காசுபணம் துட்டு மணி மணீ :15 (ஆறாவது கேட்டகிரி பரிகாரம்)

DSC_7886

அண்ணே வணக்கம்ணே !
முன் கதை சுருக்கம்:
உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம்.

கடந்த பதிவுல ஆறாவது கேட்டகிரி சனங்களோட லட்சணங்கள் -அவிக பொருளாதார தடைகளுக்கு காரணங்களை சொல்லி முடிச்சு பரிகாரங்களைஆரம்பிச்சம்.
கடந்த பதிவுல் போலவே .//………….// குறிக்குள்ள லட்சணம் .அடுத்த பாராவுலயே இந்த லட்சணம் இருந்தா என்ன பரிகாரம்னு கொடுத்துக்கிட்டு வரன்.ஓகேவா .உடுங்க ஜூட்டு .

இவிகளுக்கு நொறுக்குத்தீனி, மென் பானங்கள் ,அறுசுவை உணவு ,பான்,பீடா ,வெத்திலை,பாக்கு ,தூக்கம் , வீடு,வண்டி வாகனம் இதெல்லாம் எங்கே கிடைக்காம போயிருமோன்னு வாழ்க்கையில பல விஷயங்கள்ள காம்ப்ரமைஸ் பண்ணிப்பாய்ங்க. இவிக ரெபல் ஆறதும் உண்டு.ஆனால் அது மேற்சொன்ன விஷயங்களை இழந்துருவமோங்கற மோமென்டுல தான் .

இதுல சோகம் என்னன்னா இவிகளுக்கு வந்திருக்கிற/வரப்போற நோய்கள் ,மரணம் எல்லாத்துக்கு காரணம் இவிகளோட இந்த ப்ரியாரிட்டி தான்.
ஓஷோ ஒரு உதாரணத்தை அடிக்கடி சொல்வாரு. குறுகிய வாய் கொண்ட ஜாடி-அதுக்குள்ளே ஒரு வாத்து . வாத்தும் சாகக்கூடாது ,ஜாடியும் உடையக்கூடாது.ஆனால் வாத்தை வெளிய எடுக்கனும்.

இன்னடா மேட்டருன்னா வாத்து ஜாடிக்குள்ளயே இல்லை. வெளிய இருக்கு. மேற்படி மேட்டர் எல்லாம் எந்தளவுக்கு சில்லி – நம்ம உடல் நலமும்-ஆயுளும் எந்தளவுக்கு பலியாகுதுன்னு ஒரு சின்ன புரிதல் வந்துட்டா போதும். இதெல்லாம் ஜூஜுபி.

அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால் செக்ஸை ஆழமாக அனுபவிப்பவன் அதை பற்றி சிந்திப்பதே இல்லை. அது கிடைக்காதவன்/அதில் தோற்றவன் அதை சிந்திக்காமல் இருப்பதே இல்லை. மனித உடலில் இரண்டு மண்டலங்கள் உள்ளன. இனப்பெருக்க மண்டலம், ஜீரண மண்டலம் ஒன்று வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்வதில்லை.

அல்லாரும் என்ன நினைக்கிறாய்ங்கன்னா கில்மாவுல கில்லி மாதிரி விளையாடனும்னா செமர்த்தியா திங்கனும். சாரி பாஸ் ! நிறைகுடம் தளும்பாதுங்கற ரேஞ்சுக்கு போயிருவிங்க.மேலும் நீங்க திங்கறதை செரிக்கிறதே பாடிக்கு வேலையா போயி இ.பெ.மண்டலம் தன் வேலையை குறைச்சுக்கும்.

இதே போல கில்மா பத்தி நிறைய தெரிஞ்சுக்கனும்-பேசனும்-கற்பனை பண்ணனும்-கனவு காணனும் அப்பத்தேன் கில்மால சிக்ஸர் அடிக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு . சாரி பாஸ் ! எந்த மேட்டர்ல எப்படியோ இந்த மேட்டர்ல மட்டும் மேல் மாடிக்கு எந்தளவு வேலை கொடுத்தா அந்தளவுக்கு பேஸ்மென்ட் வீக் ஆயிரும்.
நாம வாழறதுக்காவ சாப்பிடறம்.சாப்பிடறதுக்காவ வாழறதில்லை. திங்கறது-கில்மா ரெண்டுமே ஒரே கிரகத்தோட பிடியில இருக்கிறதால ரெண்டுல ஒன்னு புட்டுக்கும். அதனால லைட்டா ..லைட்டா இருந்தா ரெண்டுலயுமே ஜஸ்ட் பாஸ் கியாரண்டி.

//2.அழகான கண்கள் இருக்கும் (பேசும்) , ஹவுசிங்,ஆட்டோமொபைல் ,ஃபர்னிச்சர்,பெய்ண்ட்ஸ் ,கேட்டரிங் , இன்டீரியர்போன்ற அழகு அலங்காரம் தொடர்பான தொழில்,வேலை மூலமாக வருமானம் கிடைக்கும். இவிக இன்ஃப்ளுயன்ஸால குடும்பமே இவிக ரசனைகளை கொண்டும் இருக்கலாம். இவிக பேச்சே கவிதை மாதிரி இருக்கும் ( டோன்/வார்த்தைகள்) //

மேற்சொன்ன ஏதோ ஒரு சோர்ஸ் மூலமா வருமானம் வந்துக்கிட்டிருந்து நீங்க ரசனை கெட்ட சன்மமா -வெகண்டையா பேசிக்கிட்டிருந்திங்கன்னா பேலன்ஸ் ஆகும்.இல்லின்னா நாஸ்திதான்.

//3.சகோதிரி இருக்கலாம்.இவிக கொஞ்சம் பயந்த சுபாவியா இருக்கலாம். டூர்,பிக்னிக்லாம் உண்டு//.

லாஜிக்கலா பார்த்தா மொதல்ல சகோதிரி லைஃபை செட்டில் பண்ணனும் உங்க காதல்/கண்ணாலத்தை எல்லாம் போஸ்ட்போன் பண்ணியிருப்பிங்க. எப்படியும் “அது” தானில்லை வாழ்க்கைய அனுபவிக்கவாவது செய்யலாமேன்னு டூர்/பிக்னிக்னு டைவர்ட் ஆவிங்க. இந்த டைவர்ஷன் இல்லின்னா சட்டு புட்டுனு சிஸ்டர் லைஃபும் செட்டில் ஆகும்.உங்க லைஃபும் செட்டில் ஆகும்.

//4.இவிக வீட்டையும்-அதிலான ஃபர்னிச்சர்ஸ்,ஃபிக்சர்ஸ்,ஃபிட்டிங்ஸை பார்த்தே இவிக ஆறாவது கேட்டகிரின்னு சொல்லிரலாம். வாகன மேட்டர் ஏற்கெனவே சொல்லிட்டன். இதுவரை சொல்லிட்டு வந்த குண நலன்லாம் இவிக தாய் வழியா வந்ததா இருக்கலாம் -அல்லது இந்த குண நலன்லாம் தாயாருக்கும் இருக்கலாம். முதுமை காரணமா அவிக தெளிஞ்சிருக்கலாம் .இந்த பார்ட்டி தெளியாததால கொஞ்சம் முட்டல் மோதல் வரலாம்.//

நம்மாளு ஒருத்தரு டைவர்சி. ஏதோ இவருக்குன்னே மாதிரி ஒரு டைவர்சி கிடைச்சாய்ங்க.கண்ணாலமாச்சு. சகட்டுமேனிக்கு மேற்சொன்ன மேட்டர்ல எல்லாம் காசை இறைச்சாய்ங்க.இப்ப என்னாச்சுங்கறிங்க? காசை இறைச்சி வாங்கினதெல்லாமிருக்கு.ஆனால் சம்சாரம்?

ஃபர்னிச்சர்ஸ்,ஃபிக்சர்ஸ்,ஃபிட்டிங்ஸ்,வாகனம் எல்லாம் வாங்கும் போது மனசே நிறைஞ்சுரும்.ஆனால் மெயின்டெய்னென்ஸ் இல்லின்னா நாறீரும். இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டியில இந்த பொறுப்பும் பெண்ணுடைய தலை மேல தான் விழுது . இதனாலயே பல முட்டல் மோதல்கள். கடைசியில அசலான மேட்டருக்கே ஆப்பு.

ஆகவே மக்காஸ் ! பொஞ்சாதி முக்கியம் -அவிக அன்பு இத்யாதி இத்யாதி முக்கியம்னா மேற்படி மேட்டர்ல எல்லாம் அடக்கி வாசிங்க.
//5.பெண் குழந்தைகள் இருக்கும். அவிகளுக்கு இவர்களை ஒத்த கலை,ரசனை இருக்கலாம். இவிகளோட கலாரசனையே இவிகளுக்கு நற்பெயரையும் -அவப்பெயரையும் தரலாம். ராமன் தேடிய சீதை மாதிரி எதிர்கால வாழ்க்கை துணையை கனவு கண்டபடி தேடி தேடி …தேடி தேடி ஒண்டிக்கட்டையா கூட நிக்க வேண்டி வரலாம்.//

The life doesn’t cares your preparations. Man proposes God disposes. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். இதெல்லாம் வெறுமனே கொட்டேஷன் இல்லை பாஸ்! வாழ்க்கை ஆழ்கடலில் நம்ம முன்னோர் முத்துக்குளிச்சு எடுத்து கொடுத்திருக்கிற முத்துக்கள்.

மைன்டை ப்ளாங்கா வச்சுக்கிட்டா பிரச்சினையே கிடையாது .உங்க வாழ்க்கை வியாபாரத்துக்கு ஜஸ்ட் அக்கவுண்டென்டா இருங்க. எம்.டி ஆயிராதிங்க. வந்தா வச்சுக்க வேண்டியதுதான்.போனா விட்டுர வேண்டியதுதான். நீங்க ஆன்மீகரா இருந்தா இன்னம் வசதி “வந்ததா ..மகாபிரசாதம்-போயிருச்சா கடவுளுக்கே காணிக்கை”

தெலுங்குல ஒரு சொலவடை உண்டு.தும்மித்தே ஊடி போயே முக்கு உன்டே எந்தா போதே எந்தா.

தும்மினாலே கழண்டுக்கற மூக்கு இருந்தா என்ன போனா என்ன? வந்ததை கட்டி வச்சா அது பிச்சுக்கிட்டு ஓடப்பார்க்கும்ங்கறப்போ . போறதை இழுத்து பிடிச்சா என்னாகும் ரோசிங்க.

//6.மன்சன் எதை முக்கியம்னு நினைக்கிறானோ விதி அதுக்கு தானே ஆப்பு வைக்கும் .இவியளுக்கு விரும்பினதை திங்க முடியாத , நிம்மதியா தூங்க முடியாத , தக்ஜம்ல ஈடுபடமுடியாத உடல் நல கோளாறுகள் வரலாம். ( இந்த விஷயங்களிலான இவர்களின் ஈடுபாடே கூட இதற்கு காரணமாகலாம்)//

பார்த்திங்களா !

இதுவரை நான் சொன்னதை எல்லாம் நக்கலா படிச்சுட்டு வந்திருந்தா – நம்ம உபதேசத்தை ஃபாலோ பண்ணலின்னா உங்க நிலை இதுதான். தேவையா? ரோசிங்க..
//7.லைஃப்ல பலான மேட்டர்ல ஆர்வம் அதிகமா இருக்கும். செயல் அப்படி இப்படி இருந்தாலும் கனவுகள்-கற்பனைகள் அமோகம். இவிக கேரக்டருக்கு ஏத்த கணவன்/மனைவி அமைஞ்சுட்டா உலகத்தையே மறந்து – “அதிலயே” மூழ்கி வாழ்க்கையில பெருசா தோத்துரவும் சான்ஸ் இருக்கு.//
உடலுறவில் இன்பம் தருவது உங்க செக்ஸ் பார்ட்னரோ/அவிக அழகோ /ஒத்துழைப்போ இல்லை.உங்க பிரம்மச்சரியம். உணவுக்கு ருசியை தருவது உங்க பசி -வயிற்றிலான ஜடராக்னி.

காது, ஜான்சன் பட்ஸ் இந்த இரண்டுக்கும் உள்ள உறவு தெரியும். காதுக்குள்ள எதையும் போட்டறியாத பார்ட்டி பட்ஸை அப்படி காட்டினா போதும் உடம்பே சிலிர்க்கும் .

அட் தி சேம் டைம் வேற ஒரு பார்ட்டி நூறு பீஸ் பட்ஸ் பாக்கெட்கை பக்கத்ல வச்சிக்கிட்டு கையும் காதும் சும்மாதானே இருக்குனு போட்டுக்கிட்டே இருந்தா எண்ணாகும் ? அதே கதை தான் இதுலயும்.

//8.ஆறாவது பாய்ண்ட்ல சொன்ன உடல் நல கோளாறுகள் வந்த பிறகாச்சும் வாய கட்டினா ஓகே.இல்லின்னா டிக்கெட்டு தான். அடுத்து இந்த செக்ஸ்/லவ் மேட்டர்ல ராங் ரூட்ல போயி உசுருக்கு உலை வச்சுக்கவும் கூடும். இழந்த சக்தி வைத்தியர்களின் தங்க சுரங்கம் இவர்கள்.//

பசியில்லாதவன் -ஜடராக்னி மந்தமாகிப்போனவன் புது புது தீனிக்கு அலையறதும் – செக்ஸ் பவர் ஜீரோவுக்கு வந்தவன் “புது புது “அனுபவங்களுக்கு கனவு காணுவதும் ஒன்னுதான்.

இந்த சின்ன புரிதல் வாலிபத்துலயே வந்துட்டா வயோதிக வாலிப அன்பர்களேங்கற அழைப்பை ஏற்க வேண்டிய அவசியமே வராது .
//9.தங்கள் சுக வாழ்வின் நீட்டிப்புக்காகவேனும் சேமிப்பதும் -முதலீடுகள் செய்வதும் -சொத்துக்கள் வாங்குவதும் இவர்கள் இயல்பு.ஆனால் இவை எந்தளவுக்கு மெட்டீரியலைஸ் ஆனா அந்தளவுக்கு விரும்பினதை திங்க முடியாத , நிம்மதியா தூங்க முடியாத , தக்ஜம்ல ஈடுபடமுடியாத உடல் நல கோளாறுகள் வரலாம். இதுக்காவ தொடர் வைத்திய சிகிச்சை கூட தேவைப்படலாம்.//

இங்கே முடிவெடுக்க வேண்டியது நீங்க தேன். உங்கள் தேவை அதுவா?இதுவா? ரெண்டும்னா வேலைக்காகாது . அல்லது ரெண்டுலயும் காக்கா கடின்னா ஓகே.
//10.இந்த ஒன்பது பாய்ண்ட்ஸ்ல சொல்லிட்டு வந்த துறையில வேலை /உத்யோகம் /தொழில்னு அமைஞ்சிருக்கலாம். பி.ஏ மேல கை வச்சுர்ரது / க்ளையண்ட் மேல கை வச்சுர்ரது மாதிரி நடக்கவும் வாய்ப்பிருக்கு . கொலிக்ஸ்-எம்ப்ளாயிஸ் மேட்டர்ல “தடுமாறி” செம பல்பு வாங்கவும் சான்ஸ் இருக்கு.//

இந்த மாதிரி நாறிப்போன கேஸ் ஹிஸ்டரி நானூறு உண்டு.ஆகவே வரும் முன் காப்பது நல்லது .இல்லின்னா கர்பமான பிறவு காண்டோம் உபயோகிச்ச கதையாயிரும்.

//11.இதுவரை சொல்லி வந்த துறைகளில் பெண்களால்,பெண் பெயர் கொண்ட ஆண்களால் பொருளீட்ட வாய்ப்புண்டு.//

இது உங்க லைஃப்ல மெட்டீரியலைஸ் ஆயிட்டிருந்தா ஃபர்னிச்சர்ஸ்,ஃபிக்சர்ஸ்,ஃபிட்டிங்ஸ்,வாகனம் ,தூக்கம்,கில்மா , நொறுக்குத்தீனி, மென் பானங்கள் ,பான்,பீடா ,வெத்திலை,பாக்கு இத்யாதி மேட்டர்ல எல்லாம் அடக்கி வாசிங்க.இல்லின்னா அசலுக்கு மோசம் வந்துரும்.

//12. இதுவரை சொல்லி வந்த சுகானுபவங்களுக்காக கடன் வாங்கியும் ,வீடு,வாகனம் மீது கடன் வாங்கியும் கூட செலவழிக்கலாம்.//
லைஃப்ல பல லைஃப் ஸ்டைல்ஸை பார்க்கிறோம். ஹ்ம் ..எல்லாம் பொறப்புலயே அப்படின்னு நினைச்சுக்கறம்.
ஆனால் என் அனுபவத்துல நான் சொல்றேன். எல்லாமே பயக்கம் தான் பாஸ் ! ஆரம்பத்துல கொஞ்சம் /ஏன் நிறைய கூட கஷ்டமா இருக்கும். பழகிருச்சுன்னு வைங்களேன்.. இவ்ள காலம் இப்படியே வாழ்ந்துட்டம்..திடீர்னு எப்படின்னு ஒரு தயக்கம்.

வாழ்க்கை தத்துவமே இதுல அடங்கிருது பயக்கம்-தயக்கம். கொய்யால தயக்கத்தை உதறிட்டா பயக்கத்தை மாத்திக்கலாம். பெருமைக்கு பன்னி மேய்ச்சு நாறிப்போறதை விட சூழலுக்கேற்ப நம்மை மாத்திக்கிறது பெஸ்டு.

என்னங்கடா இது ..பரிகாரம்னுட்டு வெறும் உபதேசமா அள்ளிவிடறாருன்னு சலிச்சுக்காதிங்க. சின்ன புரிதல் ஏற்பட்டுட்டா பரிகாரமே தேவையில்லை பாஸ் !
செரி ஒழியட்டும் அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரங்களை அள்ளி விட்டுர்ரன்.ஓகேவா !

உடுங்க ஜூட்டு .

2 Replies to “காசுபணம் துட்டு மணி மணீ :15 (ஆறாவது கேட்டகிரி பரிகாரம்)”

Abishega Priyan

08/01/2016 at 6:56 pm

சகோ, பழைய பதிவு ஒன்றில் நான் ரொம்ப நல்லவனாவே இருக்கேன். பிறகு ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது என்ற பல திருவாளர்களின் புலம்பலுக்கு நீங்கள் கூறியிருந்த காரணம் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. ஜாதகப்படி ஒரு தப்பு செய்யணும்னு இருந்தா அதை செஞ்சுகிட்டு இருந்தா நல்லது கெட்டது கலவையா நடந்து கிட்டு இருக்கு. அந்த தப்பை செய்யவே மாட்டோம்னு இருந்தா அந்த தப்பு பண்றவனால நமக்கு பல்புன்னு சொல்லியிருந்தீங்க.

நான் புகை, மது இரண்டையும் கற்று மறப்பதற்காக கூட தொட்டது கிடையாது. ஆனால் பூர்வீக வீடு இருந்த இடத்திற்கு பக்கத்தில் மது அருந்துபவர்களால் தொல்லை. இப்போது தொழில் செய்யும் இடத்திலும் மது மற்றும் புகை பழக்கம் உள்ளவர்களால் தொல்லை. நீங்க சொன்ன லாஜிக் மேட்ச் ஆகுதே.

லக்னத்துக்கு நாலில் சந்திரனுடன் கேது. நான்கு, ஐந்துக்கு அதிபதி 12ம் இடம் கன்னியில்.

ஒரு கிரகம் போட்ட ஸ்கெட்ச் படி வாழாம வேறொரு கிரகத்தின் அடிப்படையில் நம்ம வாழ்க்கை போய்கிட்டு இருக்குதோ?

-இப்படிக்கு
அபிஷேகப்பிரியன்

Reply

    S Murugesan

    08/01/2016 at 11:04 pm

    அபிஷேக் ப்ரியன் !

    வீட்லயும்,தொழிலகத்திலும் வெளி நாட்டு கண்டுபிடிப்பாளர்களோட போஸ்டர்கள் வைங்க. ரப்பர் பாம்பு -தேள் -பூரான் இத்யாதி மூலைக்கு மூலை போட்டு வைங்க..நான்கு +ஐந்து அதிபதிகளின் நிறத்துல பில்லோ கவர் ,பெட் ஸ்ப்ரெட் யூஸ் பண்ணுங்க.ப்ராப்ளம் சால்வ்ட்

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.