ராகு கேது பெயர்ச்சி பலன் (2016-17 ) -முன்னுரை

sarpadosha

அண்ணே வணக்கம்ணே !
2015 டிசம்பர் 31 க்கு பிறவு கடைய மூடபோறம் (கட்டண ஆலோசனை) .இங்கிலீஷ்ல சைட் வைக்கப்போறம். ஆட்சென்ஸ் வருமானத்துலயே பொளப்பை நடத்தப்போறம்னு அறிவிச்சுட்டது தெரியும் தானே..

நாம இதுவரை ராகு கேது பெயர்ச்சி பலன் எழுதாததற்கும் – மேற்படி இரண்டு முடிவுகளுக்கும் சம்பந்தமே இல்லை. அசலான காரணம் என்னன்னா நமக்கு இந்த கோசாரங்கள் மேல பெருசா நம்பிக்கை கிடையாது.

உங்களை போலவே ஜோதிட ஆர்வலனாய் இருந்த காலத்துல நானும் இந்த கிரகபெயர்ச்சிக்கெல்லாம் வெய்ட் பண்ணவன் தேன். ஆனால் போக போக ஜோதிடத்தின் நீள அகலங்கள் தெ(பு)ரிய வந்தபிறவு தான் இந்த கோசார கிரகபெயர்ச்சிக்கெல்லாம் அந்தளவு முக்கியத்துவம் இல்லேங்கற ஞானோதயம் ஆச்சு.

ஜாதகம் உங்கள் கார். ஜாதகத்திலான கிரகபலம் தான் பெட் ரோல்/டீசல்/கியாஸ். தசாபுக்திகள் ரோடு .இதுல கோசாரம் எங்கே வருது?

கலைஞர் 13 வருசம் வனவாசம் பண்ணாரே.அப்ப அவருக்கு அந்த 13 வருசம் கோசாரத்துல கிரகமே மாறலியா? கோசாரம்லாம் எஃபெக்ட் பண்ணுதுன்னா உங்க ஜாதகம் சோனின்னு அருத்தம். சுமாரான ஜாதகர்களுக்கு கூட கோசாரம் பெருசா எஃபெக்ட் பண்றதில்லை (அனுபவம்)

ஆனாலும் இந்த வருடவாரி கிரக பெயர்ச்சிகளுக்கு பலன் எழுதறது ஜஸ்ட் ..புதிய வாசகர்களை பெறும் யுக்தி தான்.இந்த கிரக பெயர்ச்சி பலனுக்காவ புதுசா வந்தவிக பிறவு கொஞ்சம் கொஞ்சமா நம்ம சைட்டை நோண்டி நுங்கெடுத்தா சூட்சுமம் என்னன்னு அவிகளே தெரிஞ்சுக்குவாய்ங்கன்ற நம்பிக்கை தான்.கொளந்தைக்கு வா கண்ணு சாக்லெட் தரேன்னா ஓடி வரும். வா நைனா விளக்கெண்ணெய் தரேன்னா ஓடி பூடும்.

(இந்த கசப்பான உண்மைகளை படிச்சும் இந்த பதிவை தொடர்ந்து படிக்கிறிங்கன்னா ஒன்னு சத்யான்வேஷியா இருக்கனும் (உண்மையை தேடுபவர்) -அல்லது கொய்யால நம்ம ராசிக்கு என்னதான் சொல்றான் பார்த்துட்டு ஓடிருவம்னு நினைச்சா? நீங்க அய்யோ பாவம்.

ரகசியம்:
கட்டண ஆலோசனைக்கு வந்த ஜாதகங்கள் டஜன் கணக்கா குமிஞ்சி கிடக்கு. அதுல கான்சன்ட் ரேட் பண்ணனும்னா சைட்டை பத்தின ரோசனையே வரப்படாது . இந்த ராகு -கேது பெயர்ச்சி பலன் போட்டு தொலைச்சுட்டா ஒரு மாசத்துக்கு ஹிட்ஸுக்கு பஞ்சமே இருக்காது .மினிமம் கியாரன்டி . இதனாலதான் ராகு கேது பெயர்ச்சி பலன் பதிவை இன்னைக்கு போடறேன்.

செரி மேட்டருக்கு வரேன்.

ராகு-கேதுக்கள் உங்க ஜாதகத்துல நல்ல பொசிஷன்ல இருந்தா கோசார ராகு கேதுல்லாம் ஒன்னமே பண்ணாது . அதாவது ஜாதகத்துல ராகு கேதுக்கள் லக்னாத் 3-4-6-10-11-12 ல நின்னு இவிக நின்ன இடத்து அதிபதிகள் லக்னாத் சுபராக இருந்தா பிரச்சினையே இல்லை . ( நிபந்தனை: அதுக்காவ லக்னாதிபதியோ – மேற்படி சுபர்களோ ராகு கேதுக்களோட சேர்ந்திருக்கப்படாதுங்கோ) ராகு-கேது நின்ற இடத்து அதிபதிகள் 6-8-12ல இருக்கிறதோ /அல்லது இந்த அதிபதிகளோட சேர்ரதோ கூடாதுங்கோ)
நிலைமை இதுக்கு நேர் மாறா இருக்கு .ஜாதகத்துலயே ராகு கேது பல்பு வாங்கி இருக்காய்ங்க. மேற்சொன்ன 3-4-6-10-11-12 இடங்களை தவிர்த்து மற்ற இடங்கள்ள இருக்காய்ங்க. லக்னாதிபதி -லக்னாத் சுபர்கள்/பாபர்களோட சேர்ந்திருக்காய்ங்க. லக்னாத் 6-8-12 பாவங்கள்ள நின்னாய்ங்க -அல்லது 6-8-12 அதிபதிகளோட சேர்ந்திருக்காய்ங்கன்னு வைங்க.ராகு கேது மேட்டர்ல நீங்க சோனி . கட்டாயமா இந்த ரா/கே பெயர்ச்சி பலன்+பரிகாரங்களை படிச்சு ஃபாலோ பண்ணிக்கனும்.

எச்சரிக்கை:
மேற்படி நிபந்தனைகளை ஜாதகத்துல உள்ள கிரகஸ்திதிக்கு மட்டும் அப்ளை பண்ணா போறாது .ராகு சிம்மத்துலயும் கேது சிம்மத்துலயும் பிரவேசிச்சு அங்கயே சஞ்சரிக்க போற 8.1.2016 முதல் 27.7.2017 வரையிலான கால கட்டத்துல கோசாரத்துல ராகு-கேதுக்களோட ஆரு சேர்ராய்ங்க. இவிக நின்ன இடத்து அதிபதிகள் ( முறையே சூரியன்-சனி எந்த ராசியில இருப்பாய்ங்க/ ஆரோட சேர்ராய்ங்கன்ற விஷயத்தை எல்லாம் வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கனும்.

ராகு -கேதுக்களுக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது . ராகு சனியை போலும் -கேது செவ்வாயை போலும் பலன் தருவார்கள்னு ஒரு விதி இருக்கு. எனவே கோசாரத்துல சனி பெட்டர் பொசிஷன்ல இருந்தா ராகுவால் ஏற்படும் தீயபலன் குறையலாம். செவ் பெட்டர் பொசிஷன்ல இருந்தா கேதுவோட தீய பலன் குறையலாம். ஒரிஜினாலிட்டி இல்லேன்னு சொல்லப்பட்டிருந்தாலும் ராகு-கேதுவுக்குன்னு தனிப்பட்ட சில காரகங்கள் இருக்கு
.
ராகு அனுகூலமா இருக்கையில் ராகு காரகங்களிலும் -கேது அனுகூலமா இருக்கையில் கேது காரகங்களிலும் உங்களுக்கு அனுகூலம் -லாபம் ஏற்படும் . (பிரதி கூலமா இருக்கும் காலத்துல ?? தோசையை திருப்பி போடுங்க)

ராகுவின் காரகங்கள்:(ராகுவே சொல்றாப்ல)
Tasmak

smugling

lotteries

மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே.

உங்க ராசிக்கு ராகு பிரதிகூலமா இருந்தா நீங்க செய்துக்கவேண்டியபரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் ‘ட்ராகன்’ (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு ‘பெரிசுக்கு’ ஒரு ‘கட்டிங்’ போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.

கேது காரகம் (கேதுவே சொல்றாப்ல)

15x10

நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் ‘நம்மவர்’ என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.

கேதுவுக்குண்டான பரிகாரங்கள்:

Baba

1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அடுத்த பதிவில் மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் உண்டான ராகு -கேது பெயர்ச்சி பலனை ஒரே மூச்சில் தர ட்ரை பண்றேன். அதுக்குள்ள நம்ம லேட்டஸ் தொடரான காசு பணம் துட்டு மணி மணியில நாலாவது கேட்டகிரியை படிச்சு பார்த்துருங்க. பயன்படும்.

12 Replies to “ராகு கேது பெயர்ச்சி பலன் (2016-17 ) -முன்னுரை”

Ganezan nk

22/08/2016 at 1:50 pm

//ஜாதகத்துல ராகு கேதுக்கள் லக்னாத் 3-4-6-10-11-12 ல நின்னு இவிக நின்ன இடத்து அதிபதிகள் லக்னாத் சுபராக இருந்தா பிரச்சினையே இல்லை// ராகு கேது 6 & 12ல நிக்கிம்போது அந்த இடத்து அதிபதிகள் பெரும்பாலும் லக்ன பாவிங்க தான சார்!?

Reply

  S Murugesan

  22/08/2016 at 8:15 pm

  வாங்க கணேசன் !
  ஆம்.

  Reply

Sivakumar

30/12/2015 at 8:19 am

I can do decent translation work.

Reply

  S Murugesan

  30/12/2015 at 11:46 am

  வாங்க சிவகுமார் !
  நம்ம பதிவுகள்ள உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பதிவின் 20 வரிகளை மொழிபெயர்த்து மெயில் பண்ணுங்க. அப்படியே உங்களால் எந்தளவு அவுட் புட் கொடுக்க முடியும். பொருளாதார ரீதியில் உங்கள் எதிர்ப்பார்ப்பு என்ன தெரிவிக்கவும் (swamy7867@gmail.com)

  Reply

Sivakumar

30/12/2015 at 8:16 am

என் ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,9ல் கேது, ராகு. ராசிக்கு 1,7ல். வாழ்வும் குணமும் 1,7போல்தான் உள்ளது. எப்போதும் சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பது, நம்பி ஏமாந்து போதல், வாய்ப்புகளை தவறவிடுதல், கனவுகள் & வேண்டுதல்கள் ஒருபோதும் நிறைவேறாமை, பண நஷ்டம் (அ) தொலைந்து போதல், நட்பு உறவு பகை, தலைவணங்காமை….நரகவாழ்க்கை…லக்னமா…கோசாரமா?

Reply

  S Murugesan

  30/12/2015 at 11:47 am

  சிவகுமார் !
  ராசிக்கு 1-7 ல் ராகு கேது இந்த அளவு எஃபெக்ட் பண்ணாதே.. வேற ஏதோ மேஜர் எஃபெக்ட் உங்கள் ஜாதகத்துல இருக்குன்னு நினைக்கிறேன்.

  Reply

selvaraj

24/12/2015 at 4:19 pm

It is important to predict simmah rasi where Ragu moving as it is of AMMA. Captains Thula rasi where afflicted from tenth house, for its movement of displacement only captain is waiting to give his consent to DMK for alliance .Sir, I am eagerly waiting for your next posting on Ragu/Kethu

Reply

  S Murugesan

  24/12/2015 at 5:33 pm

  வாங்க செல்வராஜ் !
  மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு பலன் அடிச்சு முடிச்சுட்டன். போட்டுர்ரன். துலாம் டு மீனம் அடுத்த பதிவுல .

  Reply

Thanigaivel

24/12/2015 at 11:26 am

பதிவு நன்றாக உள்ளது ஐயா. (எழுத்து நடையில் மாற்றம் தெரிவது போல் உள்ளது)
நன்றி.

தணிகைவேல். ம

Reply

  S Murugesan

  24/12/2015 at 12:12 pm

  வாங்க தணிகைவேல் !
  மாற்றம் ஒன்றுதானே மாறாதது . (நல்லாருந்தா செரி ) தங்கள் மெயிலுக்கும் நன்றி .

  Reply

Victor

23/12/2015 at 11:36 pm

அருமையான விளக்கம். நன்றி

Reply

  S Murugesan

  24/12/2015 at 12:13 pm

  வாங்க விக்டர் !
  நன்றி. நம்ம ப்ளாக்ல சர்ப்பதோஷம்னு தேடிப்பாருங்க. இன்னம் அசலான மேட்டர்லாம் கிடைக்கும்.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.