செவ் காரக மனைவிகள்: தீர்வுகள்

goyya 3

அண்ணே வணக்கம்ணே !
சர்தார் வல்லபபாய் பட்டேல் ஒரு லாயர். ஒரு கேஸ்ல வாதம் பண்ணிக்கிட்டிருக்காரு.அந்த சமயம் அவருக்கு ஒரு டெலிகிராம் வருது. அதை வாங்கி பார்த்து -பாக்கெட்ல வச்சுக்கிட்டு வாதத்தை முடிக்கிறாரு. மேட்டரு என்னன்னா அவரோட மனைவி இறந்து விட்டார்.
இதை எல்லாம் படிச்சு இப்டியெல்லாம் கடமையே கண்ணா வாழனும்னு நினைச்ச பார்ட்டி தான் நாமளும். ஆனால் நமக்குன்னு வரும் போது எல்லாமே உதற ஆரம்பிச்சுருது.

எல்லாரும் ஒரே போல வாழ முடிஞ்சுட்டா வல்லபபாய் பட்டேல் கதை ஏன் பாட புஸ்தவத்துல வரப்போவுது -நாம ஏன் அதை படிக்க போறோம்? நிற்க மவளோட டெலிவரில காம்ப்ளிக்கேஷன் -அவளுக்கு பிறந்த மகனுக்கு ஹார்ட் ப்ராப்ளம் -மேஜர் சர்ஜரி எல்லாம் சேர்ந்து நம்மை பேதியாக்கிருச்சு. இதனால இந்த தொடர் கொஞ்சம் காலம் டீல்ல இருந்துருச்சு.

கடந்த வெள்ளியன்று எமன் வாய்ல இருந்து மீண்டு வந்தாப்ல மவ வீடு வந்து சேர்ந்துட்டா -க்ளீன் அண்ட் க்ரீன் ப்ராசஸை கன்டின்யூ பண்ணிக்கிட்டிருந்தம். வெட்ட வெட்ட முளைக்கும்பாய்ங்களே அப்படி எவ்ளதான் டிஸ்போஸ் பண்ணாலும் வந்துக்கிட்டே இருக்குப்பா.. தூத்தெறிக்க.
செவ் காரக மனைவிகளுக்கு பரிகாரங்களை கொடுத்தே ஆகனும்னு இந்த பதிவை ஆரம்பிச்சிருக்கன்.

ஒரு பெண் ஜாதகத்துல செவ் பிரதிகூலமான இடத்துல அமைஞ்சுட்டா அதன் எஃபெக்ட் என்னன்னு கடந்த பதிவுலயே பார்த்துட்டம்.இப்பம் ரெமிடீஸ் பார்ப்போம்.

1.அதி உஷ்ணம்:
இதை சொன்னா அல்லாபத்தி காரவுக சிரிப்பாய்ங்க. ஆனால் நெஜம் பாஸ்..நம்ம உணவுகளில் எதெல்லாம் சூடு, எதெல்லாம் குளிர்ச்சி – நம்ம பாடி கண்டிஷன் கூலா -ஹாட்டான்னு தெரிஞ்சாலே அனேக பிரச்சினைகள் ஓவர்.அதி உஷ்ணம் காரணமா எத்தனையோ பிரச்சினைகள் வரும்.
உ.ம் சொட்டு மூத்திரம், மலச்சிக்கல்,கட்டிகள்,கொப்புளங்கள்,மூக்குல ரத்தம் வர்ரது முதல் மூலம் வரை . இதை ஓவர் கம் பண்ணனும்னா…….
அ) சமையலுக்கு நல்லெண்ணெய் யூஸ் பண்ணலாம் (இது கூட அழகான பேக்ல வர்ர ப்ராடக்டா இல்லாம செக்குல ஆடி பழைய வாட்டர் பாட்டில்ல வர்ர எண்ணெய் சிரேஷ்டம்.
ஆ) கொலஸ்ட் ரால் பிரச்சினை இல்லின்னா நெய் சேர்த்துக்கலாம். கொ.பி.இருந்தா மோர் சேர்த்துக்கலாம்.
இ)அதிக அளவுல தண்ணீர் அருந்தலாம்.
ஈ)சூட்டை கிளப்பும் உணவுகளை தவிர்க்கலாம். உ.ம் கோழிக்கறி,பூமிக்கடியில் விளையும் விஷயங்கள்.
உ)ஃபைபர் அதிகம் உள்ள உணவை சேர்த்துக்கலாம் – நெல்லா வேக வச்சு – மென்று விழுங்கலாம் ( நொறுங்க தின்றால் நூறு வயசாம்ல)
ஊ)ப்ளட் ப்யூரிஃபிகேஷன்ல கான்சன்ட் ரேட் பண்ணனும். உ.ம் அருகம்புல் ஜூஸ் குடிக்கலாம்,ரேப்பிட் ப்ரீத்திங், பிராணயாமம் ,வியர்வை கொட்ட போதுமான உடற்பயிற்சி .

2.மாத விலக்கு சக்கரத்தில் குளறுபடிகள்:
முதற்கண் உடலில் தேவையான ரத்தம் இருந்தா அதது க்ளாக் வைஸ் நடக்கும். பாடில ப்ளட் ஷார்ட்டேஜ் இருந்தா இமிசை தான். இதனால ரத்த விருத்திக்குண்டான நடவடிக்கைகள் முக்கியம். உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கலாம். ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணனும். சரியான -சம விகித- சகால போஜனம்.
இந்த மா.வி.ச குளறுபடிகள் யூட் ரஸ் கேன்சர்ல கொண்டு விட்டுரும்.டேக் கேர் !

3.கோபம்:
கோபங்கறதே பலவீனத்தின் வெளிப்பாடுதான். நிலைமை கை விட்டு போயிருச்சுங்கற போதுதான் கோபமே வரும். தன் மீதான கோபம் பிறர் மீது வெளிப்படலாம். ஸ்ட்ரீட் ஃபைட்ல கவனிச்சு பாருங்க. நோஞ்சானா இருக்கிறவன் தான் மொதல்ல கைய நீட்டுவான்.செமர்த்தியா வாங்கி கட்டிக்குவான். உடல்,மன ரீதியிலான பலவீனங்களை விசாரித்து அறிஞ்சு அவற்றை ரெக்டிஃபை செய்தாலே கோபம் பெருமளவு குறைஞ்சுரும்.
கோபம் நடிக்கப்பட்டால் காரியம் நடக்க கொஞ்சமேனும் வாய்ப்பிருக்கு. நெஜமாலுமே கோபபட்டா? மொக்கை தான்.

4.விரோதங்கள்:
நீங்க ஒருத்தரை விரோதியா நினைக்கிறிங்கனா அவர் கிட்டே உங்களுக்கு நிறைய பிடிச்சிருக்கு.கொஞ்சமே கொஞ்சம் பிடிக்கலன்னு அருத்தம். அவர் கிட்டே எதுவுமே பிடிக்கலன்னு வைங்க பொஞ்சாதியோட போறச்ச குட்டிகளை பார்த்த கணக்கா “ப்ளர்ரா” பார்த்துட்டு முகத்தை திருப்பிக்குவிங்க.
உங்க முன்னேற்றத்துக்கு பலான பார்ட்டி தான் தடைன்னு நினைக்கிறது தப்பு. உங்க முன்னேற்றத்தை தடுக்க முடிஞ்ச ஒரே பார்ட்டி நீங்க தேன். நீங்க மட்டும் தடையா இல்லேன்னா எல்லா தடையும் காதலியோட உதட்டை நோக்கி நகரும் போது எதிர்படும் மேலாடை மாங்கனி தான். ஃப்ரீயா உடுங்க..
அட ஒரு எதிரி உங்களை -ஐ மீன் உங்க இடத்தை காலி பண்ணிட்டான்னு வைங்க.. பெரிய இடத்துக்கு அனுப்பறான்னு அருத்தம்.
எல்லாமே நம்ம பார்வையில தான் இருக்கு ப்ரோ !

5.நெருப்பு:
தீக்குள் விரல் வைத்தேன் நந்தலாலான்னு பாரதி பாடினாரு. இது ஏதோ அவருக்கு மட்டும் இருந்த நிறைவேறா ஆசை இல்லை, நம்ம எல்லாருக்குமே நெருப்புல விரலை வைக்கிற இன்ஸ்டிங்ட் இருக்கு. அவரு கவிஞருங்கறதால பாட்ல வச்சாரு. நாம ஸ்பாட்ல வச்சுர்ரம்.
இந்த காதல்,கத்திரிக்காய் எல்லாம் நெருப்பு அல்லாது வேறென்ன? ஒவ்வொரு எலக்ட் ரானிக் எக்விப்மென்ட்லயும் ஆன் -ஆஃப் ஆப்சன் இருக்கிறாப்ல ஒவ்வொரு உசுருலயும் தன்னை காப்பாத்திக்கற இன்ஸ்டிங்டும் இருக்கும் ,தன்னை கொன்னுக்கற இன்ஸ்டிங்டும் இருக்கும்.
இதெல்லாம் சைக்காலஜி.
கியாஸ் ஸ்டவ் நாபை ஆனுக்கு மாத்தினதும் -கொஞ்ச நேரம் அப்டியே விட்டா என்னதான் ஆகும்ங்கற எண்ணம் எல்லாருக்குமே வரும்.ஆனால் செவ் அனுகூலமா உள்ளவிக ஒரு உதறு உதறி ஆஃப் பண்ணிர்ராய்ங்க.

6.சகோதரம்:
ஒரே தாய் -ஒரே தந்தைக்கு பிறந்தாலும் அண்ணன் தம்பி தகராறெல்லாம் சகஜம். எவன் எனர்ஜெட்டிக்கா இருக்கானோ அவன் கான்ஃபிடன்டா இருப்பான் , அண்ணனோ தம்பியோ கெட் ஆன் ஆகும் போது அசால்ட்டா எடுத்துக்குவான்.
எவன் சோனியா இருக்கானோ அவன் தாழ்வு மனப்பான்மையில இருப்பான். கடுப்பாவான். லொள்ளு பண்ணுவான். இங்கே சகோதரம்ங்கறது சக உயிர் தான். ஒவ்வொரு உசுரும் சர்வைவலுக்காக என்னவேணா செய்யும்.அதுலயும் சோனியா இருக்கிற உசுரு?
இந்த செவ் மேட்டர்ல இன்னம் நிறைய மேட்டர் இருக்கு இதுக்கெல்லாம் சொல்யூஷனும் இருக்கு.அடுத்தடுத்த பதிவுகள்ள நிச்சயமா தரேன்.
தொடர்வோம் ..

One Reply to “செவ் காரக மனைவிகள்: தீர்வுகள்”

Thirumalaibaabu

27/02/2015 at 10:06 am

தங்களது குழந்தையும் , அவரது சிசுவும் விரைவில் அரோக்கியமான நிலைக்கு திரும்ப இறைவனை மனதார வேண்டுகிறேன் .
//இதை எல்லாம் படிச்சு இப்டியெல்லாம் கடமையே கண்ணா வாழனும்னு நினைச்ச பார்ட்டி தான் நாமளும். ஆனால் நமக்குன்னு வரும் போது எல்லாமே உதற ஆரம்பிச்சுருது.//
நீங்களே இப்படி சொல்லும்பொழுது எங்களின் நிலைமை ?

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *