Tags     

Categories  அனுபவஜோதிடம் காசு பணம் துட்டு மணி காசுபணம்

காசுபணம் துட்டு மணி மணி : 9

lotteries

smugling

Tasmak

அண்ணே வணக்கம்ணே !
சமீபத்துல ஆரம்பிச்ச புதிய தொடர் இது. இதுல சனங்களை 9 க்ரூப்பா பிரிச்சு ,அவிக ஃபிசிக், ஆட்டிட்யூட்,பழக்க வழக்கம்,என்விரான்மென்ட் எல்லாத்தையும் விவரிச்சு – அவியளோட பொருளாதார பிரச்சினைகளுக்கும் என்ன காரணம்? அந்த காரணங்களை எப்படி இல்லாம பண்றது? எப்படி எக்கனாமிக்கலா பூஸ்ட் பண்ணிக்கிறதுன்னு விலாவாரியா சொல்லிட்டு வர்ரம்.

கடந்த பதிவுல தேர்ட் கேட்டகிரிய பைசல் பண்ணிட்டம். இந்த பதிவுல நாலாவது க்ரூப்பை எடுத்துக்கிட்டு பிரிச்சு மேயலாம். நான் சொல்ற மேட்டர்லாம் உங்களுக்கு டாலி ஆச்சுன்னா நீங்க 4 ஆவது கேட்டகிரின்னு அருத்தம்.ஓகேவா. அடுத்த பதிவுல உங்களை நீங்க எக்கனாமிக்கலா பூஸ்ட் பண்ணிக்கிறது பரிகாரங்களை தரேன்.

நமக்குள்ள ஒரு டீல் இருக்கு. ஞா இருக்கில்லை. நான் உலக மக்களை எல்லாம் 9 கேட்டகிரியா பிரிச்சு – அவிகளோட பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் -அதுக்கு என்ன பரிகாரம்னு சொல்லோனம். படிக்கிற சனம் தங்களோட கேட்டகிரி எதுன்னு ஐடென்டிஃபை பண்ணி பரிகாரங்களை ஃபாலோ பண்ணி பைசா புரட்டனும். பைசா புரட்டியான பிறவு அடடா ..சூட்சுமத்தை சொல்லி போட்டு -நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் கொடுத்ததே இந்தாளுதானே.இந்தாளுக்கு எதுனா பண்ணனும்யான்னு நினைச்சு நாம 2016 ல ஆரம்பிக்கப்போற சைட்டுக்கு நன் கொடை கொடுக்கனும்.

இப்பமே சிலர் கொடுத்தாச்சு (ஊர் /பேர் சொல்லக்கூடாதுங்கற நிபந்தனையோட) பலர் வாக்கு கொடுத்திருக்காய்ங்க. இந்த நன்கொடைய வச்சு கு.பட்சம் ஒரு 3 மாசமாச்சும் நான் உட்கார்ந்து வேலை செய்தா தான் இங்கிலீஷ் வெப்சைட் லாஞ்ச் ஆகும். ஆட்சென்ஸ் வருமானம் கிடைக்கும்.

எப்படியும் கட்டண ஆலோசனைக்கு 2015லயே மங்களம் பாடிரப்போறம்.புவாவுக்கு ஆட்சென்ஸை விட்டா வேற வழி கிடையாது.தெரியும்ல.இதான் டீலு.

எங்களுக்கு ஐடியா கொடுத்து எங்ககிட்டே கைய நீட்டுவானேன். நீயே அதை எல்லாம் அப்ளை பண்ணி காசுபுரட்டலாமேன்னு உங்கள்ள சிலருக்கு டவுட்டு வரலாம்.

மேட்டர் என்னடான்னா நம்ம ஜாதகத்துல குரு உச்சம்.பத்துல ராகு .அப்படியும் செரி-இப்படியும் செரி காசு புரட்டற கப்பாசிட்டி நமக்கிருக்கு. சிக்கல் எங்கே வருதுன்னா குரு =மந்திரி, குரு =தனகாரகன். நாம பைசா புரட்ட ஆரம்பிச்சுட்டா ரத்த ருசி கண்ட புலி மாதிரி ஆயிருவம். நம்ம ஜாதகத்துல உள்ள குரு தனகாரகனாவே ஒர்க் ஆகி -மந்திரி கனவெல்லாம் ஃபணால் ஆயிரும்.(நம்ம டார்கெட் பிரதமமந்திரி தெரியும்ல)

ஓகே .. இப்ப பதிவுக்கு போயிரலாம்.

உங்க ஃபேமிலி ட்ரீல விதவைகள் /விவாகரத்து பெற்றவர்கள் அதிகமிருக்கலாம். அல்லது தம்பதிகள் எலியும் பூனையுமாகவே இருக்கலாம். விஷமருந்தி செத்தவர்கள் ,ரகசியமான முறையில் சொலை செய்யப்பட்டவர்கள் ,மர்மமான முறையில் உயிர் விட்டவர்கள் இருக்கலாம்.

உங்களை பொருத்தவரை அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம் – அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். ரெண்டாவது கேட்டகிரி மந்திரத்துல மாங்காய் விழுந்துரும்னு இருப்பாய்ங்க. ஆனால் இவிக அடுத்தவன் தோப்புக்குள்ள வேலி பிரிச்சு இறங்கிருவாய்ங்க. மாட்டிக்கிட்டா?

நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி (!) போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)

தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.

கில்மாவை பொருத்தவரை ஸ்கலிதத்துக்கு பிறகும் பிரிய மனமொப்பாது. கும்மிருட்டு தான் ப்ரிஃபரபிள்.சன்னல் சந்துல இருந்து வெளிச்சம் வந்தாலும் எந்திரிச்சு போயி அதை ப்ளாக் பண்ணா தான் மூடே வரும். சிலருக்கு கக்கா போகும் போது ஸ்கலிதமாகலாம்.

மெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். (வீட்டு சாப்பாடேசாப்பிட்டாலும்,மினாரல்வாட்டரே குடிச்சாலும் எத்தனை ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாலும்)

உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். டாக்டர் எல்லா டெஸ்டும் செய்துட்டு ஒன்னும் தப்பா இல்லையேன்னிருவாரு.ஆனால் உங்க பிரச்சினை மட்டும் அப்படியே இருக்கும்.முறையற்ற வளர்ச்சிகள் (உ.ம் அடிக்கடி கட்டி வீக்கம் கிளம்புதல்) வலி இருக்கலாம். அந்த வலியும் இடம் மாறிக்கொண்டே இருக்கவும் கூடும்.

நீங்க கருப்பா/மா நிறமா /ஊளைச்சதையோட /ஒல்லி பீச்சானா இருந்தா எஃபெக்ட் குறைவு .இல்லின்னா எஃபெக்ட் அதிகம்.தங்கள் தொடர்பாக சில விஷயங்களை மறைக்க நினைக்கிறவுக எதை மறைக்க நினைச்சிருக்காய்ங்களோ அதை மறக்காம இருக்கனும். அதுக்கு ஞா சக்தி தேவை. உங்க ஞா சக்தி இதுலயே வீணா போயிர்ரதால மறதி ஏற்படலாம். உங்க ஜட்ஜிங் தப்பா போகலாம். புத்தி குழப்பம் கூட ஏற்படலாம்.

இதெல்லாம் உங்களுக்கு மட்டுமில்லை உங்கள் வாழ்க்கை துணைக்கும் நடக்கலாம். இது உங்கள்/உங்கள் வாழ்க்கை துணையின் அழகு,கவர்ச்சி,திறமை எல்லாம் கரைஞ்சுக்கிட்டே வரும். இது பரஸ்பர கவர்ச்சியை குறைக்கும். உங்களில் ஒருவருக்கு அடுத்தவர் மீது சந்தேகம் ஏற்படும் விதமாகவே சம்பவங்கள் நடக்கும். அல்லது சாதாரண சம்பவங்களையும் அப்படியாக நீங்க கற்பிச்சுக்குவிங்க.

ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அல்லது புதுசு புதுசா தேடி தேடி திங்க போயி வவுறு கெட்டு ஃபுட் பாய்சன் ஆகனும்.

நீங்க பெண்ணா இருக்கும் பட்சத்துல வைதவ்யம் கூட ஏற்படலாம் .ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை /அல்லது பிரிவு ஏற்படலாம்.

பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். உ.ம் திக்குவாய், அல்லது உரிய வார்த்தை கிடைக்காது திணறுதல், வாக்கிய அமைப்பு சிதைந்து எதிராளிக்கு புரியாத நிலை.

ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். யாரோடவும் ஒட்டாம இருப்பாங்க.
தொடர் அவமானங்கள்,அவப்பெயர், தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போதல், குறுக்கு வழிகளையே சிந்தித்தல் , சட்ட விரோத வழிகளை அசை போடுதல் ,சதி செய்தல் ,புத்திகுழப்பம், பிள்ளை பேற்றில் பிரச்சினை (அதாவது கரு நிற்காமல் இருப்பது -கருச்சிதைவு ) பிறந்த குழந்தைகளுக்கு இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்ன அங்கலட்சணங்கள். ஒரு வித துரதிர்ஷ்டம் தொடர்தல்.

சினிமா ,லாட்டரி,சாராயம், சூதாட்டம், கடத்தல் ,ஏற்றுமதி இறக்குமதி,ஷேர்மார்க்கெட் தொழிலில் தொடர் நஷ்டம் இருந்தாலும் கட்டுக்கடங்காத ஈடுபாடு. கனவில் சதாபாம்புகள், முக மூடி அணிந்த மனிதர்கள் , அன்னிய மதத்தினர் வருவதும் உண்டு.

காதல் மேட்டர்ல பிறமொழி,பிற மத பட்சிகளையே தேர்வு செய்வது. பதிவின் ஆரம்பத்தில் சொன்ன லட்சணங்கள் உள்ள குட்டிகள் மேல் மட்டும் ஈடுபாடு. திருமணத்துக்கு பிறகு மறைந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுவது .
அப்பா குடி அடிமையாகவோ /அந்தப்பழக்கம் உள்ளவராகவோ இருப்பது .பதிவின் ஆரம்பத்தில் சொன்ன லட்சணங்கள் உடையவராக இருப்பது .

உங்களுக்கு உரிமையான நிலம்,சைட்,வீட்டில் கரையான்,பூரான்,பாம்பு போன்ற விஷ பிராணிகள் இருப்பது .தந்தை சினிமா ,லாட்டரி,சாராயம், சூதாட்டம், கடத்தல் ,ஏற்றுமதி இறக்குமதி,ஷேர்மார்க்கெட் தொழிலில் இருப்பது.அந்த தொழிலில் ஈட்டிய சொத்துக்களை பறிக்க பிறர் சதி செய்வது .

உங்களுக்கோ/மனைவிக்கோ/தந்தைக்கோ “நமக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க”ங்கற ஃபீல் வர்ரது .சில நேரம் அதை நம்பி அவற்றை முறிக்க சகட்டுமேனிக்கு செலவழிப்பது .

இந்த குணங்கள் உங்களுக்கிருந்தா நீங்க நாலாவது கேட்டகிரி பாஸ் ! உங்களுக்குண்டான பரிகாரங்கள் அடுத்த பதிவில்.

print

3,354 total views, 1 views today

S Murugesan
kishore says:

hello sir,
En jathagam dhanush rasi pooradam nakshtra,1-chandra -dhanush lagnam,
2-shukra+budhan,4-chevvai+suryan+ketu,5-shani,6-guru,10-rahu,b.E electrical & electronics engineer padichruken ayya en jathaga padi entha velai amayum,rahu 10 top postion kedikuma .engineering la entha job amayum ,media la audio engineer,oliparapum engineer polama .nadapu dasa :rahu dasa/rahu bhukti.

S Murugesan says:

வாங்க கிஷோர் !
லக்னத்துல அஷ்டமாதிபதி , லக்னாதிபதியே 6ல். நான் இந்த ஆட்டத்துக்கு வல்ல. அம்பேல்.லோக்கல்ல நல்ல சோசியரா பாருங்க.

babu says:

அய்யா வணக்கம் எனக்கு மீன லக்னம் – 2 ல் குரு, கேது, 3 ல் சந்திரன், 4ல் செவ், மாந்தி 5ல் சனி, 8 ல் ராகு, 11 ல் சுக்கிரன், 12 ல் சுரியன்/புதன், ரிசபம் ராசி , மிருகசிரிட நட்சதிரம் 1ம் பாதம் enathu pirachanai mind fulla gilma pattiyeyh odittu irukku… thuritha skalitaham .. thangalathu ice water kooda trai panniten.. analum no gain.. please ithukku enna pannalam. age 39. kadantha 10 varusama sitha, ayurvetha, accupancture ellam trai panniyachu . onnum velaikkagala… please help me
thanking you

S Murugesan says:

வாங்க பாபு !
லேட்டஸ்ட் தொடர்ல நீங்க 4 ஆவது கேட்டகிரியில வர்ரிங்க. அடுத்த பதிவுல பக்காவா பரிகாரம் சொல்றேன். வெய்ட். அதுவரை/அதுக்குள்ள வைத்தியம் அது இதுன்னு போயி காசை கரியாக்கி, பாடிய காட்பாடி ஆக்கிராதிங்க.ஜெனரல்ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்.

Nandakumar says:

அய்யா வணக்கம்,
மிக முக்கியமான தருணத்தில் வந்திருக்கும் அவசியமான பதிவுகள்…நன்றி டீலுக்கும் ரெடி. ஆனால் பிரச்சினை என்னன்னா..இதில் நான் எந்த பிரிவுல வரேன்னே புரியல…
துலா லக்னம் 2ல் சந்திரன்,4ல்சூரி,5ல்புத+கேது,6ல்சுக்கிரன்,11ல்குரு+ராகு+செவ்,12ல்சனி..10/02/1980 00:10…2010ல் கட்டண சேவையில் என் ஜாதகத்தை சும்மா புட்டு புட்டு வைச்சீங்க…ஆனாலும் இப்ப புரியல..(காசுன்னு வந்தா புரியாதோ)
வழிகாட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்….நன்றி…

S Murugesan says:

வாங்க நந்தகுமார் !
பத்துக்குடையவர் சந்திரனாகி 2 ல் இருப்பதால் -அங்கு நீசமாகவுமிருப்பதால் நீங்க செகண்ட் கேட்டகிரிதான். இதுல சிக்கல் என்னன்னா லக்னாதிபதியே 6-8-12 ல இருக்கிறதெல்லாம் பெசலோ பெசல் கேட்டகிரி அடுத்த தொடர்ல நோண்டி நுங்கெடுத்துரலாம்.

//என் ஜாதகத்தை சும்மா புட்டு புட்டு வைச்சீங்க…// ரெண்டாவது ஃபைல்ல பரிகாரம்லாம் சொல்லியிருப்பனே..அதை ஃபாலோ பண்ணல போல.

ஃபாலோ பண்ணியிருந்தா இந்த தொடரை படிக்கவேண்டிய அவசியமும் வந்திருக்காது .கேள்வி கேட்கவேண்டிய அவசியமும் வந்திருக்காது .

Nandakumar says:

July’2011 ல் நீங்க அனுப்பிய பலன்கள் மற்றும் கேள்விகளுக்கான ஆடியோ காப்பிகள் மட்டும் தான் என்னிடம் இருக்கிறது.,பரிகாரங்கள் காப்பி செய்வதற்குள் வேலையிலிருந்து வெளியேறியதால் காப்பி செய்ய இயலவில்லை உங்களையும் தொல்லை செய்ய மனமில்லாததினால் விட்டுவிட்டேன்.,Email:srilankanholidays_trz@translanka.net…என்னுடைய Personal mail Use பண்ணாததினால் இந்த தவறு நேர்ந்தது.,

S Murugesan says:

நந்தகுமார் !
இருங்க நான் சென்ட் பாக்ஸ்ல பார்க்கிறேன்.இருந்தா உடனே ஃபார்வர்ட் பண்றேன்.

krishna says:

ayya vanakkam,
kumbha rasi poratathi ,rishbha lagnam, 2-shukra+budha+ketu+suryan,4-guru,8-rahu
9-shani,10-chandran,12-chevvai. 22/6/1992.software engineer ayya nala poitrukku ayya, ,marriage panalama ayya,marraige panna correct age ,ponin niram,gunam,vasathi patri,sollunga.

S Murugesan says:

கிருஷ்ணா !
தற்போது எழுதிக்கொண்டிருக்கும் தொடரில் நீங்க 4 ஆவது கேட்டகிரியில வர்ரிங்க.சற்று நேரத்தில் விரிவான பரிகாரங்களை போஸ்ட் பண்ணப்போறேன். படிச்சு ஃபாலோ பண்ணிக்கங்க.

S Murugesan says:

கிருஷ்ணா !

மொத்த ஜாதகத்தையும் கையில வச்சுக்கிட்டு சாரம் பார்த்து ,டிகிரி பார்த்து ,பாவம் பார்த்து பலன் சொல்றதுக்கே கண்ணை கட்டுது .

இந்த டீட்டெய்ல்ஸை மட்டும் வச்சுக்கிட்டு சொல்ற தில்லு எனக்கிருக்கு.ஆனால் ஒரு வேண்டுகோள் தயவு செய்து என்னை பொய்யனாக்கிராதிங்க.

இந்த ஆட்டத்துக்கு நான் வல்ல. வேணம்னா இலவச ஆலோசனை பட்டனை சொடுக்கி அதன்படி ஜாதகத்தை போஸ்ட்ல அனுப்புங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *