காலமாற்றமும் -ஜோதிட பலனும் :4

DSC_9123 - Copy

அண்ணே வணக்கம்ணே !
கம்ப்யூட்டர்ல அதுவும் இணையத்துல தமிழ்ல எழுதமுடியுங்கறதே தெரியாத ஒரு கால கட்டம். இதுவும் சாத்தியம் தான்னு அந்தி மழை டாட் காம் மூலமாத்தான் தெரிஞ்சுக்கிட்டன்.

நாமதேன் இப்போ ராமசாமி ஆச்சே. படக்குன்னு நினைவில் இருந்து ஒரு கவிதைய தட்டி விட்டம்.

கலைவாணியின் கைகளில் கித்தார்
மாற வில்லையே கவிஞர்கள்

இதான் அந்த கவிதை .லைஃப்ல மாற்றம் என்பது கட்டாயம். அதை ஏற்பவர்களுக்கு அது ஜஸ்ட் ஒரு மாற்றம் தான்.ஏற்காதவர்களுக்கு? அது ஒரு மரணம்.

மொதல்ல தாயின் கருப்பை.பிறகு தாய்மடி. அப்டியே தந்தையின் தோள்,அக்கம் பக்கம்,ஸ்கூல்,காலேஜு ,வேலை பொஞ்சாதி இப்டி மாறிட்டே இருக்கும்.

மாற்றத்தை ஏற்காதவன் பொளப்பு நாய் பொளப்பாயிரும்.

மாற்றம் தீங்கே விளைவிப்பதாய் இருந்தாலும் அதை கொஞ்சம் ஜாலக்கா யூஸ் பண்ணி (வித் மினிமைஸ்ட் டேமேஜஸ்) பயனடைய தான் பார்க்கனும்.

காலமாற்றம்ங்கற தலைப்புல மொத ரெண்டு பாவங்களை அனலைஸ் பண்ணிட்டம். இன்னைக்கு 3 ஆம் பாவத்தை பார்ப்பம்.

இதுக்கு சகோதர ஸ்தானம்னு பேர். ஒரு காலத்துல பெரியப்பா சித்தப்பா பையனை கூட எங்க அண்ணாத்தன்னு சொன்ன நம்ம தமிழ் இனம் தான் இப்போ கூட பொறந்த அண்ணனை கூட ப்ரதர்னு தள்ளி வைக்குது.

அண்ணன் தம்பி பாசம்லாம் போயே போச் (மொதல்ல அப்டி ஒரு கேரக்டர் இருந்தாதானே? நாமிருவர் நமக்கிருவர்னு ஆரம்பிச்சு நாம் இருவர் நமக்கொருவர்னு வந்துட்டாய்ங்க. இப்போ நாமே இருவர். நமக்கேன் இன்னொருவர்னு ஆரம்பிச்சாலும் ஆச்சரிய படறதுக்கில்லை.)

அந்த காலத்துலயும் வெட்டி மடிஞ்ச அண்ணன் தம்பி உண்டு.இல்லேங்கல.ஆனால் அதெல்லாம் விதிவிலக்கு தான். ஆனால் இன்னைக்கு? ஆக இந்த மாற்றத்தால் 3 ஆம் பாவத்துக்குண்டா தீயான பலன் கொஞ்சம் குறையும்.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு ஒரு பழமொழி. தம்பின்னு ஒருத்தன் இருந்தால் அண்ணனுக்கு பிரச்சினைன்னா ஃபீல்டுக்கு வந்துருவான்னு அருத்தம்.

மவளுக்கு கண்ணால ஏற்பாடு நடக்குது. கல்யாண பத்திரிக்கை ப்ரூஃப் பார்க்கிறேன். பையன் வீட்டுக்காரவிக பத்திரிக்கையோட கடேசியில இப்படிக்குன்னு அரைடஜன் பேர் போட்டிருந்தாய்ங்க.

செரி நமக்கும் தம்பின்னு ஒரு கேரக்டர் இருக்கில்லையா கேட்டுப்பார்ப்பம்னு ஃபோன் போட்டேன். ” நான் வெளியூர் ல இருக்கேன். என் பேரெல்லாம் எதுக்குப்பா”ன்னுட்டான்.

அண்ணன் தம்பின்னா மோர் ஆர் லெஸ் ஈக்வல் ஏஜ்ல இருப்பாய்ங்க. அந்த காலத்துல முக்கிய தொழில் விவசாயம். ஒரு மரத்து பறவைகள் கணக்கா ஒன்னா போயி ஒன்னா வந்து கூட்ல அடையனும். இன்னைக்கு அப்படியா? வர்க போராட்டம் இன்னைக்கு ஒரே வீட்ல நடக்குது.

ஆக மொத்தத்துல 3 ஆம் பாவம் சகோதர ஸ்தானமா டப்ஸாயிருச்சு.

அடுத்ததா இந்த பாவம் குறுகிய தூர பயணங்களை காட்டும். வித் இன் தி சிட்டி? இன்னைக்கு மோஸ்ட்லி எல்லாருமே தங்கள் வாழ் நாளின் குறிப்பிட்ட பங்கை பிரயாணத்துல தொலைக்கிறாய்ங்க. ( நெல்ல வேளையா நாம கிரேட் எஸ்கேப்)

என்னை பொருத்தவரை பயணம்ங்கறதே ஒரு நரகம். (இலக்கு சொர்கமா கூட இருக்கலாம்.அது வேற மேட்டர்) அதையும் அதுவும் தினம் தினம்னா? அதுவும் அடிச்சு பிடிச்சுன்னா? ஸ் ..யப்பா மிடியல.

ஆக இந்த பயணங்களாலும் 3 ஆம் பாவத்தின் தோஷம் பெருமளவு குறைகிறது. இதுவே பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுன்னா சுத்தமா இல்லாமலே போயிரும். தோஷத்தை சொன்னேன். சொந்த வாகனம்னா ஓரளவு குறையும். டிரைவர்/ஏசி.கார்னா பலன் தலை கீழா மாறும்.

மேற்படி காரணங்களால் தோஷம் குறைந்து என்ன நற்பலன் ஏற்படுகிறதுன்னா மனோ தைரியம் குறையுது. ( ஹி ஹி 3 என்பது மாரக ஸ்தானம்.ஆகவே இந்த பாவம் கெட்டு குட்டிச்சுவரா போகனும். அப்பத்தேன் மனோ தைரியம் கூடும். )

பஸ்ஸுல நம்ம பக்கத்துல இருக்கிறவனை கத்தியால செருகிட்டு போனா கூட ஒன்னும் நடக்காத மாதிரி முன் ஸ்டாப்ல இறங்கி அடுத்த பஸ்ல ஏறிப்போயிர்ரம்.

அடுத்து இசை . இதுக்கும் இந்த பாவம் தான் காரகம். ஹெட் செட்ல பாட்டு கேட்டு சுகம் காணுகிறோம். சவுண்ட் பாக்ஸ் அவுட் ஆயிருது ( சுப -அசுப பலன் பேலன்ஸ் ஆயிருது)

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *