ரகசிய கோப்புகள்

28.74

அண்ணே வணக்கம்ணே !

நாம வெறுமனே சோசியரா இருந்தா -அவா மாதிரி எல்லாத்தையும் ரகசியமா வச்சு சவக்குழியோட புதைக்க சொல்லிரலாம்.

எல்லாரும் நல்லா இருக்கனுங்கறதுதான். அதுக்காவ நாம கொஞ்சமா -ஏன் மொத்தமா கூட நஷ்டப்பட்டா பிரச்சினையே இல்லைங்கறதுதான் நம்ம நோக்கம்.

ரகசிய கோப்புகள்ங்கற பேர்ல இங்கே தரப்போற கோப்புகள் கட்டண ஆலோசனைக்கு வர்ரவிகளுக்கு (மட்டும்) அனுப்பற கோப்புகள்.இதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் மகிழ்ச்சியே !

ஆனால் இந்த கோப்பை பயன் படுத்த என் வாடிக்கையாளர்களுக்கு நான் அனுப்பும் கவரிங் லெட்டர ஒரு முறை படிச்சே ஆகனும். இல்லேன்னா ஒரு மண்ணும் புரியாது .

கவரிங் லெட்டர்:

சித்தூர்,
……….

விடுனர்
சித்தூர்.முருகேசன்,
அனுபவஜோதிடம் டாட் காம்

அன்புடையீர்,
ஆன்மீகத்தின் முதல் படியான ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டு தொடர்பு கொண்டமைக்கு நன்றி. இதில் ராசி கேரக்டர் என்ற பகுதியில் 12 ராசிகளுக்கான குண நலன் தரப்பட்டிருக்கிறது. இதுல உங்க லக்னம் ,ராசி எதுவோ அதுக்குண்டான பலனை மட்டும் படித்துக்கொள்ளவும்.
தங்கள் அனுப்பியுள்ள ஜாதகங்களில் /ஜாதகத்தில் ராகு கேது 2-8 ல் அல்லது 1-7 ல் அல்லது 5 ல் இருந்தால் ராகு கேது என்ற தலைப்பிலான விஷயங்களையும் படியுங்கள். பரிகாரங்களை ஆரம்பித்து விடுங்கள்.

(உங்களுக்கு லக்னாதிபதியுடன் அல்லது ஏழுக்குடையவரோடு ராகு/கேது சேர்ந்ததால் 1-7 எஃபெக்ட் இருக்கலாம் தனபாவாதிபதியோடு .அல்லது அஷ்டமாதிபதியோடு ராகு/கேது சேர்ந்திருந்தால் 2/8 ல் ராகு கேது இருக்கும் எஃபெக்ட் வரலாம் .ஐந்துக்குடையவரோடு ராகு/கேது சேர்ந்திருந்தால் 5 ல் ராகு கேது இருக்கும் எஃபெக்ட் வரலாம் .

இந்த கிரகஸ்திதியை நான் பலனில் சொல்லியிருப்பன் .கேட்டு பார்த்து -டிசைட் பண்ணுங்க) அடுத்தடுத்த மெயில்களில் பரிகாரம்,தசா பலன், என்று அனுப்பி வைக்கிறேன்.

எச்சரிக்கை: பலனை படிப்பதற்கு முன் டிஸ்க்ளெய்மர் என்ற ஆடியோவ கேட்டுருங்க. pl gimme a feed back.
பி.கு: தாமதத்திற்கு மன்னிக்கவும். ஜாதகங்கள் எந்த வரிசையில் வருகின்றனவோ அதே வரிசையில் பலன் அனுப்பி வருகிறேன். ஜாதக வரத்து அதிகமாகி விட்டதால் தான் இந்த தாமதம். .

தேவை கொஞ்சம் புரிதல் -கொஞ்சம் பொறுமை.

தங்கள் உண்மையுள்ள,
எஸ்.முருகேசன்,சித்தூர்

நான் சொன்ன ரகசிய கோப்புகளை தரவிறக்க இங்கே அழுத்துங்க. கவரிங் லெட்டர்ல சொல்லியிருக்கும் டிஸ்க்ளெய்மர் ஆடியோ ஃபைலை தரவிறக்க இங்கு அழுத்தவும்.

8 Replies to “ரகசிய கோப்புகள்”

ASHOK

08/07/2016 at 2:39 pm

என்னதான் நீங்க தன்னடக்கமா பேசினாலும் இதை பாராட்டாம இருக்கவே முடியாது ஐயா!

உங்க future plans மற்றும் operation இந்தியா வெற்றியடைய இச்சிறியேனின் பிரார்த்தனைகள்!

Reply

  S Murugesan

  08/07/2016 at 4:09 pm

  வாங்க அசோக் !

  நன்றி.சிறிய விஷயத்தையும் பெரியதாய் கருதி பாராட்ட பெரிய மனம் வேண்டும்.பெரிய மனம் கொண்டவரும் பெரியாரே ..

  Ref: இச்சிறியேனின் பிரார்த்தனைகள்!

  Reply

S Muthukumar

08/07/2016 at 9:59 am

Dear Sir,

Great Job. Heartiest Wishes. இறையாற்றலும் மற்றும் நல்ல உள்ளங்களும்
உங்களுடைய எல்லா நல்ல முயற்சிகளுக்கும் துனையிருக்கட்டும். வாழ்க வளமுடன்

Reply

  S Murugesan

  08/07/2016 at 12:29 pm

  வாங்க முத்துக்குமார் !

  வாழ்த்துக்கு நன்றி .

  Reply

Chokkalingam Ramanathan

07/07/2016 at 6:51 pm

சிலர் தொழில் ரகசியம் ..தொழில் ரகசியம் .. ன்னு பொத்தி ,பொத்தி …காலப் போக்கில் அது காணாமல் ரகசியமாகவே போகிறது .

பிறர் ( மக்கள் ) நலம் தான் எனது தொழில் ரகசியம் …!!! என்று அண்ணன் இதன் மூலம் நிரூபித்து விட்டார் .

மக்கள் சேவையே ” மகேசன் ” சேவை …தொடரட்டும்

சித்தூர் முருகேசன் ரசிகர் மன்றம் கோவை , ஈரோடு கிளைகளின் சார்பாக வாழ்த்துக்கள் …

ஆத்தா ஆசியில் அவரது இந்திய வல்லரசு கனவுகள் ..நினைவாகட்டும் ..!!!

Reply

  S Murugesan

  07/07/2016 at 8:39 pm

  வாங்க சொக்கலிங்கம் ராம நாதன் !

  இதுக்கேவா? பெரிய திட்டம் வச்சிருக்கன்.கொஞ்சம் வசதி வந்த பிறவு ஒரு ஜாதகத்தை நாம நோண்டி நுங்கெடுத்து ஜோசியம் சொன்னா எப்படியா கொத்த அவுட்புட் வருமோ அப்படி ஒரு சாஃப்ட்வேர் டிசைன் பண்ண வைக்கனும்.அதை இலவசமா சனத்துக்கு கொடுக்கனும்.

  Reply

   Siva

   09/07/2016 at 6:00 pm

   நல்ல எண்ணத்துக்கு ஒரு அளவே இல்லையா?

   Reply

    S Murugesan

    10/07/2016 at 1:10 pm

    வாங்க சிவா !
    இதுக்கேவா? இன்னம் என்னென்னவோ மைன்ட்ல இருக்கு . நேரம் வரட்டும். ஒவ்வொன்னா இறக்கிருவம்ல.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.