Tags     

Categories  அனுபவஜோதிடம் கால மாற்றம்

காலமாற்றம்-கிரகபலன் : பாக்ய பாவம் (1)

ballon burst

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றம்-கிரகபலன் தொடர்ல 9 ஆவது பாவமான பாக்ய பாவம் தரும் பலனில் கால மாற்றத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி பார்ப்பம். நம்ம ராசியான சிம்மத்துக்கு கோசாரத்துல 2-8 ல் இந்த ராகு கேது செம அட் ராசிட்டி பண்றாய்ங்க. இதுக்கு பரிகாரமா இந்த பதிவுல கொஞ்சம் காட்டடி அடிக்கலாம்னு இருக்கன். (குறைஞ்ச பட்சம் ஒரு லாயர் நோட்டீஸ்னா வரனும்)

எச்சரிக்கை:

இந்த வலை தளம் இயங்க ஒரே சோர்ஸா இருக்கும் கட்டண ஆலோசனை வரும் டிசம்பர்,31 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதால் நன் கொடைகளை ஏற்க முன்வந்தம். நன்கொடைகள் வருது .ஆனால் சொல்லிவச்ச மாதிரி எல்லாருமே என் பேரை அவுட் பண்ணாதிங்கன்னு சொல்லிர்ராய்ங்க. நமக்கு ஏனோ இது பெரிய மனக்குறையா இருக்கு .

இந்த வாரமாச்சும் பேர் போடும் வகையில் நன்கொடைகள் வரும் என்று நம்புகிறேன்.

மொதல்ல லக்னாத் 9 ஆவது பாவ காரகங்கள் என்னன்னு பார்த்துரலாம் .(ஒவ்வொன்னா விளக்க வசதியா இருக்கும்ல)(இதை பித்ருபாவம்னும் குறிப்பிடலாம்)

இதன் காரகங்கள் :

த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள், நீதி, நிர்வாகம், தொடை பகுதிகள்

காலமாற்றத்தால இன்னைக்கு கொளந்தைங்க அப்பன் முகத்தை கூட பார்க்கிறது சிரமமா போச்சு. அப்பா வழி உறவுன்னா?
அவிகல்லாம் ஒன்னு கிராமத்துல இருப்பாய்ங்க -அல்லது டவுன்ல இருப்பாய்ங்க (இவிக சிட்டில) அல்லது சிட்டியிலயே வேற ஒரு ஏரியாவுல இருப்பாய்ங்க.

காலமாற்றத்தால இந்த ரெண்டு காரகமும் அவுட். இதன் விளைவாக – தன் உறவுகளை விட எட்ட வச்சுட்டு அப்பங்கரான அப்படி ஓடி ஓடி சம்பாதிச்சாதான் சேமிப்புன்னு ஒன்னை கண்ல பார்க்கலாம் (விக்கிற விலை வாசி அப்படி) ,முதலீடுன்னா வேற என்ன? ஹவுசிங் சைட் அல்லது வீடு .
இந்த வீடு கட்டறவிக போடற பொட்டை கணக்கை எல்லாம் நுங்கெடுத்து ஒரு பதிவு முக நூல்ல வலம் வருது .கண்ல சிக்கினா விடாதிங்க.
ஆனை அசைஞ்சு தின்னும் -வீடு அசையாம தின்னும் : இது பழமொழி . வீட்டை கட்டிப்பார் -கல்யாணம் பண்ணிப்பார் :இதுவும் பழமொழிதான். (கொய்யால ..செமர்த்தியா வாழ்ந்து பார்த்து எளுதி வச்சிருக்காய்ங்கப்பா )

எங்க ஊர்ல -அதுவும் கார்ப்பரேஷனாக்கிய பிறகு ஹவுஸ் டாக்ஸ் எல்லா எகிறிக்கிச்சு . பஸ் சார்ஜ் அம்மாத்தம் துட்டை டோல் கேட் கொடுத்து அழறாப்ல -வாடகை அம்மாத்தம் பணத்தை ஹவுஸ் டாக்ஸா அழனும்.

வங்கில கடன் வாங்கி கட்டறவன் ஓரளவு சேஃப்.ஏன்னா அவிக ரீ சேல் வேல்யூ இருக்கனுங்கறதுக்காவ (கடன் கட்டலின்னா ஜப்தி பண்ணி விக்கனும்ல?) இத்தனை ஃபீட் ரோட் இருக்கனும் /காம்பவுண்ட் இருக்கனும்னு கண்டிஷன்லாம் போடுவாய்ங்க.

அங்கே இங்கே பீராய்ஞ்சு கட்டறவன் பாடுதான் அய்யோ பாவம். தீப்பெட்டிய அடுக்கின கணக்கா கட்டித்தொலைச்சுட்டு வாடகைக்கும் விடமுடியாம -வளர்ந்துட்ட பசங்களை அங்கே வச்சும் வாழ முடியாம அவதிபடற குடும்பங்க ஆயிரம்.

செரி ஒழியட்டும் நம்ம சப்ஜெக்ட்டுக்கு வந்துருவம் . இந்த 9 ஆம் பாவ காரகத்வத்துல அப்பா,அப்பாவழி உறவு போச் ! முதலீடா? கவைக்குதவாத முதலீடு .
இல்லத்தரசிங்க முதலீடே வேற. கிரைண்டர்,ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷினுன்னு வாங்கி அடுக்கிருவாய்ங்க. அது வாரண்டி பீரியட் வரைகட்டின பசுவா இருக்கும்.பிறவு வேலை கொடுக்க ஆரம்பிச்சிரும்.கொய்யால ..அதுகளை ரிப்பேர் பண்ண ஆகற செலவும் புதுசு வாங்கற செலவும் ஈக்வலா இருக்குமா? ஒடனே இதை தூக்கி ஸ்டோர் ரூம்ல போட்டுட்டு புதுசு வாங்கிரவேண்டியதுதான்.

ஆக சேமிப்பு முதலீடாகி – அந்த முதலீடும் வீணா போயிருது. இந்த பாவ காரகத்வத்துல அடுத்து வர்ரது தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்,தூர தேச தொடர்புகள். இந்த இன்டர்னெட் உபயத்துல பயணமே இல்லாம “நட்பும் -உறவும்”சாத்தியமாயிருது .

vikatan

மேலும் நடுத்தர ,மேல் தர நடுத்தர குடும்பங்கள்ள அமெரிக்காவுல செட்டில் ஆகறதுங்கறது எழுதப்படாத சட்டமாயிருச்சு .அப்பன் இதுக்காவ ட்ரை பண்ணி டொக்கு விழுந்து -பசங்களை உசுப்பிவிட்டுக்கிட்டிருப்பான். ஆக இந்த பாவம் அன்னியமோகத்தை அள்ளித்தருது . இவிக கண்ணுக்கு தெரியறதெல்லாம் எவனோ ஒரு பிள்ளை தான். ஒட்டகம் மேய்க்கிறவன் கதைல்லாம் இவிக கண்ணுக்கு தெரியவே தெரியாது .

இந்த ரூட்ல வாழ்ந்து – அந்த வாழ்க்கையோட “அர்த்தமற்ற தன்மை உறைச்சாலோ” அல்லது அந்த ரூட்டுல முக்கி முனகி முன்னேறிக்கிட்டிருந்தாலோ கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் இத்யாதில்லாம் கிராஸ் ஆயிருது .

இந்த பாவ காரகத்வத்துல வர்ர நீதி, நிர்வாகம்லாம் இவிக வாழ்க்கையில காணாம போக உட்கார்ந்த வாக்குல தின்னு தின்னு பிருஷ்டம் , தொடைல்லாம் ஒரே சைஸாயிருது .

வாரிசுகளை இஞ்சினீர் ஆக்கற/டாக்டர் ஆக்கற முயற்சியில பல்பு வாங்கினாலோ – ஃபைனான்ஸ் கம்பெனில துட்டை போட்டு மொட்டைய போட்டுக்கிட்டாலோ கோர்ட்டுக்கு அலையவேண்டியதாயிருது .

காலமாற்றம் இப்படியாக 9 ஆம் பாவ காரகத்வத்துல பலதுக்கும் வேட்டு வச்சுருச்சு . சில மேட்டர்ல லொங்க வச்சு நாக்கை தள்ள வைக்குது .
இந்த 9 ஆம் பாவ காரகத்வத்தை எப்படி “நிர்வாகம்” பண்றதுன்னு அடுத்த பதிவுல சொல்றேனே..

print

4,398 total views, 15 views today

S Murugesan
om prakash says:

Ayya vanakkam,
oru doubt yogi,avayogi ,sahayogi concept padi .yogi point il rahu kumba rasi sathya nakshtram ettam veetil ullar ,avar moolatrikona rasi nalathu seivara ayya.

S Murugesan says:

வாங்க ஓம் பிரகாஷ் !
மத்ததெல்லாம் பரவால்ல. எட்டாம் வீடுன்னிட்டிங்களே .. அதானே சிக்கல்.லக்னாதிபதி வெய்ட்டா இருந்து ,லக்னம் சேஃபா இருந்து ,ஆயுள் காரகன் சனி பெட்டர் பொசிஷன்ல இருந்து ,எட்டுக்குடையவர் பலமிழந்து -இருந்தா எஸ் ஆகலாம். இல்லின்னா பிரச்சினை தானே !

om prakash says:

ayya vanakkam,
nandi ayya lagnam chandran sontha veetil aachi petrar,shani (7&8 owner ) 6il ullar,yes agalama ayya?

VANI says:

VANAGAM SIR

ENN RASI RISABAM ROKINI ENNAL VEDU VANGA MUDIYUMA

S Murugesan says:

அம்மா !
வெறுமனே ராசி/நட்சத்திரத்தை வச்செல்லாம் இதை சொல்லிர முடியாது .ஆனால் ஒரு மேட்டர சொல்றேன். 2017,ஜன,26 க்கு மேல அஷ்டம சனி ஆரம்பம். அப்போ தூசும்/தும்புமா/கல்லு/மண்ணு/சிமெண்டோட அவதிபடனும்.

ஆகவே அந்த கால கட்டத்துல வீடு கட்டறது /ரீ மாடல் பண்றது மாதிரி எதுனா நடக்கலாம்.

S Murugesan says:

வாங்க ஓம் பிரகாஷ் !
ம் ..மாசத்துல பாதி நாள் -வளர்பிறை நாட்கள்ள எஸ் ஆகலாம் .வளர்பிறையானாலும் தேய்பிறையானாலும் சந்திரபலம் உள்ள நாட்கள் பரவால்ல.

7-8 க்குடைய சனி ஆறில் இருப்பது ஆயுள் மேட்டர்ல ஓகே. ஆனால் காதலி/மனைவி மேட்டருக்கு நல்லதில்லை

ram says:

hello sir,
I was born in shasti tithi theipirai people told that u have lot of problems in life yes im not getting easy success eventhough i have good talent .is people born on shasti are unlucky and tell me the temple for shasti karthikeyan temple pls sir.

S Murugesan says:

வாங்க ராம் !
திதி,வாரம்,கரணம்,யோகம் ,நட்சத்திரம் இந்த அஞ்சும் சேர்ந்தது பஞ்சாங்கம். அஞ்சையும் கூட்டி கழிச்சு அனலைஸ் பண்ணனும் -உபரியா சந்திர பலம் பார்க்கனும் -உபரியா நியூமராலஜி வேற இருக்கு.

இத்தனையையும் அனலைஸ் பண்ணாதான் அந்த நாள் எப்படின்னு சொல்லமுடியும். (அந்த நாள்ள பிறந்தவன் எப்படி இருப்பான்னு சொல்லிர முடியாது)

ஒரு ஜாதகனோட வாழ்வை சொல்லனும்னா முழுமையான ஜாதகம், கிரக ஸ்திதி,பாவ பலம்,கிரக பலம் இப்படி 196 ஃபேக்டர்ஸை வச்சுத்தான் சொல்ல முடியும்.

சஷ்டியில பிறந்தவனுக்கெல்லாம் கஷ்டம்னா அது 24 மணி நேரம் இருக்கும். இந்தியால மட்டும் நிமிஷத்துக்கு 4 கொளந்தை பிறக்குதாம். அப்போ எத்தனை பேர் கஷ்டப்படனும்.ரோசிங்க.

இது உண்மையா இருந்திருந்தா இந்தியாவே திவால் ஆகியிருக்கும். இப்படி ஒரு அம்சத்தை வச்சு சொல்லிர்ர மேட்டரை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதிங்க.

அதே நேரத்துல உங்க ஜாதகத்துல ஆறாமிடம்,ஆறுக்குரியவர், அவர் நின்ற ராசி அவரோட சேர்ந்த கிரகங்கள் எல்லாத்தையும் கூட்டி கழிச்சு ஆருனா சொன்னா நம்பலாம்.

velmurugan says:

Hi sir,
I have doubt regarding badhakadhipathi ,badhakathipathi than sontha dasa kalangalili matum kastam kodupargala .for ex : sukran 4il acchi thulam ,11-guru rishapathil,sukra dasa il entha veedu athigama pathikkum ,surya dasa start aana sukran (4&11) palan kidaikkuma ayya?

S Murugesan says:

ஐயா !
பாதகாதிபதி மட்டுமே அல்ல எந்த கிரகமும் வாழ் நாள் முழுக்க பாதிப்பை தரும். சுக்கிரனை பொருத்தவரை உங்களுக்கு 30 வயது முடிந்த பிறகு பாதிப்பு குறையும்.சூரியதசை ஆரம்பித்து விட்டால் சூரியன் பிரதானமாக பலன் த்ருவார்.சுக்ரன் 4 ல் ஆட்சி என்றால் ..உங்க லக்னம் கடகமா? அல்லது கும்பமா?

velmurugan says:

kadaga lagnam entha matter lam damaga panuvaru ?

S Murugesan says:

வேல் முருகன் !
தாய் வீடு,வாகனம்,கல்வி,மூத்த சகோதர வர்கம்,கெண்டைக்கால் வகையில் பாதிப்பு வரலாம். பாதிப்புன்னா உங்கள் ஆடம்பரம்,எதிர்பால் மீதான ஈர்ப்பு ,வாழ்க்கைய அனுபவிக்கனும்ங்கற எண்ணத்தால் வரும் விளைவுகள் .

velmurugan says:

Vanakkam ayya,
Nandri ayya ! suya mariyathai ilentheten ayya ,two wheeler ,sontha veedu ,friends kooda illaaya .thai in anbu nandrakka irukuthu ayya .two wheeler loan la vangalama ayya .sukran astavarga -28,suya astvarga -5 points.

S Murugesan says:

வேல்முருகன் !
முதல்பதில் வேண்டாம் என்பதே. இன்னொரு பேச்சு சொல்ல்ங்கஜீன்னா ஃபைனான்ஸ் காரன் சீஸ் பண்ணி வச்ச வண்டி எதுனா கிடைக்குதா பாருங்க. அல்லது புதுசுதான் வேணம்னா பெண்கள் ஓட்டற வண்டியா வாங்கிக்கங்க.குறைஞ்ச விலையில .

Ariram V says:

Sir enakku Meena lagnam,Kadaka rasi( BOrn on 22-4-1991 at 5.24 am in Tirunelveli).Mercury in lagnam,Sun in 2nd house,venus (3 & 8 lord) in 3rd house,Mars & Kethu in 4th house,Moon & Guru in 5th house,Rahu in 10th house,Saturn in 11th house.Now I am studying MBA & doing share market in small level.I have an idea to serve people after my age of 35 years.venus has 35 paral in astavarkam and 7 paral in suyavarkam.Currently kethu dasha is running.And after age of 30 years venus dasha will be started.So my only one doubt is Can I earn Fame in economical(in Job or Business) and in social Service on my Venus dasha ? Thank you sir…..

S Murugesan says:

அரிராம் !
ரவீந்திர தாகூர் ரேஞ்சு ஜாதகம் உங்களோடது . எம்.பி.ஏ நல்ல சாய்ஸ். 6 க்குடையவர் ரெண்டுல இருக்கிறதால பேச்சு விஷயத்துல கொஞ்சம் யோசிச்சு -ரிகார்சல் பார்த்து பேஸினா போதும். மத்தபடி சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கு . சுக்கிர தசை முப்பது வயது முடிந்த பிறகு பெருசா எஃபெக்ட் பண்ணாது .உங்கள் எண்ணம் ஈடேறும்.

Ariram V says:

Very very thanks sir………

ramki says:

hello sir,
ayilium ,kettai,moolam ellam kanda nakshtra problems naraiya irukkuma ?nan ayilium nakshtra 4 pada ,budhan suryan udan sernthu 5il ullar .budhan sahayogi point il ullar .ayilium pathippu kuriyumma pariharam sollunga?

S Murugesan says:

ராம்கி !
ஏற்கெனவே முக நூல்ல சஷ்டி திதியில பிறந்தவிக பத்தி விளக்கம் கொடுத்திருக்கன்.அது அப்படியே உங்கள் பார்வைக்கு ..

திதி,வாரம்,கரணம்,யோகம் ,நட்சத்திரம் இந்த அஞ்சும் சேர்ந்தது பஞ்சாங்கம். அஞ்சையும் கூட்டி கழிச்சு அனலைஸ் பண்ணனும் -உபரியா சந்திர பலம் பார்க்கனும் -உபரியா நியூமராலஜி வேற இருக்கு.
இத்தனையையும் அனலைஸ் பண்ணாதான் அந்த நாள் எப்படின்னு சொல்லமுடியும். (அந்த நாள்ள பிறந்தவன் எப்படி இருப்பான்னு சொல்லிர முடியாது)
ஒரு ஜாதகனோட வாழ்வை சொல்லனும்னா முழுமையான ஜாதகம், கிரக ஸ்திதி,பாவ பலம்,கிரக பலம் இப்படி 196 ஃபேக்டர்ஸை வச்சுத்தான் சொல்ல முடியும்.
சஷ்டியில பிறந்தவனுக்கெல்லாம் கஷ்டம்னா அது 24 மணி நேரம் இருக்கும். இந்தியால மட்டும் நிமிஷத்துக்கு 4 கொளந்தை பிறக்குதாம். அப்போ எத்தனை பேர் கஷ்டப்படனும்.ரோசிங்க.

இது உண்மையா இருந்திருந்தா இந்தியாவே திவால் ஆகியிருக்கும். இப்படி ஒரு அம்சத்தை வச்சு சொல்லிர்ர மேட்டரை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதிங்க.

அதே நேரத்துல உங்க ஜாதகத்துலயும் பிரச்சினை இருந்தா பிரச்சினை வரலாம்.

ravi says:

Respected Sir,
im ravi my jathagam meena rasi ,dhanush lagnam ,3-guru+rahu,4-chandran,
7-shukran+shani,9-ketu,11-chevvai,12-suryan+budhan.ayya nan B.E Electronics Engineering padithriken engineering field la amayuma .Entha job set agum.foreign la settle agalama.

S Murugesan says:

ரவி !
ஜாதகத்துல பிரச்சினைகள் இருக்கு முக்கியமா பயணம்,வண்டி /வாகனம், பெண்கள் ,மனைவி/காதலி வகையில பிரச்சினைகள் இருக்கு.ஆனால் செவ் 11 ல் இருப்பதால் படிச்ச படிப்புக்கேத்த ஜாப் ஓகே.வெளி நாடு? ஏதோ சில வருசம்னா ஓகே.

Ravi says:

Respected Sir,
Thank u sir ,oru jathagar nee kalyanam panna piragu than onakku velai endrar sir,enakku kastama irukku sir,ethu sir nadakkum enakku marraige age sollunga ,epo enakku 27 nadakathu sir.

S Murugesan says:

ரவி !
உங்க ட்ரஸ் அப்,ஆட்டியூட்லாம் பார்த்து தம்பி ரெம்ப காஞ்சி கிடக்கு -எதுலயும் மனசு வைக்கமுடியாம இருக்கு.கண்ணாலம் கட்டி சூடாறினாத்தான் கான்சன்ட்ரேஷன் பண்ணமுடியும்னு அந்த சோசியர் கெஸ் பண்ணி சொன்னாப்ல இருக்கு. அதை எல்லாம் மனசுல வச்சுக்காம ஒர்க் அவுட் பண்ணுங்க.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *