காலமாற்றமும் -கிரகபலனும் : 7 ஆம் பாவம் ( 5 ஆம் பகுதி)

Mobile house

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றமும் கிரக பலனும் தொடர்ல -ஏழாம் பாவம் பத்தி சொல்லிக்கிட்டு வந்தம் ஹிட்ஸு ஒரே தூக்கா தூக்கிருச்சா ( சாஸ்தி இல்லிங்ணா 1266 தேன்) திஷ்டி ஆயிருச்சு . இந்த ஏழாம் பாவ மேட்டர் 4 சாப்டர் ஓடியும் இன்னம் முடியல. இது 5 ஆவது சாப்டர்.

கடந்த பதிவுல புருசன் பொஞ்சாதி மேட்டர்ல சூரியன் அந்த காலத்துல எப்டி வேலை செய்தாரு இந்த காலத்துல எப்டி வேலை செய்றாருன்னு கோடி காட்டியிருந்தன். அதை மிஸ் பண்ணவிக இங்கே ஒரு அமுக்கு அமுக்கி படிச்சுருங்க.

இதே போல மத்த எட்டுகிரகத்துக்கும் கோடி காட்ட ஆரம்பிச்சா இந்த தொடர் ரெம்ப இழுத்துரும். ஆகவே இந்த 7 ஆம் பாவ மேட்டர்ல எப்டி ஜகா வாங்கறதுன்னு பார்த்துரலாம். அடுத்து எட்டாம் பாவத்துக்கு போயிரலாம்.

மொதல்ல உங்க மனைவி/காதலி எந்த கிரகத்தோட காரகத்துல இருக்காய்ங்கன்னு பார்த்துரனும் -அடுத்து அந்த கிரகம் உங்க விஷயத்துல அனுகூலமா இருக்கான்னு பார்த்துரனும்.அனுகூலமாவே இருந்தாலும் அடக்கி வாசிக்கனும்.பிரதி கூலமா இருந்தா சொல்லவே தேவையில்லை .மம்மி மிந்தி மந்திரிங்க கணக்கா ஆயிரனும்.அல்லது நான் சொல்ற பரிகாரங்களை ஃபாலோ பண்ணிக்கனும்.

SA

1.சூரிய பெண்கள்:
முகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.

பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.

தேன் நிற விழிகள் , செம்பட்டை கூந்தல் ,ஒல்லியான தேகம் , அவிக குடும்பத்துக்கு கிராமாதிபத்யம் இருக்கலாம்.

ஹார்ட் ஆஃப் தி டவுன் /புதிய காலனியில் முதல் வீடு/ குக்கிராமத்துல இவிக சாதியை சேர்ந்த குடும்பம் வேறு எதுவும் இருக்காது.

இவிக மேட்டர்ல 1 என்ற எண் விளையாடும். ஒரே பெண்ணா இருக்கலாம். பவர் க்ளாஸ் அணியலாம்.

SA1

சூரியபலம்:
உங்க ஜாதகத்துல சூரிய பலம் இருந்தா மேற்படி லட்சணங்கள் கொண்ட சூரிய காரக பெண்ணால எந்த பிரச்சினையும் வராது . இல்லின்னா செம நாஸ்திதான். உ.ம் ஈகோ மோதல்கள் -ஆலமரத்தடி பஞ்சாயத்து -ஏரியா கவுன்சிலர் பஞ்சாயத்துன்னு நாயடி . அடி தடில பல்லு போயிரும்.ஃப்ராக்சர் ஆயிரும்.

உங்க ஜாதகத்துல சூரிய பலம் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள்.உங்க பல் எந்த கருமம் பிடிச்ச பேஸ்டையும் தேடி ஓடாமயே ஃபிட்டா இருக்கும். தலைவலி/தலையில அடிபடறதுல்லாம் இருக்காது . ஜாய்ன்ட் பெய்ன்,ஃப்ராக்சர்னு எதுவும் இருக்காது .பேக் பெய்ன்லாம் வரவே வராது .

ஹய்யய்யோ இந்த பிரச்சினை எல்லாமே இருக்கு பாஸ் ! அப்போ பொஞ்சாதி மேட்டர்ல பல்பு தானான்னு டீலாயிராதிங்க. ஆரோ ஒரு பார்ட்டி கமெண்ட்ல பரிகாரம் கேட்பாய்ங்க. சொல்லிர்ரன். ஃபாலோ பண்ணிக்கிட்டா ஜமாளிச்சுரலாம்.

2.சந்திர பெண்கள்:

ஒருவித குளுமை ( இவிக மனசுலயும் இருக்கும் -இவிக கிட்ட கொஞ்ச நேரம் பேசினா அது நமக்குள்ளயும் பரவும்) , தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும்)

தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும்.

எவரேனும் ஏற்கெனவே போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம்.

தன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் தாய்மை நிரம்பிய குணம். மதர்லி நேச்சர்.

SA2

சந்திரபலம்:
உங்க ஜாதகத்துல சந்திர பலம் இருந்தா மேற்படி லட்சணங்கள் கொண்ட சந்திர காரக பெண்ணால எந்த பிரச்சினையும் வராது . இல்லின்னா செம நாஸ்திதான். உ.ம் டெப்ரஷன், ஸ்ட்ரெஸ், செல்ஃப் பிட்டி இப்படி நாற வேண்டியதுதான். தண்ணி லாரி காரன் கூட பஞ்சாயத்து பண்றேன்னு என்டர் ஆயிருவான்.

உங்க ஜாதகத்துல சந்திர பலம் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள்.உங்களுக்கு மனம்,நுரையீரல்,சிறு நீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்காது .இப்படியா கொத்த பிரச்சினைகளை கொண்டு வர்ர பழக்க வழக்கங்கள் இருக்காது .

ஹய்யய்யோ இந்த பிரச்சினை எல்லாமே இருக்கு பாஸ் ! அப்போ பொஞ்சாதி மேட்டர்ல பல்பு தானான்னு டீலாயிராதிங்க. ஆரோ ஒரு பார்ட்டி கமெண்ட்ல பரிகாரம் கேட்பாய்ங்க. சொல்லிர்ரன். ஃபாலோ பண்ணிக்கிட்டா ஜமாளிச்சுரலாம்.

3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.

நல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

நிதானம், லேசான முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.

தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.

செவ் பலம்:
உங்க ஜாதகத்துல செவ் பலம் இருந்தா மேற்படி லட்சணங்கள் கொண்ட செவ் காரக பெண்ணால எந்த பிரச்சினையும் வராது . இல்லின்னா செம நாஸ்திதான். உ.ம் போலீஸ் பஞ்சாயத்து,ரவுடி பஞ்சாயத்து ,தீக்குளிப்புக்கெல்லாம் வாய்ப்புண்டு .

உங்க ஜாதகத்துல செவ் பலம் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள்.உங்களுக்கு ரத்தம்,எரிச்சல்,கோபம்,உஷ்ணம்,கோபம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்காது .இப்படியா கொத்த பிரச்சினைகளை கொண்டு வர்ர பழக்க வழக்கங்கள் இருக்காது .

ஹய்யய்யோ இந்த பிரச்சினை எல்லாமே இருக்கு பாஸ் ! அப்போ பொஞ்சாதி மேட்டர்ல பல்பு தானான்னு டீலாயிராதிங்க. ஆரோ ஒரு பார்ட்டி கமெண்ட்ல பரிகாரம் கேட்பாய்ங்க. சொல்லிர்ரன். ஃபாலோ பண்ணிக்கிட்டா ஜமாளிச்சுரலாம்.

4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்.

ராகு பலம்:
உங்க ஜாதகத்துல ராகு பலம் இருந்தா மேற்படி லட்சணங்கள் கொண்ட ராகு காரக பெண்ணால எந்த பிரச்சினையும் வராது . இல்லின்னா செம நாஸ்திதான். உ.ம் ஆல்க்கஹாலிக் ஆயிருவிங்க, விசம் குடிச்சுருவிங்க, இல்லீகல் ரூட்லயாச்சும் பெருசா பணம் பார்த்துரனும்னு டைவர்ட் ஆயிருவிங்க.

உங்க ஜாதகத்துல ராகு பலம் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள்.உங்களுக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு ,அலர்ஜி,ஃபுட் பாய்சன்,மெடிக்கல் ரியாக்சன் மாதிரி பிரச்சினை இருக்காது .இப்படியா கொத்த பிரச்சினைகளை கொண்டு வர்ர பழக்க வழக்கங்கள் இருக்காது .

ஹய்யய்யோ இந்த பிரச்சினை எல்லாமே இருக்கு பாஸ் ! அப்போ பொஞ்சாதி மேட்டர்ல பல்பு தானான்னு டீலாயிராதிங்க. ஆரோ ஒரு பார்ட்டி கமெண்ட்ல பரிகாரம் கேட்பாய்ங்க. சொல்லிர்ரன். ஃபாலோ பண்ணிக்கிட்டா ஜமாளிச்சுரலாம்.

5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.

குரு பலம்:
உங்க ஜாதகத்துல குரு பலம் இருந்தா மேற்படி லட்சணங்கள் கொண்ட குரு காரக பெண்ணால எந்த பிரச்சினையும் வராது . இல்லின்னா செம நாஸ்திதான். உ.ம் உங்க பேமென்டை உங்க பாஸ் பொஞ்சாதிய கூப்டு அவிக கையில கொடுக்கிறது , ஊர் பெரியமன்சங்க,அரசியல் வாதிங்க பூந்து பஞ்சாயத்து பண்றது ,லம்ப்சமா ஒரு அமவுண்டை கழட்டிக்கிட்டு பிரிச்சு உட்டுர்ரது கூட நடக்கலாம்.

உங்க ஜாதகத்துல குரு பலம் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள்.உங்களுக்கு பொன்,பொருள்,வயிறு,இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்காது .இப்படியா கொத்த பிரச்சினைகளை கொண்டு வர்ர பழக்க வழக்கங்கள் இருக்காது .

ஹய்யய்யோ இந்த பிரச்சினை எல்லாமே இருக்கு பாஸ் ! அப்போ பொஞ்சாதி மேட்டர்ல பல்பு தானான்னு டீலாயிராதிங்க. ஆரோ ஒரு பார்ட்டி கமெண்ட்ல பரிகாரம் கேட்பாய்ங்க. சொல்லிர்ரன். ஃபாலோ பண்ணிக்கிட்டா ஜமாளிச்சுரலாம்.

6.சனி தொடர்பான பெண்கள்:
நிறம் ஒரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாநிறமொரு சனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.

இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .

சனி பலம்:
உங்க ஜாதகத்துல சனி பலம் இருந்தா மேற்படி லட்சணங்கள் கொண்ட சனி காரக பெண்ணால எந்த பிரச்சினையும் வராது . இல்லின்னா செம நாஸ்திதான். உ.ம் ரா முழுக்க ஸ்டேஷன் பெஞ்சுல இருக்கவேண்டி வர்ரது செயிலுக்கு போறது

உங்க ஜாதகத்துல சனி பலம் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள்.உங்களுக்கு கால்,நரம்பு,ஆசனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்காது .இப்படியா கொத்த பிரச்சினைகளை கொண்டு வர்ர பழக்க வழக்கங்கள் இருக்காது .

ஹய்யய்யோ இந்த பிரச்சினை எல்லாமே இருக்கு பாஸ் ! அப்போ பொஞ்சாதி மேட்டர்ல பல்பு தானான்னு டீலாயிராதிங்க. ஆரோ ஒரு பார்ட்டி கமெண்ட்ல பரிகாரம் கேட்பாய்ங்க. சொல்லிர்ரன். ஃபாலோ பண்ணிக்கிட்டா ஜமாளிச்சுரலாம்.

7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
புத பலம்:
உங்க ஜாதகத்துல புத பலம் இருந்தா மேற்படி லட்சணங்கள் கொண்ட புத காரக பெண்ணால எந்த பிரச்சினையும் வராது . இல்லின்னா செம நாஸ்திதான். உ.ம் தாய்மாமனே வில்லங்கம் பண்ணிர்ரது , மீடியேட்டர்ஸ் பிரச்சினைய காம்ப்ளிக்கேட் பண்ணிர்ரது .முனுக்குன்னா நோட்டீஸ் விட்டுர்ரது இத்யாதி நடக்கலாம்.

உங்க ஜாதகத்துல புத பலம் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள்.உங்களுக்கு தோல்,கீல்,அண்டம் (டெஸ்டிக்கிள்ஸ்) சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்காது .இப்படியா கொத்த பிரச்சினைகளை கொண்டு வர்ர பழக்க வழக்கங்கள் இருக்காது .

ஹய்யய்யோ இந்த பிரச்சினை எல்லாமே இருக்கு பாஸ் ! அப்போ பொஞ்சாதி மேட்டர்ல பல்பு தானான்னு டீலாயிராதிங்க. ஆரோ ஒரு பார்ட்டி கமெண்ட்ல பரிகாரம் கேட்பாய்ங்க. சொல்லிர்ரன். ஃபாலோ பண்ணிக்கிட்டா ஜமாளிச்சுரலாம்.

8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 7 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
கேது பலம்:
உங்க ஜாதகத்துல கேது பலம் இருந்தா மேற்படி லட்சணங்கள் கொண்ட கேது காரக பெண்ணால எந்த பிரச்சினையும் வராது . இல்லின்னா செம நாஸ்திதான். உ.ம் லாஜிக்கே இல்லாம முட்டிக்கிறது – மூனாவது ஆள் மேட்டர்ல சம்பந்தமே இல்லாம நீயா நானான்னு கடிச்சு குதறிக்கிறது .

உங்க ஜாதகத்துல கேது பலம் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள்.உங்களுக்கு மதம் -ஆன்மீகம் ரெண்டுத்துக்கும் இடையிலான வித்யாசம் பளிச்சுன்னு தெரியும். உங்களு க்குன்னு ஒரு ஃபிலாசஃபி இருக்கும்.

நாம உலகத்துல இருக்கலாம் -உலகம் நமக்குள்ள இருக்க கூடாது மாதிரி க்ளியர் கட் ஐடியாஸ் இருக்கும். மந்திரம்/தந்திரம்/சாமியார்னா ஜொள்ளு விடமாட்டிங்க. எது நம்ம பிரச்சினை -எது நமக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைங்கற தெளிவு இருக்கும். நான் சொன்ன மேற்படி ஐட்டங்க உங்க லைஃப்ல இல்லின்னா கேது பல்பு வாங்கியிருக்காருன்னு அருத்தம்.

ஹய்யய்யோ இந்த க்வாலிட்டிஸ் ஒன்னு கூட நம்ம கிட்டே இல்லையே பாஸ் ! அப்போ பொஞ்சாதி மேட்டர்ல பல்பு தானான்னு டீலாயிராதிங்க. ஆரோ ஒரு பார்ட்டி கமெண்ட்ல பரிகாரம் கேட்பாய்ங்க. சொல்லிர்ரன். ஃபாலோ பண்ணிக்கிட்டா ஜமாளிச்சுரலாம்.

9.சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு
சுக்கிர பலம்:
உங்க ஜாதகத்துல சுக்கிர பலம் இருந்தா மேற்படி லட்சணங்கள் கொண்ட சுக்கிர காரக பெண்ணால எந்த பிரச்சினையும் வராது . இல்லின்னா செம நாஸ்திதான். உ.ம் சொப்பன ஸ்கலிதம் துரித ஸ்கலிதம், ஆண்மை குறைவு , ஆண்மை இழப்பு , கண்ட நேரத்துல மூட் கிளம்பறது /அல்லது சுத்தமா அந்த எண்ணமே இல்லாம போயிர்ரது நடக்கலாம்.இதுவே பிரிவுக்கும் வழி வகுக்கலாம்.

உங்க ஜாதகத்துல சுக்கிர பலம் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள்.உங்களுக்கு மேற்சொன்ன பிரச்சினைகள் இருக்காது . குறிப்பா ஃபேன்சி,லக்சரி ,செக்ஸ், சொந்த வீடு ,சொந்த வாகனம் இத்யாதிக்கு அலையவே மாட்டிங்க.ஆனால் எல்லாமே அசால்ட்டா சரியான நேரத்துல கிடைச்சிருக்கும். உங்க லைஃப்ல இதுக்கு மாறா எல்லாமே நடந்திருந்தா சுக்கிரன் பல்பு வாங்கியிருக்காருன்னு அருத்தம் .

ஹய்யய்யோ இந்த பிரச்சினை எல்லாமே இருக்கு பாஸ் ! அப்போ பொஞ்சாதி மேட்டர்ல பல்பு தானான்னு டீலாயிராதிங்க. ஆரோ ஒரு பார்ட்டி கமெண்ட்ல பரிகாரம் கேட்பாய்ங்க. சொல்லிர்ரன். ஃபாலோ பண்ணிக்கிட்டா ஜமாளிச்சுரலாம்.

ஸ்..அப்பாடா.. ஒரு வழியா 7 ஆம் பாவத்தை பைசல் பண்ணிட்டம். அடுத்தது எட்டாம் பாவம் . காலமாற்றத்தால இந்த எட்டாம் பாவம் தரும் பலன் எப்படி மாறியிருக்குன்னு அடுத்த பதிவுல பார்ப்பம்.

8 Replies to “காலமாற்றமும் -கிரகபலனும் : 7 ஆம் பாவம் ( 5 ஆம் பகுதி)”

anbu

14/11/2015 at 5:34 pm

//அப்போ பொஞ்சாதி மேட்டர்ல பல்பு தானான்னு டீலாயிராதிங்க. ஆரோ ஒரு பார்ட்டி கமெண்ட்ல பரிகாரம் கேட்பாய்ங்க. சொல்லிர்ரன். ஃபாலோ பண்ணிக்கிட்டா ஜமாளிச்சுரலாம்.//
அய்யா பரிகாரம்??!!

Reply

  S Murugesan

  14/11/2015 at 10:14 pm

  வாங்க அன்பு !

  ஃபர்னிச்சர்,டூ வீலர், ஃபேன்சி,காஸ்மெட்டிக்ஸ் சர்க்கரை தவிர்த்து 48 நாட்கள் ஸ்ரீம் என்ற பீஜத்தை ஜெபியுங்கள்.முக்கியமா மேட்டர் செட்டில் ஆறவரை கில்மா மேட்டர்ல அடக்கி வாசிங்க.

  அடுத்த கமெண்ட்ல உங்க பர்த் டீட்டெய்ல் கொடுத்திருக்கிங்க. 9-8 காம்பினேஷன் வருது .ஒரு முறை ரத்த தானம் கொடுங்க. சூப்பர் அல்ட்டிமேட் ரெமிடி.லைஃப்ல உள்ள டென்ஷன்ஸ் எல்லாம் கழுவி விட்டமாதிரி போயிரும்.

  Reply

Thanigaivel

17/09/2015 at 12:16 pm

ஐயா வணக்கம்,

தாரம்(மனைவி/கணவன்) எத்தனை என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

தணிகைவேல்.ம

Reply

  S Murugesan

  23/09/2015 at 10:49 am

  வாங்க தணிகை வேல் !
  பொதுவிதி என்னன்னா 7 ஆம் பாவம்,லக்னம் ஆகிய பாவங்களில் எத்தனை கிரகங்கள் இருந்தால் அத்தனை தாரம். 7 ஆம் பாவாதிபதியோடு எத்தனை கிரகம் சேர்ந்தால் அத்தனை தாரம்.

  கொஞ்சம் லாஜிக்கலா யோசிச்சா எத்தனை கிரகங்கறது முக்கியமில்லை .அவற்றில் எது டாமினன்டா இருக்குங்கறது முக்கியம்.உ.ம் சந்திரன்,செவ்,குரு,சனி,சுக்கிர கிரகங்களோடு சூரியன் சேர்ந்தால் இவர்கள் பலம் குறையும்.சூரியனோடு புதன் சேர்ந்தால் சூரிய பலம் குறையும். எந்த கிரகத்தோடும் ராகு/கேது சேர்ந்தால் அந்த கிரகங்களின் பலம் குறையும்.

  சூட்சுமமா பார்த்து எத்தனை கிரகம் டாமினன்டா இருக்கு /எந்த கிரகம் டாமினன்டா இருக்குன்னு பார்க்கோனம்.அனுபவத்துல டாமினன்டா இருக்கக்கூடிய கிரகங்களின் காரகங்கள் ஒரு சேர அமைந்த ஒரே தாரம் அமையலாம்.

  உ.ம் நம்முது கடகலக்னம். லக்னத்துல சூ/கு/புதன் சேர்ந்து இருக்காய்ங்க. 7 ஐ பார்க்கிறாய்ங்க. 7 க்குடையவர் சனி . மொதல்ல ஒரு கருங்குயில் (சனி) ஊரே சேர்ந்து பிரிச்சாச்சு .

  பிறவு பிராமண லட்சணம் (குரு) ,பயங்கர கேல்க்குலேட்டிவ் (புதன்) ஆன வன்னியர் குல மாது (சூ)

  ரகசியம்: எவன் ஜாதகத்துல சுக்ரன் நல்லாருக்காரோ அவனுக்கு ஒன்னுதேன். சுக்ரன் பல்பு வாங்கியிருந்தாதான் 1+

  Reply

A .S. Kumar

17/09/2015 at 9:16 am

வாங்க குமார் !
சனி செவ் பார்வை இருந்தாலோ – சனி செவ் சேர்ந்து ஒரு பாவத்தை பார்த்தாலோ ( 3,6,10,11 தவிர) அந்த பாவ காரகம் கொண்ட உறுப்பில்/பகுதியில் அ.சி நடக்க அதிகம் வாய்ப்புள்ளது. எனவே சனி செவ் தசா புக்திகள், இருவரும் ஒரு சேர பார்க்கும் பாவ ஸ்தித கிரகங்கள்/அந்த பாவாதிகளின் தசா புக்தி காலங்களில் அ.சி நடக்க வாய்ப்புண்டு.

***********************************************************************
வணக்கம் அண்ணே,

இப்பதான் அ.சி முடிச்சிட்டு வந்து இருக்கேன்.17‍/9/2015 இல் உங்க பதில பார்த்தேன். ஜாதக நோட்ட பார்த்த பிறகுதான் தெரிஞ்சது செவ்வாய் புத்தி முடிய இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.

ரொம்ப நன்றி அண்ணே.

Reply

  S Murugesan

  17/09/2015 at 3:49 pm

  வாங்க குமார் !
  நீங்க கேட்கலின்னாலும் சொல்றேன். சனத்துக்கும் உபயோகப்படும்ல. சனி செவ் ஒரு சேர பார்க்கும் /சேர்க்கை ( 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருந்தால் -அ.சிக்கு வாய்ப்புண்டுங்கறது ஏற்கெனவே சொன்னதுதான்.

  இதுக்கு பரிகாரம்:

  சனி/செவ் கிழமைகளில் அசைவ விருந்து ஏற்பாடு செய்றது.

  Reply

S Muthukumar

15/09/2015 at 9:45 am

மிக மிக அருமையான பதிவு. நன்றி

Reply

  S Murugesan

  15/09/2015 at 11:29 am

  வாங்க முத்துக்குமார் !
  மிக்க நன்றி . இந்த 7 ஆம் பாவத்தை இந்த பதிவோட ஏறக்கட்டிரனும். ஆரு என்ன சந்தேகம்/பரிகாரம் கேட்டாலும் உடனுக்குடனே பைசல் பண்ணிர்ரன்.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *