ராகு கேது பெயர்ச்சி பலன் (2016-17) -(மேஷம் முதல் கன்னி வரை)

sarpadosha

மேஷம்:
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் .

இதன் படி 6-12 ல் இருந்த ராகு -கேதுக்கள் விலகுவதால் என்ன பலன்னு பார்த்துரலாம். உங்க பார்கெய்னிங் கப்பாசிட்டி குறையும். கடன்,வழக்கு விவகாரங்கள்ள விட்டு கொடுத்து போகவேண்டியிருக்கும். கடந்த ஒன்னரை வருசமா உணவு,உறக்கம்,தாம்பத்யத்துல இருந்த ஒரு வித விரக்தி நிலை மாறும்.
ஜனவரி 8 முதல் 5-11 க்கு வரப்போற ராகு கேது என்ன பண்ணுவாங்க?

தொடர் அவமானங்கள்,அவப்பெயர், தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போதல், குறுக்கு வழிகளையும் சிந்தித்தல் , சட்ட விரோத வழிகளை அசை போடுதல் ,சதி செய்தல்/சதிக்கு இலக்காகுதல் ,புத்திகுழப்பம், பிள்ளை பேற்றில் பிரச்சினை (அதாவது கரு நிற்காமல் இருப்பது -கருச்சிதைவு ) அல்லது குழந்தைகளுக்கு மெடிக்கல் ரியாக்சன், ஃபுட் பாய்சன் , வாந்தி,வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகள் ஏற்படலாம். ஒரு வித துரதிர்ஷ்டம் தொடரும்.(எடுத்து வச்சாலும் கொடுத்து வைக்கலங்கற மாதிரி) சினிமா ,லாட்டரி,சாராயம், சூதாட்டம், கடத்தல் ,ஏற்றுமதி இறக்குமதி,ஷேர்மார்க்கெட் தொழிலில் தொடர் நஷ்டம் இருந்தாலும் கட்டுக்கடங்காத ஈடுபாடு இருக்கும்.

மேற்சொன்ன அனுபவங்களின் காரணமாக வாழ்வின் அர்த்தமற்ற தன்மை உறைத்து ஒரு வித விரக்தி மேலோங்கும்.ஜாதக பலம் காரணமாக சினிமா ,லாட்டரி,சாராயம், சூதாட்டம், கடத்தல் ,ஏற்றுமதி இறக்குமதி,ஷேர்மார்க்கெட் தொழிலில் சிறிதளவு லாபம் ஏற்பட்டாலும் மேற்சொன்ன தீய பலன் உக்கிரமாய் மாறும்.

ரிஷபம்:
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் .இதன் படி 3-9 ல் இருந்த ராகு கேது விலகுவதால் மனதில் இருந்த தைரியம் குறைய ஆரம்பிக்கும்.(யதார்த்த நிலை உறைக்கும்).கடந்த ஒன்னரை வருடமாய் அப்பா,அப்பா வழி உறவுகள் உங்களுக்கு உதவமுடியாத நிலை இருந்தது .அது மாறும். அப்பா வழி சொத்து /முதலீடு /சேமிப்பு ஆகியவற்றில் இருந்த தடைகள் விலகும் .

ஜனவரி 8 முதல் ராகு கேதுக்கள் 4-10 க்கு வருகிறார்கள் .இதனால் தாய்க்கு உடல் நலிவு , வீடு மாற்றம் அல்லது வீட்டில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் /மர சாமானுக்கு செதில் பிடித்தல் நடக்கலாம்.வாகன விஷயத்தில் சின்னதாய் சிக்கல் வந்து விலகும். இது நாள் வரை வீடே சொர்கமாய் இருந்தவர்கள் -தொழில் வேலை உத்யோகம் என்றாலே வேப்பங்காயாய் கசந்தவர்கள் கூட இரவு பகல் பாராது உழைக்க தயாராகிவிடுவீர்கள் .

மிதுனம்:
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் .இதன் படி கடந்த ஒன்னரை வருடமாக 4-10 ல் இருந்த ராகு கேது விலகிபோவதால் ..தாய்,வீடு,வாகனம்,கல்வி விஷயங்களில் ஒரு நல்ல முன்னேற்றத்தை எதிர்ப்பார்க்கலாம். தொழில் வேலை உத்யோகம் விஷயங்களில் புதுமை செய்கிறேன் பேர்வழி என்று விமர்சனங்களுக்கு உள்ளான நிலை மாறும்.

ஜனவரி 8 முதல் ராகு கேது 3-9 ல் வருவதால் மனோ தைரியம் கூடும், இளையசகோதரம் உங்கள் உதவியை நாடலாம்.வித் இன் தி சிட்டி/டவுன் பயணங்கள் நன்மை தரும். ஆனால் காது/தோள்பட்டையில் பிரச்சினை வரலாம். அப்பா,அப்பா வழி உறவுகள் விஷயத்தில் மனக்கசப்பு ஏற்படலாம்.அப்பாவழி சொத்து ,உங்கள் முதலீடு /சேமிப்பில் கை வைக்க வேண்டி வரலாம்.சிலர் வட நாட்டு சிவ சேத்திரங்களை தரிசிக்கலாம். தியானம் -யோகம் தொடர்பாக சரியான வழிகாட்டுதல் கிடைக்கலாம்.

கடகம்:
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் கடந்த ஒன்னரை வருடமாக 3-9 ல் ராகு கேதுக்கள் இருந்ததால் நான் இருக்கும் இடமே அரசவை -என் நண்பர்களே அஷ்டதிக்கஜங்கள் என்ற மன நிலையில் தொலை தூர வாய்ப்புகளில் கவனம் செலுத்த மறந்திருப்பீர்கள். அசட்டு தைரியத்தால் உங்கள் சேமிப்பு,முதலீடுகளை வைத்து விளையாடியிருப்பீர்கள்.

இப்போது ஜனவரி 8 முதல் ராகு கேது 2-8 க்கு வருவதால் பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். உ.ம் பொய் பேச வேண்டி வருதல் .உண்மையே சொன்னாலும் பொய்யாய் போதல் , உரிய வார்த்தை கிடைக்காது திணறுதல், வாக்கிய அமைப்பு சிதைந்து எதிராளிக்கு புரியாத நிலை.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல்.

குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். யாரோடவும் ஒட்டாம இருப்பிங்க.அல்லது அவிக உங்களை வெட்டி விடுவாங்க.

ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அல்லது புதுசு புதுசா தேடி தேடி திங்க போயி வவுறு கெட்டு ஃபுட் பாய்சன் ஆகனும்.

நீங்க பெண்ணா இருக்கும் பட்சத்துல வைதவ்யம் கூட ஏற்படலாம் .ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால்/இருந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை /அல்லது பிரிவு ஏற்படலாம்.

மெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். (வீட்டு சாப்பாடேசாப்பிட்டாலும்,மினாரல்வாட்டரே குடிச்சாலும் எத்தனை ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாலும்)கொடுக்கல் வாங்கல்ல கடும் சிக்கல் ஏற்படும் .கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாது .

சிம்மம்:
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் .இதன் படி இது நாள் வரை 2/8 ல் இருந்த ராகு கேது விலகுவதால் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் விலகும். வருமானம் கூடும். வாக்குவன்மை/வாக்பலிதம் பெருகும்.குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.குடும்ப ஒற்றுமை ஓங்கும். ஐ ஆப்பரேஷன் ப்ரிஸ்க்ரைப் செய்யப்பட்டவர்கள் தகிரியமா செய்துக்கலாம். சிகிச்சையும் பலன் தரும். விலகிப்போன நட்பு-சொந்தம்லாம் நெருங்கி வரும்.

ஜனவரி 8 முதல் 1-7 க்கு வரும் ராகு கேதுக்கள் என்ன செய்வாங்க?

மெடிக்கல் ரியாக்சன், ஃபுட் பாய்சன் , வாந்தி,வயிற்றுப்போக்கு உடல் நிலையை பாதிக்கும் ,சந்தேகம் நிம்மதியை கெடுக்கும்.காதலில் ப்ரேக் அப் வரலாம். மணமாகாதவர்களூக்கு திருமணம் தள்ளிப்போகலாம்.திருமண வாழ்க்கையில் சிக்கல் வரலாம்.வாழ்க்கை துணையின் உடல் நலம் பாதிக்கலாம்.
ஃப்ரென்ட்ஷிப்,லவ்,பார்ட்னர்ஷிப்,மேரீட் லைஃப்ல தகராறு வரலாம் . ஃப்ரென்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் உங்களுக்கு ஆப்புவைக்கலாம்.அல்லது ஆப்புவைக்கிறாய்ங்களோங்கற சந்தேகத்துல நிம்மதி கெடும்.

கன்னி:
ஒரு கிரகம்/கிரகங்கள் அடுத்த ராசிக்கு போவதால் ஏற்படும் பலன்கள்ஒரு புறம் என்றால் அவை தாம் இருக்கும் ராசியை விட்டு விலகுவதால் ஏற்படும் பலனும் முக்கியம் . இதன்படி 1-7 ல் இருந்த ராகு கேது விலகுவதால் கிரகணம் நீங்கிய சந்திரன் போல ஒரு ஃபீல் வரும். கு.பட்சம் ஜட்ஜிங் கப்பாசிட்டி அதிகரிக்கும். நல்லது கெட்டது தெரியும். குறிப்பாக வாழ்க்கை துணை பற்றிய உங்கள் அதிருப்தியை மனதில் வைத்து குமைந்தது மாறும் . இதே பலன் உங்கள் வாழ்க்கை துணைக்கும் பொருந்தும்.( அவிக ராசி எதுவா இருந்தாலும் )

ஜனவரி 8 முதல் இந்த ராகு கேது 6-12 க்கு போறாய்ங்க.இதனால பார்கெய்னிங் கப்பாசிட்டி அதிகரிக்கும். கடன்,வழக்கு விவகாரங்களில் உங்கள் கை மேலோங்கும் ( இந்த சமயத்துல வெட்டி பந்தாவுக்கு போகாம செட்டில் பண்ணிக்கிறது நல்லது) போட்டிகளை சமாளிக்கலாம். ரகசிய செலவுகள் அதிகரிக்கும். தூக்கமின்மை – கில்மா மேட்டர்ல விஷ பரீட்சைகளுக்கும் வாய்ப்பிருக்கு.அடக்கி வாசிங்க.

4 Replies to “ராகு கேது பெயர்ச்சி பலன் (2016-17) -(மேஷம் முதல் கன்னி வரை)”

Sivakumar

05/01/2016 at 4:09 am

அம்மாவின் அடாவடி + வெற்றிமுகம் தொடருமா?

Reply

  S Murugesan

  05/01/2016 at 5:43 am

  சிவகுமார் !
  ஜனவரி 8 க்கு பிறகு இந்த பொலிட்டிக்கல் சென்சேஷ்னல் சீரிசை எடுத்துக்கலாம்னு இருக்கன்.பார்ப்பம்..

  Reply

Rajanperianambi

24/12/2015 at 11:04 pm

நன்றி பாஸ். அப்படியே மகாமகம் ராகு கேது தொடர்பு பெற்று வருகிறதே! அது பற்றியும் சொல்லுங்க!

Reply

  S Murugesan

  25/12/2015 at 1:46 am

  ராஜன் பெரிய நம்பி !
  குரு ஸ்திதிய வச்சு மகாமகம். அந்த குருவோட ராகு சேர்ந்தாலே சிக்கல்தானே ! முக்கியமா ஆட்சியாளர்களுக்கு ..

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.