முதல்வருக்கு ரோசனை சொன்னா டாஸ்மாக் எம்.டி நன்றி சொல்றாரு

Thanks From Amma

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு லால் கிதாப் பரிகாரங்கள் , கால மாற்றம் கிரக பலன் ங்கற 2 தொடரையும் ஏக் தம்ல எளுதினப்பமே கொஞ்சம் கன்னுக்குட்டி உதைச்சது . இனி இந்த தொடர்களோடு நம்மை சைட்டும் கோவிந்தாவாகப் போகுதுங்கோ ! திருஷ்டியாயிருச்சுல்ல.

நாம ஐடியா அய்யாசாமிங்கறது உங்க எல்லாருக்கும் நெல்லாவே தெரியும். மோதிஜிக்கு ரோசனை அனுப்பி – அதை எல்லாம் பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கு கொடுத்து -தமிழ் எம்.பி,தெலுங்கு எம்பிக்களுக்குல்லாம் ஸ்பீக்கர் வழியா அனுப்பியிருக்கிற மேட்டரும் தெரியும்ல?

இதெல்லாம் சென்டர் லெவல். ஸ்டேட் லெவல்ல நம்ம தேச ,மானில கனவுகளை எல்லாம் 234 +234 பிரதிகள் தயாரிச்சு மொதல்ல தமிழக சட்ட மன்ற சபா நாயகருக்கும் ,பிறவு மம்மிக்கும் அனுப்பினம். கண்டுக்கல. முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பினம் .அவிக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஃபார்வார்ட் பண்ணாய்ங்க.

அது போயி சேருதோ இல்லியே நாமளும் அனுப்புவம்னு அனுப்பினம்.கண்டுக்கல. மம்மி செயில்ல இருந்தப்போ பரப்பண அக்கிரகாரா செயிலுக்கும் அனுப்பினம் கண்டுக்கல. வெளிய வந்த பிறவு கார்டனுக்கு அனுப்பினம் கண்டுக்கல.

ஈதிப்படியிருக்க 2015,ஏப்ரல் மாசத்துல ஏதோ ஒரு நாயி அம்மா டாஸ்மாக் வேலை நேரத்தை குறைக்க போறாய்ங்கன்னு கூவுச்சு . சின்னப்புள்ளத்தனமா அதை நம்பி .. முதல்வர் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பினம்.

அதன் சாரம் நாலே வரி தான். ” அம்மா ! மதுவிலக்குங்கற பாதையில மொத எட்டு எடுத்து வச்சிருக்கிங்க. நன்றி. இதனால ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை சனம் மேல பாரம் சுமத்தாம – ஈடு கட்ட பல ரோசனைகளை எல்லாம் பரப்பண அக்கிரகாரா செயிலுக்கும் அனுப்பினன். அது டெலிவரியும் ஆச்சு . பிறவு கார்டனுக்கும் அனுப்பினன். மேலும் அந்த கன்டென்ட் எல்லாம் கீழ் காணும் தொடுப்பிலும் இருக்கு .

இந்த மனுவை அனுப்பினது ஏப்ரல் மாசம் . மே ,ஜூன்,ஜூலை ,ஆகஸ்ட்னு மாசங்களே பறந்தது .ஒரே ஸ்டேட்டஸ் தான் உரிய அதிகாரிக்கு அனுப்பியிருக்கம்.

இன்னைக்கு ஏதோ பட்சி சொல்ல என்னாச்சுன்னு பார்த்தா ………… மனு அனுப்பப்பட்ட உரிய அதிகாரி ஆரு தெரீமா? “டாஸ்மாக் எம்.டி”.
அன்னார் என்ன சொல்லியிருக்காரு? கர்னாடகாவுக்கு அனுப்பின யோசனைகளுக்கு நன்றி . இங்கே தான் கன்ஃபீஸ் ஆகுது. கொய்யால தமிழ் நாட்டோட ஆட்சி அதிகாரம்லாம் முதல்வர் கையில இருக்கா? இல்லை டாஸ்மாக் எம்.டி கையில இருக்கா?

உங்களுக்கு தெரிஞ்சா விஜாரிச்சு சொல்லுங்க பாஸ் !

எச்சரிக்கை:
இந்த மாதிரி அச்சாணியமான பதிவெல்லாம் போட்டுக்கிட்டிருந்தா தொடர் தொடருமா? கோவிந்தா ஆகிருமா? சைட்டு வெளங்குமா? அதான் சொல்றேன் ..கோவிந்தா ! கோவிந்தா !!

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *