Tags     

Categories  அனுபவஜோதிடம் காசு பணம் துட்டு மணி காசுபணம்

காசு பணம் துட்டு மணி மணி :3

Snapshot_20151024_5

அண்ணே வணக்கம்ணே !
இந்த பதிவை ஒரு புது மெத்தட்ல அடிக்கப்போறேன். நம்ம மைண்ட் ஜெட் ஸ்பீட்ல ஒர்க் பண்றச்ச படபடன்னு கொட்டும்.ஆனால் கொட்டினதை வாக்கியத்துல அமைச்சு எழுதறதுக்குள்ள 99.99 சதவீதம் எக்ஸாஸ்ட் ஆயிருது.ஆகவே ஸ்பார்க் ஆகற மேட்டர் தொடர்பான கீ வோர்ட்ஸை எல்லாம் அடிச்சு வச்சுக்கிட்டு பிறவு ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் பண்ண போறேன்.

இன்னைக்கு ஏறுனா ரயிலு -இறங்கினா செயிலுன்னு அவதிப்படற கேட்டகிரிக்கான பதிவு இது. இவிக ஏழைகள் அல்ல. அதே நேரம் செல்வந்தர்களும் அல்ல. ஏழைகள் கூட அனுபவிக்காத ஏழ்மையையும் -செல்வந்தர்கள் கூட காண அஞ்சும் கனவுகளையும் கொண்டவர்கள்.

ஜஸ்ட் ..கொஞ்சம் மிஸ் ஆனா புதையல், ரைஸ் புல்லிங் ,மண்ணுளி பாம்பு,இரிடியம்னு வழி தவறிர கூட சாதிதான். விட்டா நோக்கு வர்மம், வசியம் இத்யாதியில கூட இறங்கிருவாய்ங்க. ஆச்சரியம்,திகைப்பை தர கூட எல்லா மேட்டர்லயும் இவியளுக்கு ஆர்வமுண்டு .

அதிரசத்துக்கு நோக நோக மாவு இடிக்கிறதுல்லாம் வெட்டி . எவனோ நோக நோக மாவு இடிச்சு அதிரசம் சுட்டு வச்சிருந்தா நாம ஒன்னுமே பண்ண மாட்டம் ஆனால் அது நம்ம தட்டுக்கு வந்துரனும்.அதுக்கெல்லாம் மெத்தட் இருக்கு பாஸும்பாய்ங்க.

இவிக பிரச்சினை ரெம்ப சிம்பிள். ரெகுலர் மணி ஃப்ளோ இருக்காது . என்னைக்கோ ஒரு நாள் ஏதோ ஒன்னு எக்கு தப்பா ஒர்க் அவுட் ஆகியிருக்கும். அதே போல வாழ் நாள் எல்லாம் நடக்குங்கற எதிர்ப்பார்ப்பு . ப்ராக்டிக்காலிட்டி இருக்காது . பட்சி சொல்லுது -மனசுக்கு படுதுன்னு எக்குதப்பா படக் படக்குன்னு முடிவெடுப்பாய்ங்க.

இருவது வருச பிரச்சினையை ரெண்டே நிமிட்ல சால்வ் பண்ணிருவாய்ங்க. அதே நேரம் ரெண்டே நிமிட்ல 20 வருசத்துக்கு சால்வ் ஆகாத பிரச்சினையை உருவாக்கிக்குவாய்ங்க.

பொருளாதாரத்தோட அடிப்படையே wants are unlimited -resources are limited ங்கறதுதான். விருப்பங்களுக்கும் – நிதி ஆதாரங்களுக்கும் இடையிலான ஓட்டப்பந்தயமே எக்கனாமிக்ஸ்.

இதை ஆன்மீகம் சுலபமா சால்வ் பண்ணுது . விருப்பங்களை physical -psycologicalனு ரெண்டா பிரிச்சுக்கோ. அப்போ ரெண்டும் சமமாயிரும். சமமா இல்லின்னாலும் சமப்படுத்தறது ஈஸி.

மன்சனோட உடல் -மனம் இந்த ரெண்டுல மனித உடல் ரெம்ப அப்பாவி. இன்னைக்கும் இயற்கையோட ஓரளவு கனெக்சன் வச்சிருக்கு. மனிதமனம் தான் வில்லங்கம் புடிச்சது .

என்விரானென்டல் ஃபேக்டர்ஸ் பாடிய விட மைன்டை சீக்கிரமா எஃபெக்ட் பண்ணிருது . நாம பேசிக்கிட்டிருக்கிற கேரக்டருங்க உடம்பு என்ன சொல்லுதுன்னு கேட்கவே மாட்டாய்ங்க.மனசு என்ன சொல்லுதுன்னு தான் பார்ப்பாய்ங்க.

அம்மா/அம்மா வயசு பெண்கள்/வயதில் மூத்த பெண்களோட அன்பும்/ஆதரவும் இவியளுக்கு கிடைச்சா நாட் பேட். இல்லின்னா சைக்கியாட் ரிஸ்டுகளை பார்க்க வேண்டியதுதான். சோத்துக்கே சிங்கியடிக்க வேண்டியதுதான்.

மனித உடல் -மனம் இந்த இரண்டில் எது வலிமையானதோ அது அடுத்ததை ஆளும். இவிக விஷயத்துல மனசுதான் வலிமையானது . இதுல சோகம் என்னன்னா மனசோட ஆட்சி நிலையானது அல்ல.

சைக்காலஜிப்படி பார்த்தாலும் ஜோதிடப்படி பார்த்தாலும் ஒரு மன எழுச்சியோ – மனத்தாழ்ச்சியோ 2மணி நேரத்துக்கு மேல நீடிக்கவே நீடிக்காது . (சைக்காலஜில 4 நிமிட்டுக்கு ஒரு முறை மூட் மாறிருதுங்கறாய்ங்க)

money is blood. இது சதா சர்வ காலம் தங்கு தடையில்லாம சர்க்குலேட் ஆயிட்டே இருக்கனும். இல்லின்னா பொளப்பு நாறீரும். இவிக மேட்டர்ல ஏற்கெனவே சொன்னபடி ஏறக்குறைய சூதாட்டம் தான்.

பணத்துக்கு லிக்விடிட்டி முக்கியம். நாளைக்கு வந்தாவரும்ங்கற பத்தாயிரம் ரூவாயை விட நாளைக்கு பத்து மணிக்கு நிச்சயமா வரும்ங்கற ஆயிரம் ரூவாய்க்கு மதிப்பு அதிகம்.

இதை எல்லாம் இந்த கேட்டகிரி சனம் அறிஞ்சு -புரிஞ்சு -தெளிஞ்சு செயல்பட்டா பரிகாரமே தேவையில்லை . (இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆகவே அடுத்த பதிவுல இவியளுக்குண்டான பரிகாரங்களை பார்க்கலாம்)

print

3,152 total views, 1 views today

S Murugesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *