காசுபணம் துட்டு மணி மணி : 10

Passport

அண்ணே வணக்கம்ணே !
அந்த காலத்துல தொடர்கதையில ஒவ்வொரு அத்யாயத்துலயும் நடந்த கதைன்னு ஒரு பாரா போடுவாய்ங்க. அப்படி ஒரு பாரா புதிய வாசகர்களுக்கு தேவைங்கறதால இங்கே தரேன். பழைய பறவைகள் ஸ்க்ரால் பண்ணிட்டு போயிரலாம்.

நடந்த கதை:
உலகத்துல உள்ள மனிதர்களை 9 வகையா பிரிச்சு -அவிகளோட நிறம்,மணம், குணம் எல்லாத்தையும் விலாவாரியா சொல்லி அவிக பொருளாதார பின்னடைவுக்கு காரணங்களையும் பட்டியலிட்டு -பரிகாரங்களையும் தர்ரதுதான் இந்த தொடரோட உத்தேசம் . இதை படிக்கிறவிக ஒரு டீலுக்கு ஒப்புத்துக்கனும். அதை கடேசியில கொடுத்திருக்கன். ஆராமா படிக்கலாம்.

இந்த சீரிஸ்ல 4 ஆவது கேட்டகிரியோட நிறம்,மணம், குணம் எல்லாத்தையும் விலாவாரியா சொல்லி அவிக பொருளாதார பின்னடைவுக்கு காரணங்களையும் பட்டியலிட்டாச்சு. இப்போ பரிகாரம் சொல்லோனம்.
மொத 3கேட்டகிரிக்கு மொத்தையா சொல்லிட்டம். இங்கே அந்தந்த பிரச்சினைக்கு பர்ட்டிக்குலரா பரிகாரங்களை தரப்போறேன். ஆனால் ஒன்னு – நீங்க இந்த கேட்டகிரி தான்னு கன்ஃபார்ம் ஆயிருந்தா ஒட்டு மொத்தமா எல்லா பரிகாரங்களையும் கடைபிடிக்கிறது செகண்ட் புல்லட் ப்ரூஃப் மாதிரி .ஆமாம் சொல்ட்டன்.

//உங்க ஃபேமிலி ட்ரீல விதவைகள் /விவாகரத்து பெற்றவர்கள் அதிகமிருக்கலாம். அல்லது தம்பதிகள் எலியும் பூனையுமாகவே இருக்கலாம். விஷமருந்தி செத்தவர்கள் ,ரகசியமான முறையில் சொலை செய்யப்பட்டவர்கள் ,மர்மமான முறையில் உயிர் விட்டவர்கள் இருக்கலாம்.//

உங்க வமிச விருட்சத்துல இப்படி ஒரு நிலைமை இருந்தா ஹை ரிஸ்க். விட்ட குறை தொட்டகுறையா உங்களுக்கும் -உங்க வாரிசுகளுக்கும் கூட இதே நிலை ஏற்படலாம். ஆகவே இந்த பர்ட்டிக்குலர் பரிகாரத்தோட ஒட்டு மொத்த பரிகாரங்களையும் கண்ணை மூடிக்கிட்டு செய்ங்க ப்ளீஸ்.

பெண்கள்:
கணவரை தினமும் ராம நாமம் சொல்ல சொல்லுங்கள். சனி,செவ் கிழமைகளில் ஆஞ்சனேயர் கோவில் சென்று வழிபட சொல்லுங்கள். சூழல் அனுமதித்தால் தலையை பாப் செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை ப்ளெயினாக இருக்கும் ஆடைகளையே அணியுங்கள்.
நீங்கள் வருடா வருடம் 5 வெள்ளிக்கிழமைகள் லட்சுமி பூஜை செய்து -6 ஆவது வெள்ளிக்கிழமை அக்கம் பக்கத்தில் உள்ள சுமங்கலிகள் 6 பேரை வீட்டுக்கு அழைத்து தாம்பூலத்தில் காஸ்மெட்டிக்ஸ் வைத்து கொடுத்து ஆசி பெறவும் .( சேம்பிள் பவுடர் டப்பா, ஃபேர் எவர் க்ரீம் ,சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி இது போல)
ஒவ்வொரு சனிக்கிழமையும் வாழ்ந்து முடித்த உங்கள் வமிசவிருட்சத்தின் கிளைகளை மனதில் இருத்தி காகத்துக்கு சோறு வைங்க. இல்லின்னா கால்தொடர்பான ஊனமுள்ளவருக்கு ரெண்டு இட்லி வாங்கி கொடுங்க.

ஆண்கள்:
ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்.

ஆண்-பெண் இருபாலாரும்:
டெஸ்க் டாப்/லேப் டாப்/மொபைல்ல டெஸ்க் டாப் பிக்சர் ஸ்க்ரீன் சேவர் ,பர்ஸ்,கேஷ் பேக் முடிஞ்சா ட்ரஸ்ல சைனீஸ் ட்ராகன் படம் இருக்கட்டும். பர்ஸ் இத்யாதி பாம்பு தோல் ஒத்த டிசைன்லயே கிடைச்சா சூப்பர்.
பக்தி பரவசமான பார்ட்டியா இருந்தா -உங்க ஜாதகத்துல குரு+சனி/ராகு/கேது சேர்க்கை இல்லைன்னா வினாயகர் /துர்கை (புலிமேல் அம்மன்) படமா வச்சுக்கோங்க.

//அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம்//

அப்டியே லூஸ்ல விடுங்க.மருந்து மாயம்னு மெனக்கெடாதீங்க. இப்படி இருக்கிற எஃபெக்டை பெருமளவு குறைக்கும்

//சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம்.//

ரெண்டுமே தப்பு . அடக்கி வாசிங்க.

// ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். //

ஈசியா வந்தது மாதிரியே ஈசியா போயிரும். இது தேவையா? ஒரு வேளை தக்க வச்சுக்கிட்டாலும் இந்த கேட்டகிரிக்கு சொன்ன இன்ன பிற பிரச்சினைகள் உக்கிரமா தாக்கும். இது தேவையா?

//நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம்//

இந்த உலகத்துக்கு தனியா வந்தம்.தனியாத்தான் போகப்போறம்ங்கற உண்மைய மறக்காதிங்க

//அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி (!) போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)//

இந்த மாதிரி பட்சி வாழ்க்கை துணையா அமைஞ்சா உங்க கர்மம்லாம் தொலைஞ்சு சொர்கத்துக்கு போகப்போறிங்கன்னு அருத்தம். அல்லது இதுதான் உங்க கடைசி பிறவின்னு அருத்தம்.பல்லை கடிச்சுக்கிட்டு சகிச்சுக்கோங்க.

//தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.//

எந்த செயலும் ஆரம்பத்துல எண்ணமாகத்தான் ஆரம்பிக்குது .எண்ணம் தான் செயலாக மாறுது . உ.ம் விமானம் மொதல்ல ரைட் சகோதரர்களின் எண்ணமாகத்தானே ஆரம்பிச்சது .
ஆகவே எண்ணங்களை சானலைஸ் பண்ணுங்க. நெகட்டிவா திங்க் பண்ணி ப்ரிக்காஷன்ஸ் எடுத்துக்கோங்க(வேணாங்கல) பிறவு டீல்ல விட்டுருங்க. பாசிட்டிவா இருங்க.

//புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.//

இவிகளை அவாய்ட் பண்ணிருங்க.

//கில்மாவை பொருத்தவரை ஸ்கலிதத்துக்கு பிறகும் பிரிய மனமொப்பாது. கும்மிருட்டு தான் ப்ரிஃபரபிள்.சன்னல் சந்துல இருந்து வெளிச்சம் வந்தாலும் எந்திரிச்சு போயி அதை ப்ளாக் பண்ணா தான் மூடே வரும். //

இதனால உங்க பொருளாதாரமோ -சமூக வாழ்வோ பாதிக்கப்பட போறதில்லை.ஆனால் உங்க பார்ட்னர் உங்களை நக்கலடிக்கிற ரேஞ்சுக்கு போயிராதிங்க.

// சிலருக்கு கக்கா போகும் போது ஸ்கலிதமாகலாம். //
மலச்சிக்கல் இல்லாம பார்த்துக்கோங்க.

//மெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம்//
சொந்த வைத்தியம்,பாட்டி வைத்தியம்/ஆன்டி வைத்தியம்லாம் வேணா. பிரச்சினை சின்னதா இருந்தாலும் ஸ்பெஷலிஸ்டை பாருங்க.

// ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். (வீட்டு சாப்பாடேசாப்பிட்டாலும்,மினாரல்வாட்டரே குடிச்சாலும் எத்தனை ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாலும்)//

தினசரி வெறும் வவுத்துல அருகம்புல் ஜூஸ் குடிங்க. முடிஞ்சா வேப்பங்கொழுந்து மென்னு தின்னுங்க.இல்லியா நம்ம ஸ்டைலுக்கு வந்துருங்க. மாசம் ஒரு நாள் கைப்பிடி நிறைய வேப்பிலைய தண்ணியிலபோட்டு கொதிக்க வச்சு குடிச்சுருங்க (நாலு நாளைக்கு குமட்டும்)

//உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். டாக்டர் எல்லா டெஸ்டும் செய்துட்டு ஒன்னும் தப்பா இல்லையேன்னிருவாரு.ஆனால் உங்க பிரச்சினை மட்டும் அப்படியே இருக்கும்.முறையற்ற வளர்ச்சிகள் (உ.ம் அடிக்கடி கட்டி வீக்கம் கிளம்புதல்) வலி இருக்கலாம். அந்த வலியும் இடம் மாறிக்கொண்டே இருக்கவும் கூடும்.//

இதுக்கு காரணம் உங்க எண்ண அலைகள் தான். உங்க சமூக வாழ்வை /பொருளாதார வாழ்வை பாதிக்காத விஷயங்கள்ள டிஃப்ரன்டா இருங்க.
-சூப்பர் மேன் மாதிரி பேண்டுக்கு மேல ஜட்டி போடறது .

//தங்கள் தொடர்பாக சில விஷயங்களை மறைக்க நினைக்கிறவுக எதை மறைக்க நினைச்சிருக்காய்ங்களோ அதை மறக்காம இருக்கனும். அதுக்கு ஞா சக்தி தேவை. உங்க ஞா சக்தி இதுலயே வீணா போயிர்ரதால மறதி ஏற்படலாம். உங்க ஜட்ஜிங் தப்பா போகலாம். புத்தி குழப்பம் கூட ஏற்படலாம்.//

ஆகவே காந்தி தாத்தா சொன்ன விஷயத்தை ஞா வச்சுக்கோங்க. பகிரங்கமா செய்யமுடியாததை -ரகசியமா கூட செய்ய கூடாது.

//இதெல்லாம் உங்களுக்கு மட்டுமில்லை உங்கள் வாழ்க்கை துணைக்கும் நடக்கலாம். இது உங்கள்/உங்கள் வாழ்க்கை துணையின் அழகு,கவர்ச்சி,திறமை எல்லாம் கரைஞ்சுக்கிட்டே வரும். இது பரஸ்பர கவர்ச்சியை குறைக்கும். உங்களில் ஒருவருக்கு அடுத்தவர் மீது சந்தேகம் ஏற்படும் விதமாகவே சம்பவங்கள் நடக்கும். அல்லது சாதாரண சம்பவங்களையும் அப்படியாக நீங்க கற்பிச்சுக்குவிங்க.//

இதுவரை சொன்ன /சொல்லப்போறபரிகாரங்களை அவிகளையும் கடை பிடிக்க சொல்லுங்க.

// ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அல்லது புதுசு புதுசா தேடி தேடி திங்க போயி வவுறு கெட்டு ஃபுட் பாய்சன் ஆகனும்.//

கசப்பு சுவை மிகுந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கோங்க உ.ம் பாகற்காய்,அகத்திக்கீரை ,சுண்டைக்காய்
//பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். உ.ம் திக்குவாய், அல்லது உரிய வார்த்தை கிடைக்காது திணறுதல், வாக்கிய அமைப்பு சிதைந்து எதிராளிக்கு புரியாத நிலை. ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். யாரோடவும் ஒட்டாம இருப்பாங்க. //

பெண்கள் பாம்பு வடிவ ஸ்டிக்கர் பொட்டு யூஸ் பண்ணுங்க .ஆண்/பெண்கள் பாம்பு வடிவ மோதிரம் அணியலாம்.கழுத்தில் ட்ராகன் டாலர் . அன்னிய மொழி ஒன்றை புதுசா கத்துக்கோங்க. உ.ம் உருது ,ஃப்ரெஞ்ச்,ஜெர்மன்

//தொடர் அவமானங்கள்,அவப்பெயர், தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போதல், குறுக்கு வழிகளையே சிந்தித்தல் , சட்ட விரோத வழிகளை அசை போடுதல் ,சதி செய்தல் ,புத்திகுழப்பம், பிள்ளை பேற்றில் பிரச்சினை (அதாவது கரு நிற்காமல் இருப்பது -கருச்சிதைவு ) பிறந்த குழந்தைகளுக்கு இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்ன அங்கலட்சணங்கள். ஒரு வித துரதிர்ஷ்டம் தொடர்தல்.

சினிமா ,லாட்டரி,சாராயம், சூதாட்டம், கடத்தல் ,ஏற்றுமதி இறக்குமதி,ஷேர்மார்க்கெட் தொழிலில் தொடர் நஷ்டம் இருந்தாலும் கட்டுக்கடங்காத ஈடுபாடு. கனவில் சதாபாம்புகள், முக மூடி அணிந்த மனிதர்கள் , அன்னிய மதத்தினர் வருவதும் உண்டு.//

வினாயகர்,துர்கையின் திருவுருவங்களை மனக்கண்ணில் நிறுத்துங்கள். (நாத்திகர்கள் , குரு+சனி/ராகு/கேது சேர்க்கை உடையோர் சைனீஸ் ட்ராகனை )

உலக மகா கொள்ளைகள், உலகமகா சதிகள் , மாஃபியா களத்தில் நடக்கும் நாவல்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல் எஃபெக்டை பெருமளவு குறைக்கும்.

//காதல் மேட்டர்ல பிறமொழி,பிற மத பட்சிகளையே தேர்வு செய்வது. பதிவின் ஆரம்பத்தில் சொன்ன லட்சணங்கள் உள்ள குட்டிகள் மேல் மட்டும் ஈடுபாடு. திருமணத்துக்கு பிறகு மறைந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுவது .//

இதை தவிர்க்க விதவை மறுமணம் பெஸ்ட். இது முடியாத பட்சம் கீழ் காணும் லட்சணங்கள் கொண்ட ஆண்/பெண்ணை மணக்கலாம்.ஆனால் ரெண்டு பேருமே ஆஃபீஸ்கோயர்ஸா இருக்கிறது நல்லது .
_______________________________
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.

இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்

ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்

//அப்பா குடி அடிமையாகவோ /அந்தப்பழக்கம் உள்ளவராகவோ இருப்பது .பதிவின் ஆரம்பத்தில் சொன்ன லட்சணங்கள் உடையவராக இருப்பது . உங்களுக்கு உரிமையான நிலம்,சைட்,வீட்டில் கரையான்,பூரான்,பாம்பு போன்ற விஷ பிராணிகள் இருப்பது .தந்தை சினிமா ,லாட்டரி,சாராயம், சூதாட்டம், கடத்தல் ,ஏற்றுமதி இறக்குமதி,ஷேர்மார்க்கெட் தொழிலில் இருப்பது.அந்த தொழிலில் ஈட்டிய சொத்துக்களை பறிக்க பிறர் சதி செய்வது .
உங்களுக்கோ/மனைவிக்கோ/தந்தைக்கோ “நமக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க”ங்கற ஃபீல் வர்ரது .சில நேரம் அதை நம்பி அவற்றை முறிக்க சகட்டுமேனிக்கு செலவழிப்பது .//

இதுவரை சொன்ன பரிகாரங்களை அப்பா கடைபிடிக்க வேண்டும். சொத்து முதலீடு சேமிப்பு,தூரதேச தொடர்புகள் தொடர்பான டாக்குமென்ட்ஸ் பாம்பு தோல் போன்ற டிசைன் உள்ள பேக்/ ஃபைலில் போட்டு வைக்கவும்.அதன் மேல் சைனீஸ் ட்ராகன் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கவும்.

ஒரு காலத்துல அடிச்சு வச்ச பரிகாரங்களை அப்படியே இங்கே பேஸ்ட் பண்றேன் (ரிப்பீட்டன்ஸ் இருந்தா அம்பேல் -எதையும் விட்டுரக்கூடாதுங்கற அக்கறை பாஸ் !)

கோப்பகத்தில் இருந்து:

இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.
சொந்த முதலீட்டில் / நீங்களே டெசிஷன் மேக்கர் என்ற நிலை இருந்தால் மேற்சொன்ன தொழில்கள் கூடவே கூடாது. இதுவே நீங்கள் ஒரு ஊழியர் மட்டுமே என்றால் பரவாயில்லை.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது.
மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்க்கவும். ( ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம்.)

கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.உலக மகா கொள்ளைகள், உலகமகா சதிகள் , மாஃபியா களத்தில் நடக்கும் நாவல்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்.தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல் இவை நல்ல பரிகாரங்களாகும்.

மேலும் தனித்திருக்கும் போது அறையில் குறைவான வெளிச்சத்தை மெயின்டெய்ன் பண்ணலாம். நைட் ஷிஃப்ட் ட்யூட்டி வந்தா தாராளமா ஏத்துக்கலாம்.

தினசரி ஒரு மணி நேரம்-வாரம் ஒரு தினம் காவி உடை அணியவும் . இயன்றவரை சன்யாசி போலவே வாழ வேண்டும். எளிமையிலும் எளிமையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளவும்.
____________

ராகுவே சொல்றாப்ல:
பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் ‘ட்ராகன்’ (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு ‘பெரிசுக்கு’ ஒரு ‘கட்டிங்’ போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
___________________
கேது சொல்றாப்ல:
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
__________________
நமக்கு மத்திய உள்ள டீல் இதுதான்:
நமக்குள்ள ஒரு டீல் இருக்கு. ஞா இருக்கில்லை. நான் உலக மக்களை எல்லாம் 9 கேட்டகிரியா பிரிச்சு – அவிகளோட பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் -அதுக்கு என்ன பரிகாரம்னு சொல்லோனம். படிக்கிற சனம் தங்களோட கேட்டகிரி எதுன்னு ஐடென்டிஃபை பண்ணி பரிகாரங்களை ஃபாலோ பண்ணி பைசா புரட்டனும். பைசா புரட்டியான பிறவு அடடா ..சூட்சுமத்தை சொல்லி போட்டு -நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் கொடுத்ததே இந்தாளுதானே.இந்தாளுக்கு எதுனா பண்ணனும்யான்னு நினைச்சு நாம 2016 ல ஆரம்பிக்கப்போற சைட்டுக்கு நன் கொடை கொடுக்கனும்.

இப்பமே சிலர் கொடுத்தாச்சு (ஊர் /பேர் சொல்லக்கூடாதுங்கற நிபந்தனையோட) பலர் வாக்கு கொடுத்திருக்காய்ங்க. இந்த நன்கொடைய வச்சு கு.பட்சம் ஒரு 3 மாசமாச்சும் நான் உட்கார்ந்து வேலை செய்தா தான் இங்கிலீஷ் வெப்சைட் லாஞ்ச் ஆகும். ஆட்சென்ஸ் வருமானம் கிடைக்கும்.

எப்படியும் கட்டண ஆலோசனைக்கு 2015லயே மங்களம் பாடிரப்போறம்.புவாவுக்கு ஆட்சென்ஸை விட்டா வேற வழி கிடையாது.தெரியும்ல.இதான் டீலு.

எங்களுக்கு ஐடியா கொடுத்து எங்ககிட்டே கைய நீட்டுவானேன். நீயே அதை எல்லாம் அப்ளை பண்ணி காசுபுரட்டலாமேன்னு உங்கள்ள சிலருக்கு டவுட்டு வரலாம்.

மேட்டர் என்னடான்னா நம்ம ஜாதகத்துல குரு உச்சம்.பத்துல ராகு .அப்படியும் செரி-இப்படியும் செரி காசு புரட்டற கப்பாசிட்டி நமக்கிருக்கு. சிக்கல் எங்கே வருதுன்னா குரு =மந்திரி, குரு =தனகாரகன். நாம பைசா புரட்ட ஆரம்பிச்சுட்டா ரத்த ருசி கண்ட புலி மாதிரி ஆயிருவம். நம்ம ஜாதகத்துல உள்ள குரு தனகாரகனாவே ஒர்க் ஆகி -மந்திரி கனவெல்லாம் ஃபணால் ஆயிரும்.(நம்ம டார்கெட் பிரதமமந்திரி தெரியும்ல)

6 Replies to “காசுபணம் துட்டு மணி மணி : 10”

ravi

09/12/2015 at 6:37 am

positive points, helping people list

Reply

  S Murugesan

  09/12/2015 at 11:11 am

  ரவி சார் !
  மெயிலில் அனுப்பியது உங்க தனிப்பட்ட ஜாதகத்தை பொருத்த அளவில் . இந்த 4 ஆவது கேட்டகிரிய பொருத்தவரை இங்கு சொல்லப்பட்ட லட்சணங்கள் கொண்ட நபர்கள் தவிர மற்றவர்கள் அனுகூலமாக இருக்க 50:50 சான்ஸ் இருக்கு. மற்றகிரகங்கள் எந்த நிலையில இருக்குங்கறதை பொருத்து இது மாறும் அல்லவா? ஆகவே இந்த பம்மல்.

  எச்சரிக்கை:
  இவர்கள் யாருடன் தொடர்பு வைத்துக்கொண்டாலும் படிப்படியாக அவர்கள் ராகுவால் விழுங்கப்பட்ட சூ போலும் ,கேதுவால் விழுங்கப்பட்ட சந்திரன் போலும் ஆகிவிடுவார்கள்.

  எனவே யாருடனும் நீடித்த தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது.

  Reply

babu

26/11/2015 at 10:06 am

// உங்க ஜாதகத்துல குரு+சனி/ராகு/கேது சேர்க்கை இல்லைன்னா வினாயகர் /துர்கை (புலிமேல் அம்மன்) படமா வச்சுக்கோங்க. கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும் //
laknathukku 2 la குரு+கேது iruntha ! enna dalar anialam ayya ???!!!

Reply

  S Murugesan

  26/11/2015 at 12:01 pm

  வாங்க பாபு !
  சைனீஸ் ட்ராகன் டாலர் அணியவும்.

  Reply

Pandian

25/11/2015 at 8:26 pm

ஐயா வணக்கம்,

தங்களின் அடிப்படை கருத்து படி மக்களை 9 வகையா பிரிக்கிறீர்கள். இதில் அவர்களுடைய தசா மாறும் போது அவர்களிடம் மாற்றம் இருக்கதா?

Reply

  S Murugesan

  25/11/2015 at 10:15 pm

  பாண்டியன் !
  காகத்துக்கும் ஜாதகம் இருக்கும்ல. அதன் படி தசை மாறும் போது அதன் நிறம் மாறிருமா? என்ன மாவு ஃபேக்டரி பக்கம் போனா பவுடர் போட்ட மாதிரி ஆயிரும் அவ்ளதான். இதேதான் ஜாதகர்கள் நிலையும்.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.