அப்துல் கலாம் -ஒரு ஜோதிட பார்வை

Jpeg
Jpeg

அண்ணே வணக்கம்ணே !
வேந்தர் டிவி -மூன்றாவது கண் நிகழ்ச்சியில பிரம்மங்காரு குறித்த நம்ம பேட்டி டெலிகாஸ்ட் ஆச்சா ? மறு நாள் இரவு தான் இந்த சைட் முடங்கிருச்சு.

செரி ..சனம் ஒரே தாட்டி அம்மினதால பேண்ட் விட்த் எதுனா எக்ஸீட் ஆயிருக்கும் விடியல்ல சரியாயிரும்னு அசால்ட்டா விட்டேன். மறு நாள் சென்னை செல்ல வேண்டியதாயிருச்சு. இடையில சில காலம் ஐடியா நெட் செட்டர் இருக்க சொல்லோ உள்ளூர் வெளியூர் ரெண்டும் ஒன்னுதேன். இப்பத்தேன் ப்ராட் பேண்டுக்கு மாறிட்டமா? மவளோட டாப்ல ப்ரவுசிங் பண்றது மூத்திர சந்துல ஜம்போ ஜெட் ஓட்டறாப்ல ரெம்ப குஷ்டமப்பா.

இன்னைக்குத்தேன் சரண் சாரை கான்டாக்ட் பண்ண முடிஞ்சது .சைட் ஓகே.ஆனால் 24 மணி நேர ட்ராஃபிக் போச்சே.அதை ஈடுகட்டனும்னா எதுனா அதிரடியா பதிவை போட்டாகனும். என்ன பண்ணலாம்னு ரோசிச்சப்பதான் அப்துல் கலாம் -ஒரு ஜோதிட பார்வைங்கற டைட்டில் ஸ்பார்க் ஆச்சு.

அப்ப மத்த பார்வை எல்லாம் ஆயிருச்சாம்பிங்க. எஸ்..பாஸ் ! திருமுருகன் காந்தி,தமிழச்சி போன்றவர்களை தவிர பலரும் கலாமை கடவுள்,இறைதூதர்,தேவ புருஷன்னு செம ஜல்லி.

ஒரு காலத்துல ரஜினிய கிளிச்சு நாம எழுதினப்போ ஆரோ சமூகத்தால அங்கீகரிக்கப்பட்டவிகளை விமர்சிக்கிறது ஒரு மனோ வியாதின்னு சொல்லியிருந்தாய்ங்க. சமூகம் வெர்சஸ் தனிமனிதன் ங்கற செனேரியோல ஏற்கெனவே ரோசிச்சு எழுதிட்டம்.அதன் சாரம் மட்டும் சொல்றேன்.

பொதுவாவே சமூகம் என்பது எப்பவும் 25 வருசம் ,கு.பட்சம் 10 வருசம் பின் தங்கித்தான் இருக்கும். ஏன்னா சமூகத்தை வழி நடத்தறவனோட இம்பாக்ட் அது. சனத்துல 90 சதம் எப்பவும் பின் தங்கியிருக்கும். அதனால அந்த 90 சதவீத கேஸ்ல இருந்துதான் வழி காட்டிகள் வருவாய்ங்க.அங்கீகரிக்க படுவாய்ங்க.

தற்போதைய சுடிதாரை ஒரு காலத்துல தேவடியா மாதிரி இருக்குன்னு சொன்ன சனம் இன்னமும் இருக்கலாம். குட்டிங்க சுடிதார் போட ஆசைப்பட்டு 10 வருசம் கழிச்சுதேன் அதை அனுமதிச்சிருப்பாய்ங்க. அவிக லெக்கின்ஸுக்கு மாறின பிறவு இப்போ இது என்னடி கருமம் இதை விட சுடிதாரே பெட்டருன்னிட்டிருப்பாய்ங்க .

கலாமை தூக்கி பிடிக்கிறவிக ரெண்டு க்ரூப் . ஒன்னு விசயமே தெரியாதவிக. ரெண்டு எல்லாம் தெரிஞ்சிருந்தும் தங்களோட எஸ்கேப்பிசத்துக்கு ஒரு ரோல் மாடல்ங்கற ஃபீலோட புகழ்ந்து பேசறவிக.

கலாம் எளிமையானவர் – அவிக புகழ காரணம். நான் என்ன சொல்றேன் முருகேசன் எளிமையா மட்டும் இருந்துரலாம்.ஆனால் ஒரு ஜனாதிபதி தான் மட்டும் எளிமையா இருந்தா போதாது (அது வெட்டி) அரசாங்கத்தையே எளிமைக்கு மாற்ற வாய்ப்பிருந்தும் அதை பயன் படுத்தலின்னா என்னா அருத்தம்?

கலாம் நேர்மையானவர் -அவிக புகழ இன்னொரு காரணம். நான் என்ன சொல்றேன் (மேற்படி பாராவ பாருங்க) ஒரு ஆச்சரியம் என்னடான்னா கலாம் ரெண்டாவது தபா ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்பட்டப்பவே கிளி கிளின்னு கிளிச்சுட்ட பார்ட்டி நாம . கூடங்குளம் மேட்டருக்கு பிறகும் கலாமை தூக்கி பிடிக்கிறவிகளை சத்தியமா புரியல பாஸ்.

செரி ஒளியட்டும் .மேட்டருக்கு வந்துர்ரன். அதாங்க ஜோதிட பார்வை . கலாமின் பிறந்த தேதி 15 / Oct / 1931 நேரம் 01 : 15 AM. கடகலக்னம் . லக்னத்துல குரு ( இவர் 6-9 க்கு அதிபதி) அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை பல உண்டாம். (லாஜிக் இல்லாத குட்னெஸ்) .

மூன்றாமிடத்துல 2+3/12+கேது .இரண்டுக்குரியவரும் கேதுவும் சேரும் போது அது 2/8 ல் ராகு கேது எஃபெக்டை கொடுத்துரும். (இளமையில் வறுமைக்கு இதான் காரணம் – லைம் லைட்டுக்கு வராதவரை சேஃப். குடும்பம் ஃபணால். (கண்ணாலமும் கட்டல -ஜனாதிபதி ஆன பிறவும் உறவுக்காரவிகன்னு ஒரு கூட்டம் வெளிச்சத்துக்கு வல்ல)

3+கேது காம்பினேஷன் மனோ தைரியத்தை கொடுத்திருக்கலாம். (2+கேது வறுமையை தந்தாலும் 3+கேது தான் விடாமுயற்சிக்கு பிறகு பொருளாதார மேம்பாட்டை தந்திருக்கு.ஆனாலும் இவர் எளிமையோ எளிமையா இருந்ததுதான் அதன் பின்னான வெற்றிகளுக்கு காரணமா இருந்திருக்கு. இம்பீச் ஆகாம காப்பாத்தினதும் இந்த எளிமை தான்.

கலைஞர் ஜாதகத்துல 2-8 ல் ராகு கேது இருந்தும் அவர் குடும்பத்தை பெருக்கிக்கிட்டே போனதால தான் செம நாஸ்தி.கலாம் லைஃப்ல பேசிக்கினே இருந்தாருங்கறாய்ங்க. அதுக்கு காரணம் 2+12 தான் காரணம் .பலன் ? பூஜ்ஜியம் தான்.

கொய்யா என் சாவுக்கு லீவ் விடாதிங்கடான்னு பன்னி பன்னி சொல்லியிருந்தாலும் ராமேஸ்வரத்துலயே கடை கண்ணிக்கு லீவ் விட்டு இழவுக்கு வந்தவிகளை இழவெடுத்திருக்காய்ங்க(தாக நீள்ளூ லேது) . 2+கேது தான் சிவதத்துவத்துல ஆராய்ச்சி பண்ணனும் – கூடங்குளம் சேஃப் இத்யாதி “தத்துவங்களுக்கு” காரணம்.

அடுத்து நாலாமிடத்துல சுக்+செவ் 4/11+5/10 .லக்னம் கடகமா இல்லாம இருந்திருந்தா காதல் கீதல்னு போயி நொந்திருப்பாரு. கடக லக்னங்கறதால சோறு தண்ணி கூட இல்லாம தொழில்ல மனம் குவிச்சு பெயர் புகழ். சுக்கிரன் பாதகாதிபதி ஆகவே புத்திரபாக்கியத்துக்கு ஆப்பு . இதுதான் அவமானங்களை கொஞ்சம் போல அவாய்ட் பண்ணி பெயர் புகழுக்கு இடம் கொடுத்திருக்கு.

லக்ன குரு ஒரு நாட்டுக்கே வழிகாட்டியா இருக்க கூடிய “சத்தா” வ கொடுத்திருந்தாலும் லக்னாதிபதி நீசம்ங்கறதால நான் மட்டும் எளிமையா இருப்பேன். நீங்க கொண்டாடுங்கனு விட்டுட்டாரு . நான் மட்டும் அகிம்சைய கடை பிடிப்பேன் -குசராத்துல நீங்க கசாப்பு பண்ணுங்கன்னு விட்டுட்டாரு . நான் மட்டும் நேர்மையா இருப்பேன் நீங்க சவப்பெட்டியில கூட ஊழல் பண்ணுங்கன்னு விட்டுட்டாரு.

ஒரு வேளை உ.வசப்பட்டு ஊரை திருத்தறேன்னு இறங்கியிருந்தா தேளை அடிச்சே கொன்னிருப்பாய்ங்க (ராசிய சொன்னேன்) .ஃபைனலா ராகு 9 ல் இருக்காரு. இவருக்கு சமசப்தகத்துல 3 ஆமிடத்தில் கேது. இவர் கொஞ்சம் தில்லு துரையா இருந்திருந்தா பாதுகாப்பு கேட்டு வெளி நாட்டுல தஞ்சம் புகுந்திருக்கனும் போல.ஆனால் அடக்கி வாசிச்சுட்டாரு பேண்டை உருவினப்ப கூட “கமுக்கமா” இருந்துட்டாரு (அமெரிக்க விமான நிலைய சோதனைய சொன்னேன்)

இத்தனை ஓட்டை இருந்தும் என் போன்றவர்களின் விமர்சனங்கள் கவனம் பெறாமல் சனம் தலைமேல வச்சு கொண்டாட காரணம் ஒன்னிருக்கு .அதான் அஷ்டமாதிபதியான சனி 6 ல் நின்றது . சனியே சப்தமாதிபதிங்கறதால சாகற வரை குவாலிஃபைட் பேச்சிலராவே இருக்க வேண்டி வந்துருச்சு. இவருக்கு ராகு தசையில சுக்ர புக்தி 10/Jul/2015 ல ஆரம்பம் . 10/Jul/2018 ல முடிவு.

ராகுவுக்கு ரெட்டையான கேது தன வாக்கு குடும்ப நேத்திராதிபதியான சூரியனோட சேர்ந்ததாலதான் (இது 2/8 ல் ராகு கேதுவுக்கு சமமான கிரக ஸ்திதி -வெட்டி விடற அமைப்பு) குண்டு வச்சு -உலக அரங்கத்துல இந்தியாவையே வெட்டி விட்டு இருட்டுல தள்ளிட்டாருங்கோ. வாக் ஸ்தானாதிபதி + கேது (இனி பேசப்படாது) குடும்ப ஸ்தானாதிபதி+கேது குடும்பத்தை பிரியனும்.

ஆனால் 24/Dec/2003 ல ஆரம்பிச்ச ராகு தசை தன் இரண்டாம் பகுதியில தான் இந்த வேலைய ஆரம்பிக்கனும்.கணக்கு போடுங்க 24/டிசம்பர்/2012 ல இதுக்கான வேலை ஆரம்பிச்சுருச்சு போல.
நெல்ல வேளையா 10/Jul/2015 ல சுக்கிர புக்தி ஆரம்பிச்சதுமே டிக்கெட் போட்டுட்டாரு. இல்லின்னா கண்ணால கிண்ணாலம் கட்டி செம ரவுசு பண்ணியிருப்பாரு போல.
அம்பேல் !

2 Replies to “அப்துல் கலாம் -ஒரு ஜோதிட பார்வை”

praveen

13/11/2017 at 12:42 am

ivaru kalyanam agama irundhadhe better ennathan guru 7 la parthalum sani 8th pakuraaru .kalyanam pannirundha sanyasi ayuruparu …. sadhikka pirandha jadhagam…

surkran -sevv inaivu manaivdiam adi vangum amaippu !!

Reply

Victor

01/08/2015 at 7:10 pm

அவருக்கும் காதல் தோல்வியாங்க??? அப்படியே என் காதல் ஜெயிக்குமானு பாருங்க

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.