Tags      

Categories  அரசியல்

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ……. (திறந்தகடிதம்)

மதிப்பிற்குரிய அம்மா !

தங்களுக்கு ஜோதிடம்-வாஸ்து-ஆன்மீகம் இத்யாதியில் நம்பிக்கை உண்டு என்ற நம்பிக்கையில் -அடிப்படையில் நான் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்ற பார்வையில் இந்த கடிதத்தை எழுத துவங்குகிறேன்.

சமீபத்தில் சென்னை மற்றும் தமிழக மாவட்டங்கள் மழை -வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு – நிவாரணமும்(?) அறிவிக்கப்பட்டு விட்ட இந்த நிலையில் இந்த திறந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இதை கூரியரிலோ -பதிவு தபாலிலோ கூட அனுப்பலாம்.ஆனால் அதற்கு எந்தவித ரெஸ்பான்ஸும் இருக்காது (அனுபவம்) அல்லது “மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான்” பாணியில் ஒரு கண் துடைப்பு பதில் வரும்(அனுபவம்)

எனவேதான் இந்த திறந்த கடிதம்.

எதிர்கட்சிகள் , ஒரு சில தைரியமான மீடியாக்கள், பிழைக்க தெரியாத அரசியல் விமர்சகர்கள் இப்படி பலரும் சொல்லியிருக்கும் விஷயங்களை தாண்டி நான் பெரிதாக ஏதும் சொல்லிவிடப்போவதில்லை.

ஆனால் அவர்களின் பெயரை கேட்டாலே ஒரு வித ஒவ்வாமை வந்து உங்கள் காதுகளும் -கண்களும் மூடிக்கொள்ளும் என்பதை அறிவேன்.
எனக்கு என்னால் எஸ்கிமோவுக்கு கூட ஃப்ரிட்ஜ் வித்துர முடியும் என்ற அதீத நம்பிக்கை உண்டு. அதற்கு காரணம் என் கம்யூனிகேஷன் ஸ்கில் மற்றும் நூதன தீர்வுகள்.

உங்களுக்கு சொல்ல தங்களின் “மெஷினரி”யுடனான அனேக பழைய விஷயங்கள் என்னிடம் உண்டு. ஆனால் அவற்றிற்கு செல்ல விரும்பவில்லை.
(உங்கள் மனம் குளிரும்படி 2 விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டுநேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.)

2001 லான உங்கள் வெற்றி -டான்சி வழக்கிலான தீர்ப்பு -2011 லான உங்கள் வெற்றியை கணித்து பகிரங்கமாக அறிவித்தவன்.

2001 ல் உங்களுக்கு கூரியர் மூலம் தெரிவித்து அதற்காக தேங்க்ஸ் கார்டு கூட கிடைக்கப்பெற்றவன். டான்சி தீர்ப்பை சரித்திர நாயகி இதழில் வெளியிட்டவன். 2011 ல் உங்கள் வெற்றி குறித்த என் கணிப்பை சுதேசி இதழில் வெளியிட்டவன்.

தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்று விட்டோம் என்பது முக்கியமல்ல. தவறு என்பது உறைத்ததுமே (மனம்) திரும்பி விட முயற்சிக்க வேண்டும்.
புனரபி ஜனனம் -புனரபி மரணம் . நாம் மறுபடி மறுபடி பிறப்பெடுப்பதே கருமங்களை தொலைக்கத்தான் . மேலும் மேலும் கருமங்களை கூட்டிகொண்டே போவது துவைக்கப்போன இடத்தில் துவைக்க கொண்டுபோன துணிகளை சேற்றில் முக்குவது போன்றதே.

ஆன்மா அப்பழுக்கற்றது. சகல உயிர்களோடும் தொடர்புள்ளது. கருணையே வடிவானது. தேவை என்பதே இல்லாதது. பரமாத்மனுக்கும் ஆத்மனுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.

ஈகோ நம்மை படைப்பில் இருந்தும் சக உயிர்களிடமிருந்தும் பிரிப்பது.தனிமைப்படுத்துவது. ஈகோ வலுக்க வலுக்க முட்டாள்கள் அவையில் மூதறிஞன் கணக்காய் ஆன்மா தூங்க ஆரம்பித்துவிடுகிறது.

நம் ஈகோ நம்மை வழி நடத்தும் போது பிறவிச்சக்கரத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் விஷயங்கள் எல்லாம் கசக்க ஆரம்பிக்கின்றன. பிறவிச்சக்கரத்தில் சிக்க வைக்கும் விஷயங்கள் எல்லாம் இனிக்க ஆரம்பிக்கின்றன.

வாழ்வில் எதுவேண்டுமானாலும் பொய்யாய் போகலாம்.ஆனால் மரணம் பொய்ப்பதில்லை .இந்த உலகமே ஒரு பேருந்து நிலையம் தான்.மரணமென்ற பேருந்து வந்ததுமே காலி செய்யவேண்டிய இடம். இதில் பஸ் வர தாமதமானால் கேம்ப் ஸ்டவ் வைத்து சப்பாத்தி சுட்டு சாப்பிடலாம். அதற்காக ரோட்டி மேக்கர் ஃபேக்டரி வைப்பது அறிவீனம்.

நம் தேவைக்கு மிஞ்சி இறைவன் கொடுத்தால் அதை யாருக்காகவோ நம்மிடம் கொடுத்து வைத்திருக்கிறான்.உரியவர்கள் வரும் போது ஒப்படைக்க வேண்டும் என்ற நினைவுடன் இருப்பதே ஞானம்.

இங்கு நான் காசு பணம் பற்றி மட்டும் பேசவில்லை .அதிகாரம் பற்றியும் பேசுகிறேன் . தங்களின் 4.5 வருட ஆட்சிபற்றி கடுமையான விமர்சனங்கள் உண்டு. இருப்பது இன்னும் ஆறு மாதங்களே..

நீங்கள் லோகாயத சிந்தனையில் இருந்தாலும் – பிறவிச்சக்கரத்தில் சிக்கி இன்னும் பல்லாயிரம் பிறவிகள் எடுத்து அல்லல்பட நீங்கள் தயாராக இருந்தாலும் – தேர்தல் வெற்றியே உங்கள் லட்சியமாக இருந்தாலும் இந்த 6 மாத காலத்தில் உங்கள் ஈகோவை புறம் தள்ளி ஆன்மாவின் குரலுக்கு காது கொடுங்கள் . தேர்தல் வெற்றி கூட சாத்தியமாகலாம்.

கொடுப்பதால் கர்மம் தொலைகிறது . விமர்சனங்களை ஏற்பதால் / திருத்திக்கொள்வதால் /பகைவரை மன்னிப்பதால் கர்மம் தொலைகிறது . தற்புகழ்ச்சி , புகழ் மொழிக்கு மயங்குதலால் கர்மம் கூடுகிறது .

ஈகோ என்பது நம் பெற்றோராலும் -ஆசிரியர்களாலும்-நட்பு-உறவுகளாலும் -பின் நம்மாலும் கட்டிஎழுப்பப்பட்ட சீட்டு கட்டு மாளிகை . ஒரு காற்றுக்கு கூட நில்லாதது .

சத்தியசாயிபாபாவை கடவுளென்றார்கள் .அவர் இறந்ததும் என்னவாயிற்று?அவர் யாரை நம்பி இருந்தாரோ அவர்களே கண்டெய்னர்களில் அவரது சொத்துக்களை கொள்ளையடித்து கொண்டு போனார்கள்.

என்.டி.ஆரை தேவுடு என்றார்கள் .அவர் இறந்ததும் அவர் மனைவி லட்சுமி பார்வதை வீட்டில் இருந்த நகைகள்,கரன்சி கட்டுக்களை யாரிடமோ கொடுத்து வெளியே அனுப்ப -அதை அந்த நபர் அமுக்கி கொள்ள அந்த பஞ்சாயத்து சந்திரபாபுவிடமே வந்தது .

நம்மவர்கள் என்று நாம் நம்புவது வேறு.காலம் உறுதிப்படுத்துவது வேறு.

நாம் இல்லாத இடத்தில்- இல்லாத நேரத்தில் நம்மை தூக்கிப்பிடிப்பவர்களே நம்மவர்கள். முகத்துக்கு நேரே துதி பாடுபவர்கள் நம்பத்தகாதவர்கள்.
நம்மவர்கள் என்பதற்காக திறமையற்றவர்களையே நம்ம சுற்றி வைத்துக்கொள்வது மடமை. திறமையுள்ளவர்கள் துதிபாடமாட்டார்கள் .இதை எண்ணி நடந்துகொள்வது அறிவுடைமை .

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் .இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

இந்த ஆறுமாதங்கள் ஈகோவை புறம் தள்ளுங்கள்! ஆன்மாவின் குரலுக்கு காது கொடுங்கள் !! மாற்றி யோசியுங்கள் !!!

மக்கள் அல்ப்ப சந்தோஷிகள். ஒரு ஆறுமாத நல்லாட்சியில் நாலரை வருட துன்பங்களை மறந்து போவார்கள் .

கீழ்காணும் தொடுப்புகளில் உள்ளவற்றை அமல்படுத்தப்பாருங்கள். (கு.பட்சம் இந்த ஆறுமாதத்திற்காவது) என் நம்பிக்கை என்னவென்றால் இந்த ஆறுமாத “நடிப்பு” கூட உங்கள் ஆட்டிட்யூடை பூரணமாக மாற்றி நடிப்பையே வாழ்வாக்கிவிடும் என்பதே !

வெள்ள நிவாரணம் – நிரந்தர தீர்வுகள்
http://anubavajothidam.com/?p=12312
தீர்ப்பு சரி இனி
http://anubavajothidam.com/?p=11970
மதுவிலக்கு- சாத்தியமாக
http://anubavajothidam.com/?p=12055
மானிலகனவுகள்
https://archive.org/details/swamy7867_gmail
தேச கனவுகள்
http://kavithai07.blogspot.in/p/blog-page.html
என் தேசம் என் கனவு
http://anubavajothidam.com/?p=11947

print

1,266 total views, 1 views today

S Murugesan
Rishi says:

Ayya vanakkam,
male jathagathil thadi ,meesai body hair athigama irukanumna entha planets,house nala irukanum .shani mudi karakam ah?

S Murugesan says:

ஐயா !
ஆண் கிரகங்கள் ஆண் ராசிகளில் நின்றிருந்தால் ரோம வளர்ச்சி நன்றாக இருக்கும். முக்கியமாக மீசை ,தாடி. லக்னத்தில்/ 7ல் சூ,செவ் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ தலை சொட்டையாதல்,முடி உதிர்தல் இருக்கலாம்.

vikram says:

Vanakkam ayyaa,
road la nadanthu porappa Aravannikal (transgender) adikadi en kannil padukirargal last week en pocketil kaivikirargal rupees kodakalana sabam vitruven nu miratranga ayya .jathagathil planet dosham unda ?

S Murugesan says:

வாங்க விக்ரம் !
அரவாணிகள் புத காரகம்.அவர்களுக்கு காசு கொடுத்தால் புத தோஷம் குறைந்து கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் அதிகரிக்கும். கமிஷன்,கம்யூனிகேஷன் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும்.

vikram says:

ok sir ,en jathagthil suryan +budhan budhan astangam adhu nala entha effect na nanaikuren

S Murugesan says:

வாங்க விக்ரம் !
சூ+பு சேர்க்கையில் சூ பலமிழப்பாரே தவிர புதனுக்கு அஸ்தங்கதமே கிடையாது .லக்னம் எது? புதன் எங்க இருக்காரு? அதை பாருங்க.புதன் லக்னாத் சுபரா இருந்து வில்லங்கமில்லாத இடத்துல இருந்தா அரவாணிகள் எதிர்ப்படுவது சுப சகுனமே

vikram says:

Nandri ayya,
kadaga lagnam kadaga rasi ,5-sur+budha vrichika rasi la irukkanga ayya,ena benefits & problems

S Murugesan says:

விக்ரம் !
மறதி,ஓவர் திங்கிங், ராங் ஜட்ஜிங்க,அவப்பெயர்,துரதிருஷ்டம்,எதிர்காலத்துல குழந்தைகள் மேட்டர் கூட பாதிக்கும்.

Vikram says:

Nandri ayya,
putra bhagyam unda ayya guru-11 il ullar,5 kuriyavar chevvi 9il chevvai-9 ullar .

S Murugesan says:

விக்ரம் !
உங்கள் ஜாதகப்படி மினிமம் கியாரண்டி இருக்கு.ஆனால் நீங்கள் மணக்கப்போகும் பெண் ஜாதகத்தில் இந்த விஷயத்தில் சிக்கல் இல்லாது இருக்கவேண்டும். இது ரொம்ப முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *