காலமாற்றமும் -கிரக பலனும்: 5

20150610_221406

அண்ணே வணக்கம்ணே !
காலம் மாறியது .காட்சி மாறியது.கிரக பலன் மட்டும் மாறாதா என்ன? இந்த கேள்வியோட இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல நாலாம் பாவத்தை பத்தி பேசினம்.

தாய்,வீடு,வாகனம்,கல்வி இந்த 4 அம்சங்களும் நாலாம் பாவத்தை பொருத்த மேட்டரு. நம்மாளுங்க தாய் மேட்டரை டீல்ல விட்டாச்சு. இது வெறுமனே மம்மிகளோட தப்புன்னு சொல்லமாட்டேன்.

பால்ய திருமணம் எப்படி சைன்டிஃபிக்கா,பயாலஜிக்கலா ,மெடிக்கலா,சைக்கலாஜிக்கலா தப்போ அதே மாதிரி லேட் மேரேஜ் கூட மேற்சொன்ன எல்லா அடிப்படையிலும் தப்புத்தான். ஆனால் இதைத்தான் தொடர்ந்துக்கிட்டிருக்கம்.

கலைஞர் சொல்வாரு நான் கோபக்காரனாக இருந்த போது பிறந்தவர் அழகிரி. அமைதிக்கு மாறிக்கொண்டிருந்த போது பிறந்தவர் ஸ்டாலின்.
மேலுக்கு பார்க்கும் போது அழகிரி கெட்டவர் போலும் -ஸ்டாலின் நல்லவர் போலும் தெரியும்.ஆனால் அழகிரி ஸ்பான்டேனியஸா இருக்காரு. இயற்கையா இருக்காரு.ஸ்டாலின் கேல்க்குலேட்டடா இருக்காரு.இயற்கைக்கு விரோதமா இருக்காரு (மறைக்காரு)

இதுல பொலிட்டிக்கலா ஸ்டாலின் லாபமடையலாம்.ஆனால் சைக்கலாஜிக்கலா பார்த்தா? அதனோட இம்பாக்ட் உடல் மேல விழுந்தா? மெட்டாஷ்.
அழகிரி ? பொலிட்டிக்கலா நஷ்டப்பட்டிருக்கலாம். இன்னம் 30 வருசம் போனாலும் இப்டியே இருப்பாரு. (இயற்கையா,அப்பாவியா,ஸ்பான்டேனியஸா) இது சேஃப்.

உரிய வயசுல கண்ணாலம் கட்டி 18/19/20 வயசுல பிள்ளை பெத்தா -அந்த சமயம் ஆண் பெண்களுக்கு தங்கள் மேல -சமுதாயத்து மேல எதிர்காலத்து மேல அசைக்க முடியாத நம்பிக்கை இருந்திருக்கும். மனித வாழ்வின் அர்த்தமற்ற தன்மை உறைச்சிருக்காது. பாசம் ,நேசம் , இத்யாதி மேல எல்லாம் ட்ரஸ்ட் இருக்கும். அந்த காலகட்டத்துல பிறக்கிற குழந்தைகளுக்கும் இதெல்லாம் இருக்கும்.

தாளி ..நாற்பது வயசுக்கு என்ன ஆகுது? நம்பிக்கை நசிய ஆரம்பிக்குது, மனித வாழ்வின் அர்த்தமற்ற தன்மை புரிபட்டு போகுது.பாசம் ,நேசம் , இத்யாதி எல்லாம் எப்படியா கொத்த வேஷம்னு புரிஞ்சு போகுது . அப்பம் பிறக்கிற குழந்தைங்க எப்படி இருக்கும்?

நாற்பது வயசுக்கு மிந்தி கம்யூனிஸ்டா இல்லாதவனும் – நாற்பதுக்கு மேல கம்யூனிஸ்டா இருக்கிறவனும் அப் நார்மல்னு சொல்வாய்ங்க. ஏன்னா கடந்த ரெண்டு பேராவுல சொன்ன அதே காரணம் தான். ஏஜ் ஃபேக்டர், அனுபவங்கள், யதார்த்தங்கள் மாத்திருது.

கண்ணதாசன் சொல்வாரு .இரணியன் யூத்தா இருந்திருந்தா நரசிம்ம அவதாரத்தோட ஃபைட் பண்ணி பார்த்திருப்பான். யூத்தா இருக்கிறச்சா பெத்தா பிறக்கிறது யூத்தா இருக்கும். நாற்பது வயசுல நரி புத்தில்லாம் வந்த பிறவு பெத்தா அது ஃபிசிக்கலா யூத்தா இருக்கலாம். சைக்கலாஜிக்கலா? சான்சே கிடையாது.

