காசு பணம் துட்டு மணி மணி : 17 (ஏழாவது கேட்டகிரி)

DSC_7984

அண்ணே வணக்கம்ணே !
உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம்.

இதுவரை 6 கேட்டகிரிகளைபைசல் பண்ணிட்டம்.இந்த பதிவுல ஏழாவது கேட்டகிரிய பத்தி சொல்லோனம். தலைக்கு மேல வேலையிருக்கு (சலூன் மேட்டரை சொல்லல- நேரத்தை மிச்சம் பிடிக்க -காசை இல்லிங்கோ -ஆன்லைன்ல ட்ரிம்மர் ஒன்னு வாங்கி வச்சிருக்கம்ல)
டிசம்31 க்கு கடைய மூடிட்டாலும் வரிசையில நின்னுட்டவிகளுக்கு ஓட்டு போட வாய்ப்பு தராப்ல டிச 31க்குள்ள காசு போட்டுட்டுட்டவிகளுக்கு சர்வீஸ் கொடுத்தே ஆகனும்ல?

இங்கிலீஷ்ல சைட்டுன்னு அறிவிச்சு ஒப்பேத்திக்கிட்டிருக்கமே கண்டி எதுவும் திருப்தியா இல்லை (அதான் பாஸ்..ஹிட்ஸ்) ட்ரான்ஸ்லேட்டர்னு ஒரு பட்சிய பிடிச்சம்.ரேட்டு என்னமோஅடி மாட்டு ரேட்டு தான்.குவாலிட்டியும் அதே போல இருக்கே.

அன்னார் அடிச்சு போட்டுட்டதை ரிப்பேர் பண்ற வேலை இருக்கு .ஜெயாவின் எதிர்காலம் பலனோட நிற்குது .தசாபுக்தில தானே த்ரில்லே இருக்கு .அடுத்து கலைஞர் ஜாதகத்தை வேற தூசு தட்டோனம். நிற்க பதிவுக்கு போயிரலாமா?

இந்த தொடர்ல 4 ஆவது கேட்டகிரியா சொல்லப்பட்ட சனத்துக்கும் இவிகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கும்ங்கற பாய்ண்டோட ஆரம்பிக்கலாம்.
முறையற்ற முறை- வித்யாசமான சிந்தனை -சமூகம் ஏன் அரசு கூட ஏற்காத மேட்டர்ல எல்லாம் ஆர்வம்,முயன்று பார்த்தல் ங்கறதெல்லாம் 4 ஆவது கேட்டகிரி போலவே இருக்கும்.

அவிகளுக்கும் இவிகளுக்கும் என்ன வித்யாசம்னா அவிக ஜஸ்ட் திருட்டு மாங்கா ருசிக்காக வேலி தாண்டுவாங்க.எவனாச்சும் மாங்கா மடையனான தோட்டக்காரன் மாட்னா திருடி-ருசியும் பார்த்துருவாங்க. அப்படியே மாட்டிக்கிட்டாலும் பல சமயம்விதம் விதமா வளைஞ்சு நெளிஞ்சு -நடிச்சு -நம்பவச்சு தப்பிருவாங்க.
ஆனால் இந்த 7 ஆவது கேட்டகிரி பட்சிகள் ஜஸ்ட் ஒரு ஆராய்ச்சிக்காக இனம் புரியாத உள்மன தூண்டுதல் காரணமா தங்களோட வித்யாசமான சிந்தனையை பரப்புவாய்ங்க. செயலாக்க ட்ரை பண்ணுவாங்க.அது செயலாகுதோ இல்லையோ தர்ம அடி மட்டும் கியாரண்டி .லாஜிக்கே இருக்காது .

உதாரணமா வெளி நாட்ல வேலை வாங்கி தரேன்னு ஆசைய தூண்டி ஆட்டைய போடனுனே ஆட்டைய போட்டு கம்பி நீட்டிர்ரது நாலாவது கேட்டகிரி.(பிறவு போலீஸ்ல சிக்கறது சிக்காதது அவிகவிக ஜாதகராசி)

ஆனால் பல வருசம் நம்பிக்கையா நடந்து -பல நூறு பேரை ஃபாரின் அனுப்பி வச்சவன் ஒருத்தன் இருக்கான். அவனுக்கு ஏதோ பிரச்சினை .ஒரு வாரத்துல கம்பி நீட்டிரப்போறான்னு வைங்க.அந்த நேரம் பார்த்து கால் காசும் லாபமில்லாம தன்னோட சேர்த்து நாலு பேர்க்கிட்டயும் காசு வாங்கி அந்த ஏஜென்டுக்கு கொடுத்து லிங்க் பண்ணி -அவன் ஓடிப்போக -இவனுக்காக அழமுடியாம பேந்த பேந்த முழிக்கிறது ஏழாவது கேட்டகிரி.

பிறமதம் -பிறமொழியினர்னு வந்தா நாலாவது கேட்டகிரி காரன் பொய்யாவாச்சும் வேஷம் போட்டு வசனம் விட்டு எதிராளி தலை மறைஞ்சதும் இந்த துலுக்க கம்னாட்டியெல்லாம்னு பேச ஆரம்பிச்சுருவான்.ஆனால் அவன் பல காலம் சிக்கவே மாட்டான்.

இந்த மேட்டர்லயும் 7 ஆவது கேட்டகிரி காரவிக அதிர்ஷ்டம் கட்டை . இவன் மனசுல என்னமோ எம்மதமும் சம்மதம் ,உலக பொது மொழி அன்பு இத்யாதி நம்பிக்கைல்லாம் இருக்கும்.இதை நம்பறதோட கடைபிடிக்கிறவனாவும் இருப்பான்.ஆனால் சந்தர்ப்ப சூழ் நிலை காரணமா மதவெறியன் -மொழி வெறியன்னு பேரா போயிரும்.

இதரலட்சணங்கள்:
மெலிந்த உடல் அல்லது பயங்கர நீர் உடம்பு .பூனைக்கண்,பேச்சில் விரக்தி,தத்துவம்,சர்வமத சாரம் ஆனால் தொடர்ச்சி இருக்காது எரிச்சலூட்டும். குடும்பத்தை பிரிஞ்சிருப்பாங்க அல்லது குடும்பம் இவிகளுக்கு ஒத்துழைப்பு தராது .

இளைய சகோதரம் இல்லாமலே இருக்கலாம்.அல்லது சதா இவிக உதவியை எதிர்ப்பார்க்கும் நிலையில் இருக்கலாம்.பயண வெறியர்கள்.கால் நடையா கூட கிளம்பிருவாங்க.வேதத்தை விட வேதாந்தம், மதத்தை விட ஆன்மீகம், ஆன்மீகத்தை விட மனிதம் குறித்த பேச்சுக்கள் ருசிக்கும்.

தாய்,பிறமத நம்பிக்கையாளராய் இருக்கலாம்.வீட்டில் விஷ பிராணிகள்/செதில். அன்னியமதத்தினர் ,பிற மொழியினர் மத்தியில் வீடு அமையலாம்.வண்டி? கு.பட்சம் ஹார்னாவது டிஃப்ரன்டா இருக்கும்.முட்டாள்னு சொல்லமுடியாது.ஆனாலும் அகடமிக் எஜுகேஷன்ல பிரச்சினை வரலாம்.

எதையும் சந்தேகித்து தர்கித்து நம்பிய பின் உயிரையும் பணயம் வைக்கும் கேஸ்.வேட்டியையே உருவிட்டாலும் எதுவுமே நடக்கல போல நடந்து மெர்சலாக்கிருவாங்க.

புருசன்/பொஞ்சாதி மேட்டர்லயும் பேட் லக் தான்.மனசுக்கேத்த மணவாளனா இருந்தா வறுமை/நோய் .அல்லது நித்தம் இவர்களை விரக்தி /ஞானம் நோக்கி தள்ளும் கேரக்டர் வாழ்க்கை துணையாக அமையும்.

கொஞ்சம் மைன்ட் மெச்சூர் ஆற வரை ஆறாவது கேட்டகிரி கணக்கா சுகானுபவங்களுக்கு ஏங்குவாய்ங்க.ஈடுபடுவாங்க.இந்த ஆட்டத்தின் காரணமா பாடி கொஞ்சம் காட்பாடி தான்.

அல்லது ஜீன்,என்விரான்மென்டல் காஸஸ் காரணமா அடக்கி வாசிச்சிருந்தா லாஜிக்கே இல்லாத நூதன சதை வளர்ச்சி,வீக்கம்,கட்டின்னு அவதிப்படுவாங்க.
அப்பா மேட்டர்ல இவிகளுக்கு மிஞ்சறது எப்படி வாழக்கூடாதுங்கற ஞானம்.அல்லது அவர் ஒழுங்கா வாழ்ந்திருந்தா ஒட்டு உறவு இல்லாம ஆயிர்ரது .வில்லங்கங்களோடு கூடிய சொத்து .

ஆறுதல்:
இவிக பிறந்த ஊரு நாட்டை பிரிஞ்ச பிறவு லைஃப் பெட்டராகும்(பெஸ்ட் அல்ல) அதே நேரம் புத்தி விகசிக்கும்.
தொழில் உத்யோகம் வியாபாரம்:

4ஆவது கேட்டகிரிக்கு சொன்னவை இவர்களுக்கும் பொருந்தும்.ஆனால் ஏமாத்தனுங்கற எண்ணமே இல்லாம சூழல் காரணமா ஃப்ராடுங்கற பேர் வாங்கலாம்.எதிலும் தொடர்ச்சி இருக்காது .ப்ரேக் இருக்கும்.

சம்பாதனை கொஞ்சமா இருந்தாலும் அல்லல் அலைச்சல் இரட்டிப்பா இருக்கும். தப்பி தவறி கூடுதலா சம்பாதிச்சுட்டா போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,ஆஸ்பத்திரின்னு அலையவேண்டி வந்திரும்.

மூத்த சகோதரம் இல்லாதிருக்கலாம்.அல்லது தனிக்கட்டையா இருப்பாங்க.( பேச்சிலர்/டிவோர்சி/விடோயர்) சட்டப்படி நியாயப்படி கிடைக்கவேண்டிய ஆதாயத்தை கூட போராடித்தான் பெறவேண்டியதா இருக்கும்.

இளமையில் வித விதமாஅனுபவிச்சுட்டு படக்குன்னு மறு முனைக்கு போய்ருவாங்க. ஆனால் திடீர்னு முறை தவறிய உறவுகள் ஏன் கள்ள உறவுக்கு கூட வாய்ப்புண்டு ..

இதுல சொல்லியிருக்கிற காரணங்களால ஃபைனான்சியலா அல்லாட்டம்/தள்ளாட்டம் தான் இருக்கும் .இவிகளுக்குண்டான பரிகாரங்களை அடுத்த பதிவுல தரேன்.உடுங்க ஜூட்டு ..

8 Replies to “காசு பணம் துட்டு மணி மணி : 17 (ஏழாவது கேட்டகிரி)”

rajeswari

29/01/2016 at 7:34 pm

Ayya vanakkam,
Nan already child visayama dubt ketan ennaku nala mudivu sollunga
dob:july 3 1973
time:2:23 pm
place:Madurai ,Tamil Nadu ,India

Reply

  S Murugesan

  29/01/2016 at 9:40 pm

  அம்மா !
  வரும் 11/Feb/2017 =>முதல் 11/Oct/2018 வரை சந்திரதசையில் சுக்ர புக்தி ஆரம்பம்.சுக்+சந்திர சேர்க்கை வேற இருக்கு. (கண நேரத்து முடிவுகள்- சிந்தனை செயலில் தொடர்ச்சி இருக்காது ) ஐந்துக்குடையவர் சனி(தாமதம்) இவரோடு கேது வேற இருக்காரு . (மோஸ்ட்லி இல்லேன்னே சொல்லலாம்).

  ஆனால் கீழ்காணும் பரிகாரங்களை தொடர்ந்து 2 மாசத்துக்கு அஃதாவது ஏப்ரல் 11வரை செய்ங்க.ஓரளவு ஸ்டெடி மைன்ட் வரும். அப்போ கேட்டிங்கன்னா குழந்தை மேட்டருக்கு சிலபரிகாரங்கள் சொல்றேன்.

  இப்போ சொன்னாலும் வீண் தான். மேலும் கணவர் ஜாதகத்துலயும் நிறைய சிக்கல் இருக்கு . அவரும் பரிகாரம்லாம் செய்யவேண்டியிருக்கும் (சேஞ்சிங் லைஃப் ஸ்டைல்) இது சாத்தியம்னா ஏப்.11 க்கு மேல மெயில் பண்ணுங்க.

  1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.3. அவாய்ட் ஃப்ரன்ட் டெஸ்க் ஜாப்ஸ் அண்ட் பப்ளிக் ரிலேஷன்4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி “பார்க்கலாம்” “பார்க்கலாம்” என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், அடிக்கடி தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது

  Reply

   Rajeswari

   30/01/2016 at 12:00 pm

   Ayya Vanakkam,
   Nandri ayya en kanavan thiruthuvaru nadikirarara pen prichinai thirumba varuma amount kodu bussiness panren nu solraru ayya rahu dasa oduthu ayya

   Reply

    S Murugesan

    30/01/2016 at 1:34 pm

    அம்மா !
    அவர் ஜாதகத்தில் சசயோகம் உள்ளது . சொந்த தொழில் செய்யலாம்.ஆனால் தற்சமயம் நேரம் சுத்தமா செரியில்லை.ஆகவே குறைந்த சம்பளமே கிடைத்தாலும் எங்காவது வேலை செய்ய சொல்லுங்கள். கு.பட்சம் ஒன்னரை வருடம் -அதிக பட்சம் ரெண்டரை வருடம்.

    Reply

     Rajeswari

     30/01/2016 at 8:52 pm

     Ayya Vanakkam,
     pengal thurdappu than ayya prichinnai avar jathagam parungu open ah sollunga oru pen ennai romba asinga padithivittal .summa open a sollunga ayya pennai vetukku kunduvaruvara

     Reply

      S Murugesan

      30/01/2016 at 9:45 pm

      அம்மா !
      கவலை வேண்டாம். நீங்களாக ஏதேனும் ப்ரவோக் செய்தாலன்றி அது நடக்க 99.99 % வாய்ப்பில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லனவாக இருக்கட்டுமென்ற பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு போயிருங்க. கடந்து போனதை பிரச்சினை ஆக்காதிருங்கள்.( ஐ மீன் நினைவு படுத்தாதீர்கள்)

      Reply

rajeswari

29/01/2016 at 1:26 pm

Vanakkam Ayya,
En kanavan jathagam simha rasi maga nakshtram,1-rishaba lagnam ,guru,sukran and rahu,
4-chandran+chevvai,7-ketu,10-shani,12-suryan+budhan furniture company nala earn panaru
pengal weakness jasthi ayya eppo court case poi company vithu en perla amount deposit paniyachu ennai total ah avoid panuvaru,jathagar evan oru an maladu divorce pannu evan thiruntha mattan endrarkal .enaku child illai sex life suthama illai .ipo divorce panlama
adjust panlama ayya pengal prachanai thodruma .rahu dasa guru bhukti nadakthu ayya.

Reply

  S Murugesan

  29/01/2016 at 6:04 pm

  அம்மா !
  உங்க பர்த் டீட்டெய்லும் இருந்தா தானே கன்க்ளூட் பண்ணமுடியும்? அதையும் கொடுங்க.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.