Tags     

Categories  ஜெயலலிதா

ஜெ’எதிர்காலம் (2015-16)

DSC_6707

அண்ணே வணக்கம்ணே !
மம்மி ஜாதகத்தை டீப்பா அனலைஸ் பண்றது இது 4 ஆவது முறை. முதல் ரெண்டு முறையும் நெல்ல மேட்டரா சொன்னம். ஆட்சிக்கு வருவிகங்கறதுதான் சாராம்சம்.

மூன்றாவது முறை பெங்களூர் சொ.கு வழக்குல என்னாகும்னு அனலைஸ் பண்ணி ஆப்பு கியாரண்டின்னு சொல்லி போட்டம்.இது நாலாவது முறை.
ஜோதிடர் ஜாதகர் மேல் எந்த விருப்பு வெறுப்புமில்லாம லொடக்கானி விதிகளை வச்சு கணிச்சாலே பச்சக்குன்னு ஒர்க் அவுட் ஆகும். மோடி மேட்டர்ல என்ன ஆச்சுன்னு மறுபடி சொல்லவேண்டியதில்லை.

இப்பம் அம்மாவோட ஜாதகத்தை பார்ப்பம்.

மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

சனி ரெண்டுலருந்து எட்டை பார்க்கிறதாலயும், கேது அஞ்சுல இருக்கிறதாலயும் தான் அந்த நாள் முதல் இந்த நாள் வரை மம்மிக்கு திடீர் அவமானங்கள் ,தனிமைச்சிறைல்லாம் நடக்குது. அது வேற மேட்டர். மூன்றாமிடத்துல சந்திரன் இருக்கிறதால திடீர்னு தைரிய லட்சுமி கணக்கா பொங்குவாய்ங்க, திடீர்னு டர்ராகிருவாய்ங்க.

மம்மி பவருக்கு வர்ரப்பல்லாம் ஒரு பிராமண லாபி மம்மியை ரவுண்ட் அப் பண்ணி ஆப்படிக்கவும் – லாஜிக்கே இல்லாம சசி கும்பலை தாங்கு தாங்குறதுக்கும் ஏழுல குரு தான் காரணம்.

மூன்றுக்குரிய சூரியன் 9 ல இருக்கிறதால தான் மத்திய அரசோட எப்பவும் மோதல் போக்கு .லக்னாதிபதியான புதனே இங்கே சூரியனோட சேர்ந்திருக்கிறதால தான் ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி இருக்கு. (லைஃப்ல எப்பவாச்சும் ரிஸ்க் எடுக்கலாம். தினம் தினம் எடுத்தா?)
பத்துல சுக்கிரன் தான் சொத்துக்குவிப்புக்கு காரணம். வாகன ஊர்வலம்,ஆடம்பரம்,படாடோபம் இத்யாதியும் இவரோட கைங்கரியம் தான் . (உ.ம், தத்து புத்திரரோட கண்ணாலம்)

ரெண்டாமிடத்து சனி தான் அப்பப்போ வெகண்டையா பேச வச்சுர்ராரு (ஜானகி எம்.ஜி.ஆருக்கு மோர்ல விசம் கொடுத்துட்டாய்ங்க, கலைஞர் என்னை லாரி ஏத்தி கொல்லப்பார்த்தாரு , ஆமா நான் பாப்பாத்திதான் -இதெல்லாம் ஒரு சில உதாரணங்கள்)

செரி ..ஃப்ளாஷ் பேக் போதும் .கரண்டுக்கு வந்துரலாம்.இப்பம் ஜெ ஜாதகத்துக்கு நடப்பு: குரு தசை குரு புக்தி. இது 2013/8/21 அன்னைக்கு ஆரம்பிச்சு 2 வ, 1 மாதம், 18 நாட்கள் நடக்க போகுது .

மம்மியோட மிதுன லக்ன ஜாதகத்துக்கு குரு தசை குரு புக்தி எப்படி இருக்கும்னு இப்பம் பார்க்கலாம்?

இவர் சுபகிரகம் .இவருக்கு 7-10 என்ற கேந்திரங்களுக்கு ஆதிபத்யம் கிடைச்சிருக்கறதே ஒரு மைனஸ். இவர் கெட்டா ராஜயோகம்.ஆனால் தனுசுல ஆட்சி பெற்றிருக்கிறார். இதான் ஆப்பு.

குரு பார்த்தா கோடி புண்ணியம் அது இதுன்னு சொல்றாய்ங்களே , குரு புக்தி எப்படி கெடுதி செய்யும்னு கேப்பிக.சொல்றேன்.
சிறப்பு நீதி மன்ற நீதிபதி குன்ஹா ரெம்ப நல்லவர், சட்ட மேதை, அவர் கொடுத்த தீர்ப்பெல்லாம் மேல் கோர்ட்ல மாறினதே இல்லைன்னு சிலாக்கியமாத்தான் சொன்னாய்ங்க.

ஆனால் இந்த மெய் கீர்த்திகள் “ஜெ”வுக்கு எப்படி இம்ப்ளிமென்ட் ஆச்சுங்கறது தான் முக்கியம் .குருவும் இப்டித்தான் அல்லாருக்கு ராச யோகம் கொடுத்துர மாட்டாரு. ராச யோகம் கொடுக்காட்டி ஒழியுது. அவர் வைக்கிற ஆப்பு எப்டி இருக்கும் தெரியுமா?

தனக்கான சவக்குழியை தானே வெட்டிக்கிட்டு -தானே போயி படுத்துக்கறாப்ல செய்துரும். குரு பலமிழந்து அதிர்ஷ்டத்தை தருவதற்கு பதில் ஆட்சி பெற்று ஆட்சிக்கு ஆப்பு வச்சுட்டாருன்னு சொல்லிரப்படாது.

ஒரு தசை தன் தசாகாலம் முழுக்க நல்லது செய்றாப்ல இருந்தா தன் சுயபுக்தியில செம ஆப்பா வைக்கும்.ஒரு தசை தன் தசா காலம் முழுக்க தீமை செய்றாப்ல இருந்தா தன் சுய புக்தியில் பம்பர் லாட்டரி கணக்கா நன்மை செய்யும். இந்த விதிப்படி குரு ஆப்படிப்பாரா? பம்பர் ஆஃபர் கொடுப்பாரான்னு பார்க்கோனம்.

குரு தசை குரு புக்தி 21/8/2013 அன்று ஆரம்பம்.அந்த நாள் முதல் 2 வ. 1 மா,18 நாள் வரைக்கும் குரு எக்கு தப்பா ஆப்படிச்சிருந்தா அடுத்து வரக்கூடிய புக்திகள் எல்லாம் யோக பலத்தை தரும்னு அடிச்சு சொல்லலாம்.

ஆனால் யதார்த்தம் அப்படியா இருந்தது? பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனைய அறிவிக்கிற வரை மாதாஜிக்கு வெற்றி மேல் வெற்றி தானே..
இது எப்டின்னா பலி கொடுக்கப்போற ஆட்டுக்கு செம தீனி போடுவாய்ங்கல்ல. மஞ்ச தண்ணில குளிப்பாட்டி மாலைல்லாம் போடுவாய்ங்கல்ல. அப்டித்தான்.
மேலும் இதுல இன்னொரு விதியையும் அப்ளை பண்ணி ஆகனும்.

ஒரு கிரகம் ரெண்டு வித ஆதிபத்யம் பெற்று (7-10) அதில் ஒரு பாவத்துல ஆட்சி பெற்றால்.. ஆட்சி பெற்ற பாவத்துக்குண்டான பலனை மட்டும் தருவாருன்னு ஒரு விதி.

குரு ஆட்சி பெற்றது 7 ல் . ஏழுங்கறது ஃப்ர ண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் இத்யாதிய காட்டும். குருவுக்கு ஜீவனாதிபத்யமும் இருந்தாலும் 7 லதானே ஆட்சி .
அம்மா தப்பா ஆட்சி பண்ணாய்ங்கன்னோ? செரியா ஆட்சி பண்ணலின்னோ வழக்கு வரல. தப்பான ஆளை தோழியா வச்சிருந்தாய்ங்க, தப்பான ஆட்களோட பார்ட்னர் ஷிப் வச்சிருந்தாய்ங்கன்னு தான் வழக்கு.

இந்த குரு தசை குருபுக்தி கால பலனை இன்னம் கொஞ்சம் கரீட்டா தெரிஞ்சுக்க கொஞ்சம் டீட்டெய்லா அனலைஸ் பண்ணனும்.அதுக்கு குரு புக்தி காலத்தை 2 பிரிவா பிரிக்கனும் (மொத்தம் 2 வ,1 மா,18 நாள்) இதை 2 பிரிவா பிரிச்சா 1 வ,15 நாள்+ 9 நாள். ஆக 2013/8/21 முதல் முதல் பாகம் முடிஞ்சது என்னைக்கு? 2014/9/15.

இந்த தேதி வரை ஜெ’வாழ்க்கை எப்படி இருந்தது? குரு 10 க்குடையவரா வேலை செய்துக்கிட்டிருந்தாரு .பத்து=தொழில் .(இதுலயும் ஏகப்பட்ட சொதப்பல் தான்)

குரு தசை குரு புக்தி ரெண்டாம் பாகம் 2014/9/15 அன்று ஆரம்பம் .சொ.கு.வழக்குல தீர்ப்பு எப்பம் வந்தது? 2014/9/27 தானே !

குரு ஜீவனாதிபதியா தன் இன்னிங்சை முடிச்சு சப்தமாதிபதியா தன் இன்னிங்சை ஆரம்பிச்சுட்டாரு போல. 7 மீன்ஸ் தோழி .அன்று முதல் இன்று வரை மம்மியோட இருக்கிறது தோழி தானே..

குரு என்னதான் செய்யப்போறாரு? குரு தசை குரு புக்தி எப்டில்லாம் ஆப்படிக்கும்?
குரு =நீதிமன்றங்கள், குரு=பைசா ,குரு=தங்கம் குரு=புத்திரன் (தத்து?) அதுவும் குரு ஆட்சி பெற்று லக்னத்தை பார்க்கிறதால ரெம்ப அப்பாவித்தனமா ஆரோ வந்து என்னமோ செய்து காப்பாத்திருவாய்ங்கன்னு நம்பி பலியாகிர வேண்டியதுதான்

ஆரு ஆப்படிப்பாய்ங்க? வக்கீல்ஸ், நீதிபதிஸ், பெரிய மன்சாள்,ஆட்சியாளர்கள், மத்தியஸ்தம் செய்யும் மரியாதை மிக்கவர்கள் இப்படி பலரும் ஆப்படிப்பாய்ங்க.

ஆறுதலான அம்சம் என்னன்னா கோசாரத்துல குரு விரயத்துல உச்சமா இருக்காரு. ராசிக்கு அஷ்டமாதிபதி விரயத்துல நிக்கிறதால உசுருக்கு ஆபத்து இல்லாம போகலாம். ஆனா குரு=அரசு . 12 ஆம் பாவம் நம்ம தூக்கத்தை காட்டும். மம்மி அரசு செலவுல அரசுக்கு சொந்தமான இடத்துல தூங்கபோறாய்ங்க போல.

ராசிக்கு 4 ஆமிடத்துல சனி .4 என்றால் வீடு .சனின்னா சிறை தான். (நம்முதும் சிம்ம ராசி தானே மவ பெத்து இறக்கியிருக்கிறதாலயும் – நியூ கமர் நம்ம ஒருத்தனுக்கு மட்டும் லொங்கறதாலயும் செம நாஸ்திங்கோ)

2/8 ல ராகு கேது வேற இருக்காய்ங்க.காசு,பணம்,பதவி,பவிசு எல்லாமே கொள்ளை போயிரனும். உலகத்துடனான தொடர்பை வெட்டி விட்டுரனும். தனிமையில தவிக்கனும். அபராதம் வேற ஹெவியா போடுவாய்ங்கனு நினைக்கிறேன். பாம்பு எப்படி நெளியுமோ அப்படி வேதனையில நெளியனும்.

பெரிய ஆறுதல் என்னன்னா இந்த முறை செவ் மே 3 முதல் , ஜூலை கடைசி வரை முறையே 10,11 ஆம் இடங்களில் இருக்கிறதால சிறை தள்ளிப்போகலாம். ஆனால் பிறவு?

print

2,073 total views, 1 views today

S Murugesan
Thirumalaibaabu says:

Hmmmm….Superb…
So BJP may grow very fast in TN. The ruling may change in near future. ???

S Murugesan says:

வாங்க திருமலை பாபு !
முக நூல்லயும் நம்மை தொடர்ரவருதானே ! ஆல் இன்டியா லெவல்லயே பி.ஜே.பி ஆவிசு அடுத்த குரு பெயர்ச்சி வரை தான்னு சொல்லியிருக்கமே !

Thirumurugan says:

I doubt, JJ camp so confident they will be let free, they are preparing for celebrations, i bet apart from astro jj going to left free from all charges

S Murugesan says:

வாங்க திருமுருகன் !
நானும் அப்பார்ட் ஃப்ரம் ஜோதிடம் ஒரு பாய்ண்ட் சொல்றேன். ஒரு ரூவா ரெண்டு ரூவா இல்லை 66 கோடி ரூவாய்க்கு ஒன்னு சோர்ஸ் ஆஃப் இன் கம் காட்டனும் அல்லது அரசு தரப்பு 66 கோடி ரூவாய்க்கு சொத்துக்களை “உருவாக்கி” பொய் கேஸ் போட்டதா நிரூபிக்கனும். இதெல்லாம் நடக்கிற காரியமா?

சரி மோடி கும்பல் காப்பாத்தும்னா நீதித்துறைக்கும் மோதிக்குமே எட்டாம் பொருத்தம். மோடி செல்வாக்கு வேற செல்லா காசாயிட்டு வருது. இந்தியாவே ..ஏன் உலகமே கவனிக்கிற ஒரு மேட்டர்ல கைய வச்சு சுட்டுக்க மோதி என்ன பைத்தியமா?

அல்லது தங்கள் சுதந்திரத்தை பலி போட காத்திருக்கு மோடி கும்பலோட கோரிக்கைக்கு செவி சாய்க்க நீதித்துறைக்கு என்ன மென்டலா?

chandhrasekar says:

சார் நாங்கல்லாம் பாவம் இல்லையா அடுத்து என்ன நடக்கும் தமிழ்நாட்டில் பைசா புரலமாட்டிங்குதூ தொழில் வளம் எப்படி இருக்கும்

S Murugesan says:

வாங்க சந்திர சேகர் !
சனி உச்சமா இருந்த காலத்தை எல்லாம் வீணாக்கிட்டாய்ங்க. என்ன பண்ண? சரி ஒழியட்டும் இப்பம் குரு வக்ர நிவர்த்தி பெற்று உச்சத்துல இருக்காரு. தொழில் காரகனாகிய சூரியனும் சித்திரையில் உச்சம் பெறுவார்.

இந்த ஒரு மாசம் முனைப்பா ஒர்க் அவுட் பண்ணா அடுத்த குரு பெயர்ச்சிக்குள்றயே எத்தனையோ சாதிக்கலாமே !

sabari says:

Enakkum midhuna lagnam.Guru& Sevvai at 7 th house.Sani at 5 th house.Sani is seeing Guru.
Guru Keduthal panna mudiyuma ?

sivakumar says:

Sir,
I need my jadhaga palankal.
Date of birth: 07th June 1983
Time:10.55pm
Place: Erode
State : Tamilnadu

S Murugesan says:

சிவகுமார் !
கட்டண ஆலோசனை -இலவச ஆலோசனை ரெண்டும் இருக்கே. எதுவேணமோ அந்த பட்டனை க்ளிக் பண்ணி ப்ரொசீட் !

Adhi narayanan says:

Anubulla Thiru Murugesan avargalukku. Veera Bramendra Swami avargal sonnavaigal thamizhil thara iyaluma.

Regards

Adhi narayanan

S Murugesan says:

Adhi narayanan !
Sure. Soon. Will try .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *