காசு பணம் துட்டு மணி மணி : 16 (6வது கேட்டகிரி- அசலான பரிகாரம்)

DINNER

அண்ணே வணக்கம்ணே !
அல்லாரும் ஊரு நாட்டை பார்க்க கிளம்பியிருப்பிங்க. ஃபெஸ்டிவல் மூட்ல இருப்பிங்க. உங்க மூடுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத இந்த பதிவை எத்தனை பேர் படிக்கப்போறிங்கன்றதே ஒரு கேள்விக்குறி. இதுல இதை எத்தனை பேர் ஃபாலோ பண்ணிக்க போறிங்கன்றது ஒரு மெகா கேள்விக்குறி .நம்ம பொருத்தவரை சொல்லவேண்டியதை சொல்லிட்டு போயிட்டே இருப்பம். எடுத்தா எடுங்க .உட்டா உடுங்க.

உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம்.கடந்த 2 பதிவுகள் ஆறாவது கேட்டகிரிய பத்தி .இந்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரம் சொல்றதா சத்தியம் பண்ணியிருந்தன். பார்ப்பம்.

1.அழகு,அலங்காரம், உணவு, நொறுக்கு தீனி,பான்/பீடா மாதிரி சமாசாரங்கள், தூக்கம்,கில்மா,ஃபர்னிச்சர்ஸ்,வாகனம்,பட்டு,வெள்ளி இத்யாதி பத்தி ஒரு புரிதலை ஏற்படுத்திக்கிட்டாலே பாதி பரிகாரம் ஓவர்.

அடுத்தது கலைகள்.இவை கலைஞர்களையே தின்னுர்ர சமாசாரம்,நம்மை என்ன கதியாக்கிரும்னு ரோசிங்க.அடக்கி வாசிங்க. ரசனைங்கறது எவனோ பெத்து வளர்த்த பெண்ணை தக்ஜம் பண்ற மாதிரி .ஆனால் படைப்புங்கறது பிரசவம் மாதிரி . நீங்க படைப்பாளியா இருந்து நடக்கறது ஜஸ்ட் லைக் தட் இயற்கை பிரசவம்னா ஓகே..இல்லின்னா படைக்கிறதையும் விட்டுத்தள்ளிருங்க. படைக்கிறதே ரிஸ்கு இதுல பைசா வேற புரளுதுன்னா டபுள் ரிஸ்க் .
ஆரம்பத்துல சொன்ன அடக்கி வாசித்தலையும் அடுத்து வர்ர பரிகாரங்களையும் பச்சக்குன்னு மைன்டுல ஏத்திக்க்கிட்டு நூத்துக்கு நூறு ஃபாலோ பண்ணுங்க.இல்லின்னா வம்புதான்.

2.பேச்சு எளிமையா இருக்கட்டும்.சுருக்கமா இருக்கட்டும்.ரேடியோ நாடகம் மாதிரி ஏற்ற இறக்கம்லாம் வேண்டாம். லேகியம் விற்காதிங்க.பாய்ண்ட் டு பாய்ண்ட் பேசுங்க. கழுத்துல நகை நட்டு ஏதும் வேண்டாம்.குடும்பத்தாரோட 24 மணி நேரமும் உர்ருன்னு இருக்க சொல்லல. அர்த்தமற்ற அரட்டைகள் வேண்டாமே.
3.சகோதிரிகளிருந்தா நாளு கிழமை வர்ரப்ப உங்க வசதியை பொருத்து ஒரு ரவிக்கை துணியாவது வாங்கி கொடுங்க.லோக்கல்ல கோவில் குளம், பார்க்,பீச்சுன்னு போறதை விட அனாதைகள் இல்லம், மாற்றுத்திறனாளிகள் இல்லம்னு போங்க.

4.வீடு ஒரு கருப்பை மாதிரி . கருப்பையாவது 10 மாசம் வச்சிருந்து கெட் அவுட்னிருது .ஆனால் வீடு அப்படியில்லை .ஒவ்வொரு ராத்திரியும் உங்களை உள் வாங்கி -லேசா பட்டி பார்த்து பெய்ண்ட் அடிச்சு வெளிய அனுப்புது . வீடு அழகா இல்லாட்டியும் பரவால்ல .அலங்கோலமா இருக்ககூடாது . இன்னிசை வழியனும்ல காட்டு கத்தல் கூடாது .

வீடு சாமான் செட்டுகளால் நிறைஞ்சிருக்கிறதை விட சின்ன சின்ன சிரிப்பொலிகளால் நிறைஞ்சிருக்கனும். ஆசிரமம் மாதிரி இருக்கனும்னு சொல்லல, ஆசிரமத்துல இருக்கக்கூடிய அமைதியும், நல்ல அதிர்வுகளும் இருந்தா போதும். (பாஸ் ! ஒடனே குடுமி அய்யரை கூப்டு யாகம் பண்ண ஆரம்பிச்சுராதிங்க -நான் சொல்ற அதிர்வுகள் நல்ல எண்ணங்களால் ஏற்படும் அதிர்வுகள்)

குடியிருக்கிற வீட்டை அழகு படுத்தியே தீருவேன்னு குதிக்காதிங்க. உங்க குதியலை அம்மா மேட்டர்ல காட்டுங்க. ஏன்னா அவிக தானே நீங்க குடியிருந்த கோயில். இப்பமே நம்ம லைன் அப் என்னன்னு புரிஞ்சிருக்கும். இதை வாகன மேட்டர்லயும் அப்ளை பண்ணுங்க. அழகு படுத்தாதிங்க. அம்சமா சர்வீஸ் பண்ணுங்க.

கடன் தரானேன்னு வாங்கி வீடு,வாகனம்னு கொண்டாடிராதிங்க. ஒங்களுக்கு அந்த யோகம் இருந்தா நீங்களே சம்பாதிப்பிங்க.டவுன் பேமென்ட் கொடுத்து வாங்கலாம். ஆத்திரம்/அவசரம்/அவசியம்னா பரவால்ல. இதுலயும் எளிமையை ஃபாலோ பண்றது பெஸ்ட்.

VILLA

5.பேரு பெத்த பேரு தாக நீள்ளு லேதுன்னு கேள்விப்பட்டிருப்பிங்க. என்.டி.ஆர் ,எம்.ஜி.ஆர் எல்லாம் எவ்ள பெரிய லெஜன்டு? அவிக வீடுகளே சரக்கடிக்கிற இடமாவும் -கெட்டகாரியம் பண்ற இடமாவும் மாறிருச்சு .எம்.ஜி.ஆர் மேட்டர்னா இன்னம் பரிதாபம் எல்லா பொருளையும் வெள்ளம் கொண்டு போயிருச்சாம். ஆகவே பெயர் புகழ்னு அரக்க பரக்க ஓடாதிங்க.

கலைஞருக்கு இந்தளவு கெட்ட பேரு வர காரணமே அவரோட மவ பாசம் தான். மவ இருந்தா இருக்கட்டும்.கடமையை செய்ங்க.வேணாங்கல.அதுக்காவ அவிகளோட “அத்தனைக்கும் ஆசைப்படு” சித்தாந்தத்துக்கு தீனி போடாதிங்க.

6.சாப்பாடு மேட்டர்ல நாக்கு என்ன சொல்லுது?மனசு என்ன சொல்லுதுன்னு பார்க்காதிங்க.வவுறு என்ன சொல்லுதுன்னு பாருங்க. பட்டினி கிடந்து செத்தவனை விட பசியில்லாம தின்னு செத்தவன் தான் சாஸ்தி .மேலும் பேட்டரி காலி ஆயிரும். வாழ்க்கையில நெல்லா போயிட்டிருந்த பலான மேட்டர்ல சிக்கலா உடனே காபரா ஆயிராதிங்க.ஜஸ்ட் .. பத்து நாள் காயப்போடுங்க. நார்மல் . அப்படியும் சிக்கலா? ஒடனே லைஃப் ஸ்டைலை மாத்துங்க. உணவு பழக்கத்தை மாத்துங்க.ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.மருந்து மாயம்னு போவாதிங்க. பெண்கள் மட்டும் உடனே கைனகாலஜிஸ்டை பார்க்கிறது நல்லது .

7.ஓவியம் அதுவும் வண்ண ஓவியம் அல்ட்டிமேட் பரிகாரம். பார்த்து வரைங்க.ட்ரேஸ் எடுத்து வரைங்க. அதெல்லாம் பிரச்சினையே இல்லை.வண்ணம் தீட்டுங்க (சொந்த கற்பனையோட)

8.பெண்கள் மேட்டர்ல பெருசா பாதுகாப்புன்னு ஒன்னுமில்லை. அல்ப்ப சங்கியைக்கு ஒதுங்கும் போது தண்ணியால சுத்தம் பண்ணிக்கிட்டு -ஒழுங்கா பேட் உபயோகிச்சா போதும் . இதர சுரப்புகள் -கெட்ட வாசம் இருந்தா ஒடனே கைனகாலஜிஸ்டை பாருங்க. ஷுகர் -லோ பிபி இத்யாதி பிரச்சினை இல்லின்னா வாரத்துல ஒரு நாளாச்சும் உண்ணாவிரதம் இருங்க.அல்லது பச்சை காய்கறி,பழம்னு இருங்க.

SLEEP

9.அப்பாவோட சொத்து,பைசா மட்டும் வருதுன்னு நினைக்காதிங்க -பின்னாடியே அவரோட கர்மங்கள்,நோய்கள் எல்லாம் க்யூ கட்டி வரும். முடிஞ்சவரை எட்டியே இருங்க. தவிர்க்க முடியாத பட்சத்துல இதை ஒரு கடனா நினைச்சு ஏத்துக்கோங்க. வாய்ப்பு வரும் போது பைசல் பண்ணிருங்க. டூருன்னு கிளம்பினா ரயிலை பிடிங்க. கு.பட்சம் பஸ்ஸு .ஏன்னா இதுல பயணிகள் எண்ணிக்கை அதிகம்.

அல்லாருக்கும் ஒரே நேரத்துல ஆவிசு முடியறதெல்லாம் ரெம்ப ரேர்.ஆனால் கார்,வேன்லாம் அப்படியில்லை டிக்கெட் போட சான்ஸ் அதிகம். பயணங்கறது வீட்டோட வசதிகளை துறந்து செல்வது . இதன் மூலம் நம் ஈகோவை மெலியசெய்வது .அதை விட்டுட்டு உள்ளூர் வசதிகளை /வீட்டு வசதிகளை போற இடத்துலயும் தொடர்ந்தா நீங்க டூர் போறதே வெட்டி.

10. நீங்க மேஸ்திரியா காஞ்சி கிடக்கறிங்களா? அதுக்குன்னே உள்ள பட்சிகளை தேடி போயிருங்க.சித்தாள் மேல கை வச்சுராதிங்க. நீங்க டாக்டரா நர்ஸு மேல கை வச்சுராதிங்க. உடல் ரீதியான சிரமம் இருக்கிற தொழில்ல வண்டை வண்டையா பேசிட்டே வேலை பார்ப்பாய்ங்க. அவிக ஃபிசியாலஜி வேற,சைக்காலஜி வேற மெட்டஃபாலிசம் வேற . தளுக்கா வேலை பார்க்கிற இடத்துல இதெல்லாம் வேலைக்காகாது . அடக்கி வாசிங்க.

11.அம்மா, அத்தை ,சித்தி,பெரியம்மா, கசின், பொஞ்சாதி ,அக்கா ,தங்கச்சி இப்படி ஆரா இருந்தாலும் தாளி அவியளுக்கு நீங்க எவ்ள வேணா செலவழிக்கலாம் தோசம் குறையும்.பத்து பைசா வாங்கினாலும் ஆப்புதான். இதை மனசுல வச்சு டீல் பண்ணுங்க. ஆத்திரம்/அவசியம்னா கடன் மாதிரி பாவிச்சு உபயோகிக்கலாம்.ஆனால் வசதி வாய்ப்பு வரும் போது படக்குன்னு பைசல் பண்ணிரனும். பெண்களை -உங்களுக்கு உரிமைப்பட்டவிகளாவே இருந்தாலும் எக்ஸ்ப்ளாய்ட் பண்றது அணு மின்சார உற்பத்தியை விட டேஞ்சர். டேக் கேர்.

12.தூக்கம் நம்மை ஆட்கொள்ளும் வரை தான் டபுள்காட், ஃபோம் பெட்,வால்பேப்பர்,ஏசில்லாம்தூங்கிப்போயிட்டா? எல்லா இழவும் ஒன்னுதான். ஆகவே மக்களே ..அடக்கி வாசிங்க.

குறிப்பு:
யோவ் ! நாங்க என்ன சம்சாரியா இல்லை சன்யாசியா ..நீ சொல்ற எந்த இழவையும் ஃபாலோ பண்ணமாட்டம் என்னய்யா நடந்துரும்னு கேப்பிக .சொல்றேன்.
1.பேட்டரி அவுட் 2.அடல்ட்ரி 3.பசியின்மை/தூக்கமின்மை 4.குடும்பத்துல கலகம் 5.ராங் கனெக்சன் காரணமா கொலை/தற்கொலை
6.பொஞ்சாதி கையாலயே டிக்கெட்டு 7.பொஞ்சாதியை போட்டுட்டு செயிலு 8.பெண்வாரிசுகள் அல்ப்பாயுசுல போயிடறது 9.தப்பிதவறி தக்கினாலும் அவிக திருமண வாழ்க்கை ஃபெயிலாகி உங்க கண்ல ரத்தம் கொட்டும் 10.ராத்தங்க இடமில்லாம அல்லாடறது -சோத்துக்கு லாட்டரி

22 Replies to “காசு பணம் துட்டு மணி மணி : 16 (6வது கேட்டகிரி- அசலான பரிகாரம்)”

Sivakumar

18/01/2016 at 5:33 pm

Youtube ல் PROF.DR.VIMALANRIIAS IN ASTROLOGY FIELD என்ற பதிவு ஆய்வு சார்ந்த உண்மையாக உள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறவும்.

Reply

  S Murugesan

  18/01/2016 at 7:21 pm

  சிவகுமார் !
  பார்க்கிறேன். நிச்சயம் பார்க்கிறேன்.

  Reply

  S Murugesan

  18/01/2016 at 7:31 pm

  சிவகுமார் !
  ஆராய்ச்சின்னு சொல்ல முடியாட்டாலும் என் கருத்துக்கள் இங்கே

  Reply

   sivakumar s

   18/01/2016 at 9:04 pm

   voice recording not clear

   Reply

    S Murugesan

    18/01/2016 at 10:34 pm

    சிவகுமார் !
    ஆம். உண்மை .

    Reply

Abishegapriyan

17/01/2016 at 3:18 pm

சகோ… நம்முடைய ரொட்டீன் லைப் அல்லது தொழிலில் அவ்வப்போது தடைகள் சிக்கல்கள் வருவது சகஜம். ஆனால் தினம் தினம் பெரும் போராட்டமாக மன உளைச்சல், பொருளாதார நஷ்டம் ஏற்படுத்திக்கொண்டே இருந்தால் நம்முடைய பாதை/தொழில் தவறு. அதாவது நம்முடைய சாதனை/செய்யப்படவேண்டிய கடமைகள் வேறு எதுவோ காத்திருக்கிறது.

-இது நம்முடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம், வயதான பெரியவர் சொன்னது.

இது எந்த அளவுக்கு உண்மை?

Reply

  S Murugesan

  17/01/2016 at 6:06 pm

  அபிஷேகபிரியன் !
  பெரியவர் சொன்னது என்னவோ உண்மைதான். ரொட்டீன் லைஃப்ல வர்ர சிக்கலுக்கு பயந்து /தெளிந்து புதுரூட்டை பிடிச்சு -அந்த ரூட்டுதான் உங்க தலை எழுத்துப்படியான ரூட்டா இருந்தா உசுருக்கே உலை வைக்கிற சிக்கல் எல்லாம் வருமே !

  Reply

Sivakumar

17/01/2016 at 2:28 pm

ஜெ பதிவை மொழி மாற்றி அனுப்பியிருந்தேன். அதற்கு நீங்கள் தந்த பதில் மின்னஞ்சலை என் கணிணியில் படிக்க இயலவில்லை. ஆங்கிலத்தில் அனுப்ப முடியுமா?

Reply

  S Murugesan

  17/01/2016 at 2:49 pm

  Sivakumar !
  Sure.Mailing.

  Reply

lakshmi sundar

17/01/2016 at 12:32 pm

1.மேலும் இரண்டு கேள்விகள் ,எத்தனை வீடு மாறினாலும்(வாடகை வீடு) அவ்வீட்டில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது,சில நேரம் 3 மாதங்களில் மாறும் சூழ்நிலை கூட ஏற்பட்டுள்ளது.5 வருடங்களில் ஒரு வீட்டில் கூட நிம்மதியாக இருந்தது இல்லை .இதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறுங்கள் .
2. குடும்பத்தோடு வெளியில் எப்போது சென்றாலும் திரும்பி வருவதற்குள் இருவருக்கும் சண்டையோ மனவருதாமோ ஏற்பட்டு விடுகிறது,இதற்கும் பரிகாரம் கூறுங்கள் .

Reply

  S Murugesan

  17/01/2016 at 2:53 pm

  லட்சுமி சுந்தர் !
  1.இனி வீடுமாறும் போது -மாற வேண்டிய கட்டாயம் வரும் முன்பாகவே வீடு பார்க்க ஆரம்பித்துவிடுங்கள்.
  2.முடிஞ்சவரை ஓரளவுக்காவது வாஸ்து கரெக்டா இருக்கிற வீடா பாருங்க. முடிந்தவரை கிரவுண்ட் ஃப்ளோர் தவிர்க்க
  3.லக்சரிஸ்,ஃபேன்சி,காஸ்மெட்டிக்ஸ்,ஃபர்னிச்சர்ஸ்,பட்டு,வெள்ளி தவிர்த்துவிடவும்
  4.இருக்கும் வரை வீட்டின் இன்டிரியரை அடிக்கடி மாத்திக்கிட்டே இருங்க.
  5.இருக்கும் மேசை நாற்காலிகளுக்கு சக்கரம் பொருத்திக்கொள்ளவும்
  6.அருவி,கடல்,ஆறு தொடர்பான போஸ்டர்ஸ் ஹாலில் வைக்கவும்
  7.வடகிழக்கில் சுவற்றில் ரேக் போல் வைத்து அதன் மேல் ஃபிஷ் டேங்க்

  Reply

lakshmi sundar

17/01/2016 at 12:20 pm

சார் ,காலமாற்றமும் கிரகபலனும் தொடரில் 9ஆம் பாவத்திற்கு மேல் லிங்க் கிடைகவில் லை .(10,11,12 ஆம் பாவத்திற்கான தொடர் எந்த தேதியில் உள்ளது ?லிங்க் இருந்தால் தாருங்கள்.

Reply

  S Murugesan

  17/01/2016 at 2:50 pm

  ல்ட்சுமி சுந்தர் !
  மன்னிக்கவும்.அந்த தொடரை தொடரவில்லை என்று ஞா.

  Reply

Abishegapriyan

16/01/2016 at 10:41 am

//////////////குருவை ஓவரா எக்ஸ்ப்ளாய்ட் ///////////
அர்த்தம் புரியலையே.

Reply

  S Murugesan

  16/01/2016 at 11:44 am

  அபிஷேகப்ரியன் !
  குருவின் காரகங்களில் அளவுக்கதிகமாக பலன் பெற்றால் என்பதே எக்ஸ்ப்ளாய்டேஷன்.

  Reply

Abishegapriyan

15/01/2016 at 11:31 am

வணக்கம் சகோ… சில கிரக அமைப்புக்கு ஜாதகப்படி குரு பல்ப் வாங்கியிருந்தால் குரு காரத்துவம் உள்ள நபர்களிடம் பணம் உள்ளிட்ட எந்த உதவியும் வாங்காதீர்கள் என்று பல பதிவுகளில் நினைவூட்டியிருக்கிறீர்கள். எனக்கு கோயில் அர்ச்சகர்களும், வழக்கறிஞர்களும் பிராமின் நபர்களும்தான் வாயைத் திறந்து கேட்க நினைப்பதற்குள் கடன் உள்ளிட்ட உதவிகளை செய்து விடுகிறார்கள்.

ஒருவருக்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் போராடினாலும் நடக்காது. அதே சமயம் துன்பம் தரக்கூடிய விஷயங்கள் எவ்வித தடங்களும் இல்லாமல் நடக்கும் என்று கூறுவார்களே… இதுவும் அது போல்தானா?

**********************************
சுவர் ஏறிக்குதித்த திருடன் எதுவும் கிடைக்கலைன்னா பாய்லர் மூடியையாச்சும் தூக்கிச் செல்வது போல, கிரகம் கெட்டால் அது தொடர்பான குறைந்தபட்சம் ஒரு காரத்துவத்தை நாறடித்து விடுகிறது என்று கூறியிருந்தீர்கள்.

4,5ஆம் வீட்டிற்கான அதிபதி சனி 12ல் சூரியன், புதன்(வக்), குரு ஆகிய மூன்று கிரகங்களுடன் சேர்க்கை. 4ல் கேது, வளர்பிறை சந்திரன். இதனால் 4ஆம் வீடு நன்றாக கெட்டிருக்குமா? அதனால்தான் ஒழுக்கம், படிப்பு ஆகியவற்றை இழுத்துப் பிடித்திருப்பதால் வீடு விஷயம் தண்ணி காட்டுதோ.?

இப்படிக்கு அபிஷேகப்ரியன்.

Reply

  S Murugesan

  15/01/2016 at 12:10 pm

  சகோ !

  // சில கிரக அமைப்புக்கு ஜாதகப்படி குரு பல்ப் வாங்கியிருந்தால் குரு காரத்துவம் உள்ள நபர்களிடம் பணம் உள்ளிட்ட எந்த உதவியும் வாங்காதீர்கள் என்று பல பதிவுகளில் நினைவூட்டியிருக்கிறீர்கள்.//
  உண்மை.
  // எனக்கு கோயில் அர்ச்சகர்களும், வழக்கறிஞர்களும் பிராமின் நபர்களும்தான் வாயைத் திறந்து கேட்க நினைப்பதற்குள் கடன் உள்ளிட்ட உதவிகளை செய்து விடுகிறார்கள்.//
  குருவை ஓவரா எக்ஸ்ப்ளாய்ட் பண்ணா ஆண் குழந்தை இல்லாம போயிரலாம். 40+ ல் வயிறு , 50+ ல் இதயம் பிரச்சினைய கொடுக்கலாம். அல்லது அரசு/அரசு துறைக்கு அபராதம் கட்டவேண்டி வரலாம்.
  /ஒருவருக்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் போராடினாலும் நடக்காது. அதே சமயம் துன்பம் தரக்கூடிய விஷயங்கள் எவ்வித தடங்களும் இல்லாமல் நடக்கும் என்று கூறுவார்களே… இதுவும் அது போல்தானா?//
  அட்சர சத்தியம்
  //சுவர் ஏறிக்குதித்த திருடன் எதுவும் கிடைக்கலைன்னா பாய்லர் மூடியையாச்சும் தூக்கிச் செல்வது போல, கிரகம் கெட்டால் அது தொடர்பான குறைந்தபட்சம் ஒரு காரத்துவத்தை நாறடித்து விடுகிறது என்று கூறியிருந்தீர்கள்.//
  இது எந்த புஸ்தவத்துலயும் இருக்காது . 1989 முதல் நாளிதுவரை பார்த்த அனைத்து ஜாதகர்கள் வாழ்விலும் இதே நிலை தான்.
  //4,5ஆம் வீட்டிற்கான அதிபதி சனி 12ல்//
  இது தாய் வீடு வாகனம் கல்வி , நற்பெயர்,மன நிம்மதி ,வாரிசுகள் இவையனைத்தும் பாதிக்கப்படும்.
  // சூரியன், புதன்(வக்), குரு ஆகிய மூன்று கிரகங்களுடன் சேர்க்கை. //
  நல்ல வேளையா புதன் வக்ரமானதால தப்பிச்சிங்க. இல்லின்னா வாழ்க்கையே வீணா போயிருக்கும்.ஆனால் குரு இங்கே சேர்ந்ததால உங்க தாயின் வாழ்க்கையை போலவே உங்கள் மனைவியின் வாழ்வும் அமைந்து விடும் ஆபத்து இருக்கிறது .
  //4ல் கேது, வளர்பிறை சந்திரன். இதனால் 4ஆம் வீடு நன்றாக கெட்டிருக்குமா?//
  ஆம்.
  // அதனால்தான் ஒழுக்கம், படிப்பு ஆகியவற்றை இழுத்துப் பிடித்திருப்பதால் வீடு விஷயம் தண்ணி காட்டுதோ.?//
  நிச்சயமாக. அதுக்காவ ஒழுக்கம் கெட்டு போயிராதிங்க. பிறமத நூல்கள்,மனவியல் நூல்களை அதிகம் படித்தபடி ஒரு அன்னிய மொழி கற்றுக்கொள்ளுங்கள் .தியானம்/யோகம் நல்லது. இதனால் தோஷம் குறையும். சொந்த வீடு இருந்தால் ..அதை விட்டு விலகி -மனதிலும் எண்ணாமல் வாழ்க்கையை ஓட்டுங்கள்.

  Reply

   S Murugesan

   16/01/2016 at 9:42 pm

   அபிஷேக பிரியன் !
   ஏதோ ஆத்திரம் அவசரத்துக்கு சில பாய்ண்ட்ஸ் எடுத்து விட்டன்.அதுக்கு விஸ்தாரமா ஃபீட் பேக் கொடுத்து அசத்திட்டிங்க. நீங்க உங்க மெயிலை சைட்ல வெளியிட அனுமதி கொடுத்தாலும் .. எதுக்கு இதை போயின்னு ஒரு செகண்ட் நினைச்சது உண்மை.

   ஆனால் பிறகு தான் ஸ்பார்க் ஆச்சு .. நாம அது வந்தா இது போயிரும், இது வந்தா அது போயிரும் , அஞ்சு ரூவா நோட்டு அமிஞ்சிகரையிலயும் அஞ்சு ரூவா தான் ,அம்பத்தூர்லயும் அஞ்சு ரூவா தான்னு சொன்னா சில சனம் நம்ப மறுக்கலாம்.

   அவிக க்ளேரிஃபை ஆவறதுக்காக உங்க மெயிலை இங்கே வெளியிடுகிறேன். நன்றி ..

   ஓவர் டு அபிஷேகபிரியன்

   சகோ…

   //4,5ஆம் வீட்டிற்கான அதிபதி சனி 12ல்//
   இது தாய் வீடு வாகனம் கல்வி, நற்பெயர், மன நிம்மதி ,வாரிசுகள் இவையனைத்தும் பாதிக்கப்படும்.////////////////////////////////////////

   தாய்க்கு சிரமம்தான்,

   வீட்டு பிரச்சனை தாங்க முடியல…

   வாகனம் சைக்கிளும் சரி, டூவீலரும் சரி… அப்போதைய தேவைக்காக மட்டுமே வாங்கியது. அதாவது பதினாலு வயதில் அம்மா சுட்டு தரும் முறுக்கை கொடுத்துவர வேண்டி சைக்கிள். (1995). இப்போது 2014ல் டூவீலர் வாங்க காரணம் கோர்ட் உள்ளிட்ட இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நாலைந்து தடவை கூட போக வேண்டியிருந்ததால். அந்த அலைச்சல் இல்லை என்றால் வாரக்கணக்கில் கூட டூவீலர் பயன்படுத்துவது இல்லை. இப்போதும் மனைவி அல்லது தாயாரை மருத்துவமனைக்கு அல்லது வேறெங்காவது அழைத்துச்செல்லும் நேரத்தில் மட்டுமே டூவீலரை எடுக்கிறேன். மற்ற நேரங்களில் சைக்கிள்தான்.

   நற்பெயர் : இதுல இதுவரை பெரிய பாதிப்பு இல்லையே. கோவக்காரன்னு பேர் எடுத்த அளவுக்கு கெட்டவன்னு பேர் எடுக்கலை. (வேலை பார்த்ததுக்கு சம்பளம் கேட்டால், செய்து கொடுத்த வேலைக்கு பணத்தை கண்டிப்புடன் கேட்டால் (இல்லன்னா கொடுக்க மாட்டெங்குறாங்க யுவர் ஆனர்) மோசமான ஆளு… கோவக்காரன்னுடுறாங்க.

   மன நிம்மதி : எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை இல்லை.

   வாரிசுகள் : இனிதான் தெரியும்.

   // சூரியன், புதன்(வக்), குரு ஆகிய மூன்று கிரகங்களுடன் சேர்க்கை. //
   நல்ல வேளையா புதன் வக்ரமானதால தப்பிச்சிங்க. இல்லின்னா வாழ்க்கையே வீணா போயிருக்கும்.ஆனால் குரு இங்கே சேர்ந்ததால உங்க தாயின் வாழ்க்கையை போலவே உங்கள் மனைவியின் வாழ்வும் அமைந்து விடும் ஆபத்து இருக்கிறது .//////////////////////////////

   குரு நின்ற இடம் பாழ் என்ற கணக்கிலா அல்லது 3,6க்குரிய அதிபதி என்பதாலா…. அல்லது புதன் (9,12) ஆம் அதிபதி என்பதாலா…. விரயம், கட்டில் சுகம் இன்னும் என்னென்ன விஷயங்கள் 12ஆம் இடத்துக்கு உரியது? எதனால் 12ஆம் இடம் ஆபத்தை தரும் விதத்தில் இருக்கிறது சகோ….

   ****************************
   ////////////////////////////// சொந்த வீடு இருந்தால் ..அதை விட்டு விலகி -மனதிலும் எண்ணாமல் வாழ்க்கையை ஓட்டுங்கள்.////////////////////////
   அதற்கு நான் ரெடி. ஆனால், அந்த வீட்டின் பராமரிப்பு செலவு வெளியில் கடன் வாங்கி செய்யும் அளவுக்கு இம்சை தருகிறது. அதனால்தான் இந்த தவிப்பு.

   இன்னொரு விஷயம் சகோ… சொந்த வீட்டில் டூவீலர் நிறுத்தக்கூட இடம் இல்லை. அதனால் வாடகை வீடு பார்த்தால், இங்கேயும் அதே பிரச்சனை.

   நாங்கள் வாடகைக்கு இருக்கும் இடம் எப்படி என்றால், தரைதளம், முதல் தளம் உடைய கட்டிடம். கிட்டத்தட்ட 16 வீடுகள் மொத்தம். கீழ் வீடுகளில் உள்ளவர்கள் அவரவர் வீடுகளின் வாசலில் வாகனம் நிறுத்தலாம். மாடியில் உள்ளவர்கள் பாடு ரொம்ப கொடுமை.

   நாங்கள் இருப்பது மாடியில்.

   வீட்டு உரிமையாளர் எனக்கு பக்கத்து வீட்டில். அவர்கள் வீட்டில் இரண்டு டூவீலர். ஒவ்வொன்றும் ஒண்ணரை லட்சத்துக்கும் அதிகமாக விழுங்கிய ஸ்போர்ட்ஸ் பைக். சாதாரண டூவீலர் 4 நிறுத்தும் இடத்தை ஆக்கிரமிக்கும். வருடத்தில் 300 நாட்கள் அவற்றை ஓட்டுபவர்கள் வெளி நாட்டில்தான் இருப்பார்கள். அது போக ஒவ்வொரு வீட்டில் குடியிருப்பவரிடமும் இரண்டு அல்லது 3 டூவீலர், தவிர பள்ளி குழந்தைகள் சைக்கிள்.

   என்னை டூவீலர் நிறுத்த சொன்ன இடத்தில் பஸ் ஸ்டாண்ட் சைக்கிள் ஸ்டேண்ட் மாதிரி சொருகி சொருகி நிறுத்தினால் 3 டூவீலர் நிறுத்தலாம். அல்லது 2 டூவீலர், 2 சைக்கிள். அந்த இடத்தில் 2 டூவீலர் நிறுத்தும் வீட்டுக்காரன் அவனைத் தவிர மற்ற வீட்டு ஆட்கள் யாரும் ஒரு வண்டியையும் நிறுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் இருப்பான் போலிருக்கிறது. ஒழுங்கு செய்து நிறுத்தாமல் பப்பரப்ப என்று நிறுத்தி விடுவான். நான் என்னுடைய சைக்கிளை நிறுத்துவது என்றால் கூட அந்த வண்டிகளை நாந்தான் (சைட் லாக் போட்டதை) ஒழுங்கு செய்து நிறுத்தவேண்டும்.

   இன்னொரு பிரச்சனை என்னவென்றால் இரவில் ஊர் சுற்றிவிட்டு இஷ்டத்துக்கு வர்றவன் என் வண்டிக்கு பின்னால …….த்துல சொருகி விட்டுட்டு போயிடுவான். காலையில் 6 மணிக்கு எழுந்து வெளியே போற நமக்கு இது பெரிய தலைவலி.

   அந்த வீட்டுக்கும் என் அலுவலகத்துக்கும் 2 நிமிட நடை நேரம்தான். அங்கிருந்து ஒரு நிமிடத்தில் இந்த வீட்டு ஓனரின் தாயார் வீடு இருக்கிறது. (நம்ம ஆஸ்தான பிள்ளையார் கோவில் இருக்கும் தெருதான்.) அங்கே என் டூவீலரை போட்டு விட்டேன்.

   ஏனென்றால் இப்போது குடியிருக்கும் வீட்டில் ராத்திரி எல்லாரும் வந்த பிறகு டூவீலரை ரோட்டில் இருந்து கொண்டு வந்து நிறுத்தி விட்டு காலையில் முதல் ஆளாக வெளியில் இழுத்து விட வேண்டும். இல்லையென்றால் நம்ம வண்டியை எக்கு தப்பா இழுத்து இண்டிகேட்டர், மர்காட் இப்படி எதுலயாவது டேமேஜ் பண்ணிடுவாங்க. அதுக்காவ குடியிருக்குறது ஒரு தெரு. டூவீலர் நிறுத்துறது ரெண்டு தெரு தள்ளி. சைக்கிளை மட்டும் கைக்கு வெச்சுக்குறேன். அதோட …………..த்துலயும் ஒரு நாள் டூவீலரை சொருகினான்.

   நான் அதுக்கு மேல பொறுத்துக்க தயாரா இல்லை. வீட்டு ஓனரையும், அவனையும் நேர்ல கூப்பிட்டு, டூவீலரைத்தான் ரெண்டு தெரு தள்ளி நிறுத்திட்டு வர்றேன். இப்போ சைக்கிளை எங்கே நிறுத்தணும்னு சொல்லுங்க என்று அமைதியாக கேட்டேன்.

   என்ன செய்யணும்னு என்னையே சொல்ல சொன்னாங்க. நான் மாடிப்படி கிட்ட ஓரமா உடனடியா சைக்கிளை எடுக்குற மாதிரி நிறுத்துவேன். எத்தனை பேர் வண்டி போட்டாலும் என் சைக்கிள் நான் உடனடியா வெளியில எடுக்குற மாதிரி இருக்கணும். சைட் லாக் போட்ட ஸ்கூட்டரை என்னால நகர்த்த முடியாது. ஆனா பூட்டுன சைக்கிளை நீங்க ஈசியா நகர்த்தி வெக்கலாம்னு சொன்னதுக்கு அப்புறம் கொஞ்சம் சரியா போய்கிட்டு இருக்கு.

   ***********************************************
   கடையை பொறுத்து பார்த்தா, அந்த காம்ப்ளக்சில் பெட்டிக்கடை இருப்பதால் அங்கே தம் வாங்கும் நபர்கள் மாடிப்படியில் வந்து நாறடிப்பது ரொம்ப நாளாக இருந்தது. அது தவிர குப்பைத்தொட்டியே அந்த மாடிப்படி என்ற அளவில் இருந்தது எனக்கு என்னவோ போல் இருந்ததால் படி முழுவதையும் கூட்டி விட்டு, இரண்டு வாளி தண்ணீரை ஊற்றி விடுவேன். சுத்தமாக இருக்கும் இடத்தில் அவ்வளவு எளிதில் குப்பை போட முயல மாட்டார்கள் என்ற சைக்காலஜி கொஞ்சம் காப்பாற்றி வருகிறது.