தாய்-மகன்(ள்) பாசம்லாம் காலாவதியாக முக்கிய காரணம் இதான். மேற்கொண்டு பார்த்தா சிசேரியன். வேலைக்கு போக வேண்டியிருக்கிறது. தேவைகளின் அதிகரிப்பு. தேவைகளுக்கும் -சோர்ஸுக்கும் இடையிலான இடைவெளி -அதை நிரப்புதற்கான அலைக்கழிப்புகள் இப்படி பல காரணம் இருக்கு.
நம்ம கலாசாரம்,பண்பாடுல்லாம் பெண்ணை தாய் என்ற பாத்திரத்துக்கு மோல்ட் பண்ணும், தாய் என்ற இலக்கை நோக்கியே நகர்த்தும். இன்னைக்கு மேற்கத்திய கலாசாரம்,உலக மயம்,தனியார் மயம்,தாராளமயம், கன்ஸ்யூமரிசம் எல்லாம் சேர்ந்து சர்வைவல் கிரைசிஸ்ல கொண்டு தள்ளிருச்சு.
இந்த நிலையில உருவாகும் கரு அதன் எதிர்கால செயல்பாடுகளும் இதை ஒட்டித்தானே இருக்கும். அடுத்தது கல்வி. இதுக்கு டாப் ப்ரியாரிட்டி கொடுக்கிறாய்ங்க. தாயுடன் நெருக்கம் இல்லை. இளைப்பாறுதல் இல்லை. கல்வி குறித்த மன அழுத்தம் ஒரு பக்கம் துரத்துது . இந்த அழுத்தம் வாகனம் மீதான மோகமா மாறுது.

ஸ்தூலமா பார்க்கும் போது தாய்-வீடு-வாகனம்-கல்வி இதெல்லாம் வேற வேற தான். ஆனால் ஜோதிட ரீதியா பார்க்கும் போது இது நாலும் ஒன்னு தான். கொசுறா இதயமும் ஒன்னுதான்.

தாய் மடி கிடைக்கல, வீடு தங்க பிடிக்கல. கல்வி ? தப்ப வழியே இல்லை. இதனால வாகனமே தாய்மடியாகுது. இன்னைக்கு மாணவர்கள் கல்வி மேட்டர்ல ப்ரஷராலயோ ? ப்ளெஷராலயோ சொல்லி அடிக்க காரணம்.. தாய் மடி கிட்டாமையும், வீடு தங்காமையும் தான். லாஜிக்கை புரிஞ்சுக்கிட்டு வாகன மேட்டரையும் தியாகம் பண்ணிட்டு பெருசாவே சாதிக்கலாம். ஒரு வேளை தாய் மடி கிட்டலாம், வீடு மீண்டும் வீடாக மாறலாம்.

மன்சனோட சைக்கலாஜியே என்னன்னா ஒன்னு கிடைக்கலைன்னா அதனோட வடு மைண்ட்ல ஆழமா இருக்கும். அகாலமா அதுக்காவ போராடுவாய்ங்க. அபத்தமா ஆழ்மனசுல இதுக்கு பதில் அது,அதுக்கு பதில் இதுன்னு கன்ஃபீஸ் ஆயிருது.ப்ரொசீட் ஆயிர்ராய்ங்க.

சிகரட்,கம்பெனி ட்ரிங்ஸ், பியர்,லிக்கர் எல்லாமே நிப்பிள் காம்ப்ளெக்ஸுங்கறாய்ங்கல்ல. ஜோதிட ரீதியா தாய் மடிக்கு பதில் வாகனம். அடுத்தது வேலை கிடைச்சதுமே சைட், ஃப்ளாட் வாங்கறது ,அப்பார்ட்மென்ட் புக் பண்றதெல்லாம் கூட இந்த கேட்டகிரி .

அன்னைக்கு வீட்டை விட்டம் -இப்பம் வீட்டை பிடிக்கனும். இது எங்கே பிரச்சினை ஆகுதுன்னா வீடு சுக்கிர காரகம்,மனைவியும் சுக்ர காரகம். சுக்கிரன் அரைகுறை பலத்தோட இருந்தா சுக்கிர பலம்லாம் சொந்த வீட்டு கனவுல எக்ஸாஸ்ட் ஆகி முத்தின வெண்டைக்காயா -முன் மண்டையில சொட்டையோட வாழவேண்டியதாயிருது.

இந்த போராட்டம்லாம் என்ன பண்ணுதுன்னா ஹார்ட்டை பதம் பார்த்துருது. இன்னைக்கு இதய நோய்கள் அதிகரிச்சிருக்க என்னென்னமோ ஸ்தூல காரணங்கள் இருக்கு. ஆனால் ஜோதிட ரீதியா பார்த்தா ..இதய நோய்க்கு காரணம்…

தாய் மடி கிட்டாதது
வீடு வீடா இல்லாதது
வாகன மயக்கம்
சொந்த வீட்டு கனவு
இதெல்லாம் உள்ளார்ந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி இதய நோயா முடியுது . கடந்த இந்த பதிவுகளை படிச்சதுல நாலாம் பாவ பலன் எப்டில்லாம் மாறியிருக்குன்னு ஒரு ஐடியா வந்திருக்கும்னு நினைக்கிறேன்.அடுத்த பதிவுல ஐந்தாம் பாவத்தை பார்ப்பம்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.