காசு பணம் துட்டு மணி மணி : 11

664424

அண்ணே வணக்கம்ணே !
மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு எக்கனாமிக்கலா அனலைஸ் பண்ணிக்கிட்டிருக்கம். அவிக பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? அவிக சவுண்ட் பார்ட்டியா மாற என்ன பண்ணனும்னு விரிவா சொல்லிக்கிட்டிருக்கம். ஏற்கெனவே 4 கேட்டகிரிய ஃபினிஷ் பண்ணி – கடந்த பதிவுலயே அஞ்சாவது கேட்டகிரிக்கான லட்சணங்களை விலாவாரியா கொடுத்துட்டம்.

இந்த பதிவுல பரிகாரங்கள். பதிவுக்கு போறதுக்கு மிந்தி …………….இப்படி ஆரம்பிச்சு எதை சொன்னாலும் நீங்க கண்டுக்க போறதில்ல. 2009 ல நம்ம ப்ளாக், 2011 ல நம்ம இந்த சைட்டு சூடு பிரிக்க ஆரம்பிச்சதுமே பெரிய கனவெல்லாம் கண்டுட்டன்.

ஆகா சனம் அம்முது .ஜோசியத்தை கட்டி அப்டியே அமுக்கி நம்ம லட்சியங்களை எல்லாம் ஜொள்ளி -ஆதரவு திரட்டி இந்தியாவ வல்லரசாக்கியே தீர்ரதுன்னு முடிவு கட்டிட்டன்.

ஆனால் போக போக தெரிஞ்சுக்கிட்டன்.சனங்க காதுக்கு தேவை கோழி இறகு தானே வாழும் நாட்டை(யே) சொர்க பூமியாக்கும் ஃபார்முலா அல்லன்னு புரிஞ்சுக்கிட்டன்.

கொஞ்ச நாள் கட்டண ஆலோசனைக்கு வர்ர பணம்லாம் நாட்டுக்குழைக்க மக்கள் தரும் ஊதியம்னு நினைச்சு ஆனந்த கண்ணீர் விட்டேன்.
பிறவு உண்மை என்னன்னு புரிஞ்சுக்கிட்டன். கட்டண ஆலோசனைய நிறுத்த முதல் காரணம் இதுதான்.

நிஷ்காம்ய் கர்மம்னா மண்ணுலகை பொன்னுலகாக்குவது தானே தவிர வெறுமனே அவனவன் சுய நலத்துக்காக என் வித்வத்தை விரயமாக்குவது அல்ல.
இனி எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம – சனங்க மென்டாலிட்டிக்கு தொடர்பில்லாத மேட்டரை எல்லாம் போட்டு குழப்பாம உடுப்பி ஹோட்டல் சர்வர் மாதிரி நேரடியா ஜோசியம் -ஜோசியம்-ஜோசியம்.

இதுவும் இங்கிலீஷ் வெப்சைட் பிக் அப் ஆற வரைக்கும் தான். பிறவு டாட்டா.. சீ ..யு பை பை தான்.

ஹ..இதெல்லாம் முடியாது பாஸ்னு சொல்லாதிங்க. 2000 ல் ப்ளாக் ஆரம்பிச்ச நாம எத்தனை வருசம் தமிழ் வாசகர்களுக்கு டச்சுல இல்லாம இருந்தம்னு தெரியும்ல (அந்த சமயம் தெலுங்குல பிசி -இனி இப்ப இங்கிலீஷ்ல பிசி )

ஓகே ஓகே !

இன்னைக்கு அஞ்சாவது கேட்டகிரிக்குண்டான பரிகாரங்கள்.
1.கெட் அப் -ட்ரஸ் அப்-ஹேர் ஸ்டைல் இத்யாதியில ஆண்கள் பெண்களையும்,பெண்கள் ஆண்களையும் பின்பற்றவும்.

2.பர்ஸ் பச்சை நிறம். பர்ஸில் ஆத்திகர்கள் பெருமாள் படத்தை வச்சுக்கோங்க. நாத்திகர்கள் தங்கள் மனம் கவர்ந்த டாக்டர் /ஆடிட்டர்/வியாபார ஐஸ்காந்தங்களின் படங்களை வச்சுக்கலாம்.

3.பெண்கள் ஜாதிபச்சை பதித்த கம்மல் அணியலாம். ஆத்திகர்கள் பெருமாள் பாடல்கள் கேட்கவும். நாத்திகர்கள் ஆடியோ புக்ஸ் டவுன்லோட் பண்ணி கேட்கலாம்.

4.வீட்ல முன்னே/பின்னே/மாடியில/பால்கனியில சின்னதான் தோட்டம் போட பாருங்க. ஜன்னலோரம் மணி ப்ளான்டாவது வச்சுக்கங்க. வீட்டு ஹாலில் ஆத்திகர்கள் கு.ப 2 க்கு 3 (சைஸுப்பா) பெருமாள் படத்தை வச்சுக்கலாம்(வடக்கு பார்த்தா விசேஷம் -கிழக்கை பார்த்தாலும் ஓகே)

நாத்திகர்கள் தமக்கு பிடித்த தலைவர்கள் கூட்டத்தில் பேசும் காட்சியை (கூட்டத்தோடு) வச்சுக்கலாம்.

அம்மா(இருந்தா) பச்சை நிற ஆடை அணிகலன் வாங்கி கொடுங்க. வண்டி வாகனம் பச்சையா இருந்தா ஓகே. வேற நிறமா இருந்தா சீட்/ஆக்செசரிஸ்/எக்ஸ்ட் ரா ஃபிட்டிங்ஸு பச்சையில இருக்கட்டும்.

5.புக் கீப்பிங், ஆடிட்டிங்,ஜோதிடம்,மருத்துவம் தொடர்பான புக்ஸ் படிங்க. (சொந்த வாழ்க்கையில உங்க “புஸ்தவ அறிவை” பயன் படுத்தாதிங்க. குழந்தைகள் ஆணா இருந்தா பெண்- பெண்ணா இருந்தா ஆண் போல வளர்த்துக்கிட்டு வாங்க.

6.ஸ்கின் ப்ராப்ளம் ஏன் வருதுன்னா அதுக்கு 1008 காரணங்கள் சொல்றாய்ங்க. அந்த காரணங்களை தெரிஞ்சுக்கிட்டு -உங்க லைஃப்ல அவற்றுக்கு இடம் தராதிங்க. சொந்தக்காரன்/கொலிக்ஸ் தவிர்த்து பார்க்ல உட்கார்ந்து /நடந்துக்கிட்டே அரசியல்/இலக்கியம் பேசற க்ரூப்பை தேடிப்பிடிச்சு தினசரி அட்டென்டன்ஸ் போடுங்க. உசரத்துக்கு ஏத்த எடை முக்கியம்.ஆண்கள் ப்ராண்டட் உள்ளாடைகளையே அணியவும்.

7.கணவர் எனில் பெண்கள் பாணியிலும் ,மனைவி எனில் ஆண்கள் பாணியிலும் மாத்தப்பாருங்க (கொஞ்சம் கொஞ்சமா -ஒரு ராத்திரியில மாத்த பார்த்து ஃபேமிலி கோர்ட் வரை போயிரப்போறிங்க)

8.ஆறாவது பாய்ண்டுக்கு சொன்ன மேட்டர்ல சமரசம் இல்லாம கட்டாயம் செய்ங்க.

9.அப்பா இருந்தா சுடிதார் மெட்டீரியல்ல ஜிப்பா தச்சு கொடுங்க. முதலீடு/சேமிப்பு/தூரதேச தொடர்புகள் தொடர்பான டாக்குமென்ட்ஸை பச்சை நிற ஃபைல்ல போட்டு வைங்க.ஆத்திகர்கள் பெருமாள் ஸ்டிக்கர் ஒட்டிவைங்க. நாத்திகர்கள் தங்களுக்கு பிடித்த நல்ல அரசியல்/இலக்கிய பேச்சாளர்களின் படத்தை ஒட்டி வைக்கலாம். தேவையே இல்லாட்டாலும் நீ பேட் யூஸ் பண்ணுங்க (நிறம் பச்சை)

10.கடந்த பதில் உங்கள் கேட்டகிரிக்கான லட்சணங்களில் சொன்ன தொழில்/வியாபாரம்/உத்யோகத்துல இருந்தா தகுதிகளை வளர்க்க பாருங்க.

11.பத்தாவது பாய்ண்ட் ரிப்பீட்டு .

12.பில்லோ கவர் ,பெட் ஸ்ப்ரெட் க்ரீன் கலர்ல இருக்கட்டும். ஹால்ல வைக்க சொன்ன படத்தை பெட் ரூம்லயும் வச்சுக்கோங்க (பெருமாள் கண்ணை குத்திரமாட்டார் -நான் கியாரண்டி )

4 Replies to “காசு பணம் துட்டு மணி மணி : 11”

Ariram V

13/12/2015 at 6:11 pm

Thanks…

Reply

Ariram V

13/12/2015 at 11:35 am

Good Afternoon sir,enakku Meena lagnam,Kadaka rasi( BOrn on 22-4-1991 at 5.24 am in Tirunelveli).My real birth time is 5.56 Am, but in jathagam 5.24 Am, Which one is correct?
Mercury in lagnam,Sun in 2nd house,venus (3 & 8 lord) in 3rd house,Mars & Kethu in 4th house,Moon & Guru in 5th house,Rahu in 10th house,Saturn in 11th house.Now I am studying MBA & doing share market in small level.
1. Can I Invest in share market for my future.
MBA course will be completed on March’16
2. Can I get job in Abroad after completion of MBA ? But I like to become a Share market Adviser. So which one is suitable to my future, Abroad job or Adviser Job. Thanks sir……

Reply

Ariram V

13/12/2015 at 8:13 am

Good Morning sir, Enakku Meena lagnam,Kadaka rasi( Born on 22-4-1991 at 5.24 in Tirunelveli).My real birth time is 5.56 Am,but in Jathagam 5.24 Am, so which one is correct? In Jathagam Mercury in lagnam,Sun in 2nd house,venus (3 & 8 lord) in 3rd house,Mars & Kethu in 4th house,Moon & Guru in 5th house,Rahu in 10th house,Saturn in 11th house.I am doing share market in small level since last 1.5 year.
Can I invest in Share market for my future ?
Now I am studying MBA ,which will be completed on March’2016.
1. Can I get abroad job after completion of MBA ?
2. But I like to become a Share market Adviser(As an Analyst).
So which one is Best to my future, Abroad job or Adviser Job?

Reply

    S Murugesan

    13/12/2015 at 3:38 pm

    அரிராம் !
    தனிப்பட்ட இலவச ஆலோசனைக்கு தபால் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.