Categories  narendramodi

பிரதமர் அலுவலகம் பதில் தந்தே உட்டது.

மோதிஜிக்கு பல யோசனைகளை 2014 ஜூலை ,16 ஆம் தேதி அனுப்பியது தெரிந்ததே.அதற்கு முன்பே இந்த யோசனைகளை சேஞ்ச் ஆர்க் வெப்சைட்ல வச்சப்ப 169 பேர் சைன் பண்ணி சப்போர்ட் பண்ணாய்ங்க. அவிகளுக்கெல்லாம் நன்றி.

இந்த மேட்டர்ல பி.எம்.ஓ ரெஸ்பான்ட் ஆகலன்னு 2015 ,ஜன ,6 ஆம் தேதி “கொய்யா ! ஸ்டாம்புக்கு காசில்லையாடான்னுட்டு அம்பது ரூவா போஸ்டல் ஆர்டர் அனுப்பினம்.அதுக்கும் நோ ரெஸ்பான்ஸ்.

பிறவு ஜனவரி 31 ஆம் தேதி ரைட் டு இன்ஃபர்மேஷன் ஆக்ட் படி பத்து ரூ. போஸ்டல் ஆர்டர் அவுட் ஆஃப் ஸ்டாக்னுட்டு இருவது ரூ போஸ்டல் ஆர்டர் வச்சு சில கேள்விகள் கேட்டம்.

என்னத்தை கேட்கப்போறம்?

பிரதமருக்கு நான் போட்ட லெட்டர் என்ன ஆச்சுன்னு தான் கேட்கப்போறோம். இந்த மேட்டர்ல பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஒரு மீட்டிங்கே போட்டு ரோசிச்சாப்ல இருக்கு.

நாம ஆர்.டி.ஐ படி கேள்வி கேட்டது ஜனவரி31. ஆனால் அதுக்கு மிந்தியே காறி துப்பி அம்பது ரூவா போஸ்டல் ஆர்டர் அனுப்பினது ஜனவரி 6.
இன்னைக்கு தந்திருக்கிற பதில்ல ஜனவரி 6 ஆம் தேதி போட்ட லெட்டரையே ( அம்பது ரூ போஸ்டல் ஆர்டரோட) ஆர்.டி.ஐ அப்ளீகேஷனா கணக்கு பண்ணி பதில் கொடுத்தே உட்டானுங்கோ.

கடிதத்தின் சாராம்சம்:
“உங்க அப்ளிகேஷனை உரியவிகளுக்கு அனுப்பினம் . நீங்க ஜூலை 15 ஆம் தேதி நீங்க பிரதமருக்கு போட்ட லெட்டரு பெறப்பட்டு -ரெகார்ட்ல வச்சிருக்காய்ங்க” (ஒரு வேளை வெயில் காலத்துல மொட்டை மாடியில காய வச்சு ஊறுகா போடுவாய்ங்க போல)

நாம அனுப்பினதே ஜூலை 16 தான்.ஆனால் ஜூலை 15ன்னு மென்ஷன் பண்ணியிருக்கானுவ. ஒரு வேளை வெத்திலைல மை போட்டு 15 ஆம் தேதியே பார்த்துட்டாய்ங்களோ?

அப்பல்லேட் அதிகாரியோட பேரு/ஹோதா எல்லாம் கொடுத்திருக்காய்ங்க.ஆனால் அப்பீல் பண்றதா வேணாமானு இன்னம் முடிவு பண்ணல.
இந்த மேட்டரை முக நூல்ல தொடர்ந்து ஷேர் பண்ணிக்கிட்டிருந்தப்போ அங்கன உள்ள ஜூரிங்க -போராளிங்க-தலீவருங்க -அறிவு ஜீவிங்க ஆருமே கண்டுக்கல்ல.

அப்பமே நினைச்சேன்.
அச்சாணியமா பிரதமர் அலுவலகமே பதில் கொடுத்துட்டா இவிகல்லாம் என்ன செய்வாய்ங்கன்னு ..நினைச்சேன். நடந்துருச்சு.

திருப்தி:
1.கடிதம் கிடைத்த தகவல் அஃபிஷியலா பதிவாயிருச்சு.
2.போஸ்டல் ஆர்டர் ஃபார்முலா சக்சஸ். ஆர்.டி.ஐ -ய விட பவர் ஃபுல் போல.ஆனால் ஆர்.டி.ஐ அப்ளீகேஷன் போன பிறவு தான் தோண்டி துறெடுத்து -போஸ்டல் ஆர்டரை கண்டுபிடிச்சிருக்காங்க- அலறியடிச்சு பதில் வந்துருக்கு.
3.இப்பம் “The Ball is not at my court” ஒரு மூனு மாசத்துக்கு பிறவு நம்ம ரோசனைகள் எந்தளவுக்கு அமலாகுதுன்னு பார்த்துக்கிட்டு -பொழுது போகாத சமயம் ஒரு ரிமைண்டர் அனுப்புவம்.

திட்டம்:
அடுத்து பன்னீர் செல்வத்துக்கு அம்பது ரூ அனுப்பலாம்னு இருக்கன்.

எச்சரிக்கை:
இந்த சைட்ல என்னமோ பிரச்சினை போல இமேஜ் போஸ்ட் பண்ண முடியல. மீடியா கேலரியே காணோம்.அதனால முக நூல்ல ஷேர் பண்றேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

S Murugesan
rmsrithar says:

Thank you for your updating the information,

If A.B. Vajpayee or Advani may be in PM Position surly they will implement this projects,
because they taken some initiatives for river connecting projects.
Example of they achieved for developments with minority government :- National Highways projects connected to all major cities, Mobile phone, airways etc….

Modi Ji is the real magic Ji. with magic & advisement, he is shown that India got developed.
what is the real condition of development, Delhi people shown the result to Central Government.

With majority government not achieved means, never possible. He wasting the good opportunity,

A.B. Vajpayee is from UP, He not favouring for UP, He consider entire India. Modi Ji is favouring Gujarat Example – Bullet train for Ahmedabad to Mumbai. this budget is enough for connecting all the river by small canal.
Five year wasting by Advertising with co actor of Obama,
with Majority Government 10 month what they achieved.
People is not idiots, now they will realize that Congress or AAP is better than BJP.

one & only God is saving our country,

S Murugesan says:

வாங்க ஸ்ரீதர் !
இந்த மேட்டர்ல உங்களுக்கு பெருசா ஏதும் அனுபவமில்லை போல. என் அனுபவத்துல எங்கள் முன்னாள் முதல்வர் என்.டி.ஆர், எம்.பி ராமகிருஷ்ணா ரெட்டி தவிர வேறு எந்த பெரியமனிதரிடமிருந்தும் உடனடியா பதில் வந்ததே இல்லை.

வாஜ்பாயி கதை தெரியாது. அத்வானிக்கும் ஆர்.பியே அனுப்பியிருக்கம்.பதில் தான் இல்லை.

ponnusamy says:

சகோ! வணக்கம். கடந்த 1986 ல் சத்லஜ்-யமுனா நதி இணைப்பு திட்டம் நடைமுறையில் செயல் படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும் போது தான் காலிஸ்தான் தீவிர வாதிகள் ரோபார்ட் என்கின்ற இடத்தில் (பஞ்சாப் மாநிலம்) தங்கியிருந்த நூற்றுக் கணக்கான பீஹார் தொழிலாளர்களை சுட்டுத் தள்ளினர்.
பின்னரும் கூட இணைப்பு திட்டம் நிறைவேறியது.
-பொன்னுசாமி.

S Murugesan says:

வாங்க பொன்னுசாமி !
ஒரு தன்னலங்கருதா தலைவன் -மக்களுக்கு அவன் பால் தளராத நம்பிக்கை – ஐயப்பனுக்கு மாலை போட்ட கணக்கா ஒவ்வொரு குடிமகனும் நதிகள் இணைப்பையே கருத்தில் வைத்து செயல்பட்டாலன்றி இது நடக்காத காரியம்.

ஒரு நல்ல விஷயம் -அதுவும் இந்த கலிகாலத்தில் நடக்கனும்னா ஒரு அற்புதம் போல நடந்தேறனும். அப்படியும் நீங்கள் சொன்னது போன்ற அசம்பாவிதங்கள் தவறாது நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *