டைம்பாஸ்ல கேப்டன் திமுகவோட தான் சேருவாரு . கலைஞர் தான் முதல்வர்னு சொன்னாரா.. சொன்ன முகூர்த்த விசேஷம் கேப்டன் “தனியா தான் நிப்பேன்னுட்டாரு ” இப்பவும் நோ நோ ..கேப்டன் வந்தே தீருவார்னு சொல்லிக்கிட்டிருக்காரு .

மோடி பிரதமராகி 100 நாள் ஆச்சு. சனம் கயிவி கயிவி ஊத்த மோடி ஆளுங்க 100 நாள் தானேப்பா ஆச்சு . இதுல என்னத்த செய்துர முடியும்னு சால்ஜாப் சொல்லிட்டிருந்தாய்ங்க.

உடனே நம்மாளு 100 நாள்ள என்னெல்லாம் செய்திருக்கலாம்னு ஸ்டேட்டஸ் மழை பொழிய ஆரம்பிச்சுட்டாரு. அதோட விட்டாரா Thirumurugan karthikeyan என்ற பட்சி அதை இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி கொடுக்க பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி அவிக தாலிய அறுத்தாரு.

அந்த நேரம் பார்த்து மோடி ஆஸ்திரேலியா போயி கக்கூஸ் கட்ட டொனேஷன் கேட்டாரா.. என் லெட்டருக்கு பதில் போட ஸ்டாம்புக்கு காசில்லியாடான்னு அம்பது ரூவா போஸ்டல் ஆர்டர் அனுப்பி உட்டாரு . பிறவு ஆரோ சொல்ல ஆர்.டி.ஐ படி கேட்டாரு .

பிரதமர் அலுவலகம் சுதாரிச்சுக்கிருச்சு. 2014ஜூலை 16 ஆம் தேதி அனுப்பின லெட்டருக்கு அடிச்சு பிடிச்சு 2015 மார்ச்சுல பதில் வாங்கிட்டாருன்னு பாருங்களேன். கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையாங்கறாப்ல பி.எம்.ஓ ரெண்டு தபா பதில் போட்டுருச்சுங்கோ..(தீயா வேலை செய்யனும் கொமாரு ).
ஆனால் பிரச்சினை எங்க வருதுன்னா அவரோட 100 நாள் வேலை திட்டம் இப்படி ஆரம்பிக்குது ..பாவம் பிரதமர் அலுவலகத்துலருந்து கு.பட்சம் அரைடஜன் பேருக்காவது பேதியாகி இருக்கும்.

நதிகள் இணைப்புன்னு ஒரு மேட்டரை அப்பப்போ எடுத்து விடுவாரு. இதுக்கு ஆக்சன் ப்ளான் இருக்கு. இதை அமல்படுத்த பைசா புரட்டவும் நம்ம கிட்ட ப்ளான் இருக்கும்பாரு .
திடீர்னு ஒரு நாள் என் திட்டத்தோட 234 பிரதிகளை தமிழ் நாடு சட்டமன்ற சபா நாயகருக்கு அனுப்பியிருக்கேன்னு பார்சலை படம் பிடிச்சு போடுவாரு .
பதில் வல்லன்னா கார்டனுக்கு மறுபடி 234 பிரதி அனுப்புவாரு .மம்மி பரப்பன அக்ரஹாராவுல நொந்து நூடுல்ஸ் ஆகிட்டிருந்தப்போ முன் பதிவு திட்டத்துல தான் வெளியிட்ட 4 புக்கையும் -கூடவே தன் ஆக்சன் ப்ளானையும் செயிலுக்கே அனுப்பியிருக்கிறதா ஒரு அப்டேட் கொடுப்பாரு . கூரியர் காரனோட பி.ஓ.டி யை ஸ்கான் பண்ணி போடுவாரு .

இந்த மேட்டரை சி.எம்.செல்லுக்கு அப்டேட் பண்ண -பன்னீரு முதல்வரா இருந்தப்போ இவர் மனுவே ரிஜெக்ட் ஆச்சுன்னா சி.எம்.ஓ காரவிக எந்தளவுக்கு பேதியாகியிருப்பாங்கன்னு பாருங்க.

அப்படியும் நம்மாளு விடல மம்மி வெளிய வந்ததும் மறுபடி சி.எம்.செல்லுக்கு அப்டேட் . இந்த முறை உரிய அதிகாரிக்கு அனுப்பியிருக்கம்னுட்டு டாஸ்மாக் எம்.டி.க்கு அனுப்பிட்டாய்ங்க. டாஸ்மாக் எம்.டி பாவம் சின்சியரா ” கர்னாடகாவுக்கு அனுப்பின யோசனைகளுக்கு நன்றி”னுட்டு பதில் கடிதாசியும் போட்டுட்டாரு.
பதில் வந்ததேன்னு திருப்பதி போய் மொட்டை போட்டு காணிக்கை செலுத்தாம தமிழ் நாட்டை ஆள்றது முதல்வரா டாஸ்மாக் எம்.டியான்னு வில்லங்கம் பண்ணி தன் உரை வீச்சை (?) வீடியோவா போட்டிருக்காரு .

எழுத்துல மட்டும்ல விதவிதமான கெட்டப்புல ஃபோட்டோ புடிச்சு போட்டு அதுக்கும் சில ரசிகர்களை கேட்ச் பண்ணி வச்சிருக்கு பார்ட்டி.
ரசிகர்கள்னு கெத்தா சொல்லிக்கிடலாமே கண்டி அவிக இவரை டைம்பாஸுக்குன்னே வச்சிருக்காய்ங்கங்கறது கன்ஃபர்ம்.

இவரோட பெசாலிட்டி என்னன்னா மொகறை புக்குலைருக்கிற லட்சக்கணக்கான போராளிகள் மாதிரியே மதம்,சாதி, ஊழல் இத்யாதிக்கு எதிரா பயங்கரமா பொங்குவாரு. பிரபலங்களே செமர்த்தியா வாங்கிக்கட்டிக்கிற மேட்டர்ல எல்லாம் அசால்ட்டா பவுலிங் பண்ணிட்டு மூஞ்சி பல்லு உதிராம சேஃபா லேண்ட் ஆயிருவாரு .(அந்த தொழில் ரகசியம் என்னன்னு பலரும் சிண்டை பிச்சுக்கிட்டிருக்கிறாய்ங்க)

இது லூஸா -லூஸு மாதிரி நடிக்குதாங்கற சந்தேகத்துலயே இந்தாள விட்டு வச்சிருக்காய்ங்களோன்னும் ஒரு சம்சயம் வந்துரும்

இவரு தமிழ் நாட்டுக்கு தொலைவா இருக்கிறதாலயோ கொஞ்சம் வயசாயிட்டதாலயோ (சாஸ்தி இல்லிங்க 49 தான்) ,வலையுலக ஆட்டத்தோட விதிகள் ரீச் ஆகாததாலயோ ஒரு 9 வருசத்துல இவர் ப்ளாகை படிச்சவிக 2006 பேர்.

கொஞ்சம் கொஞ்சமா ட்ரென்ட் புரிபட தன் ஏரியாவுல (சோசியம்) சைக்காலஜி /செக்ஸாலஜில்லாம் கலந்து அடிக்க ஆரம்பிச்சாரா..
கொஞ்ச நாள் .. ரெம்ப கம்மி தான் 9 வருசம் உபதேச மஞ்சரி கணக்கா எழுதிக்கிட்டிருந்தாரு. நதிகளை இணைக்கறது தான் மொத வேலைம்பாரு .அதுக்கு 10 கோடி யூத்த வச்சு பெசல் மிலிட்டரி வரனும்பாரு. பிறவு பார்த்தா சில மாதங்களுக்கு அந்த ஸ்மெல்லே இருக்காது . ஏன் பாஸுன்னு கேட்டா “கூட்டம் சேர்க்கரேம்பாரு”
இவர் எழுத்துல எது சீரியஸ் எது கலாய்னே புரியாது .டுபாகூர்ங்கற வார்த்தைக்கு இவர் பொருள் சொன்ன மேட்டர் இருக்கே..

தும்கூர் இட்லின்னா ரெம்ப ஃபேமஸுங்ணா. பரந்த தமிழ் நாட்ல எல்லா ஊர்லயும் இருட்டுக்கடை அல்வா விக்கிறாப்ல எல்லா ஏரியாவுலயும் தும்கூர் இட்லின்னு விக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. தின்னு பார்த்தவன் டுபாகூர் இட்லின்னு சொல்ட்டான். இப்டித்தான் டுபாகூருன்ற வார்த்தை வந்ததுன்னு எளுதிப்பிட்டாரு .
ஆனானப்பட்ட ஞா நி சாரே உள்ளாற வந்து அருத்தம் சொல்ல வேண்டியதாயிருச்சு .

சாதாரணமா ப்ளாக் எழுதறவிக அந்த நேரத்துக்கு ஸ்பார்க் ஆனதை வச்சு ஒரு பதிவு பண்ணிட்டு மறு நாள் நகங்களை கடிச்சு மோட்டு வளைய பார்த்துக்கிட்டு புது பதிவுக்கு மண்டைய உடைச்சுப்பாய்ங்க.

ஆனால் இந்தாளு கொளுத்தி போடறதெல்லாம் தவுசன்ட் வாலா தான்.

கில்மா ஜோக்கும் -மனோதத்துவமும்

உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்

உடலுறவு முறையும் -மனோதத்துவமும்

இப்படி ஒரு தலைப்பை பிடிச்சாச்சுன்னா அதை வச்சு பல மாசங்களை ஓட்டிருவாரு .

பீலா விடறாரா? சொம்மா கலாய்க்கிறாரா? இல்லை நெஜமாலுமே இதெல்லாம் சைக்காலஜி தானான்னு சனத்தை குழப்பத்துலயே வச்சி கச்சேரி நடத்திக்கிட்டிருப்பாரு .ரஜினியை நக்கலடிச்சு ஒரு பதிவு போட்டப்போ ஆரோ ரஜினி ரசிகர் ஒருத்தரு “ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு” கேட்டு தொலைச்சுட்டாரா?

அந்த நிமிட்லருந்து இந்தாளுக்கு பிடிச்சது ஹிட் மேனியா..

ஆபிரஹாம் லிங்கனுக்கு தாடி வைக்க சொல்லி ஐடியா கொடுத்த சிறுமி கணக்கா ஒரு ஈழத்து தம்பி அண்ணா உங்க தமிழ் ரெம்ப டென்ஸா இருக்கு. (Dense) கொஞ்சம் பேச்சுதமிழிக்கு வாங்கன்னு கமெண்ட் பண்ணிருச்சா

நம்மாளு ரூட்டை மாத்தி ஃபுல் ஃபார்முக்கு வந்துட்டாரு.பதிவுகளோட தலைப்ப பார்த்தா மெர்சலாயிரும்.

கலைஞர் எழுதிய பலான கதை (வான் கோழி), வாயும்-இன உறுப்பும் ரேஞ்சுல இருக்கும்.

வாயும்-இன உறுப்பும் பதிவை பார்த்தா மனவியல்/பாலியல் ரீதியா -அனலைஸ் பண்ணி அதுல சோசியத்தையும் மிக்ஸ் பண்ணி அதிரி புதிரியா இருக்கும்.
ஈதிப்படி இருக்க முத்துக்குமார் மேட்டர்ல பெரீ ரேஷ்னலிஸ்டு கணக்கா “உள்ளதை சொல்லி” செமர்த்தியா வாங்கி கட்டிக்கிட்ட சாதனையும் நம்மாளுக்கு சொந்தம்.
சகலகலாவல்லவன்னு ஒரு நெனப்பு நம்மாளுக்கு.ஒரு தாட்டி சீரியஸ் – காமெடின்னு ப்ராக்கெட்ல போட்டு ரெண்டு பதிவு ஒரே நேரத்துல போட்டாரு.
ஒரு தம்பி பதிவுகள் ஓகே தான்.ஆனால் ப்ராக்கெட்ல உள்ள மேட்டரை மட்டும் மாத்தி போடுங்கன்னு கமெண்ட் பண்ணிருச்சு.
எது எப்படியோ நான் வேற மாதிரின்னு காட்டிக்க இவரு பண்ற அலப்பறைகள் இருக்கே ..ஸ்..யப்பா கண்ணை கட்டும். ஒரு 9 வருசம் ஆன்லைன்ல ஜோசியம் சொல்றேன்னு கல்லா கட்டிக்கிட்டிருந்த பார்ட்டி நாம சீரியசான விஷயத்தை சொன்னா கூட ஜோசியரேன்னு கமெண்ட் போடறாய்ங்க.ஆகவே ஆன்லைன் ஜோதிட ஆலோசனைக்கு கல்தானு அனவுன்ஸ் பண்ணிட்டாரு .

சனம் விடுவாய்ங்களா என்ன? இவர் கூகுள் ஆட்சென்ஸ் வாங்கியே தீருவன்னு புதுசா ஆரம்பிச்ச இங்கிலீஷ் வெப்சைட்டு நன் கொடை அனுப்பிட்டு பின்னாடியே ஜாதகம் அனுப்பிர்ராய்ங்களாம்.

இந்த கோக்கு மாக்கு ப்ரொஃபைல்காரரோட லேட்டஸ்ட் ட்ரென்டு என்னடான்னா கலைஞர் ஆதரவு ( 2006-11 கால கட்டத்துல திமுக ஆட்சியை கிளி கிளினு கிளிச்சவரு அப்டியே மாறி கலைஞரை தாங்கோ தாங்குன்னு தாங்கறாரு. இதுலயும் செம வெரைட்டி .

இவர் பதிவுல வந்து கலைஞரை விமர்சனம் பண்ணி பதிவு போட்டா
இன்னைய தேதிக்கு கலைஞர் ஒன்னும் 100% பகுத்தறிவு வாதி அல்ல . இன்னைய தேதிக்கு கலைஞர் மக்கள் பணிக்காக அனைத்தையும் இழந்து குடிசையில வாழற தியாகி அல்ல.
இன்னைய தேதிக்கு கலைஞர் ஒன்னும் 100% தமிழினத்தலைவர் அல்ல. இன்னைய தேதிக்கு கலைஞர் ஒன்னும் 100% போராளியல்ல.
ஆனால் இதுக்கே அந்த மன்சனை தோற்கடிக்க எத்தனை க்ரூப்பு கிளம்புது? ஒரே க்ரூப்பு இத்தனை க்ரூப்பை உருவாக்கி விட்டிருக்குன்னா..
கலைஞர் ஒரு வேளை 100 % பகுத்தறிவு வாதியா – மக்கள் பணிக்காக சகலத்தையும் இழந்தவரா – தமிழின தலைவரா ,போராளியா இருந்திருந்தா போட்டு தள்ளியிருப்பானுவ போல.

என்பார் .. எதிராளி என்ன செய்ய?

மொகர நூல்ல நீங்க போடற ஸ்டேட்டஸால திமுகவுக்கு எத்தனை ஓட்டு வந்திர போவுது .இதுக்கு மேல என்ன செய்ய போறிங்கனு கேட்டா..
நமக்கு தெலுங்குல நல்ல கமாண்ட் இருக்கு பாஸ்.. சென்னை சிட்டியில தெலுங்கு பாப்புலேஷன் அதிகம். மேலும் ஆந்திரா பார்டர்லயும் தெலுங்கு சனம் சாஸ்தி .
தலைமை கூப்டா தெலுங்குல சவுண்டு விட்டு ஓட்டு சேகரிப்பம்ங்கறாரு . இதெல்லாம் எங்கே போய் முடிய போவுதோ?

வால் துண்டு (டெய்ல் பீஸ்)

கட்சி ,தேர்தல் அறிக்கை , எதிர்கால ஆட்சி இத்யாதி மேட்டர்ல கலைஞரும் ஸ்டாலினும் என்னெல்லாம் பண்ணலாம்னு கடந்த பிப்.22 ஆம் தேதி கோம்போ பேக்ல யோசனைகளை அனுப்பியிருக்காராம்.
தப்பி தவறி உடன் பிறப்பேனு விளிச்சு கலைஞர் பதில் கொடுத்து தொலைச்சுட்டா? ஹ்ம்..எதையும் தாங்கும் மொகர புஸ்தவம் இதையும் தாங்கும்னு தான் நினைக்கிறேன்..

இன்னைய தேதிக்கு கூகுள் ப்ளஸ்ல இவரோட ப்ரொஃபைலுக்கு கிடைச்ச வ்யூஸ் 27 லட்சம் ப்ளஸ்

2 Replies to “யார் யார்..யார் இவர் யாரோ?”

Chokkalingam Ramanathan

22/03/2016 at 12:49 pm

ஒரு நல்லது நடப்பதுக்கு விளம்பரம் வேண்டும் என்றால் விளம்பரம் நல்லது தான் …

நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்

யார் யார் சிவம்?
நீ நான் சிவம்,
வாழ்வே தவம்,
அன்பே சிவம்.

வேற யார் நம்ம அண்ணன் சித்தூர் .S முருகேசன்

Reply

  S Murugesan

  22/03/2016 at 2:12 pm

  வாங்க சொக்கலிங்கம் ராம நாதன் !

  காலையில ஒருத்தருக்கு சுய எள்ளல் பற்றி உபதேசம் பண்ணேன். ஊருக்கு தான் உபதேசமான்னு ஆரும் கேட்டுரக்கூடாதில்லை.அதனாலதேன் இந்த பதிவு .மத்தபடி விளம்பரம்?

  ஊரறிஞ்ச பார்ப்பானுக்கு பூணூல் எதுக்கு?

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *