மீண்டும் பெரியார்

15x10

அண்ணே வணக்கம்ணே !
மண வாழ்வில் சிக்கல்கள்: ப்ரிலிமினரி ரெமிடீஸ்னு ஒரு பதிவும் போட்டிருக்கன் .படிச்சுக்கோங்க. பெரியாருக்கும் நமக்கும் உள்ள அவினாபாவ சம்பந்தம் பத்தி ஆதியோடந்தமா ஒரு பதிவு போட ஆசைப்பட்டம். அதுவும் தள்ளிக்கிட்டே போகுது. (ராசிக்கு 2-8ல ராகு கேது?)
ஆகவே பெரியாரை பத்தி நாம எழுதின பதிவுகள் கீழே.

பதிவு 1

பதிவு 2

பதிவு 3

பதிவு 4

(இன்னம் நிறைய பதிவுகள் பெரியாரை பத்தி எழுதியிருக்கம். ஆருனா லிங்குல கேட்டா இன்னொரு செட் தரேன்.பதிவுக்கு போயிரலாமா?

முன்பொரு முறை ..அப்பவெல்லாம் விண்டோஸ் எக்ஸ்பி தான் ஓ.எஸ்.அதை போட முயன்று (மீண்டும் மீண்டும்) அவாஸ்த் போட்டதும் நாஸ்தியாகி இப்படியே பலமுறை நடக்க -செம காண்டாகி டெஸ்க் டாப்பில் வழக்கமாய் வைக்கும் வினாயகரை தவிர்த்து பெரியாரின் படத்தை வைத்து விட்டேன்.
சரித்திரம் பித்தனை போல் பிதற்றுமாம் . நம்ம வாழ்க்கை சரித்திரத்துக்கு ஒன்னு விட்ட தம்பி போல. ரிப்பீட் ஆகுதுப்பா !
இந்த முறை லேசா பிரச்சினை வந்ததுமே ஓ.எஸ் போட அனுப்பி வச்சம். அன்னைக்கு வேலையாகல. மறு நாள் ஜாதக பலன் பதிவு செய்து (அது டெஸ்க் டாப்ல சேவ் ஆகும்) -பதிவு செய்ததை மறந்து பார்மட்டுக்கு அனுப்ப 2 ஆடியோ File ம்.. போயே போச்.

போனது போவட்டும்னுட்டு மறுபடி புதுசா ஆரம்பிச்சிருக்கலாம். ஈகோ ஆர விட்டுது. ரெக்குவா,பாண்டோரா,ஈஸுஸ்னு ஒரு ரவுண்டு வந்து ஒரு வழியா அதை மீட்கும் எண்ணத்தை விட்டு வேலையில் இறங்கினேன். ப்ர்ர்ர்ர்ர்ர்.

மவளுக்கு மவன் பிறந்த மறு நாள் போயி பார்த்தன். என்ன பேரு வைக்கலாம்னு கேட்டாய்ங்க. “டும்பு”ன்னு வச்சிக்கங்கன்னேன். எப்டியும் மவளும் 7 ஆம் கிளாஸ் 3 தபா பெயில். மாப்ளையும் படிக்காத மேதை .இதுகளுக்கு பொறந்தது பெரீ டுபுக்கு பார்ட்டியா தான் இருக்கும். டும்புன்னு பேரு வச்சா அதுக்கு ரைமிங்கா டுபுக்குன்னு கூப்டுக்கலாம்ங்கறது ப்ளான்.

டும்பு -டுபுக்குன்னா அந்தரத்துல நிற்கும். அதை தொடர்ந்து ஏதோ வார்த்தை வரனும். என்னவரும்னு ரோசிச்சா ராமசாமி. சீரியசா நாமகரணத்துக்கு ப்ளான் பண்ணும் போது தாரக் ராம் ங்கற பேரு ஃபைனலைஸ் ஆச்சு.

அவனை தூங்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தும் போது தாரக் ராம் னு கூப்பிடறது அன்னியமா தோனிச்சு. அதனால “ராம் சாமீ”னு விளிப்பது வழக்கம். இந்த பேரை தொடர்ந்து கூப்டுக்கிட்டே இருந்ததாலயோ என்னமோ பெரியாரோட ஆத்மா “கூப்டியாப்பா”னுட்டு வந்துருச்சு போல.

அன் லிமிட்டட் நெட் ஆக்சஸ் தான், ஃபார்மட் ஆன சிஸ்டம் தான்.ஆனால் என்னா டார்ச்சரு? பார்த்து பார்த்து பெரியாரை டெஸ்க் டாப்ல வச்சுட்டன்.
பெரியாரை டெஸ்க் டாப்ல வச்ச பிறவு ஒன்னொன்னா செட் ரைட் ஆயிட்டு வருது . பெரியார் நெஜமாலுமே பெரிய ஆளுங்கோ? வேணம்னா ட்ரை பண்ணிப்பாருங்கோ !

One Reply to “மீண்டும் பெரியார்”

மண வாழ்வில் சிக்கல் : ப்ரிலிமினரி ரெமிடீஸ் | அனுபவஜோதிடம்

21/03/2015 at 8:01 am

[…] கூடவே “மீண்டும் பெரியார்”ங்கற பதிவும் போட்டிருக்கன். படிச்சு பாருங்க. […]

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *