மன்மத ஆண்டு பலன் (2015 மார்ச் முதல் 2016 மார்ச் வரை)

PMO2

அண்ணே வணக்கம்ணே !
சொந்த வாழ்க்கையிலான சிக்கல்கள் நம்மை பாதிக்கிற அளவுக்கெல்லாம் நாம வீக் இல்லை . வெளி உலகத்துல என்னதான் இழவெடுத்து கிடந்தாலும் நம்ம மனோராஜ்ஜியம் கரீட்டா நடந்துக்கிட்டிருக்கிற வரை ஆயிரம் யானை பலம் நமக்குண்டு. எப்பயாச்சும் தப்பு பண்ணிட்டமோன்னு ஞம ஞமங்கும் பாருங்க அப்பத்தேன் படா பேஜாரா பூடும்.

நாம கடந்து வந்த இமிசைகளோட ஒப்பிட்டா இதெல்லாம் ஒன்னமே இல்லை. நம்ம வாழ்க்கை பல முறை ஜீரோ லெவல்ல இருந்து ஆரம்பிச்சிருக்கு. வாழை போல வெட்ட வெட்ட முளைச்சு வந்துக்கிட்டே தான் இருக்கம்.

ஸ்தூல பிரச்சினைகளுக்கு சம்பந்தமே இல்லாம ஒரு தேக்கம். பார்ப்பம்.. இது இந்த தேதியோட ஒழிஞ்சுருச்சா பார்ப்பம்.

என்னா ஒரு தகிரியம்னா ஆத்தா நீ என் வீட்டை பார்த்துக்க நான் இந்த நாட்டை பார்த்துக்கறேன்னு கெத்தா சொல்றமில்லை. நம்ம பார்ட்டை ஓரளவு இன்னைக்கு ஒர்க் அவுட் பண்ணிட்டம்.

மோதிக்கு அனுப்பின யோசனைகளை தெலுங்குல ஒரு பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கு வினியோகம் பண்ணிட்டம். மறுபடி ஷெட் ஆயிட்ட ஐ ஃபோனை வச்சுட்டு சிங்கியடிச்சிருக்கனும்.என்னமோ ஆத்தா தயவுல அதை அட்மிட் பண்ணிட்டு வந்துட்டன்.

21 நாளா நொண்டியடிச்ச ப்ராட்பேண்ட் கனெக்சனும் பறக்க ஆரம்பிச்சிருக்கு. கைவசம் ஸ்டாக் இருந்த ஃபோட்டோக்களை ஸ்லைட் ஷோவாக்கி யு ட்யூப்ல போட்டிருக்கன். இந்த பாதி ராத்திரி 1.44 க்கு வென்னீர் போட்டு வச்சிருக்கன்.ஒரு குளியல் போடனும். ஓகே மேட்டருக்கு போயிரலாமா?

வருடம் பிறக்கும் நேரத்து லக்னம்,கிரகஸ்திதியை ஜகலக்னம்னு சொல்றாய்ங்க. இதை நம்ம ஸ்டைல்ல அனலைஸ் பண்ணி மேக்ரோ லெவல்ல சில பலன் எல்லாம் சொல்றன்.

லக்னம் கடகம் -லக்னாதிபதி 7 ல் :
மன்மத வருடத்தை பற்றி ஒரே வரியில சொல்லனும்னா “ஏறினா ரயிலு இறங்கினா செயிலு” ஷேர் மார்க்கெட் முதல் விலைவாசி வரை எல்லாமே சகட்டுமேனிக்கு லாஜிக்கே இல்லாம தூக்கும் ,படுத்துக்கும். ரெண்டே கால் நாளைக்கொரு ஷஃப்லிங் இருக்கும். ரெண்டே கால் மாசத்துக்கு ஒரு கரெக்சன் இருக்கும்.தாஜ் ஹோட்டல் சம்பவம் கணக்கா கடல் வழியே சனியன் வரலாம்.இந்த தாட்டி வட இந்தியா சேஃப். சவுத் இந்தியாவுக்கு பல்பு மாட்டலாம். கடற்படையில எதுனா ஊழல் வெடிக்கலாம். அணைகளுக்கு ஆபத்து , நதி நீர் தகராறுகளின் உச்சம், வெள்ள அபாயம், அழிவுகளுக்கும் வாய்ப்பிருக்கு. அடுத்த 12 மாசத்துல ஒரு தாட்டி சந்திர சேகர் அரசு மாதிரி தங்கத்தை அடகு வைக்கிற நிலையும் வரும். அதே சமயம் உலக வங்கிக்கோ -அமெரிக்காவுக்கோ கடன் கொடுக்கிற நிலையும் வரும்.

பத்துல சூ+செவ் , மூன்றில் ராகு:
இதை பார்க்கும் போது மோதி அரசு எதுனா அதிரடியில இறங்கி யுத்தம் போல கூட எதுனா அரங்கேறலாம். சூ+செவ் சேர்க்கை சர ராசியில இருக்கிறதால உள் நாட்டு கலகம்னு சொல்ல மிடியல. அண்டை நாடுகளோட எதுனா முட்டிக்கலாம்.

பலன் இருக்குமா?
வாய் பேசா பிள்ளை வாய திறந்து மொத வார்த்தையா அம்மாவை நீ எப்ப தாலியறுப்பேன்னு கேட்டாப்ல மேற்படி அதிரடியால மீள முடியாத நஷ்டம் தான் ஏற்படும். ஏன்னா சூ+செவ்வாயோட விரயாதிபதியான புதன் சேர்ந்திருக்காரே.
என்ன செய்யலாம்?

ஒளுங்கு மருவாதியா குக்கிராமங்களை உற்பத்தி கேந்திரங்களா மாற்றி (சூரியன்) சீனா போல எலக்ட் ரானிக்ஸ் தொழிலை குடிசை தொழிலா டெவலப் பண்ணலாம் ( செவ்) இங்கே விரயாதிபதி சேர்க்கை இருக்கிறதால சேல்ஸ் பிச்சுக்கும்.

சுக்கிரன் 11 ல் ஆட்சி:
கலைஞர்களுக்கு , பெண்களுக்கு வலிமை பெருகும். ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ்,அழகு ,அலங்கார ,உணவு துறைகள் முன்னேற்றம் காணலாம். (இதனால நாட்டுக்கு நன்மையான்னா ஊஹூம்)

9 ல் கேது:
நாட்டின் சேமிப்பு,முதலீடுகள் ப்ளாக் ஹோல் கணக்கா உறிஞ்சப்படலாம். பொருளாதார தடைகள் வரலாம். பெரியண்ணன் கூட முட்டல் மோதல் வரலாம். இந்துக்கள் தவிர்த்து இதர மதத்தவர்களுக்கு நடக்கும் அக்கிரமங்களால் கூட மேற்படி நிலை ஏற்படலாம்.

7 க்குடைய சனி 5 ல் வக்ரம்:
நேரு காலத்துல சைனாகாரன் ஆப்படிச்சாப்ல நட்பு நாடுகளே ஆப்படிக்கலாம். மத்தியில் ஆளும் என்.டி.ஏ கூட்டணியில், பா.ஜ.கவில் கூட பிளவுகள் வரலாம்.மத்தியிலயே இப்படின்னா மானிலத்துல சொல்லவே தேவையில்லை.

சூ,செவ் சேர்க்கை மேஷத்துல ஏற்பட்டதால தென்னிந்திய தலைகள் உருள நேரலாம் (பதவி இழப்பு/மரணம் இத்யாதி)

6-9 க்குடைய குரு லக்னத்தில் ஆட்சி:
முதல் 6 மாதம் உலக நாடுகளுடன் ,எதிர்கட்சிகளுடன் மக்களுடன் மோதல் போக்கு தொடரும். உச்சமும் பெறலாம். ஆனா 7 ஆவது மாதம் முதல் அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

10 Replies to “மன்மத ஆண்டு பலன் (2015 மார்ச் முதல் 2016 மார்ச் வரை)”

siva kumar

11/04/2015 at 11:15 am

அவரவர் ஜாதகத்தில் கிரக அடிப்படையில் தான் வாழ்க்கை இருக்கும் எனும்போது ராசிபலன் என்பதே அர்த்தமற்றதாக இருக்கிறதே. அது தேவையா? நான் மகர ராசி – இந்த குரு பலன் சனி பெயர்ச்சி மாதிரி நல்ல பலன்களை படித்த மாதிரி என் வாழ்க்கையிலேயே படித்ததில்லை. ஆனால் ஒரு சின்ன மாற்றம் கூட பார்க்கவில்லை. ஆனால் ஏற்கனவே என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்திருப்பேன் என்று கூறியது மட்டும் மிக சரியாக உள்ளது..

Reply

  S Murugesan

  11/04/2015 at 7:43 pm

  வாங்க சிவகுமார் !
  //அவரவர் ஜாதகத்தில் கிரக அடிப்படையில் தான் வாழ்க்கை// என்றால் புலியா? புளியா?ங்கறது வரை ஜாதகம் டிசைட் பண்ணுது. புலின்னா ஜூவுலயா? சர்க்கஸ்லயா?ங்கறதை ராசி பலன் டிசைட் பண்ணுது. புளின்னா திருப்பத்தி புளியோதரையில புளியா? பழைய சோத்துல ஊற வைக்கிற புளியாங்கறது ராசி பலன் டிசைட் பண்ணுது.

  கிளிஜோசிய மேட்டர்? ஞா இருக்கு. சந்தர்ப்பம் வரட்டும் .போட்டுரலாம்.

  Reply

   sivakumar

   16/04/2015 at 11:13 am

   kili josiya matter ketkalaamnu paarththen. neengale sollitteenga.

   Reply

   siva kumar

   18/04/2015 at 3:28 pm

   naamellaam eliyaa puliyaanne theriyala

   Reply

charu

02/04/2015 at 3:44 pm

very grateful to you

thanks a lot

Reply

charu

02/04/2015 at 10:24 am

சார்

என் மகள் இந்த வருடம் 10ம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் ச்ரத்தை இல்லாமல் இருக்கிறாள். நல்ல மதிப்பெண் எடுக்க தங்கள் அறிவுரை / சுலோகம் கூற வேண்டும் என்று பணிவுடம் கேட்டு கொள்கிறேன்.

Reply

  S Murugesan

  02/04/2015 at 1:05 pm

  வாங்க சாரு !
  ஐம் என்பது சரஸ்வதி பீஜம். ஓம் ஐம் க்லீம் சௌஹ வத வத வாக்வாதினி ஸ்வாஹா என்று ஜபிக்க சொல்லுங்கள்.

  Reply

Thirumalaibaabu

30/03/2015 at 10:44 am

Thank You for the post.

Reply

maruthappan

28/03/2015 at 6:49 pm

where is rasi palan

Reply

  S Murugesan

  28/03/2015 at 8:58 pm

  வாங்க மருதப்பன் !
  குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி,சனி பெயர்ச்சி எல்லாம் முடிஞ்சுருச்சு . இனி அடுத்த குரு பெயர்ச்சி நடக்கும் போது தான் ராசிபலன். சாரி !

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *