என் தேசம் -என் கனவு

Rewraprஅண்ணே வணக்கம்ணே !

ஏற்கெனவே லேட்டஸ்டா ஒரு முறை திரு விமலாதித்தன், திரு.துரை பாண்டியன்,திரு மருதப்பன், திரு அருள் ராஜ் குமார், திரு.கஜபதி,திரு கோபி நாத் சிதம்பரம், Sri.Anilkumar Reddy ஆகியோரின் பொருளுதவியுடன் ஸ்ரீ அம்மன் சத நாமாவளி அச்சிட்டு இலவசமா வழங்கி வந்தது தெரியும் தானே ..

இதற்கு முன்பே நமக்கு ஹ்ரீம் பீஜாட்சர உபதேசம் நடந்த பிறகு பல முறை லோக்கல் ஸ்பான்சரர்ஸ் உதவியோட தெலுங்குல அச்சிட்டு வழங்கியிருக்கோம்.

அட கையில வேலை தானே பார்த்துக்கலாம்னு ஸ்பான்சர்ஸ் பட்ஜெட்ல மிச்சமிருந்த 1,500 பிரதிகளோடு -மேலும் பிரதிகள் அச்சிடலாம்னு திருவிமலாதித்தன் அவர்களுக்கு ச்சொம்மா பேச்சுக்கு சொல்ல அவரு படக்குனு ரூ.2,800 கணக்குல போட்டுட்டாரு – இது இல்லாம நம்ம மவளோட டெலிவரியில சிக்கல், அவ மகனுக்கு இதயத்துல சிக்கல்னு பேதியானப்போ ஒரு கமிட்மென்ட். இது மட்டுமா?
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்க கருத்தரங்கத்துக்கு வந்தவிகளுக்கு நாம வெளியிட்ட 4 நூல்களை அன்பின் நினைவா வழங்க ப்ளான் பண்ணியிருந்தம். அவிக என்னடான்னா அன்பின் நினைவா வச்சுக்கோங்கன்னு அவிக ஒரு அமவுண்டை கொடுத்துட்டாய்ங்க.

செரி இதை ஸ்ரீ அம்மன் சத நாமாவளி அச்சு -வினியோகத்துக்கு உபயோகிச்சுக்கறேன்னு மேடையிலயே கமிட் ஆயிட்டம். கமிட்மென்ட் ஓவரா போகவே .. எல்லாத்தையும் சேர்த்து குத்துமதிப்பா ஒரு ஆறாயிரத்து ஐ நூறு பிரதி போட்டுர்ரதா கோதாவுல இறங்கிட்டம்.

மொத கட்டமா தெலுங்குல ஆயிரம் பிரதி போட்டம். இப்பம் தமிழ். நாமாவளியை நம்ம ஆன்லைன்ல ஸ்டோரேஜ்ல தேடறேன் தேடறேன் ஊஹூம். ஆத்தா கோவிச்சுக்கிட்டாப்ல இருக்கு. கிடைக்கல்ல. அந்த சமயம் பார்த்து திரு சொக்கலிங்கம் ராம நாதன் அடிச்சு அனுப்பினது ஞா வந்தது .அதை உபயோகிச்சுக்கிட்டம். வெறுமனே ஜகன் மாதாவுக்கு மட்டும் சர்வீஸ் பண்ணா எப்பூடி? பிறவு பகுத்தறிவாளர்கள் பாஞ்சுருவாய்ங்களே.. நம்ம மனசாட்சி வேற தூங்க விடாதே. அதனால பாரதமாதாவுக்கும் -ஜகன் மாதாவுக்கும் என்னடா லிங்குன்னு மண்டைய ஊறுகாய் பானை கணக்கா குலுக்கினதுல கீழ் காணும் மேட்டர் ஸ்பார்க் ஆச்சு. அதையே முன்னுரையாக்கினேன்.

ஜகன் மாதா வெர்சஸ் பாரத மாதா:

முன்னுரை
தாங்கள் ஒவ்வொரு தினமும் படித்து ஜகன் மாதாவாகிய ஸ்ரீ அம்மன் இன்னருள் பெற – உலகியல் ரீதியாகவும் – ஆன்மீக ரீதியாகவும் உன்னத சிகரங்களை எட்டிப்பிடிக்க ஸ்ரீ அம்மன் சத நாமாவளி ஒரு புறமும்

நம் நாடு சொர்கமாக மாறிவிடாவிட்டாலும் நீண்ட நெடுங்காலமாக எதிர் கொண்டு வரும் சிக்கலான/ படு சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ” என் தேசம் என் கனவு ” என்ற பெயரில் தொகுத்து இன்னொரு புறமும் …….இந்த சிறு நூலில் தரப்பட்டுள்ளது.

அம்மா என்றதுமே எத்துணை நீசர் ஆகிலும் அவர் தம் மனதில் ஆனந்தம் தாண்டவிக்கும். அம்மா கண்ணுக்கு தெரிந்த தெய்வம், அந்த தெய்வத்துக்கு சற்றே சேவை புரிந்தாலே நம் அனைத்து பாபங்களும் தொலைந்து போகும்.

ஈதிப்படி இருக்க நம்மை ஈன்ற அன்னையரையே ஈன்ற அந்த அனந்த சக்தி பற்றி கூறவும் வேண்டுமோ? புகழ்ச்சிக்கு மயங்கி சகட்டுமேனிக்கு வரம் வழங்கி விடும் ஈசனில் பாதி அவள். அவளை துதித்தால் போதும் துள்ளி எழுவாள். நம் பக்தி வலையில் விழுவாள். குறைந்த பட்சம் கனவிலேனும் வருவாள். நல்வரம் தருவாள்.

இந்நிலையில் அவளுக்கு சற்றே சேவையும் புரிந்தால்?

அவளுக்கு எவ்விதம் சேவை புரிய இயலும்? அவள் சர்வாந்தர்யாமி (எங்குமிருப்பவள்) . நம் கண்கள் சற்றே நமக்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர அவணியிலான ஒவ்வொரு அணுவிலும் அவள் தரிசனம் நிச்சயம்.

சூட்சும வடிவிலான அத்தாயை கண்டு கொள்வது கடினம் தான்.ஆனால் அவள் ஸ்தூல ரூபம் தரித்த போது இந்த பிரச்சினையே கிடையாது.

ஆம். அந்த சக்தியின் மீனியேச்சர் வடிவம் அம்மா என்றால் அந்த சக்தியின் ஸ்தூல வடிவம் நம் பாரத அன்னை.

அன்னை பூமிக்கு சற்றே சேவை புரிந்தால் அது அந்த சக்திக்கு செய்யும் சேவையே ஆகும். பாரத அன்னையின் சேவைக்கு முன் வருவோரை அந்த சக்தி நிச்சயம் நேசிப்பாள், அவர் தம் நெஞ்சுக்குள் பிரவேசிப்பாள்.தலையில் வைத்து கொண்டாடுவாள்.

இதுவே இவ்விரு அன்னைகளுக்கும் இடையிலான தொடர்பு . சிவாஜி என்ற சிறுவன் சக்ரவர்த்தியானது அவன் தேச பக்திக்கு மெச்சி அன்னை பவானி அளித்த வரமல்லவா?

எனவே தான் இந்த சிறு நூலில் ஒரு புறம் ஸ்ரீ அம்மன் சத நாமாவளி -மறுபுறம் என் தேசம் என் கனவு ஆகியன இடம் பெற்றுள்ளன.

என் தேசம் -என் கனவு:
பாரதத்தின் பிரச்சினைகளை – அவற்றின் மூலத்தை ஆராய்ந்து – தொகுத்த தீர்வுகளே இந்த தலைப்பில் தரப்பட்டுள்ளது. இவை நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோதிக்கு அனுப்பப்பட்டு ,பிரதமர் அலுவலக பரிசீலனையில் உள்ளன. பிரதமர் அலுவலகம் ரூ.51 செலவழித்து விரைவு தபாலில் இந்த தகவலை அனுப்பியது.

இந்த யோசனைகள் தங்களுக்கு பிடித்தால் இவற்றை நினைவூட்டி மோதி/பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் போடுங்கள் . இதுவே அன்னை பூமிக்கு நீங்கள் செய்யும் சேவையாகும்.

புஸ்தவத்துல மொதல்ல முன்னுரை .பிறவு ஸ்ரீ அம்மன் சத நாமாவளி வரும். கடேசியில என் தேசம் என் கனவு .இந்த பதிவுலயும் அப்படியே கொடுத்திருக்கன்.

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி
அம்பிகாபுர வாசின்யை நம :
அன்ன பூர்ணேஸ்வர்யை நம :
அகிலாண்டேஸ்வர்யை நம :
அம்ருத்தாயை நம :
ஆர்த்த ஜன ரக்ஷின்யை நம :
ஆத்யந்த சிவரூபாயை நம :
அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயின்யை நம :
அபய வரத ஹஸ்தின்யை நம :
அனாமிகாயை நம :
அங்காள பரமேஸ்வர்யை நம :
ஆனந்த மயே நம :
ஆத்யந்த ரஹிதாயை நம :
அருணாயை நம :
பால பீட அதிரோஹின்யை நம :
பஹளா முக்கே நம :
பில்வ வன ப்ரியாயை நம :
புவனேஸ்வர்யை நம :
பிந்து ஸ்வரூபின்யை நம :
சண்டிகாயை நம :
சாமுண்டேஸ்வர்யை நம :
சந்த்ர மண்டல வாசின்யை நம :
சதுர் சஷ்டி கலாத்மிகாயை நம :
துர்காயை நம :
தர்ம ரூபின்யை நம :
தேவ்யை நம :
திவ்யாயை நம :
ஈஸ்வர்யை நம :
குண த்ரய சம்யுக்தாயை நம :
கௌரி மாத்ரே நம :
காயத்ரி மாத்ரே நம :
கணேச ஜனன்யை நம :
கிரிராஜ ஸ்துதாயை நம :
ஹ்ரீங்கார பீஜாக்ஷர்யை நம :
ஹ்ரீம் மயீ தேவினே நம :
ஹேம பூக்ஷித விக்ரஹாயை நம :
ஓங்கார ஐங்கார ஸ்வரூபின்யை நம :
ஜனன்யை நம :
ஜகத் காரிண்யை நம :
ஜ்யோதிர்மயே நம :
ஜ்வாலா முக்கே நம :
காளிகாயை நம :
காமாக்ஷ்யை நம :
கன்யகாயை நம :
குமார ஜனன்யை நம :
காலாயை நம :
காலாதீதாயை நம :
கர்ம ஃபல ப்ராதையை நம :
காம கோடி பீடஸ்தாயை நம :
லலிதா பரமேஸ்வர்யை நம :
லீலா விநோதின்யை நம :
மார்கண்டேய வர ப்ராதையை நம :
மஹா மாயா ஸ்வரூபின்யை நம:
மோஹின்யை நம :
மீனாக்ஷ்யை நம :
மஹோதர்யை நம :
மணி த்வீப பாலிக்காயை நம :
மஹிசாசுர மர்த்தின்யை நம :
நித்யாயை நம :
ஓம்கார ரூபின்யை நம:
பாசாங்குச தாரின்யை நம :
பஞ்ச தசாக்ஷர்யை நம :
பூர்ணாயை நம :
பரமந்த்ர சேதின்யை நம :
பர பல விமர்தின்யை நம :
பரப்ரம்ஹ ஸ்வரூபின்யை நம:
ராஜ ராஜேஸ்வர்யை நம :
சச்சிதானந்த ஸ்வரூபின்யை நம:
சூக்ஷ்ம்னா த்வார மத்யாயை நம :
சர்வ ஸ்வதந்த்ராயை நம :
ஸ்ரீ சக்ர வாசின்யை நம :
ஸ்வயம் ப்ரகாஸாயை நம :
சுர பூஜிதாயை நம :
சுந்தர்யை நம :
சுக தாயின்யை நம :
சனகாதி முனி ஸ்துதாயை நம :
சிவானந்த சாகராயை நம :
சிவ மானஸ ஹம்சின்யை நம :
சகல சௌபாக்ய ப்ரதாயை நம :
சர்வ ஜன வசங்கர்யை நம :
ஸ்வ மந்த்ர பல ப்ரதாயை நம :
சர்வாரிஷ்ட நாஸின்யை நம :
சர்வ பாப ஹரின்யை நம :
சர்வ சங்க்ஷோப பரிஹாராயை நம :
சர்வ ஸ்தம்பின்யை ஸ்வாஹா
சர்வ துக்க விமோசன்யை நம :
சர்வ துஷ்ட பயங்கர்யை நம :
த்ரி விக்ரம பத கிராந்தாயை நம :
த்ரி கால ஞான ப்ரதாயை நம :
துரிதா பஹாயை நம :
தேஜோ ப்ரதாயை நம :
வைஷ்ணவ்யை நம :
விமலாயை நம :
வித்யாயை நம :
வாராஹி மாத்ரே நம :
விசாலாக்ஷ்யை நம :
விஜய ப்ரதாயை நம :
விஸ்வ ருபின்யை நம :
விஜய சாமுண்டேஸ்வர்யை நம :
யோகின்யை நம :
யத்ன கார்ய சித்தி ப்ரதாயை நம :

இந்த நாடு உருப்பட என்னெல்லாம் செய்யலாம்னு ஸ்கெட்ச் பண்ணி மொதல்ல முக நூல்ல ஸ்டேட்டஸ்களா போட்டு தாளிச்சம்.பிறவு நண்பர் திருமுருகன் கார்த்திகேயன் இங்கிலீஷ்ல டப் பண்ணி கொடுக்க மனுவா தயாரிச்சு இங்கே போட்டோம்.

அதை மறுபடி ஒழுங்கு மருவாதியான தமிழுக்கு மாத்தினேன். அதான் இங்கே.

என் தேசம் என் கனவு

பாகம்: 1
மத்திய அரசின் பட்ஜெட்டில் முக்கிய ஒதுக்கீடே வெளி நாட்டு/உள் நாட்டு கடன்/ கடன் மீதான வட்டி/வட்டி மீதான வட்டிக்கே செய்யப்படுகிறது .
இதற்கு ஒரு முடிவு கட்டினாலே தவிர எந்த பிரதமரும் எதையும் சாதிக்க முடியாது. எனவே ..

1.ஜனாதிபதி-கவர்னர் பதவிகள் ரத்து. இவர்களின் பணியை சுப்ரீம் கோர்/ஹை கோர்ட் நீதிபதிகளே செய்யலாம்.
2.ஜனாதிபதி மாளிகை/பாராளுமன்ற வளாகம்,பிரதமர் வீடு , மானிலங்களிலான கவர்னர் மாளிகைகள் ,முதல்வர்கள் வீடு சட்டமன்ற வளாகங்கள் அனைத்தையும் க்ளோபல் டெண்டர் அழைத்து 99 வருடங்களுக்கு லீஸ்.
(எதிர்காலத்தில் பாராளுமன்ற சட்டமன்ற கூட்டங்கள்/கலந்தாலோசனைகள் வீடியோகான்ஃபரன்ஸ் முறையில் மட்டுமே நடக்க வேண்டும்)
3.ஸ்விட்ஜர்லாந்து வங்கி கணக்காய் இங்கும் ஒரு வங்கி துவக்கினால் வெளி நாடுகளில் தேங்கி/தேக்கப்பட்டு கிடக்கும் கருப்பு பணம் தானாகவே நம் நாட்டை வந்தடையும்.
4.வாகனங்களுக்கு பெட் ரோலுடன் 60:40 விகிதத்தில் எத்தனால் கலந்து உபயோகிக்க அனுமதி.
5.வாரத்துக்கு ஒரு நாளை மாசு கட்டுப்பாட்டு தினமாக அறிவித்து 52+ கேரியர்ஸுக்கு மட்டும் அனுமதி (ரயில், பஸ்) பாதுகாப்பு/மருத்துவ துறை தொடர்பான எமர்ஜென்சி சேவை வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
6.நாட்டில் உள்ள 18 வயது நிறைந்த ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் இலவச சைக்கிள். சைக்கிள்களுக்கு சாலைகளில் மெயின் ட்ராக்.
7.பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி.

பாகம்:2
மத்திய பட்ஜெட்டில் அடுத்த பெரிய ஒதுக்கீடு பாதுகாப்பு துறைக்கு மட்டுமே.
1.பாக்கிஸ்தான்,சீனா,பங்களா தேஷ் ஆகிய நாடுகள் உரிமை கோரி வரும் பாரத நில பாகத்தை ஐ. நா செயல்பாடுகளுக்கு மட்டும் என ஒதுக்கி அவற்றின் பாதுகாப்பை ஐ.நா பாதுகாப்பு சபை ஏற்க ஏற்பாடு.
2.நக்சல்பாரிகளின் ஆதிகத்தில் உள்ள இந்திய மாவட்டங்களில் அரசின் வளர்ச்சி/சமூக நல திட்டங்களை நக்சல் ஆதரவாளர்களாய் முத்திரை குத்தி இருக்கும் மனித உரிமை கழகங்கள் செயல்படுத்துமாறு செய்தல்.

பாகம்:3
1.அரசு இயந்திரத்திலான ஊழல்/அலட்சியம்/பொறுப்பின்மையை ஒழித்தல். அரசு நிர்வாக செலவை 50% வரை குறைத்தல்.
2.மத்திய,மானில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ,சைக்கோ மெட்ரி டெஸ்ட். கடந்த 10 வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீது ஒரு தேர்வு .இவற்றில் தோற்றவர்களுக்கு கோல்டன் ஷேக் ஹேண்ட். இவர் தம் வாரிசுகளில் தகுதி உடையோருக்கு வாய்ப்பு.
3.அரசு துறையிலான காலியிடங்களையும்/மேற்படி தேர்வுகளில் தோற்றவர்களால் காலியான இடங்களையும் டெண்டர் முறையில் நிரப்புதல் ( தேவையான தகுதி+ அதிகபட்ச குறைந்த ஊதியம்)
4.சனி,ஞா கிழமைகள்,சுதந்திர நாள்,குடியரசு தினம் தவிர்த்த அனைத்து ஓய்வு நாட்களும் ரத்து. வருடத்தில் 11 வருடங்கள் தொடர்ந்து பணி புரிந்தவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 1 மாத ஓய்வு .
4.ஏரி,குளங்கள்,நீர்நிலைகளை பேராசை மற்றும் சுய நலத்துடன் ஆக்கிரமித்துள்ளவர்களின் விவரங்களை சேகரித்து ராணுவம் மூலம் மீட்டல்.
5.வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் அண்டர் கிரவுண்டில் தம் சொந்த செலவில் அவற்றை நிர்மாணித்து தர உத்தரவு.
6.ஒவ்வொரு குடிமகனும் ஆன்லைன் மூலம் தனது சொந்த விவரங்களை அரசுக்கு கிடைக்க செய்யும் ஏற்பாடு. (சமூக,பொருளாதார நிலை) .எவ்வித கிராஸ் செக்கும் இல்லாமல் இவற்றின் அடிப்படையில் அரசு சமூக நல,முன்னேற்ற திட்டங்களில் வாய்ப்பு.
ஆனால் தவறான தகவல் தந்தவர்களுக்கு கடும் தண்டனை உண்டு என்பதை முன் கூட்டியே பெரிய அளவில் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும்.
பிறகு அரசு தன் வேகத்தில் 3 மாதத்தில் கிராஸ் செக் செய்து போலிபயனாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
7.சாலை நிர்மாண பணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மூலமே நடக்க வேண்டும். புதிய சாலைகள் அமைப்பதை விட ரயில்வே பாதைகளை விரிவு படுத்த வேண்டும்.
8. நீதிமன்றங்கள் வருடம் முழுதும் 24 மணி நேரம் ஷிஃப்ட் முறையில் பணி செய்யும் ஏற்பாடு.
9.மத நிறுவனங்கள் படிப்படியாக மத ரீதியிலான நடவடிக்கைகளை குறைத்துக்கொண்டு நாட்டு முன்னேற்றத்துக்கு ஒத்துழைக்க ஏற்பாடு .
10.பிரபல புண்ணிய சேத்திரங்கள், பெரிய ஆலயங்கள்,மடங்கள் ,ப்ரேயர் ஹால்ஸ் சோலார்/விண்ட் மில் – பயோகியாஸ் மூலம் மட்டுமே கியாஸ்/மின்சாரம் தயாரிக்கும் ஏற்பாடு . சுற்றுப்புற ஏரியாவுக்கும் வினியோகம்.
11.உள்ளூர் காய்கறி மார்க்கெட்/மட்டன் மார்க்கெட்/பூ மார்க்கெட் எதிரில் வங்கிகள் எஸ்.டி.டி பூத் கணக்காய் பிரத்யேக கவுண்டர் திறந்து நடை பாதை வியாபாரிகள், சிறு வியாபாரிகளுக்கு டெய்லி லோன்.

பாகம்:4
1.நாட்டின் 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம். அதன் மூலம் நீர்வழி சாலைகள் -நதிகள் இணைப்பு .
2.கிராமங்கள் முதல் நாடு தழுவிய விவசாயிகள் சங்கம் அமைப்பு . விவசாய நிலங்களை லீஸ் அடிப்படையில் மேற்படி சங்கங்களுக்கு அளித்து கூட்டுறவு பண்ணை விவசாயம்.
3.மேற்படி சிறப்பு ராணுவத்தில் ஒரு பகுதியை கொண்டு விவசாய உற்பத்திகளை பாதுகாக்க தேவையான கிடங்குகள்/கோல்ட் ஸ்டோரேஜ் , வி.உற்பத்திகளை கொண்டு செல்ல தேவையான சாலை/ரயில் பாதைகள் நிர்மாணம்.
4.நதிகள் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் அன்னிய நாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் இந்தியாவில் முதலீடு செய்யும் வாய்ப்பு.
5.முழுமையான மதுவிலக்கு. மது அடிமைகளுக்கு கொக்கோ கோலா மாதிரியான மெஷின்ஸ் மூலம் அடக்கவிலைக்கே மது.
6.ஒவ்வொரு மாணவனும் தன் உடல்,மனம்,புத்தி ,குடும்பம்,சமூகம்,மானிலம்,தேசம்,உலகம் பற்றிய விழிப்புணர்வை பெற்று தன் சொந்த கால்களில் நின்று குடும்பம் முதல் உலகம் ஈறாக பயன் பெறும்படி வாழும்படி செய்யும் கல்வி முறையை அமல் செய்தல் . ஏதேனும் கோடை விடுமுறையை இதற்கு பயன்படுத்தலாம். விடுமுறையில் ஒவ்வொரு மாணவனும் நதிகள் இணைப்பில் பங்கேற்கும்படி செய்யலாம்.
7.கல்வி அளித்த நிறுவனமே மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கும் சட்டம்
8.கடல்களில்,நதிகளில், நீர் நிலைகளில் கழிவு நீரை விடும் தொழிற்சாலைகளுக்கு தடை .
9.மின் தேவைகளில் 50 சதம் சோலார்,விண்ட் மில்,பயோ கியாஸ் மூலம் மட்டுமே சேகரிக்கும் ஏற்பாடு .
10.போலீஸ் துறையிலான காலியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு -மேலும் 2 மடங்கு வேலையிடங்களை ஏற்படுத்தி நிரப்பியாக வேண்டும். ஷிஃப்ட் முறை கடுமையாக அமல். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சிசி கேமரா ஏற்பாடு +வெப் காஸ்டிங்.
11.போலீஸ் துறை ஆரம்ப கட்ட விசாரணை எஃப்.ஐ.ஆர் போட்டு,ஆதாரங்களை சேகரிப்பதோடு நின்றாக வேண்டும்.தண்டனை வாங்கிதர வேறு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதுவும் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரம் இயங்க வேண்டும்.

வேண்டுகோள்:
மே மாசம் மொத வாரத்துல சென்னை வந்து ஒரு 3 நாள் தங்கறதா ப்ளான் பண்ணியிருக்கன். மேற்படி பாக்கெட் புக்ஸை வீணாக்காம,ஊறப்போட்டுராம நாலு பேருக்கு கொடுத்துர்ர கப்பாசிட்டி உள்ளவிக முன் கூட்டி எனக்கு மெயில் பண்ணி நெம்பர் கொடுத்தா சென்னை வந்து கால் பண்றேன். நேர்ல வந்தா பிரதிகள் தரேன். நம்ம மெயில்: swamy7867@gmail.com.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.