Tags    

Categories  கிரகபலன் குரு பெயர்ச்சி 2015 கோசாரம்

குரு பலம் வந்தா என்ன ? போனா என்ன?

DSCN0256

அண்ணே வணக்கம்ணே !
ஜூலை 5 ஆம் தேதிக்குள்ள குரு பெயர்ச்சி பலன் போட்டே உடறேன். டவுட்டு வேணாம். இந்த பதிவை கூட அதற்கான முன்னோட்டமாவே வச்சுக்கங்க.

குரு நம்ம ராசிக்கு 2,5,7,9,11 பாவங்கள்ள வர்ரதை “குரு பலம் வந்துருச்சு”ன்னு சொல்வாய்ங்க. இது பொதுப்பலன் தான். குரு உங்க ராசிக்கு பாபியா இருந்து 6,8,12 ல வந்தா பலன் மாறும். ( ஆனால் இந்த இடம் அவருக்கு ஆட்சி/உச்ச வீடா இருக்கப்படாது) இதே போல தனுசு,மீனம்,கடக லக்னக்காரவிகளுக்கு அவரு ஜன்மத்துல வந்தாலும் எஸ் ஆயிரலாம். இந்த விதிகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

எல்லா விதிகளையும் அப்ளை பார்த்து குரு பலம் இருக்குன்னு சொல்ட்டாய்ங்க. அவரு நிற்கிற இடம்,பார்க்கிற இடம் ,அவர் பெற்ற ஆதிபத்யம் இத்யாதிய பொருத்து சிறப்பு பலன்லாம் சொல்லலாம். பொதுவா குருபலம் இருக்கிற காலத்துக்கும் -இல்லாத காலத்துக்கும் என்ன வித்யாசம்னு இந்த பதிவுல பார்க்கப்போறோம்.

ஏற்கெனவே ஒரு தடவை சனி பிடிக்கிறதுக்கு மிந்தி – சனி விலகுவதற்கு மிந்தின்னு ஒரு மெர்சலான பதிவு போட்டிருக்கம். அதை போல குரு மேட்டர்லயும் ஒரு பதிவு பண்ணலாம்னு ஒரு கெட்ட எண்ணம் வந்திருச்சு .அந்த எண்ணத்தை லேசா பட்டி பார்த்து குருபலம் இருந்தா என்ன? போனா என்னன்னு எழுதப்போறேன். (அடிக்கப்போறேன்)

குருபலம் இருந்தா:
1.டைம் மெயின்டெய்ன் பண்ண முடியும் ( நீங்க லேட்டா ஸ்டேஷனுக்கு போன ட்ரெயினும் லேட்டா இருக்கும்) ஆனால் லஞ்ச் மேட்டர்ல மட்டும் இது நடக்காது.
2.பைசா கூரைய பிச்சுக்கிட்டு கொட்டும்னு அடிச்சு சொல்ல முடியாது .ஆனால் வர்ர பைசா இன் டைம் வரும். Money Management னா என்னன்னு தெரியாதவிக கூட பக்காவா ப்ளான் பண்ணி செய்விங்க.குறைச்சலான காசுலயே நிறைவான பலன் கிடைக்கும்.
3.சொசைட்டியில மதிப்பு மருவாதி உள்ளவிக அறிமுகம் ஆக வாய்ப்பிருக்கும். அவியளால ஒன்னு ரெண்டு காரியம் கூட நடக்கும்.
4.என்னதான் அராத்து பேர்வழியா இருந்தாலும் உங்களையும் அறியாம கடவுள் பக்தி வந்துரும். மத,ஆன்மீக பெரியவா நீங்க கேட்காமயே நெல்ல வழி காட்டுவாய்ங்க.
5.பொஞ்சாதி,புள்ள குட்டி உங்க கொள்கைகளை ஏத்துக்கிறாய்ங்களோ இல்லையோ உங்க வேலைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பாய்ங்க.
6.உங்க பேச்சுக்கு மதிப்பு ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேத்தற சந்தர்ப்பம் ,சூழல் அமையும்.
7.அடகு வச்சிருந்த தங்க நகைய ரிலீஸ் பண்ணுவிங்க. புதுசா வாங்குவிங்க.
8.கடந்த கால உழைப்புக்கு ஒரு அங்கீகாரம்,பரிசு,பாராட்டுன்னு கிடைக்கும்.
9.பத்து,அஞ்சு வட்டியில மாட்டிக்கிட்டு அல்லாடினவிகளுக்கு வங்கிக்கடன் கிடைச்சு ரிலீஃப் கிடைக்கும்.
10.ரெம்ப நாளா தள்ளிப்போன நேர்த்திக்கடன் செலுத்தறது,தீர்த்த யாத்திரை மாதிரி போய் வர்ரதுல்லாம் கூட நடக்கும்.
11.வயிறு -இதயத்தின் செயல்பாடு சிறப்பா இருக்கும்.
12.சுபகாரியங்களுக்கு அழைப்புகள் அதிகமா வரும். நாலு இடம் போக வர இருப்பிங்க.நாள் போறதே தெரியாது.

குருபலம் போச்சுன்னா:
1.கொடுக்கல் வாங்கல்ல தேக்கம்
2.டைம் மெய்ன்டெய்ன் பண்ண முடியாது
3.பெரீ மன்சங்க அகாரணமா உங்களை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க
4.நீங்க 10 ரூவா வேலைக்கு 100 ரூ செலவழிக்க தயாரா இருந்தாலும் வேலை நடக்காது.
5.தங்க நகைய அடகு வைக்க வேண்டி வரலாம்,தொலைஞ்சு போகலாம்.காசு எண்ணி கொடுக்கும் போது சாஸ்தி கம்மி ஆகலாம்.
6.பைசா என்னமோ தாராளமா புரள்றாப்ல ஒரு ஃபீல் இருக்கும் .ஆரம்பத்துல புரளவும் செய்யும்.ஆனால் ஒரு ஆறு மாசம் கழிச்சு பார்த்தா பட்ஜெட்ல பெரிய வேட்டியே விழுந்திருக்கும், அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டி வரும்.
7.வயிறு இதயம் தொடர்பான கோளாறுகள் தலை காட்டும்.
8. நீங்க எவ்ள பெரிய ஆன்மீக செம்மலா இருந்தாலும் உங்க தெய்வ நம்பிக்கை லேசா நசிய ஆரம்பிக்கும்.உள்ளுக்குள்ள கன்னுக்குட்டி உதைக்க ஆரம்பிக்கும்.
9.லாஜிக்கே இல்லாம பொஞ்சாதி,புள்ளகுட்டி முரண்டு பிடிக்க ஆரம்பிப்பாய்ங்க.
10.உங்க வட்டத்துல உங்களை ஹீரோவா கொண்டாடின பார்ட்டிங்க கூட முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு கூட உங்களை இன்வைட் பண்ண மறந்துருவாய்ங்க.
11.நேர்த்திக்கடன், கோவில் குளம்னு போறதுல்லாம் தள்ளிப்போகும்.
12.மாடா உழைச்சாலும் வேலை முடியாது.முடிஞ்சாலும் நொட்டை சொல்லிட்டு போயிருவாய்ங்க.

print

4,894 total views, 5 views today

S Murugesan
சரவணன் says:

குரு பலம் போச்சுன்னா உள்ள சிக்னல் ஒண்ணு ரெண்டு இல்ல… எல்லாமே எனக்கு இருக்கு… (செத்தாண்டா சரவணன்.)

siva kumar says:

லக்னத்துக்கு 4 இல் குரு இருந்தால் பாபியா சுபரா bro ?

S Murugesan says:

Welcome Siva Kumar !
லக்னம் எதுன்னு சொல்லலிங்களே ! குரு சுபகிரகம். 4 என்பது கேந்திரஸ்தானம். இது பாவிகளுக்கு பெஸ்ட் .சுபர்களுக்கு பெட்டர். லக்னாத் பாபியா இருந்து 4 ல் இருந்தால் பெஸ்ட். சுபரா இருந்து 4 ல் இருந்தா பெட்டர்.

[…] ஆண்குழந்தைக்கு வாய்ப்பிருக்காதே தவிர குழந்தை பாக்கியம் கிட்டும். மேலும் பொதுவாக குரு அனுகூலமானால் கிடைக்க கூடிய நல்ல பலன் களும் கிடைக்கும். […]

chandhrsekar says:

சார் எனக்கு மிதுனலக்கனம் 4ல் குரு (வ) சனி சிம்மராசி 2ல் ராகு 8கேது 11ல் சூ சு பு செ குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்

S Murugesan says:

வாங்க சந்திரசேகர் !
கோசாரம் என்பது ராசிக்கு தான் பார்க்கனும். சிம்மராசிக்கான குருப்பெயர்ச்சி பலன் விரைவில் வரும். (மிதுனம்,கடகம்லாம் முடிஞ்ச பிறவு தானே சிம்மம்) ப்ளீஸ் வெய்ட்.

[…] தனிப்பதிவுல விரிவா அலசியிருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க ப்ளீஸ் […]

[…] தனிப்பதிவுல விரிவா அலசியிருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க ப்ளீஸ் […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *