பெரியார் எண் கணித பலன்

15x10

புதிய தலைமுறை காரவுக திக பொது செயலாளர் வீரமணிய கூப்டு பேட்டிங்கற பேர்ல என்னென்னமோ நாரதர் வேலைல்லாம் செய்ய முக நூல் எங்கும் பெரியார் புராணம் தான். எனக்கென்னமோ தாலி மேட்டர்ல எஜமானுவ கோவத்துக்கு ஆளாகி அந்த கோவத்தை பேலன்ஸ் பண்ணவே இப்டி ஒரு பேட்டிய ஒளிபரப்பினாய்ங்கன்னு சந்தேகம்.

இந்த திருவிழாவுல நாமளும் புகுந்து முடிஞ்சவரை சனத்தை தெளியவைக்கிறோம்னு குழப்பி முடிச்சாச்சு. நம்முது ரெண்டும் கெட்டான் கதை . ஒரு பக்கம் ஆன்மீகம்,கூடவே ஜோதிடம் – மறுபக்கம் பெரியாரை தூக்கி பிடிக்கிறது. சித்தபுருசருன்னு அடிச்சு சொல்றது.

செரி முழுக்க நனைஞ்ச பிறவு முக்காடு ஏதுக்கு? அதான் இந்த பதிவு .

பெரியார் பிறந்தது 1879 செப்டம்பர் 17. உயிர் எண் 1+7 =8 இங்கே ஒன்னுன்னா சூரியன் இவர் ஆத்ம காரகன், ஏழுன்னா கேது .இவர் ஞான காரகன். இதனாலதேன் பெரியார் வேதம்,புராணம், விக்கிரக ஆராதனை இத்யாதில எல்லாம் சிக்காம ஆத்ம சுத்தியோட ,ஆத்ம சாட்சியா செயல்பட்டாரு.
சூரியன் எப்படி இது கயிறு -இது பாம்புன்னு பகுத்து காட்டி வெளிச்சம் போடறாரோ அப்படி உலகத்தை – உள்ளபடி காட்டும் பகுத்தறிவு பகலவனா செயல்பட்டாரு.

ஆத்மாவுக்கு மதமில்லை ,சாதியில்லை, எவ்வித பேதமும் இல்லை . சூரியன்னாலே செல்ஃப். அதனாலதேன் செல்ஃப் ரெஸ்பெக்ட் /சுயமரியாதையை தூக்கி பிடிச்சாரு.

கேதுன்னாலே புதுமை தான். கேது செவ்வாயை போல் பலனளிப்பவர். செவ்வாய்னாலே புரட்சி தானே .

உயிர் எண்ணில் உள்ள 1+7 கூட்டப்பட்டா 8 வரும். எட்டு = சனி . சனி = தலித்,பிற்படுத்தப்பட்டோர்,ஒடுக்கப்பட்டோர்,உழைப்பாளி வர்கம். சனின்னாலே உழைப்புத்தான். இவரை கரும காரகனு சொல்றம்.

கருமம்ங்கற வார்த்தைக்கு ரெண்டு அருத்தம் உண்டு. ஒன்னு உழைப்பு/செயல் , அடுத்தது வினைப்பயன். பூர்வ வினைப்பயனால் வந்த சிக்கலை கூட இந்த பிறவியிலான கடும் உழைப்பால் தீர்க்க முடியும் மாற்ற முடியும்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் இல்லியா?

கைரேகையில சனி ரேகைய விதி ரேகைன்னு சொல்றம், சனி வழி நடந்து சென்றால் – விதி வழியே மதி செல்லும். இதுக்கு பெரியார் கருஞ்சட்டை அணிந்ததே சாட்சி . சனிக்குரிய நிறம் கருப்பு .

பெரியாரோட பிறந்த தேதி 17-9-1879 . இதில் உள்ள எண்களை எல்லாம் கூட்டினா 42 வருது . 2 = சந்திரன் , 4 = ராகு சந்திரனோட ராகு சேர்ந்தா நுரையீரல் சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை வரனும். அல்லது மனம் தொடர்பான பிரச்சினை வரனும்.

4+2 = 6 . இதான் கூட்டு எண். ஆறுன்னா சுக்கிரன். ஏற்கெனவே சொன்னபடி உயிர் எண் 8 . இது சனி காரகம். சுக்கிர, சனி சம்பந்தப்படும் போது அங்கே சனியோட டாமினேஷன் தான் அதிகமா இருக்கும்.

பயங்கர சிக்கன வாதி, கடும் உழைப்பாளி, லுங்கி ,கருஞ்சட்டை ,கைத்தடி ,மூத்திரப்பானை (இதெல்லாமே சனி காரகம் தான்) பெரியார் குளிக்கவே பயப்படுவாரு, இன்னம் தலைக்கு குளிக்கனும்னா ரெம்ப கஷ்டம். அவரு ஆருக்கிட்டனா பேசிக்கிட்டிருக்கும் போது நைசா பின்னாடி இருந்து எண்ணெய் கிண்ணத்தை அவர் தலைல கவுத்துரனுமாம்.

இப்படி சுக்கிர காரகத்தையே டச் பண்ணாம இருந்ததாலயோ என்னமோ அவரோட சுக்ர பலம்லாம் அக்யுமுலேட் ஆகி மணியம்மை அவர் வாழ்வில் வர்ராய்ங்க.

எச்சரிக்கை:
பெரியார் பிறந்த நேரம் தரப்பட்டால் ஜாதக பலனும் சொல்ல தயார்.

One Reply to “பெரியார் எண் கணித பலன்”

siva kumar

11/04/2015 at 11:06 am

கிளி சோசியம் பற்றி ஒரு பதிவு போடறேன்னு சொன்னீங்களே தலைவா போட்டீங்களா? ரொம்ப நாளா உங்க பக்கத்துக்கு வரலை

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.