காசு பணம் துட்டு மணி மணி : 9 ஆவது கேட்டகிரி (பரிகாரம்)

1

அண்ணே வணக்கம்ணே !

உலக மனிதர்களை 9 கேட்டகிரியா பிரிச்சு அவிக பொருளாதார தேக்கத்துக்கு காரணங்களையும் -பரிகாரங்களையும் சொல்லிட்டு வரேன். இந்த தொடரின் கடைசி அத்யாயம் இது. அடுத்த தொடருக்கான அறிவிப்பையும் இதுலயே கொடுத்திருக்கன்.இந்த அத்யாயம் ஒன்பதாவது கேட்டகிரி சனத்தோட பொருளாதார தேக்கத்துக்கான காரணங்கள் மற்றும் பரிகாரங்களை உள்ளடக்கி இருக்கு .பதிவுக்க்கு போயிரலாமா?

1.தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அரசியல்ல பிரமாதமான நடிகர்கள்ளாம் உண்டு.கமலே அந்தளவுக்கு நான் சிறந்த நடிகனில்லேன்னு சொல்ற அளவுக்கு இருக்காங்க.ஆனால் விஜய்காந்தை பாருங்க.. கேமரா முன்னே என்னமா நடிக்கிறாரு .ஆனால் நிஜ வாழ்க்கையில த்தூனு துப்பிர்ராரு.தூக்கி அடிச்சுருவன் பார்த்துக்கன்னிர்ராரு இது கேப்டன் மேட்டர்ல ஒர்க் அவுட் ஆயிருச்சு.ஆனால் சாதாரணர்கள் விஷயத்துல? டங்குவார் அந்துரும்.
இவிக பெண்ணா இருந்தா போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே ,எலக்ட் ரானிக்ஸ் தொடர்பான கல்வி /பயிற்சி முடித்து ஒர்க்கிங் விமனா போனா பிரச்சினையே இல்லை.தப்பிதவறி ஹவுஸ்வைஃபா இருந்தா சிக்கல்வரும்.

ஒரு யுத்தத்தையே நடத்தி முடிக்கிற கப்பாசிட்டி உள்ள ஆள் செயல்படவே வாய்ப்பில்லாத நிலையில இருந்தா அது இவிக உடல் நிலையை பாதிக்கும். குறிப்பா ப்ளட்ப்ரஷர்,அல்சர் . மாதவிலக்கு சக்கரத்தில் குளறுபடி .

இவிக பொருளாதார தேக்கத்துக்கும் – நெருக்கடிக்கும் இந்த குணம் முக்கிய காரணம்.

2.பேரறிஞர் அண்ணாவுக்கு கான்சர் வந்திருக்கு. ட்ரீட்மென்டு ஓடிக்கிட்டிருக்குன்னு தெரியும்.அந்த சமயம் ஏதோ ஒரு விவாதத்துல எதிர்கட்ச்சிக்காரவிக “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன”ங்கறாய்ங்க. அதுக்கு அண்ணா சென்ன சொல்றாரு? “எங்கள் காலடிகள் அளந்தே வைக்கப்படுகின்றன”
அந்த சிச்சுவேஷன்ல அண்ணா இல்லாம வேற நபர் இருந்து உங்கள் எலும்புகளும் எண்ணப்பட போகின்றனனு சொல்லிட்டு தூக்கி அடிச்சிருந்தா? மேட்டர் ஓவர். சட்டசபை ரத்து -கவர்னர் ஆட்சினு எல்லா இழவும் நடந்திருக்கும்.

இவிக பொருளாதார தேக்கத்துக்கும் – நெருக்கடிக்கும் இந்த குணம் -துடுக்கான பேச்சு முக்கிய காரணம்.

3.என் தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடேன்னு ஒரு மேட்டர் இருக்கு. டாக்டர் ஷாலினி ஒரு தொடர்ல அம்மாங்கறவ பையனை எப்படில்லாம் உபயோகிச்சுக்கிறான்னு எழுதியிருக்காய்ங்க. செம மேட்டரு. சில அம்மாக்கள் தன் எதிரிகளை ஒழிச்சுக்கட்டவோ /தன் எதிரிகளை மகனோட எதிரியா எஸ்டாப்ளிஷ் பண்ணவோ ரெம்பவே மெனக்கெடுவாங்க.அந்த மாதிரி அம்மா வவுத்துல பிறந்து தொலைச்சா நாஸ்தி தான்.

எங்க பக்கத்துல ஒரு க்வாக் (போலி டாக்டரு) ஊர்ல உள்ள ரெண்டு அடிதடி க்ரூப் தலைவனையும் தன் க்ளினிக்ல வச்சு டீல் பண்ற பார்ட்டி .ஆனால் என்னாச்சு? வீடு கட்டறப்ப பக்கத்து வீட்டுக்காரன் இடத்துல சில அடிகள் சேர்த்து கட்டிக்கிட்டாரு. மேற்படி ரெண்டு க்ரூப் லீடர்ஸுல ஒருத்தன் கொஞ்சத்துல கொஞ்சம் நியாயம் பார்த்து ஒரு ஸ்டாண்ட் எடுக்க அவன் கட். இவருக்கு ஆதரவா இருந்தவன் வளரவே இல்லை.இவர் கட் பண்ணி விட்டவன் முடி சூடா மன்னனாயிட்டான். ஆக வீடு மேட்டரும் ஒரு ஆப்பு தான்.

அடுத்தது வாகனம். பார்க்கிங்ல ஆரம்பிச்சு ,ஷோ ரூம் டீலர், சர்வீஸ் சென்டர்,மெக்கானிக்,சக வாகன ஓட்டி ,ட்ராஃபிக் போலீஸ்னு எத்தனை பிரச்சினைக்கு வாய்ப்பிருக்கு? இந்த கேட்டகிரி சனத்துக்கு இந்த எல்லா பிரச்சினையும் வந்து ஆப்படிக்க வாய்ப்பிருக்கு .
டிகிரி ஃபைனல் இயர் எக்ஸாம்ஸ் நடக்குது. அன்னைக்கு பேங்கிங் எக்ஸாம். ஹால்ல உட்கார்ந்திருக்கம்.இன்விஜிலேட்டர் ஹால் டிக்கெட் கேட்கிறாரு .பிக் பாக்கெட்ல கைய விட்டா காணம். செரி ஒரு ஃபோட்டோ ஒட்டி விவரம் எழுதி க்ளாஸ் டீச்சர் கிட்டே ஒரு கை.எ வாங்கி ப்ரின்சிப்பல் கிட்டே ஒரு கை .எ வாங்கிட்டு வான்னாங்க.

க்ளாஸ் டீச்சர் இதான்டா சான்ஸுன்னு பெருசா பில்டப்லாம் கொடுத்தாரு ( நீ என் க்ளாஸா? நான் பார்த்ததே இல்லையே எட்செட் ரா) போங்கடா கொய்யால ..யுவர் காலேஜ் மை ஃபுட்.மை செல்ஃப் வாக்கிங் யூனிவர்சிட்டின்னு பஞ்ச் விட்டுட்டு வந்துட்டம்.

ஒரு சாதாரணர் லைஃப்ல இப்டி நடந்தா அவர் கதி என்ன?

4.காந்தி,இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய்,விபிசிங்,நரசிம்மராவ்லாம் தங்கள் வாரிசுகளோட மேட்டர்ல என்னெல்லாம் அவதி பட்டாங்கனு ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க. இவிக விஐபிங்கறதால சமாளிச்சுட்டாய்ங்க. இதுவே ஒரு சாதாரணனோட வாரிசுகள் இப்படி அச்சானியமா எதுனா பண்ணி தொலைச்சா அந்த ஜாதகர்கள் கதி என்ன?

ஒரு பார்பர். ஒரு வீணா போன வெட்டி முண்டம். பார்பர் வேலையா இருக்கான் (ஷேவிங்) இந்த தண்டம் வந்து ஓசி டீ கேட்டு லொள்ளு பண்ணுது .பார்பர் ஒரு செகண்ட் உ.வ பட்டுட்டான். கையில இருக்கிறது கத்திங்கறத மறந்துட்டான்.கையில உள்ளதை உதறி ஓடிப்போ நாயேன்னான். கத்தி அந்த தண்டத்தோட உதட்டுல மாட்டிக்கிச்சு .பொள பொளனு ரத்தம்.இப்டில்லாம் இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

5.அந்த காலத்துல வாத்யாரு சி.எம் .மம்மியோட ப்ரப்போசலை டிஸ் அப்ரூவ் பண்ணிட்டு கேன்வாயோட தலைமை செயலகம் புறப்படுவாராம்.இடையில வயர்லெஸ் தகவல் வரும்.மம்மி மணி கட்டை அறுத்துக்கிட்டாய்ங்க.ஒடனே சி.எம் கேன்வாய் யு டர்ன் போட்டு ரிட்டர்ன் ஆகுமாம். செல்லாவிடத்து சினம் தீது -அதுக்காவ வாயில்லாத பூச்சிகளை நசுக்கிரலாம்னுல்ல. அவிக மேட்டர்லயும் அடக்கி வாசிச்சா உடம்புக்கு நல்லது . இல்லின்னா பொளப்பு நாறிரும்ல?
ஒரு தலை காதல்/ அல்லது காதலியை மணந்து அவரால் /அவருடன் பிரச்சினைகள் வந்து அவதிப்படுவாங்க . அல்லது எதிரிகள் குடும்பத்தில் பெண் எடுப்பாங்க. அல்லது பெண்ணெடுத்த வீட்டுடன் விரோதம் வரும்.

6. நம்ம நண்பர் ஒரு நாட் நாட் பில்டிங் வாங்கினாரு (சைட் வேல்யூதான்) டிப்பரை காட்டினா போதும் பொல பொலனு உதிர்ந்துரும்.அதுல வில்லங்கம். நம்மாளு துணிஞ்ச கட்டை தான்.ஆனாலும் லீகலாவே போவம்னு இருக்க-ஆக்கிரமிப்பாளர் மராமத்துக்கு செங்கல்,மண் ஓட்டி வைக்க இவரு போய் வேணாம்டா இதெல்லாம் ஓவரு .மொத்தமா உட்கார்ந்துக்கிட்டா என்ன தான் உள்ள வச்சுருவாய்ங்கனு சொல்ட்டு வந்தாரு.என்ன ஆச்சு? நாலு எலைங்க வந்து கடையில கவுண்டர்ல இருந்த ஆளை பட்டிப்பார்த்துட்டு பூட்டாங்க.கோர்ட்ல கேஸு நடக்குது .பில்டிங் வேல்யூ ஒரு கோடி .வட்டி என்னாச்சு பாருங்க. இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

7.நம்மாளு சோஃபா தயாரிப்பாளர். ராத்திரி பூட்டிக்கிட்டு வீட்டுக்கு போனாரு .காலையில 8 மணிக்கு கடையிலருந்து புகை வருதுப்பான்னு ஃபோன் வந்தது .கடைய திறந்து பார்த்தா எல்லாம் கருகி கிடக்கு. நிலம் விரயமாகும். சகோதரர் வழியில் நட்டம். ரத்தம்-ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை வரலாம்.போலீஸ் பிரச்சினையும் வரலாம். அதி உஷ்ணம்,நெருப்பு,மின்சாரம்,அமிலம்,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகளால் பிரச்சினை வரலாம். கோபத்தால் சில பிரிவுகள்கூட ஏற்படலாம்.இதெல்லாம் இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

8.ராஜீவ் காந்தி ராத்திரி வெடிச்சு சிதறப்போறாரு (கடக லக்னம் சிம்ம ராசி ) அன்னைக்கு ராத்திரி நம்ம லைஃப்ல நடந்த இன்சிடென்ட் இது . ( நம்முதும் கடக லக்னம் சிம்ம ராசி )

அந்த காலத்துல நாம பேச்சிலர் .குப்பைக்கு டஸ்ட் பின்லாம் போதாதுன்னு அரிசி டின்னை வச்சிருந்தம்.தம் அடிச்சுட்டு சரியா அணைக்காம போட்டுட்டாப்ல இருக்கு. நள்ளிரவு ரூம் எல்லாம் ஒரே புகை /மூச்சு திணறுது .

நடிகை மஞ்சுளா கட்டில்லருந்து விழுந்துதானே செத்துப்போனாங்க?இவிக லைஃப்ல இதெல்லாம் அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?
செரி இவிக பொருளாதார ரீதியா ரிலீஃப் ஆகனும்னா என்ன பண்ணனும். பரிகாரங்களையும் இந்த பதிவுலயே பார்த்துரலாம். இந்த தொடரை இந்த பதிவோட முடிச்சுட்டு அடுத்த தொடரை ஆரம்பிச்சுருவம்.

தலைப்பு:அரசியலும் -நவகிரகங்களும்

ஜாதகத்துல சூரியன் உள்ளிட்ட 9 கிரகங்கள் எந்தெந்த நிலையில இருந்தா பிரதமராகலாம் கு.பட்சம் கவுன்சிலராகலாம்னு பார்ப்பம். இந்த தொடர்ல உள்ள சிறப்பு என்னன்னா ஜாதகமே இல்லாட்டியும் உங்க வாழ்க்கை நிலையை வச்சே குறிப்பிட்ட கிரகம் உங்க ஜாதகத்துல வலிமையா நின்னிருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க முடியும்.

ஓகே ..இப்ப 9 ஆவது கேட்டகிரி சனத்துக்குண்டான பரிகாரத்தை பார்த்துரலாம்.

போலீஸ் ஆஃபீசர் போன்ற கெட் அப்,ஹேர் ஸ்டைல் ,மீசை என்று மாறவும். சஃபாரி சூட் அணியலாம்.(பாக்கு நிறம்) ரத்த தானம் செய்க.ஆண்,பெண் இருபாலாருமே கராத்தே ஜூடோ மாதிரி மார்ஷல் ஆர்ட்ஸ் கற்கலாம். கு.பட்சம் ஸ்போர்ட்ஸ் ட்ரஸ் /வாக்கிங் அல்லது ஜாகிங்.
சமையலுக்கு நல்லெண்ணெய் (செக்கு) உபயோகிக்கவும்.ரத்த விருத்தி -ரத்த சுத்திகரிப்புக்காக ப்ராக்டிக்கலாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.(மருத்துவர் ஆலோசனை பெற்று) உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்ப்பது ,ரேப்பிட் ப்ரீத்திங்,பிராணயாமம், வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி ,யோகா இப்படியாக.
வாகனங்களை/வீட்டின் மின்சார உபகரணங்களை உரிய வகையில் பராமரிப்பது – கவனத்துடன் கையாள்வது நல்லது .வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி யோகா,அதிகளவு சுத்தமான குடி நீர் அருந்துதல்

கழுத்தில் முருகன் கை வேல் உருவ டாலர் -பாக்கு நிற கயிற்றில் அணிக. யூத்தா இருந்தா ஃபேன்ஸி ஸ்டோர்ல கிடைக்கும் புலி,சிங்கம் மாதிரி டாலர்கள் /ஏதேனும் ஆயுதவடிவ டாலர் அணியலாம்.பெண்கள் இவற்றை தமது கீ செய்ன்ல கோர்த்துக்கலாம்.இடுப்பில் அணியலாம்.

கந்தர் சஷ்டி கவசத்தில் “குத்து குத்து கூர்வடிவேலால் என்று துவங்கும் பகுதியை மட்டுமாவது மனப்பாடம் செய்து அவ்வப்போது சொல்லி வரவும்.
ஜாதகர் பர்ஸ் பாக்கு நிறத்தில் இருக்கட்டும் அதில் தேவ சேனாதிபதி வடிவில் இருக்கும் முருகன் படம் இருக்கட்டும்.கண்,தொண்டை குறித்த முன்னெச்சரிக்கை அவசியம் (உ.ம் விட்டமின் ஏ கொண்ட உணவுகள்,பொன்னாங்கண்ணி போன்ற கீரை வகைகள். அதிக சூடு,குளிர்ச்சி உள்ள பானங்களை தவிர்த்தல் .
இதுவரை சொன்ன பரிகாரங்களை தாயும் செய்யவும். வீட்டு ஹால்ல போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை . ஹால் சோஃபா கவர்,ஸ்க்ரீன்ஸ் பாக்கு நிறம். வண்டி வாகனத்தில் முருகன்,வேல் ஸ்டிக்கரிங், யூத்துன்னா சேகுவாரா ஸ்டிக்கர் போட்டுக்கங்க.

மாணவர்கள் பாக்கு நிற ஸ்கூல் பேக் யூஸ் பண்ணுங்க.அதுமேல ஏதேனும் ஆயுதம் அல்லது புலி சிங்கம் மாதிரி உருவம் இருந்தா பெஸ்ட்.புக்ஸுக்கு பாக்கு நிற அட்டை போட்டுக்கோங்க. அண்டர்லைன் பண்ண பாக்கு நிற ஸ்கெட்ச் யூஸ் பண்ணலாம்.

இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க வாரிசுகளும் மேற்கொள்ளனும்.நீங்க தேவசேனாதிபதி ,நரசிம்மர் ,வேல் இத்யாதிகளை தியானம் செய்யலாம்.
இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க மனைவியும் மேற்கொள்ளனும். இடுப்பில் பாக்கு நிற கயிற்றை அணியலாம்.அல்லது பெல்ட் .பெல்ட்டின் முகப்பில் ஆயுதம்/புலி/சிங்கம் உருவம் இருந்தா பெஸ்ட். திருமணமான பெண்கள் தம் தாலியில் பவழக்கல் பதித்துக் கொள்ளலாம்.

இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க அப்பாவும் மேற்கொள்ளனும்.அப்பா,அப்பா வழி உறவு,சொத்து,சேமிப்பு,முதலீடு,வெளி நாட்டு தொடர்பு சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்ஸ் எல்லாம் ஒரு ப்ரவுன் கலர் ஃபைல்ல போட்டு வைங்க.மேல தேவசேனாதிபதி ஸ்டிக்கர் ஒட்டி வைக்கவும்.

தூரப்பயணம் போகும் போது பாக்கு நிற ஏர் பேக்-அது மேல தேவசேனாதிபதி உருவத்தை ஃபேப்ரிக் பெய்ண்ட்ல எழுதி வச்சுக்கோங்க.

படுக்கையறையில் போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை . இடுப்பில் ஏதேனும் ஆயுதம் ( ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும் -கழுத்துல போட்டுக்க விற்பாங்க. அதை இடுப்புல அரை ஞான் கயிற்றில் கட்டி கொள்க) தேவ சேனாதிபதி வடிவில் இருக்கும் முருகன் படத்தை படுக்கையறையில் வைத்து வணங்கி வரவும்.வேல் பூஜை செய்யவும்.செப்பல்ஸ் /ஷூஸ் ப்ரவுன் கலர் பெஸ்ட்.

ஸ்..அப்பாடா டீல்ல விட்ட எத்தனையோ தொடர்கள் மாதிரியில்லாம இதை முடிச்சுட்டம்.அடுத்த தொடர் விரைவில் ஆரம்பம்.
உடுங்க ஜூட்டு .

2 Replies to “காசு பணம் துட்டு மணி மணி : 9 ஆவது கேட்டகிரி (பரிகாரம்)”

dheeraj

11/03/2016 at 11:23 am

Ayya Vanakkam,
Oru male jathagathai parthu varapora wife rasi enna solla mudiyuma ,enna calculations ayya sila jathagar name ,rasi correct ah solranga pls solunga?

Reply

    S Murugesan

    11/03/2016 at 2:05 pm

    தீரஜ் !
    எதிர்கால மனைவினு ஒரு தனிப்பதிவே போட்டிருப்பேன்.இங்கே தேடிப்பாருங்க.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.