ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் (76-100)

Rewrapr

அண்ணே வணக்கம்ணே !
முன்னொரு காலத்துல நாம உதிரியா எழுதி பதிவிட்ட சமாசாரம் இந்த சத நாமாவளி விளக்கம். இதை நண்பர் திரு.சொக்கலிங்கம் ராம நாதன் தொகுத்து அனுப்ப – மீள் பார்வை செய்து -பதிவுகளா போட்டுக்கிட்டிருக்கம்.

ஏற்கெனவே 1-75 நாமாக்களுக்கு விளக்கம் கொடுத்தாச்சு. இனி 76 -100 நாமாக்களுக்கான விளக்கம் இதோ ! ஒரு வேளை நீங்க கடந்த பதிவுகளை படிக்காமல் விட்ட குறை தொட்ட குறையா இந்த பதிவை எட்டிப்பார்த்த பார்ட்டியா இருந்தா மொதல்ல இந்த நாமா- நாமி அருமை பெருமைகளை இங்கே அழுத்தி படிச்சுட்டு பிறவு இந்த பதிவை படிச்சிங்கன்னா பெட்டர்.

76.சிவானந்த சாகராயை
சிவனோடு இணைந்திருத்தல் ஆனந்தம். அந்த ஆனந்தம் கடல் போன்றது. அந்த சிவானந்த சாகரமாகவே /கடலாகவே இருப்பவள் அவள்.
77.சிவமானச ஹம்சின்யை
சிவனோட மனசுல இருக்கிற அன்னப்பறவை. ( பாலோட தண்ணிய சேர்த்து வச்சாலும் அதை பிரிச்சு பாலை மட்டும் குடிச்சுட்டு தண்ணிய விட்டுர்ர பறவை அன்னம்)
இதை கொஞ்சம் லிபரலா பார்த்து அர்த்தம் சொன்னா இந்த உலகத்துல உள்ள ஒவ்வொரு ஆணும் சிவன். அவன் மனசுல நின்னு கொஞ்சமாச்சும் நல்லது கெட்டதை பிரிச்சு பார்க்க உதவறது ஒரு பெண் தான். (அது அவன் அம்மாவா இருந்தாலும் சரி ,மனைவியா இருந்தாலும் சரி,சகோதிரியா இருந்தாலும் சரி) . ஒரு ஆணின் வாழ்வில் மனதில் பெண்ணே இல்லின்னா அவனால நல்லது கெட்டதை பிரிச்சு அறியவே முடியாம கூட போயிரலாம்.
78.சகல சௌபாக்ய ப்ரதாயை
எல்லா வளங்களையும் தருபவள்

79. சர்வ ஜன வசங்கர்யை நம :
சங்கரன் -சங்கரின்னதும் பட படன்னு கன்னத்துல போட்டுக்கற சனம் இன்னம் இருக்கு. சம்ஹாரம்னா என்ன? போட்டு தள்றது . சம்ஹாரத்தை செய்றவ சம்ஹாரி – இது சங்கரின்னு மருவி வந்திருக்கலாம். சங்கராங்கறது சங்கரிங்கற வார்த்தைக்கு ஆண்பால். ஆத்தா எல்லாத்தையும் சம்ஹாரம் பண்றவதானே.
காந்தி-கோட்ஸேங்கற வித்யாசமெல்லாம் அவளுக்கு ஏது? இந்த சம்ஹாரம்ங்கற வார்த்தையை கவனிங்க.

ஹாரம் = மாலை /சம் = சரியான/சிறந்த .

புனரபி மரணம் புனரபி ஜனனம். ஒவ்வொரு மனிதனின் முன்/பின் பிறவிகளும் ஒரு மாலை மாதிரிதானே (ஹாரம்) இந்த மாலை பர்ஃபெக்டா அமையனும்னு ஆத்தா செய்றதுதான் சம்ஹாரம். ஜபமாலையை உருட்டி ஜபம் பண்ணும் போது மணிகளை தள்ளி விடறமே அந்த ப்ராசஸ் தான். அங்கே மணி -இங்கே பிறவிகள். அங்கே தலைமணியை நோக்கி பயணம். இங்கே முக்தியை நோக்கி பயணம்.
வெறுமனே சங்கரின்னா இதெல்லாம் ஓகே. வசங்கரிங்கறாங்களே.

சங்கரிக்கும் வசங்கரிக்கும் என்ன வித்யாசம்? வசமாக்கி கொள்பவள் வசங்கரி. நாம அவள் வசமாகனும்னா நமக்குள்ளே ஈகோ இருக்கப்படாது . நாம அவள் வசமாகனும்னா நம்ம ஈகோ சம்ஹரிக்கப்படனும்.

ஆத்மாவோட வாசனையே தெரியாத அபிஷ்டுகளா நாம இருக்கிறதால ஈகோவையே ஆத்மாவா/பிராணனா மதிமயங்கி வாழறோம். ஈகோ அடிப்பட்டா உசுரே போயிட்டாப்ல டீலாயிர்ரம்.

ஜஸ்ட் ஒரு நோஸ் கட் / ஜஸ்ட் ஒரு அவமானத்தை மரணமா நினைச்சு பேதியாயிர்ரம். ஆத்தா போட்டு தள்றது நம்ம ஈகோவ தான். ஈகோ போயாச்சுன்னா நாம அவள் வசம் ஆயிர்ரம்.

ஆக சகல சனங்களோட ஈகோவையும் போட்டு தள்ளி தன் வசமாக்கிக்கிறவ “சர்வ ஜன வசங்கர்யை ”

80.ஸ்வமந்த்ர ஃபல ப்ரதாயை
நாம ஜெபிக்கிற மந்திரங்களுக்குண்டான பலனை தருபவள் . மந்திரம்ங்கற வார்த்தைக்கு இன்னொரு அருத்தம் கூட இருக்கு. மந்திரம் =மாளிகை .மந்திரங்களால மந்திரம் எழுப்பறோம்(மாளிகை) அதுக்குண்டான பலன் என்ன? அவள் வந்து அதில் குடியேறுதல்.
நம்ம இதயம் – அது கசாப்பு கடையாவே இருந்தாலும் செரி / பசப்பாம பக்காவா அவளுக்காவ துடிச்சா அவள் வந்து குடியேறுவாள். நம்ம இதயம் அவளுக்கான மாளிகையா மாறிட்டா நாம உபயோகிக்கிற சாதாரண வார்த்தைகள் ஏன் கெட்ட வார்த்தைகள் கூட மந்திரமா வேலை செய்யும்ங்கறப்ப
அவளுக்காகவே நாம மந்திரங்களால் எழுப்பிய மாளிகையில அவள் குடியேற மாட்டாளா என்ன? அந்த மந்திரங்களுக்குண்டான பலனை தரமாட்டாளா என்ன?

81.சர்வாரிஷ்ட நாசின்யை
அரிஷ்டம்னா தரித்திரம்.ஏழ்மை. எல்லாவிதமான ஏழ்மையையும் அழிக்க வல்லவள். ஏழ்மையில எத்தனை விதம் இருக்கு தெரியுமா? சிலர் ஒரு சில வார்த்தைகளையே மறுபடி மறுபடி உபயோகிச்சு கடுப்படிப்பான். இது வார்த்தையில் ஏழ்மை .
சிலர் ஒரே கருத்தை மறுபடி மறுபடி சொல்லிட்டே இருப்பான். இது கருத்து ஏழ்மை . கொள்கையே இல்லாம இருப்பான் அது ஒரு ஏழ்மை . நெஞ்சில் கருணையே இல்லாம இருப்பான்.இது ஒரு ஏழ்மை . இப்படி எல்லா ஏழ்மைகளையும் எரிச்சு நாசம் பண்ண கூடியவள் அவள்.

82.சர்வபாப ஹரிணி
ஹரி என்றால் பிடுங்குவது,பறிப்பது,திருடுவதுன்னு பல அர்த்தம் வருது. எல்லா பாவங்களையும் பிடுங்கி எறிபவள்
83.சர்வ சங்க்ஷோப பரிஹாராயை
சங்க்ஷோபம்னா கிரைசிஸ். பரிகாரம்னா சொல்யூஷன். எல்லா கிரைசிஸுக்கு ஒரு சொல்யூஷனை கொடுக்க வல்லவள்.
84.சர்வ ஸ்தம்பின்யை
எல்லாவற்றையும் நிறுத்தவல்லவள். நம்மை போட்டு தள்ள சுமோல புறப்பட்டா சுமோவை நிறுத்துவா. ரயில்ல புறப்பட்டா ரயிலை நிறுத்துவா.
85.சர்வதுக்க விமோசன்யை
எல்லா வித துக்கங்களுக்கும் விமோசனம் தரவல்லவள்.
86.சர்வ துஷ்ட பயங்கர்யை
துஷ்டனை கண்டால் தூர விலகுங்கறாய்ங்க. அந்த துஷ்டர்களே ஆத்தாவ பார்த்து விலகிருவாய்ங்க.ஏன்னா அவள் துஷ்டபயங்கரி .துஷ்டர்களுக்கு “வினோலாக்ஸ்” கொடுப்பவள்.

87.த்ரிவிக்ரம பத கிராந்தாயை
வாமன அவதாரம் கதை தெரியும்ல? மூனடி மண் கேட்டு விஸ்வரூபம் எடுத்துர்ராரு விஷ்ணு. அந்த வடிவத்துக்கு விக்கிரம அவதாரம்னு பேரு. அடிமுடி அறிய வொணா அண்ணாமலையோனேங்கறமே அதே செனேரியோ தான். ஆனால் அவள் அந்த விக்கிரமனின் பாதங்களை சொந்தமாக்கிக் கொண்டவள்.(அன்யா க்ராந்தம் -பிறருக்கு சொந்தமாகுதல்)

88.த்ரிகால ஞான ப்ரதாயை
காலங்கள் மூன்று. கடந்த காலம், நிகழ்காலம்,எதிர்காலம், இந்த முக்காலங்களையும் பற்றிய ஞானம் எல்லாருக்கும் இருந்தா உலக வாழ்க்கையில இத்தனை சிக்கல்களுக்கு இடமே இல்லை. உங்களுக்கு முக்காலம் பற்றிய அறிவு வேணம்னா இந்த சத நாமாவளியை பொருள் உணர்ந்து படிங்க.மனசுல நிறுத்துங்க.

முகமது அலி ஜின்னாவுக்கு லங் கேன்சர்ங்கற மேட்டர் அவருக்கு முன் கூட்டி தெரிஞ்சுருந்தா? இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வரப்போற மேட்டர் காமராஜாருக்கு தெரிஞ்சிருந்தா? மோடி தனக்கு ஆப்பு வைக்கப்போறாருன்னு அத்வானிக்கு தெரிஞ்சிருந்தா? அந்த திரிகால ஞானத்தை தர்ரவள் ஆத்தா.

89.துரிதா பஹாயை
துரிதா – சுறு சுறுப்பான பாஹூ = கை (இப்ப பாஹுபலின்னு ஒரு சினிமா வந்துச்சுல்ல) .சுறு சுறுப்பான கைகளை கொண்டவள்.

90.தேஜோ ப்ரதாயை
ராத்திரி நல்ல சரக்கா ஏத்திக்கிட்டு மறு நாள் பத்து மணி வரைக்கும் தூங்கி எழுந்தா முகம் களையா இருக்கும்(?)
இன்னைக்கு ராத்திரி ரெண்டுல ஒன்னு தீர்த்துரனும்யானிட்டு குப்தயோகி கணக்கா ராத்திரி முழுக்க ஜெபம்,தபம்னு செய்துகிட்டு இருந்தா முகம் “தேஜஸ்” ஆயிரும். இந்த தேஜசை தருபவள் அவள்.

பிரம்மச்சரியத்தால இந்த தேஜஸ் ஏற்படும்னு சொல்றாய்ங்க.ஆனால் இன்னைக்கிருக்கிற என்விரான்மென்ட்ல பிரம்மச்சரியம் சாத்தியமில்லை. அப்படியே சாத்தியமானாலும் சைக்கியாட் ரிஸ்ட் கிட்டே கன்சல்ட் பண்ணவேண்டி வந்துரும். இதனால தேஜசையும் -பிரம்மச்சரியத்தையும் போட்டு குழப்பிக்காதிங்க.
பிரம்மச்சரியம் சாத்தியமாகனும்னா கில்மா மேட்டர்ல ஒரு முங்கு முங்கி எந்திரிச்சு – எப்பவும் அவெய்லபிள்ங்கற நிலை இருக்க சொல்லோ டேக் அப் பண்ணனும்.

இந்தியில தேஜ்ங்கற வார்த்தைக்கு வேகம்னும் ஒரு அருத்தம் உண்டு .ஆக தேஜஸ்/வேகத்தை கொடுப்பவள்னு வச்சுக்கலாம்.

91.வைஷ்ணவ்யை
இருக்கிறது ஒரே சக்தி.அது தன்னை மூன்றா பிரிச்சு பார்வதி,சரஸ்வதி,லட்சுமியா வெளிப்படுத்திக்குது. லட்சுமிக்கு தான் வைஷ்ணவின்னு பேரு. விஷ்ணுவின் மனைவி வைஷ்ணவி.
92.விமலாயை
மலம் = கக்கா மட்டுமல்லிங்க /கழிவுன்னு சொல்லலாம். சக்கைன்னு சொல்லலாம். கரும்புல ஜூஸ் இருக்கு .ஆனால் சக்கையும் இருக்கு. ஆத்தா அப்டியில்ல எல்லாமே ஜூஸ் தான். மலா -என்ற இந்த வார்த்தையோட வி சேரும்போது எதிர்பதமாயிருது .
93.வித்யாயை
வித்யான்னா கல்வி. கல்விக்கடவுளான சரஸ்வதியை ஸ்ரீவித்யாங்கறம்.கல்விக்கடவுளான சரஸ்வதியாகவும் அவளே இருக்கிறாள்.

94.வாராஹி மாத்ரே
வராகம் = பன்றி , பன்றி முகத்தை உடையவள் வாராஹி. மறைந்திருக்கும் விஷயங்களை வெளிய கொண்டு வரனும்னா அதுக்கு வாராஹி அருள் தேவை. (உ.ம் எதிர்காலம்/ சனங்களோட சப் கான்ஷியஸ் )
//சித்தர்களின் வாக்குப்படி சப்த கன்னியர்கள் என்பவர்கள் ஆதி சக்தியின் தேவகணங்களாய் அவளது கோட்டைக்கு காவல் இருப்பவர்கள். மிக சூட்சுமமாக இருக்கும் இவர்கள் ஏழு பேரும் ஏழுவிதமான அம்சங்களை உடையவர்கள்.// நன்றி: தினகரன் ஆன்மிக மலர்

95..விசாலாக்ஷ்யை
அகன்ற விழிகளை கொண்டவள், விரிவான பார்வை கொண்டவள் . இவள் பார்வையில் ஆத்திகன் -நாத்திகன் /நெல்லவன் கெட்டவன்லாம் சமம் தான். அவனவன் கணக்கை பார்த்து பைசல் பண்ணிக்கிட்டே இருப்பா.
96.விஜய ப்ரதாயை
வெற்றியை தருபவள். வெற்றிங்கறது சிச்சுவேஷனை பொருத்து கச்சா முச்சான்னு மாறிரும்.உ.ம் கடந்த சட்டமன்ற தேர்தல்கள்ள மம்மி பெற்ற வெற்றி . அவள் நினைச்சா தோல்விகளும் வெற்றிகளாய் மாறும். அவள் கண்டுக்கலின்னா வெற்றிகளும் வெற்றா போயிரும்.
97.விஸ்வரூபிணி
இந்த படைப்பாகவே தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருப்பவளே. ஆத்துமணல் அள்றவன்,மலையை மொட்டை போடறவன்லாம் ஆத்தாவ சேதப்படுத்தறான்னு தான் அருத்தம்.
98.விஜய சாமுண்டேஸ்வர்யை
சண்டன்,சாமுண்டன் என்ற அரக்கர்களை சம்ஹரித்து வெற்றி செல்வியானவளே
99.யோகின்யை
சிவன் ஆதியோகின்னா அவனில் பேர் பாதியா இருக்கும் அவளும் யோகினி தானே
100.யத்ன கார்ய சித்திப்ரதாயை
முயன்ற காரியம் சித்தியடைய /வெற்றியடைய உதவுபவளே..(முயலாத காரியம் வெற்றியடைய வாய்ப்பேது)

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *