காசு பணம் துட்டு மணி மணி : 14 (ஆறாவது கேட்டகிரி பரிகாரம்)

DSCN0112

அண்ணே வணக்கம்ணே !
மொதல்ல அல்லாருக்கும் ஹேப்பி நியூ இயர் ! உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம்.

தன் தற்கொலை முயற்சிகளுக்கு இடையில கமல் பண்ற கமர்ஷியல் படம் மாதிரி ராகு கேது பெயர்ச்சிக்கு தாவிட்டம். இந்த தொடரை எங்கடா விட்டம்னு பார்த்தா இந்த ஆறாவது கேட்டகிரி சனங்களோட லட்சணங்கள் -அவிக பொருளாதார தடைகளுக்கு காரணங்களை சொல்லிட்டு டீல்ல விட்டாச்சு.
இப்ப இவிக எக்கனாமிக்கலா பிக் அப் ஆகனும்னா என்ன பண்ணனும்னு பார்த்துரலாம்.//………….// குறிக்குள்ள லட்சணம் .அடுத்த பாராவுலயே இந்த லட்சணம் இருந்தா என்ன பரிகாரம்னு கொடுத்துக்கிட்டு வரன்.ஓகேவா .உடுங்க ஜூட்டு .

லட்சணங்கள்:

//1.பார்க்க ரெம்ப அழகா இருப்பாய்ங்க//

சாமுத்திரிகா லட்சணம்னு ஒரு சப்ஜெக்ட் இருக்கு. இதன் படி சனங்களோட அங்க லட்சணங்களை வச்சே டோட்டல் ஃப்யூச்சரை சொல்லிரலாம்னு சொல்றாய்ங்க.
கால புருஷ தத்துவம் தெரியும்ல? ஜாதக சக்கரத்துல உள்ள கட்டங்களை எல்லாம் நிமிர்த்தி வச்சா லக்னம்தான் தலை -விரயபாவம்தான் பாதங்கள்.
லக்னபாவம் சுபர்களால் சூழப்பட்டு -சுபர்களால் பார்க்கப்பட்டு குஜாலா இருக்குன்னு வைங்க. சாமுத்திரிகா லட்சணம் என்ன சொல்லுதுன்னா அவன் தலை ,முகம் அழகா இருக்கும்.

இந்த ஜாதக மேட்டர்ல ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கோங்க. எந்த ம..னா -பு..னா ஜாதகத்துலயும் ஒன்பது கிரகமும் 100% வலிமையோட இருக்காது. வலிமையா இருக்கிற கிரகமும் 100% வலிமையா இருக்காது.இதே விதிதான் பாவங்களுக்கும். எந்த பாவமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்காது .
இந்த விதிப்படி பார்த்தா எந்த ஜாதகத்துலயும் லக்னம்ங்கறதும், லக்னாதிபதியும் கொஞ்சமாச்சும் டேமேஜ் ஆகியிருக்கும். லக்னம்ங்கறது 12 பாவங்களோட இன்டெக்ஸுங்கறாய்ங்க. நம்ம அனுபவத்துல லக்னங்கறது ஜாதகரோட உடல் -மனம்- புத்திங்கற 3 மேட்டரை காட்டுது .

ஊரார் ஜாதகத்தை உதாரணம் காட்டினா மா.ந வழக்கு போட்டுருவாய்ங்க.நம்ம ஜாதகத்தையே எடுத்துக்கோங்க. லக்னம் கடகம் .லக்னத்துல சூரி,குரு,புதன்.
சூ=சத்திரியன் ,குரு =பிராமணன் புத =வைசியன்.சின்ன வயசுல சத்திரியனுக்குரிய தில்லும் ,பிராமணனுக்குரிய தந்திரமும் -புதனுக்குரிய கணித ஞானமும் (ஐ மீன் வாழ்க்கையில எல்லாத்தையும் கணக்கு போட்டே முடிவெடுக்கறது) இருந்தது .

வாழ்க்கையில அடி மேல அடி விழ ஆரம்பிச்சது .(சுக்கிர தசை சனி புக்தி, சனி =தலித் ) ஊரு சனம் மொத்தமும் நம்மை ஒதுக்கி வச்சிட்டாய்ங்க.

இந்த கேப்ல நமக்குள்ள பல மாற்றங்கள் நடந்தது . புதன் நம்மை சோதிடராக்கிட்டாரு .நிலையாமை புரிஞ்சு போச்சு . கணக்கு பார்க்கிற மைண்டு ஃபணால். உச்சமா இருந்த குரு நம்மை வள்ளுவர் சொன்ன “அறவோன்” ஆக்கிட்டாரு . எவனாச்சும் நம்ம ஐ பேடை ஆட்டைய போட்டா ஆக்சசரீஸையும் அவனுக்கே கொடுத்துட்டு வந்துர்ர ஸ்டேஜுக்கு கொண்டு வந்துட்டாரு. நமக்குள்ளருந்து தெய்வீக சக்தி பீறிட ஆரம்பிச்சுருச்சு . சூரியன் ஒரு தலைவனுக்கே உரிய தியாக உணர்வை கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு .(சந்திரபாபு /மோடி/லேடியோட நமக்கென்னவரப்பு தகராறா? வாய்க்கா தகறாரா?

இப்படி பாசிட்டிவ் அதிகரிக்க அதிகரிக்க -கல்யாண மேடையில போட்டிருக்கிற வீடியோ லைட் பொசுக்க ஆரம்பிக்கிறாப்ல சூரி பல்லு மேட்டர்ல வேலை காட்னாரு .குரு வவுத்து மேட்டர்ல ஆப்பு ,புதன் தோல் மேட்டர்ல லொள்ளு.

ஏதோ குரு உச்சமா இருக்கிறதால நாம வாய திறக்காத வரை “ஐயரு போல”ன்னு ஆருனா நினைச்சுக்கலாம்.வாயை திறந்தாச்சுன்னா அதுவும் போச்சு.
இதை எல்லாம் ஏன் சொல்ல வரேன்னா லக்ன பாவத்தோட பலம் அழகுல செலவாயிருச்சுன்னா உடல்-மனம்-புத்தில்லாம் பல்பு வாங்கிரும். அப்சர்வேஷன்/ஜட்ஜிங் /டெசிஷன் மேக்கிங் எல்லாமே சொதப்பிரும்.

அழகா இருக்கிறதுனாலும் இயற்கை கொடுத்த வரம் .ஒழிஞ்சு போவட்டும் விட்டுரலாம் .அடுத்த கேட்டகிரி வருது பாருங்க..

//அல்லது அழகா காட்டிக்க மெனக்கெடுவாய்ங்க.(சகட்டுமேனிக்கு காஸ்மெட்டிக்ஸ் யூஸ்பண்ணுவாய்ங்க) //

நாம மன்சங்க. நம்ம மண்டைக்குள்ள என்ன இருக்கு? கையில என்ன வித்தையிருக்குங்கறத பொருத்துதான் மருவாதி. நாம என்ன மாடா? ஒட்டகமா? சாமுத்ரிகாலட்சணம் பார்த்து ஜட்ஜ் பண்ணி விலை நிர்ணயம் பண்ண.

நம்ம சிந்தனை ஃபோக்கஸ் லைட் மாதிரி .இது உடல் மேல விழுந்தா மனசு தெரியாது .மனசு மேல விழுந்தா உடம்பு தெரியாது .
அழகுன்னா மூக்கும் முழியுமா இருக்கிறது அழகில்லை .இளமை அழகில்லை. வாழ்க்கைங்கற போர்க்களத்துல புறமுதுகு காட்டி ஓடிராம -நம்பினவிகளை நட்டாத்துல விடாம-கடேசி வரைபோராடறமே அதான் அழகு .

நம்ம புற அழகால பெரிய சிக்கல் இருக்கு.அது என்னன்னா ஒலகம் அதை தாண்டி நம்ம மனசையோ புத்தியையோ பார்க்காம அதுலயே தங்கீரும்.

//இசை,நடனம்,நாட்டியம்,சிற்பம், கலை ,ஓவியம்,ஹேன்டி க்ராஃப்ட் இத்யாதியில தேர்ச்சி/பயிற்சி/ஆர்வம் இருக்கும்.//

இருக்கட்டும்.இருக்கட்டும். மன்சனுக்கும் -மிருகத்துக்கும் உள்ள வித்யாசமே கலாரசனை தான் .இல்லேங்கல.மன்சனை மிருகங்கற நிலைக்கு போயிராம காப்பாத்தறது கலாரசனை தான் இல்லேங்கல.

இதெல்லாம் நாட்டுக்காகவோ -வீட்டுக்காகவோ போராடி களைச்சவன் ரிலாக்ஸ் பண்ணிக்கற மேட்டரு. அடுத்த யுத்தத்துக்கான எனர்ஜியை கொடுக்கிற மேட்டரு .
ஸ்டீராய்ட் மாதிரி வச்சுக்கங்க.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு . என்னை இந்த நாட்டுக்கு பிரதமராக்கினா
( நேரடி தேர்தல்ல) நதிகளை இணைக்கிறவரை இதுக்கெல்லாம் தடா போட்டுருவன். களப்பணியில உள்ளவிகளுக்கு மட்டும் விதி விலக்கு .

// டூர்,பிக்னிக்,கெட் டு கெதர் ப்ரோக்ராம், பார்ட்டி,ஃபங்க்சன் ,முக்கியமா சுபகாரியங்கள்ள கலந்துக்க துடிப்பாய்ங்க.//

இதுவும் மேற்சொன்ன கேட்டகிரி தான். மாசமுச்சூடும் டங்குவார் அறுந்து தொங்கறாப்ல கடுமையா உழைச்சவன் செய்தா இதுவும் ப்ரொடக்டிவ்.ஆனால் இதையே பொளப்பா எடுத்துக்கிட்டா?

//நொறுக்குத்தீனி, மென் பானங்கள் கவரும். சாப்பாட்டுக்கும் ( பான்,பீடா ,வெத்திலை,பாக்கு உபரி) தூக்கத்துக்கும் கில்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாய்ங்க.//

நொறுக்கு தீனி பசியை கொன்னுரும். நாக்கு நீள ஆரம்பிக்கும்.புதுசு புதுசா தேடும்.அறு சுவை விருந்து செக்ஸ் பவரை குறைக்கும். பான்,பீடா மாதிரி லாகிரி வஸ்துல்லாம் கிராஃபை உசத்தின மாதிரியே இருக்கும்.பிறவு வெரைட்டிங்கும், கொஞ்சம் கொஞ்சமா வேலி தாண்ட வைக்கும் . பாலியல் வன்முறைக்கும், வக்ரத்துக்கும் வழி வகுக்கும். மீள முடியாத பள்ளத்துல தள்ளீரும்.

தூக்கம்? உழைத்து களைத்தவனின் தூக்கமும் உழைப்புக்கு சமமானது .வெட்டி தூக்கம்? போக போக தூக்கமின்மையை கொடுத்துரும்.பத்து நாள் பிரம்மச்சரியத்துக்கு பிறகான உடலுறவு முதலிரவு கணக்கா இருக்கும்.அது அடுத்த 10 நாளைக்கான பிரம்மச்சரியத்துக்கு உறுதுணையாகும் (இந்த 10 நாள்ங்கறது ஃபிக்சட் இல்லிங்கோ -அவிகவிக பாடி கண்டிஷனை பொருத்து மாறும் )

// வீடு,வண்டி வாகன விஷயத்துல லாஜிக்கே பார்க்காம ரசிப்பாய்ங்க,கனவு காணுவாங்க.//

ஜோதிடத்துல வீடு -வாகனம்-செக்ஸ் இந்த 3 மேட்டருக்கும் சுக்ரன் தான் காரகன். கொஞ்சம் செக்ஸியா ரோசிச்சு பாருங்க.வீடு ? சொந்த வீடுன்னா ஈசியா பொண்ணை கொடுப்பாய்ங்க. வாகனம் இருந்தா சீக்கிரமே வீட்டுக்கு வந்து படுத்துக்கலாம்.

நாம இப்பமிருக்கிறது வாடகை வீடுதான்.ஆனால் ஒரு வாரம்/பத்து நாள் கேப்ல கூட வீட்டை மாத்தின கேசான நம்மை கடந்த அஞ்சு வருசமா விடமாட்டேங்குது .இதுக்கே லைஃப் ப்ளர்ராயிருச்சு .வாழ்க்கையில ஒரு கிக் வேணம்னு தான் கட்டண ஆலோசனைய நிறுத்திட்டம்.

வாழ்க்கை ரெம்ப விசித்திரமானது . எது எதால எதெல்லாம் கிடைக்கும்னு கான்ஷியஸா/சப்கான்ஷியஸா ஸ்கெட்ச் பண்றமோ அது அதால அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காம போயிரும்.

இன்னைக்கு யூத்தெல்லாம் லட்ச ரூவாய்க்கு குறையாம வண்டி வச்சிருக்காய்ங்க. கண்ணாலம் கட்டாமயே ஃப்ளாட் வாங்கியிருக்காய்ங்க.கண்ணாலம் தான் தகைய மாட்டேங்குது .

இந்த மாதிரி பார்ட்டிகளுக்கு ஒரு டிப். ஃப்ளாட்டையும் -வண்டியையும் வித்துருங்க. ஒன்னரை மாசத்துல கண்ணாலம் தகையும்.
ஹ்யூமன் பாடி கொஞ்சம் டிஃப்ரன்ட் .இதை எந்தளவுக்கு சொகம்மா வச்சிருந்தா அந்தளவுக்கு சோப்ளாங்கி ஆயிரும்.எந்த அளவுக்கு பெண்டு களட்டறமோ அந்த அளவுக்கு வில்லா வளையும்.

சரிங்ணா மிச்ச மேட்டரை அடுத்த பதிவுல பார்த்துரலாம்.

DSCN0043

2 Replies to “காசு பணம் துட்டு மணி மணி : 14 (ஆறாவது கேட்டகிரி பரிகாரம்)”

deepan

02/01/2016 at 3:44 pm

Ayya vanakkam,
En jathagam kanya lagnam vrichika rasi ,3-chandran+budhan+suryan,6-sukran+shani,
5-ketu,11-rahu,7-guru+chevvai, dasa:shukra dasa budha bhukti Nan engineering eee padichruken ayya engineer job kedaikkuma ayya foreign la settle agalama .Entha job suitable agum.

Reply

  S Murugesan

  02/01/2016 at 5:45 pm

  வாங்க தீபன் !
  சிரிக்கிறதா அழுவறதா புரியல. லக்னாதிபதியே 3 ல் -அவருடன் விரயாதிபதி,கொசுறுக்கு நிலையற்ற தன்மையை தரும் சந்திரன். யோகத்தை தரவேண்டிய சுக்+சனி சத்ரு ரோக ருண ஸ்தானத்துல. பம்பர் ஆஃபர் மாதிரி புத்தி ஸ்தானத்துல கேது .குரு ஆட்சி பெற்றாலும் அவரோட அஷ்டமாதிபதி .தசைய பார்த்தா சுக்ரதசை ..என்னத்த சொல்ல? சொல்லனும்னா நெகட்டிவாவே பத்து பக்கம் சொல்லோனம்.

  லோக்கல்ல விஷயம் தெரிஞ்ச ஜோசியர் இருந்தா அவரை போய் பாருங்க..

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.