Tags       

Categories  அனுபவஜோதிடம் காசு பணம் துட்டு மணி காசுபணம்

காசு பணம் துட்டு மணி மணி : 13

Astro Ant FB

அண்ணே வணக்கம்ணே !
உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும்னுண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம்.

என்னடா தொடர் ஸ்மூத்தா போகுதேன்னு கொஞ்சமா சந்தோசப்பட்டேன். வரிசையா வந்துருச்சு ஆப்பு. நம்ம எதிர்கால திட்டமான இங்கிலீஷ் வெப்சைட்டுக்கு திரு மோகன் சுந்தர் -மற்றும் திரு தணிகை வேல் நன் கொடை கொடுத்ததுமே திரி பத்திக்கிச்சு . இப்பம் மைண்டு இங்க்லீஷ் சைட் மேல போயிருச்சு .ஜனவரி 4 ஆம் தேதிக்கு கு.பட்சம் பத்து போஸ்டாவது இருக்கனும்னு பிடிவாதம்.

சுகுமார்ஜீ மொழிபெயர்த்து கொடுத்த பழைய சரக்கா? திருமுருகன் கார்த்திகேயன் உபயத்துல புதிய சரக்கா? ஆத்தா தான் முடிவு பண்ணனும். ஃபிசிக்கலா பெருசா செய்யலின்னாலும் மனசு பதிவுல நிக்க மாட்டேங்குது .

அடுத்து நேயர் விருப்பம் போல ராகு -கேது பெயர்ச்சி பலனுக்கு டிமாண்ட் அதிகமாயிருச்சு .கட்டண ஆலோசனை கடைய மூடப்போறமில்லையா -அதனால பென்டிங் வால்யூம்ஸ் எல்லாம் பைசல் பண்ணியாகனும். மொத்தத்துல இந்த தொடரும் அல்பாயுசான்னு தெரியல. நிற்க .

நம்ம பரிகாரங்களை பத்தி சனத்துக்கு மிக பெரிய அதிருப்தி இருக்கு. ஏன் பாஸ்..ஏதோ கோவில் -குளம்னா போய் வரலாம்,ஹோமம் யாகம்னாலும் செஞ்சு தொலைச்சுரலாம்.ஆனால் நீங்க சொல்ற பரிகாரம்லாம் கேட்க சிம்பிளா இருக்கு.ஆனால் சின்ன சின்ன மேட்டர்ல கூட மாற்றம் வரனும்-தொடரனும்ங்கறிங்க.(20 வருஷம் ஷூ போட்டு பழகினவனை -செருப்பு போடுங்கறிங்க – தமிழ் சினிமா வில்லன் மாதிரி சஃபாரி சூட் போட சொல்றிங்க) இத்தனை காலம் ஒரு வாழ்க்கை முறை பழகிருச்சு . படக்குன்னு மாறமுடியல.

-இதாங்க கம்ப்ளெய்ன்ட்.

நான் என்ன சொல்றேன்னா இத்தனை காலம் உங்கள் வாழ்க்கையை நடத்தினது உங்க ஈகோ. இதுக்கு உங்க ஜாதகம் தெரியாது.அதனோட பவிசு தெரியாது . நீங்க எதை எல்லாம் செய்யப்படாதோ -அதையே செய்ய உங்களை தூண்டியிருக்கும். இந்த ஈகோ வழி வாழ்க்கையால என்னெல்லாம் இழந்திங்கன்றது உங்களுக்கு தெரியாது .

உங்க ஜாதகப்படி என்னெல்லாம் நல்லது நடந்திருக்கும்னு ஜோதிடர் சொல்றாரோ- எதுவுமே நடக்கலிங்கன்றிங்க. இதே போல உங்க ஜாதகப்படி நடக்கவே கூடாத நஷ்டம்லாம் நடந்துட்டதா சொல்றிங்க.

இதெல்லாம் எப்படி நடக்குதுன்னா? உங்கள் ஜாதகம் ஒரு டூ இன் ஒன் .டெபிட் கார்டும் இதுவே.கிரெடிட் கார்டும் இதுவே. உங்களுக்கு விதிக்கப்பட்டவற்றை மட்டும் செய்துட்டு வந்தா டெபிட் கார்டா ஒர்க் ஆகும்.

இல்லை நான் அவனை மாதிரி -இவனை மாதிரி வரனும்னு உங்களுக்கு விதிக்கப்படாததை எல்லாம் செய்தா கிரெடிட் கார்டா மாறுது. ட்யூ டேட் வந்ததும் ஆப்பா மாறுது . நான் சொல்ற பரிகாரங்களே பல நிபந்தனைகள் காரணமாக என்னால் நீர்க்க செய்யப்பட்டவை . ( நான் சொல்ற பரிகாரத்தால உங்க சோசியல் லைஃப்,ஃபேமிலி லைஃப்,ஃபைனான்ஸ் எல்லாம் பாதிக்கப்பட கூடாதில்லை -முக்கியமா உசுரு போயிடப்படாதில்லை) இதுல பலரும் ஒன்னை மட்டும் ஃபாலோ பண்றேன்.சிலதை மட்டும் ஃபாலோ பண்றேன்னு பேரம் பேசறாய்ங்க.

இதெல்லாம் வேலைக்காகாது.

வாழ்க்கையில கண்ட தோல்விகள்,அவமானங்கள் இத்யாதிகளை எல்லாம் பாம்பு தோலை உரிச்ச கணக்கா உரிச்சு போட்டுட்டு போயிட்டே இருக்கனும். ஒவ்வொரு நாளும் புதுசு .ஒவ்வொரு நாளும் நாமளும் புதுசா மாறனும்.மாறலின்னா ஏமாறனும். மாறிருங்க இல்லின்னா வேஸ்ட். டோட்டல் வேஸ்ட்.

நாம இன்னைக்கு என்னவா இருக்கமே இதுக்கெல்லாம் மூலம் நம்ம இளமையில இருக்கு. நம்ம கல்யாணகுணங்களுக்கான மூலங்களை அறிந்தால் சிரிப்பு சிரிப்பா வரும். ஆகவே எதையும் -எப்பவும் மாத்திக்க தயாரா இருக்கனும். இல்லின்னா பிரச்சினைகள் நம்மை தாயாராக்கிரும்.

மகாபாரத யுத்தத்துல துரியோதனனோட இருந்த ஜூரிங்க மனசுல்லாம் பாண்டவர்ங்க பக்கம் இருக்க – அது அவிக ஆட்டிட்யூட்லயும் ரிஃப்ளெக்ட் ஆக துரியோதனன் கடுப்பாகி செம ரெய்டு விடுவான். பிறவு அதுவரை அடக்கி வாசிச்ச ஜூரிங்க கொஞ்சம் அனல் காட்டுவாய்ங்க. என்ன செய்து என்ன உபயோகம் .கடேசியில துரியோதனன் துடை பிளக்கப்பட்டு சாகத்தான் வேண்டி இருந்தது .

கொய்யால ..துரியோதனனுக்கு பாண்டவர்களோட என்ன பிரச்சினை? சின்ன வயசுல பீமன் இவனை கண்டபடி தூக்கி போட்டு விளையாடறான். இவனும் “வேணாம் வலிக்குது -அழுதுருவன்”ன்னு சொல்லியிருப்பான்.ஆனாலும் பீமன் விடல. உடல் பலம் உள்ளவனுக்கு மேல் மாடி அந்தளவுக்கு வேலை செய்யாதுங்கறதுக்கு இது ஒரு உதாரணம்.

பீமன் ஃபிசிக்கலா ஸ்ட்ராங்கா இருக்கலாம்.ஆனால் அப்பன் இல்லாத புள்ளை. பெரியப்பா குருடங்கறதால அப்பன் ராசாவானது நெஜம் தான்.ஆனால் அப்பன் டிக்கெட் போட்டதும் பெரியப்பன் ராஜாவாயிட்டான். அவனோட பெரிய புள்ள துரியோதனன் தான் பட்டத்து இளவரசன்.

இதை எல்லாம் ரோசிச்சு பீமன் அடக்கி வாசிச்சிருந்தா குருட்சேத்திர யுத்தமே கிடையாது. ஆனாலும் துரியோதனனை இமிசை பண்ணிட்டான். இந்த ஃப்ளாஷ் பேக்கை மனசுல வச்சுக்கிட்டு தான் துரியோதனன் பாண்டவர்கள் மேட்டர்ல ஒவ்வொரு கட்டத்துலயும் தப்பான முடிவெடுக்கிறான். இத்தனைக்கும் பீஷ்மர்ல இருந்து கர்ணனோட குட்டி தம்பி வரை வேணாம் வேணாம்னு தலை தலையா அடிச்சுக்கிறாய்ங்க .கேட்டானா? இல்லை.

பால்யத்துல நடக்கிற மேட்டரை எல்லாம் ஞா வச்சுக்கிட்டு டெசிஷன் எடுத்தா இப்படி தான் எல்லாமே தப்பா போகும். ஒன்னு சுயபுத்தி இருக்கோனம் -அல்லது சொல் புத்தியாச்சும் இருக்கனும்.ரெண்டுமில்லை. எடுத்த டெசிஷன் எல்லாமே தப்பு -அதன் விளைவு யுத்தம்.

ஆனால் தன்னோட ஆட்கள் எல்லாம் பக்காவா யுத்தம் பண்ணி செயிக்க வச்சுரனும்.இதான் துரியோதனனோட டென்ஷனுக்கு காரணம். ஆளும் வளரனும்.அறிவும் வளரனும். பாம்பு கணக்கா அப்பப்போ தோலை உரிச்சு போட்டுட்டு புதுசாயிட்டே வரனும்.இல்லின்னா இந்த இழவுதான்.

ஓகே உபகதை உபதேசம்லாம் ஆயிருச்சு .பதிவுக்கு போயிரலாமா?

இதுவரை 1,2,3,4,5 கேட்டகிரி சனங்களை பத்தி பார்த்துட்டம் .லட்சணங்கள் -ஃபைனான்ஸ் ப்ராப்ளத்துக்கு காரணங்கள்-பரிகாரங்கள்னு எல்லாத்தையும் பார்த்துட்டம். இன்னைக்கு ஆறாவது கேட்டகிரியை பார்க்கோனம்.

லட்சணங்கள்:
1.பார்க்க ரெம்ப அழகா இருப்பாய்ங்க -அல்லது அழகா காட்டிக்க மெனக்கெடுவாய்ங்க.(காஸ்மெட்டிக்ஸ் யூஸ்பண்ணுவாய்ங்க) இசை,நடனம்,நாட்டியம்,சிற்பம், கலை ,ஓவியம்,ஹேன்டி க்ராஃப்ட் இத்யாதியில தேர்ச்சி/பயிற்சி/ஆர்வம் இருக்கும். டூர்,பிக்னிக்,கெட் டு கெதர் ப்ரோக்ராம், பார்ட்டி,ஃபங்க்சன் ,முக்கியமா சுபகாரியங்கள்ள கலந்துக்க துடிப்பாய்ங்க.

நொறுக்குத்தீனி, மென் பானங்கள் கவரும். சாப்பாட்டுக்கும் ( பான்,பீடா ,வெத்திலை,பாக்கு உபரி) தூக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பாய்ங்க. வீடு,வண்டி வாகன விஷயத்துல லாஜிக்கே பார்க்காம ரசிப்பாய்ங்க,கனவு காணுவாங்க.

இதெல்லாம் எங்கே கிடைக்காம போயிருமோன்னு வாழ்க்கையில பல விஷயங்கள்ள காம்ப்ரமைஸ் பண்ணிப்பாய்ங்க. இவிக ரெபல் ஆறதும் உண்டு.ஆனால் அது மேற்சொன்ன விஷயங்களை இழந்துருவமோங்கற மோமென்டுல தான் .

2.அழகான கண்கள் இருக்கும் (பேசும்) , ஹவுசிங்,ஆட்டோமொபைல் ,ஃபர்னிச்சர்,பெய்ண்ட்ஸ் ,கேட்டரிங் , இன்டீரியர்போன்ற அழகு அலங்காரம் தொடர்பான தொழில்,வேலை மூலமாக வருமானம் கிடைக்கும். இவிக இன்ஃப்ளுயன்ஸால குடும்பமே இவிக ரசனைகளை கொண்டும் இருக்கலாம். இவிக பேச்சே கவிதை மாதிரி இருக்கும் ( டோன்/வார்த்தைகள்)

3.சகோதிரி இருக்கலாம்.இவிக கொஞ்சம் பயந்த சுபாவியா இருக்கலாம். டூர்,பிக்னிக்லாம் உண்டு.

4.இவிக வீட்டையும்-அதிலான ஃபர்னிச்சர்ஸ்,ஃபிக்சர்ஸ்,ஃபிட்டிங்ஸை பார்த்தே இவிக ஆறாவது கேட்டகிரின்னு சொல்லிரலாம். வாகன மேட்டர் ஏற்கெனவே சொல்லிட்டன். இதுவரை சொல்லிட்டு வந்த குண நலன்லாம் இவிக தாய் வழியா வந்ததா இருக்கலாம் -அல்லது இந்த குண நலன்லாம் தாயாருக்கும் இருக்கலாம். முதுமை காரணமா அவிக தெளிஞ்சிருக்கலாம் .இந்த பார்ட்டி தெளியாததால கொஞ்சம் முட்டல் மோதல் வரலாம்.

5.பெண் குழந்தைகள் இருக்கும். அவிகளுக்கு இவர்களை ஒத்த கலை,ரசனை இருக்கலாம். இவிகளோட கலாரசனையே இவிகளுக்கு நற்பெயரையும் -அவப்பெயரையும் தரலாம். ராமன் தேடிய சீதை மாதிரி எதிர்கால வாழ்க்கை துணையை கனவு கண்டபடி தேடி தேடி …தேடி தேடி ஒண்டிக்கட்டையா கூட நிக்க வேண்டி வரலாம்.

6.மன்சன் எதை முக்கியம்னு நினைக்கிறானோ விதி அதுக்கு தானே ஆப்பு வைக்கும் .இவியளுக்கு விரும்பினதை திங்க முடியாத , நிம்மதியா தூங்க முடியாத , தக்ஜம்ல ஈடுபடமுடியாத உடல் நல கோளாறுகள் வரலாம். ( இந்த விஷயங்களிலான இவர்களின் ஈடுபாடே கூட இதற்கு காரணமாகலாம்)

7.லைஃப்ல பலான மேட்டர்ல ஆர்வம் அதிகமா இருக்கும். செயல் அப்படி இப்படி இருந்தாலும் கனவுகள்-கற்பனைகள் அமோகம். இவிக கேரக்டருக்கு ஏத்த கணவன்/மனைவி அமைஞ்சுட்டா உலகத்தையே மறந்து – “அதிலயே” மூழ்கி வாழ்க்கையில பெருசா தோத்துரவும் சான்ஸ் இருக்கு.

8.ஆறாவது பாய்ண்ட்ல சொன்ன உடல் நல கோளாறுகள் வந்த பிறகாச்சும் வாய கட்டினா ஓகே.இல்லின்னா டிக்கெட்டு தான். அடுத்து இந்த செக்ஸ்/லவ் மேட்டர்ல ராங் ரூட்ல போயி உசுருக்கு உலை வச்சுக்கவும் கூடும். இழந்த சக்தி வைத்தியர்களின் தங்க சுரங்கம் இவர்கள்.

9.தங்கள் சுக வாழ்வின் நீட்டிப்புக்காகவேனும் சேமிப்பதும் -முதலீடுகள் செய்வதும் -சொத்துக்கள் வாங்குவதும் இவர்கள் இயல்பு.ஆனால் இவை எந்தளவுக்கு மெட்டீரியலைஸ் ஆனா அந்தளவுக்கு விரும்பினதை திங்க முடியாத , நிம்மதியா தூங்க முடியாத , தக்ஜம்ல ஈடுபடமுடியாத உடல் நல கோளாறுகள் வரலாம். இதுக்காவ தொடர் வைத்திய சிகிச்சை கூட தேவைப்படலாம்.

10.இந்த ஒன்பது பாய்ண்ட்ஸ்ல சொல்லிட்டு வந்த துறையில வேலை /உத்யோகம் /தொழில்னு அமைஞ்சிருக்கலாம். பி.ஏ மேல கை வச்சுர்ரது / க்ளையண்ட் மேல வச்சுர்ரது மாதிரி நடக்கவும் வாய்ப்பிருக்கு . கொலிக்ஸ்-எம்ப்ளாயிஸ் மேட்டர்ல “தடுமாறி” செம பல்பு வாங்கவும் சான்ஸ் இருக்கு.

11.இதுவரை சொல்லி வந்த துறைகளில் பெண்களால்,பெண் பெயர் கொண்ட ஆண்களால் பொருளீட்ட வாய்ப்புண்டு.

12. இதுவரை சொல்லி வந்த சுகானுபவங்களுக்காக கடன் வாங்கியும் ,வீடு,வாகனம் மீது கடன் வாங்கியும் கூட செலவழிக்கலாம்.
இதுவரை சொல்லிட்டு வந்த கல்யாண குணங்களாலேயே இவிக பொருளாதார ரீதியா அடிவாங்குவாங்க. இதை தவிர்க்க என்னெல்லாம் பரிகாரம் செய்யலாம்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

உடுங்க ஜூட்டு .

S Murugesan
kannan says:

Hello sir,
Oru jathagathil engineer job electrical,mechanical kedaika entha house,planets strong ah irukkanum.for ex :ECE padichitu bank job panranga .engineer padichi engineer aga enna combination sir?

S Murugesan says:

கண்ணன் !
இந்த சப்ஜெக்ட்ல ஒரு வரியில் பதில் தர்ரதெல்லாம் ரிஸ்கு.ஆனாலும் சொல்றேன். சிவில் இஞ்சினீர் – சனி , மெக்கானிக்கல் இஞ்சினீர் -சனி,செவ் ,வங்கி வேலை -குரு அல்லது புதன்

shiva says:

Hello sir,
dob:22/6/1992 vrishaba laganam,kumba rasi poratadhi nakshtra 2-,sukran,ketu,budha,suryan,4-guru ,12-chevvai ,10-chandran ,8-rahu ,9-shani software engineer ayya middle class nala settle ayiten arranged or love marriage ayya becoz en college la padicha ponnu love panren(same caste) solludu phone la than pesirukkom enga veetla sonnen enga amma ,appa anna irukar innum velai kedaikala ithu thappu arranged marriage than nalathu nu solranga .En jathaga padi ithu marriage aguma or break up aguma ayya.

S Murugesan says:

ஐயா !
சிவ சக்தியாரே இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் தான் தொடர்பு கொள்ள வேண்டும்.

sakthi says:

Hello sir,
dob:22/6/1992 vrishaba laganam,kumba rasi poratadhi nakshtra 2-,sukran,ketu,budha,suryan,4-guru ,12-chevvai ,10-chandran ,8-rahu ,9-shani software engineer ayya middle class nala settle ayiten arranged or love marriage ayya becoz en college la padicha ponnu love panren(same caste) solludu phone la than pesirukkom enga veetla sonnen enga amma ,appa anna irukar innum velai kedaikala ithu thappu arranged marriage than nalathu nu solranga .En jathaga padi ithu marriage aguma or break up aguma ayya.

Aarumugam says:

Respected Sir,
I love ur writing style sir. i have doubt in astrology for marriage to see female pure character (virgin ponnu ) which house,planets are responsible Is this 4th house sir? beacuse today getting a good girl is very hard most have affiars so only asking sir.

S Murugesan says:

வாங்க ஆறுமுகம் !
நீங்க சொன்ன பாய்ண்ட் ஜோதிஷ கிரந்தங்களில் இருக்கு.ஆனால் ப்ராக்டிக்கலா ரோசிச்சு பாருங்க. அந்த காலத்துல பால்ய திருமணங்கள் இருந்தது .ஐ மீன் எலிமென்டரி ஸ்கூல் வயசுலயே -அதனால வித்யா ஸ்தானமான 4 ஆமிடத்தை பார்த்தாங்க.இப்ப நிலைமை அப்படியா இருக்கு? மாத்தி யோசிங்க..

Aarumugam says:

Respected Sir,
nandri ayya but basic combination solreengala pls

S Murugesan says:

ஆறுமுகம் !
நீங்க நம்ம முக நூல்பக்கத்துக்கு வர்ரதில்லை போல ..//ஒரே கிரகஸ்திதி எந்த இருவருக்கும் ஒரே மாதிரியான பலனை தருவதில்லை.இந்த மேட்டரில் பூர்வ புண்ணியம், கடவுள் கருணை, அப்பா அம்மா நல்வினை, வாஸ்து இப்படி நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது//

//ஒரு கிரகம் நான் இந்த ஒரு பலனை தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. காம்பவுண்டுக்குள்ள குதிச்ச திருடன் சிச்சுவேஷனை பொருத்து பாய்லர் மூடியையாவது தூக்கிக்கிட்டு போறாப்ல தன் ஜூரிஸ்டிக்சனில் (காரகத்வம்) ஏதோ ஒன்றை அடித்து தூள் கிளப்பி விடுகிறது. அதே போல் தான் நின்ற பாவ காரகத்வத்தில் ஏதோ ஒன்றை நாறடித்து விடுகிறது. ( நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ்) .//

உங்களுக்கு ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி இன்ன கிரகஸ்திதிக்கு இன்ன பலன்னு சொல்ல நான் தயாரா இல்லை .சாரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *