ராகுகேது பெயர்ச்சிபலன் : 2016-17 (துலாம் முதல் மீனம் வரை )

sarpadosha

அண்ணே வணக்கம்ணே !
மொதல்ல கோசார பலன்கள் பற்றிய உண்மைகளை ஒரு பதிவா தந்தோம்,பிறவு மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன் தந்தம். இப்ப இந்த பதிவுல துலாம் டு மீனம்.

நம்ம தமிழ் பதிவுகளை ஆங்கிலத்துல மொழிபெயர்க்க ஆளிருந்தா சொல்லுங்க. அவிக வீட்லருந்தே வேலை பார்க்கலாம். எதிர்பார்க்கும் சம்பளம் இத்யாதியுடன் மெயில் பண்ண சொல்லுங்க ப்ளீஸ். ஜனவரி 4 முதல் நம்ம இங்கிலீஷ் சைட் பிசி ஆயிரும்.இப்பமே புக் மார்க் பண்ணி வச்சுருங்க.

துலாம்:
மேஷத்துலருந்து 7 ஆவது ராசி உங்க ராசி . ராகு கேதுக்களும் ஒருத்தருக்கொருத்தர் 7ஆவது ராசியிலதான் இருப்பாய்ங்க. இந்த முறை மேஷத்துக்கு 5 ல் ராகு -11 ல் கேது . ஒங்களுக்கு ? 5 ல் கேது -11 ல் ராகு . சில நுட்பமான வித்யாசங்கள் தவிர மேஷ ராசிக்குண்டான அதே பலன் நடக்க வாய்ப்பிருக்கு .

ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் . இதன்படி கடந்த ஒன்னரை வருசமா கேதுவும் -ராகுவும் 6-12 ல இருந்தாய்ங்க. ஓரளவுக்கு பார்கெய்னிங் கப்பாசிட்டி – சத்ரு -ரோக -ருண உபாதைகளில் இருந்து ரிலீஃப் இருந்திருக்கும்.சில ரகசிய செலவுகளும் இருந்திருக்கும்.

அங்கருந்து ராகு கேது விலகறதால பார்கெய்னிங் கப்பாசிட்டி குறையும்.விட்டுக்கொடுத்து போக வேண்டி இருக்கும். சத்ரு -ரோகம் -ருணம்(கடன்) ஆகிய விஷயங்கள் மன அமைதிய கெடுக்கும்.

5 ல் கேது -11 ல் ராகு என்ற காம்பினேஷன் தப்பான ஜட்ஜிங், மறதி, மந்த மதி ,குழப்பம், அவப்பெயர்,துரதிருஷ்டம் எல்லாம் உண்டு . சிலர் இதை எல்லாம் பார்த்து டர்ராகி ஆரோ எனக்கு சூனியம் வச்சுட்டாய்கன்னு கிளம்பினா ஆட்டைய போடவே ஒரு பெரிய கூட்டம் இருக்கு. அலார்ட் ஆயிக்கோங்க. கனவில் பாம்புகள் வரலாம் .வெளி நாட்டினர்,பிற மதத்தவர்கள்,யோகிகள் வருவர்.

ராகு காரகத்வத்துல -அதாவது சினிமா,லாட்டரி,சாராயம் இத்யாதியில எந்தளவுக்கு குறுகிய கால பலன்/லாபம் கிடைச்சா அந்தளவுக்கு ஐந்தில் உள்ள கேது உங்களை பைத்தியமாவே அடிக்க சான்ஸ் இருக்கு . எச்சரிக்கை .

விருச்சிகம்:
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் . இதன்படி கடந்த ஒன்னரை வருசமா கேது அஞ்சுலயும், ராகு 11 லயும் இருந்தாங்க. கேது அஞ்சுலருந்து விலகறதால சமயோசித புத்தி,மன அமைதி சாத்தியம். தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிட்டும். வீண் பழிகள் விலகும். மக்கள் நலம் பெறுவர்.ராகு காரகத்வத்துல -அதாவது சினிமா,லாட்டரி,சாராயம் இத்யாதியில பெற்ற லாபங்கள் குறையலாமே தவிர தொழிலுக்கு மினிமம் கியாரண்டி உண்டு.

ஜனவரி 8 முதல் 4 ல் கேது -10ல் ராகு என்ற கிரக நிலை ஏற்படுது. இதனால வீட்டுல,வாகன் மேட்டர்ல சில லொள்ளுகள் இருந்தாலும் -தாய்க்கு உடல் நலிவு ஏற்பட்டாலும் அதுவே உங்கள் தொழில் -உத்யோகத்தில் -வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த ஒரு வகையில் உதவும். வெளி நாடு தொடர்பாக ஆதாயங்களை ( வேலை,ப்ராஜக்ட்,ஃபெல்லோஷிப்) எதிர்பார்த்தவர்களுக்கு இதர மதத்தவர்கள் /பிற மொழி பேசுவோர் உதவலாம். புதுமைய புகுத்தறேன்னு லந்து பண்ணாம நாலுபேரை கன்வின்ஸ் பண்ணி ஒர்க் அவுட் பண்ணுங்க பெட்டர்.

தனுசு :
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் . இதன்படி கடந்த ஒன்னரை வருசமா4-10 ல் இருந்த கேது -ராகு விலகுவதால் தாய்,வீடு,வாகனம்,கல்வி விஷயங்களில் இருந்த உறுத்தல்கள்,மனக்குறைகள் விலகும். கேது 3 க்கு வருவதால் மனோ தைரியம் கூடும். தள்ளிப்போட்ட உள்ளூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தோள் பட்டை,புஜங்கள் தொடர்பான சுகவீனம் ஏற்படலாம்.

இத்தனை காலம் அசாத்தியம் என்றிருந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் சாத்தியமே. தொழில் -உத்யோகத்தில் -வியாபாரம் எல்லாமே வாழத்தான் என்ற ஞானோதயம் ஏற்பட்டு சொத்து ,முதலீடு ,சேமிப்பை கரைத்தேனும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவிங்க. அதே நேரம் அவற்றில் வில்லங்கம் ஏற்படவும் வாய்ப்பிருக்கு. சிலர் பெயர் பெற்ற சிவ சேத்திரங்களை தரிசிப்பீர்கள்.

மகரம்:
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் . இதன்படி கடந்த ஒன்னரை வருசமா 3-9 ல் இருந்த கேதுவும் ராகுவும் அங்கிருந்து விலகுவதால் புத்தியில் கொஞ்சம் நிதானம் ஏற்படும் . காரியம் பெருசா வீரியம் பெருசான்னா காரியம் தான் பெருசுன்னு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுருவிங்க.தோள் பட்டை,புஜங்கள் தொடர்பான சுகவீனம் மறையும். கடந்த ஒன்னரை வருட காலத்தில் சொத்து ,முதலீடு ,சேமிப்பில் கை வைத்ததன் பலனை இப்போ அனுபவிக்க வேண்டி வரும்.

பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். உ.ம் பொய் பேச வேண்டி வருதல் .உண்மையே சொன்னாலும் பொய்யாய் போதல் , உரிய வார்த்தை கிடைக்காது திணறுதல், வாக்கிய அமைப்பு சிதைந்து எதிராளிக்கு புரியாத நிலை.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல்.

குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். யாரோடவும் ஒட்டாம இருப்பிங்க.அல்லது அவிக உங்களை வெட்டி விடுவாங்க.

ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அல்லது புதுசு புதுசா தேடி தேடி திங்க போயி வவுறு கெட்டு ஃபுட் பாய்சன் ஆகனும்.

நீங்க பெண்ணா இருக்கும் பட்சத்துல வைதவ்யம் கூட ஏற்படலாம் .ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால்/இருந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை /அல்லது பிரிவு ஏற்படலாம்.

மெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். (வீட்டு சாப்பாடேசாப்பிட்டாலும்,மினாரல்வாட்டரே குடிச்சாலும் எத்தனை ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாலும்)கொடுக்கல் வாங்கல்ல கடும் சிக்கல் ஏற்படும் .கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாது . சாக்கிரதையா இல்லின்னா மீட்டர் வட்டியில கூட சிக்கலாம்.

கும்பம்:
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் . இதன்படி கடந்த ஒன்னரை வருசமா2-8 ல் நின்ற கேதுவும் -ராகுவும் ஃபைனான்சியலாவும் -ஃபேமிலி ரிலேட்டடாவும் உங்களை ஒரு டெட்லாக் பொசிஷன்ல நிறுத்திட்டாய்ங்க. உடல் நலமும் இப்படியே. நல்லவேளையா இவிக விலகி 1-7 க்கு வர்ரதால மேற்படி டெட் லாக் பொசிஷன் படிப்படியா மாறும்.
கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் விலகும். வருமானம் கூடும். வாக்குவன்மை/வாக்பலிதம் பெருகும்.குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.குடும்ப ஒற்றுமை ஓங்கும். ஐ ஆப்பரேஷன் ப்ரிஸ்க்ரைப் செய்யப்பட்டவர்கள் தகிரியமா செய்துக்கலாம். சிகிச்சையும் பலன் தரும். விலகிப்போன நட்பு-சொந்தம்லாம் நெருங்கி வரும்.

அதே சமயம் 1-7 ல் வரப்போகும் கேது -ராகு மெடிக்கல் ரியாக்சன், ஃபுட் பாய்சன் , வாந்தி,வயிற்றுப்போக்கு உடல் நிலையை பாதிக்கும் ,சந்தேகம் நிம்மதியை கெடுக்கும்.காதலில் ப்ரேக் அப் வரலாம். மணமாகாதவர்களூக்கு திருமணம் தள்ளிப்போகலாம்.திருமண வாழ்க்கையில் சிக்கல் வரலாம்.வாழ்க்கை துணையின் உடல் நலம் பாதிக்கலாம்.

ஃப்ரென்ட்ஷிப்,லவ்,பார்ட்னர்ஷிப்,மேரீட் லைஃப்ல தகராறு வரலாம் . ஃப்ரென்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் உங்களுக்கு ஆப்புவைக்கலாம்.அல்லது ஆப்புவைக்கிறாய்ங்களோங்கற சந்தேகத்துல நிம்மதி கெடும்.

மீனம்:
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் . இதன்படி கடந்த ஒன்னரை வருசமா1-7 ல் இருந்த கேதுவும் ராகும் பஸ்ட் ஆன லாரி ட்யூப் கணக்கா ஒரு ஃபீலை கொடுத்திருப்பாய்ங்க.

உங்கள் அழகு,ஆரோக்கியம்,கவர்ச்சி எல்லாத்தையும் சப்மெர்சிபில் பம்ப் போட்டு உறிஞ்சிட்டாப்ல இருந்த நிலை மாறும்.காதலன்/காதலி-கணவர்/மனைவி இடையில் இருந்த சந்தேகம் விலகி /ப்ரேக் அப் ப்ரேக் அப் ஆகி மறுபடி அன்பு துளிர்க்கலாம்.கடந்த கால சோகங்கள் உங்களில் ஒரு வித சாடிசத்தை தூண்டலாம். கடந்த காலத்துல உங்களை இமிசை பண்ணவிகளை ஒரு வழி பண்ணிரனும்ங்கற ஆங்காரம் ஏற்படும்.

ஆனால் லூஸ்ல விடுங்க. உங்கள் தகுதிக்கேற்ற அங்கீகாரம், உழைப்புக்கேத்த பலனை பெற ஃபைட் பண்ணுங்க.கிடைக்கும். அதே நேரம் என்னாத்த அங்கீகாரம், என்னாத்த ஆதாயம்ங்கற ஒரு வித விரக்தியும் ஏற்படும்.

எச்சரிக்கை:
இங்கே மேஷம் முதல் 12 ராசிக்காரவிகளுக்கும் சொல்லப்பட்ட தீயபலனை குறைக்க சூட்சுமத்துல மோட்சம் கணக்கா பரிகாரங்கள் இருக்கு. அதை எல்லாம் ஓரிரண்டு நாள்ள பதிவா தர ட்ரை பண்றேன்.

8 Replies to “ராகுகேது பெயர்ச்சிபலன் : 2016-17 (துலாம் முதல் மீனம் வரை )”

Sivakumar

05/01/2016 at 4:05 am

பரிகாரம் எப்போ?

Reply

  S Murugesan

  05/01/2016 at 5:40 am

  வாங்க சிவகுமார் !
  பரிகாரம் தானே.. வந்துரும்.. வெய்ட் ப்ளீஸ் !

  Reply

MARUTHAPPAN

26/12/2015 at 8:05 pm

இந்த ராகு கேது பெயர்ச்சியால் இந்தியாவுக்கு என்ன நன்மை மற்றும் தீமை ஏற்றப்படும்

Reply

  S Murugesan

  26/12/2015 at 8:47 pm

  வாங்க மருதப்பன் !
  நல்ல கேள்வி. ஜனவரி 8 முதல் 01.08.16 வரை குரு+ராகு சேர்க்கை ஏற்படுகிறது . நாட்டுக்கு சுதந்திரம் வந்த நேரத்தை வச்சு கட்டம் போட்டா ரிஷப லக்னம் .கடக ராசி.

  ரிஷபத்துக்கு சிம்மம் அஞ்சாமிடம் இங்கே ரிஷபத்துக்கு அஷ்டமாதிபதியான குரு -ராகுவோட சேரும் போது அரசு தற்கொலை தனமான முடிவுகளை எடுக்கலாம். முடிவுகள் தப்பா போகலாம். பெருத்த அவமானமேற்படலாம். முக்கியமா பொருளாதார நெருக்கடி ஏற்படலாம்.

  கடகத்துக்கு சிம்மம் ரெண்டாமிடம் .இங்கே ஆறுக்குடைய குரு ,ராகுவுடன் சேரும் போது சந்திரசேகர் காலம் மாதிரி தங்கம் அடகு வைக்கவேண்டிய நிலை வருமோ என்னவோ?

  ஆளுங்கட்சியில் உட்கட்சி கலகம் தீவிரமடையலாம். இந்திய மானிலங்களில் அரசுகளை ஸ்தம்பிக்க செய்யும் வலுவான போராட்டங்கள் வெடிக்கலாம். குருவை மேகங்களுக்கு காரகன்னு சொல்வாய்ங்க. இவரோட ராகு சேரும் போது என்னாகும்னு நீங்களே கெஸ் பண்ணிரலாம்.

  உபரியாக மோடி அவர்களின் லக்னம் ராசி இரண்டுமே விருச்சிகம் தான். கேது – ராகு 4/10 ல் வருவதால் டிஃப்ரன்டா பண்றேன்னு எதையாவது சொதப்பலாம். இப்ப நவாஸ் ஷெரீஃப் பர்த் டே பார்ட்டிக்கு போனாப்ல.

  Reply

Victor

26/12/2015 at 4:32 pm

நன்றிகள்!!!!

நாகரிக கோமாளி

Reply

  S Murugesan

  26/12/2015 at 4:48 pm

  வாங்க விக்டர் !
  பலன் ஆரு வேணம்னா சொல்லிரலாம். பரிகாரம் தான் நம்ம பெசாலிட்டியே..அதையும் எழுதிட்டா நல்லாருக்கும் பார்ப்பம்..

  Reply

   Victor

   26/12/2015 at 6:43 pm

   எழுதுங்க தலைவரே!!

   பலருக்கும் உபயோகமாக இருக்கும்

   Reply

    S Murugesan

    26/12/2015 at 8:38 pm

    விக்டர் !
    நிச்சயமா எழுதிருவன்.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.