   என் ஃப்ளோரில் 5 அலுவலகம், இரண்டாவது ப்ளோரில் 5 ரூம். சுத்தம்செய்யுறது நான் மட்டும். பொட்டிக்கடை, டீக்கடைக்கு பக்கத்துல இல்லாம அலுவலகம் வைக்கலாமா என்று யோசிக்கிறேன்.

   *************************************************
   சின்னதா ஒரு டவுட்டு என்னன்னா, சொந்த வீடு காரகம் பல்ப் வாங்கியிருந்தா, வாடகைக்கு போனா கொஞ்சமாவது நிம்மதி இருக்கணுமா இல்லையா. இப்போ சொந்த வீட்டுல என்னென்ன ப்ராப்ளம் இருக்குதோ அது எல்லாமே வாடகை கொடுத்த பிறகும் எந்த இடத்துலயும் தொடருதுன்னா மனுஷனுக்கு நம்பிக்கை குறையுதே….

   இப்படிக்கு அபிஷேகப்ரியன்.

   Reply

    Abishegapriyan

    17/01/2016 at 4:19 am

    ////////////////////////////////// சூரியன், புதன்(வக்), குரு ஆகிய மூன்று கிரகங்களுடன் சேர்க்கை. //
    நல்ல வேளையா புதன் வக்ரமானதால தப்பிச்சிங்க. இல்லின்னா வாழ்க்கையே வீணா போயிருக்கும்.ஆனால் குரு இங்கே சேர்ந்ததால உங்க தாயின் வாழ்க்கையை போலவே உங்கள் மனைவியின் வாழ்வும் அமைந்து விடும் ஆபத்து இருக்கிறது .//////////////////////////////

    குரு நின்ற இடம் பாழ் என்ற கணக்கிலா அல்லது 3,6க்குரிய அதிபதி என்பதாலா…. அல்லது புதன் (9,12) ஆம் அதிபதி என்பதாலா…. விரயம், கட்டில் சுகம் இன்னும் என்னென்ன விஷயங்கள் 12ஆம் இடத்துக்கு உரியது? எதனால் 12ஆம் இடம் ஆபத்தை தரும் விதத்தில் இருக்கிறது சகோ….////////////////////////////////////////////

    சகோ… இதுக்கு விளக்கம் கொடுக்கவில்லையே….

    ************************************************
    சின்னதா ஒரு டவுட்டு என்னன்னா, சொந்த வீடு காரகம் பல்ப் வாங்கியிருந்தா, வாடகைக்கு போனா கொஞ்சமாவது நிம்மதி இருக்கணுமா இல்லையா. இப்போ சொந்த வீட்டுல என்னென்ன ப்ராப்ளம் இருக்குதோ அது எல்லாமே வாடகை கொடுத்த பிறகும் எந்த இடத்துலயும் தொடருதுன்னா மனுஷனுக்கு நம்பிக்கை குறையுதே….
    சகோ… இதுக்கு விளக்கம் கொடுக்கவில்லையே….

    //////////////////////////// நாம அது வந்தா இது போயிரும், இது வந்தா அது போயிரும் , அஞ்சு ரூவா நோட்டு அமிஞ்சிகரையிலயும் அஞ்சு ரூவா தான் ,அம்பத்தூர்லயும் அஞ்சு ரூவா தான்னு சொன்னா சில சனம் நம்ப மறுக்கலாம்.//////////////////////

    ஆனால் இதுதான் பதிலாக இருக்குமோ என்று யூகிக்கிறேன்.

    Reply

     S Murugesan

     17/01/2016 at 12:08 pm

     அபிஷேகபிரியன் !
     குரு 3-6 க்குடையவர் என்றால் அவர் விரயத்தில் நிற்பது நல்லதுதானே.. ஆனால் அவர் அத்துடன் நிற்காது விரயாதிபதியுடன் வேறு சேர்ந்து விட்டார். இதுதான் பிரச்சினை .

     கிரக பலங்களை அனலைஸ் பண்ணும் போது இந்த விதியை மறக்காதிங்க. அஃதாவது நன்மை செய்ய வேண்டிய கிரகம் ஒரு விதத்தில் மட்டும் பலம் பெற்றால் யோகம் .அதுவே கூடுதலாக இன்னொரு வகையிலும் பலம் பெற்றால் டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட்ங்கறாப்ல பல்பு வாங்கிரும்.

     இதே போல தீமை செய்யவேண்டிய கிரகம் ஒரு விதத்தில் பலம் இழந்தால் போதும் -உபரியாக இன்னொரு வகையிலும் பலம் இழந்தால் நமக்கு பல்பு . அல்ஜீப்ரா விதிகள் இங்கே அப்ளை ஆகும்.

     Reply

sivakumar s

14/01/2016 at 11:52 am

யார் எந்த கேட்டகிரின்னு எப்பிடி கண்டுபிடிக்கறது?

Reply

  S Murugesan

  14/01/2016 at 6:51 pm

  வாங்க சிவகுமார் !
  ஒவ்வொரு கேட்டகிரிக்கும் ஏற்கெனவே அவிக ஸ்டேட் ஆஃப் லைஃப்,ஸ்டைல் ஆஃப் லிவிங், அவிக ஃபேஸ் பண்ணிக்கிட்டிருக்கிற பிரச்சினைகள் என்னவா இருக்கும்னு விலாவாரியா சொல்லியிருக்கேனே..

  (ஆமாம் மெயில் எல்லாம் பார்க்கறதே இல்லை போல இருக்கே!)

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *