Categories  அனுபவஜோதிடம்

ஜாதகம் ஒரு டெபிட் கார்ட்+கிரெடிட் கார்ட்

அண்ணே வணக்கம்ணே !
கனியாத காயை புகை போட்டு பழுக்க வைக்கலாம். தடி கொண்டு அடிச்சு கனிய வைக்கமுடியுமா என்ன? அப்படித்தான் எழுத்தும். அது தானா வரனும். நாமளா முயற்சி பண்ணா அது மொக்கையாத்தான் வரும்.ஆனாலும் ஒரு தொடர்ச்சி விட்டுரக்கூடாதுங்கறதுக்காவ இந்த வரிகளை அடிச்சுக்கிட்டிருக்கன்.
பேசிக்கலா நாம ப்ரொஃபெஷ்னல் ஜோதிடரா இருந்தாலும் -மத்தவிக சொல்றாப்ல கிரகம் கழுத்தை பிடிச்சு கொண்டு போய் தள்ளீரும்னெல்லாம் நாம சொல்றதில்லை (அனுபவம்)

ஒருத்தன் கோழையா இருக்கவும் -இன்னொருத்தன் வீரனா இருக்கவும் ; ஒருத்தன் மோடியா இருக்கவும் -இன்னொருத்தன் முருகேசனா இருக்கவும் அவன் ரத்தத்துல கலக்கற ரசாயனங்கள் தான் காரணம்ங்கறாய்ங்க.இவற்றை சுரப்பவை நாளமில்லா சுரப்பிகள். இந்த சுரப்பிகளை கட்டுப்படுத்துவது ஹைப்போத்தலாமஸ். இதை கட்டுப்படுத்தறது? நம்ம எண்ணம்.

கிரகம் எதைத்தான் மாத்துதுன்னா? எண்ணங்களைன்னு சொல்லிரலாம். மாத்திரும்னும் அடிச்சு சொல்ல முடியல.லேசா அசைச்சுபார்க்கும்னு வேணம்னா சொல்லலாம். நம்ம எண்ணம் வலிமையானதா இருந்தா கிரகம் அசைச்சு பார்த்துட்டு போயிட்டே இருக்கும்.

கிரகத்துக்கு பரிகாரம்னா அது அதன் பலனை தடுத்து நிறுத்தறதா இருக்க முடியாது. லாஜிக் உதைக்குமே. கிரகம் கடவுளின் படைப்பு – கிரகத்தை நிறுத்தினா கடவுளை நிறுத்தின மாதிரி தானே. கல்கியில காழியூரார் சர்ப்ப தோஷமா காளஹஸ்தி போங்கன்றாரு.

காளாஸ்திரி கோவிலுக்கு வர்ர சனத்துக் கிட்டே ஒரு சர்வே எடுங்க அவனவன் வரிசையா வந்துட்டே தான் இருக்கான். ரிப்பீட்டட் ஆடியன்ஸ்.அப்பம் தோஷம் போகவே இல்லையா?

இதெல்லாம் கப்ஸா! நம்பவே நம்பாதிங்க. உண்மையிலயே தோஷம் பரிகாரம் ஆகனும்னா அந்த தோஷத்தோட எஃபெக்டை நீங்க அனுபவிச்சிரனும். என்ன..முன் கூட்டி வாலண்டியரா ட்ரை பண்ணா சோசியல் லைஃப்,ஃபேமிலி லைஃப் டிஸ்டர்ப் ஆகாம அனுபவிக்கலாம்.
இதான் நம்ம பரிகாரத்தோட பெசாலிட்டி.

எவன் ஜாதகத்துலயும் – எந்த கிரகமும் 100 % ஃப்ரூட் ஃபுல்லா இருக்கிறதில்லை . இதான் நம்ம பரிகாரங்களுக்கு அடிப்படை.

என் மவ கேசையே எடுத்துக்கலாம். பத்துல சுக்கிர கேது சேர்க்கை இருக்கு. பியூட்டி பார்லருன்னு ஆரம்பிச்சாள். எதுக்குப்பா ..ஏற்கெனவே சுக்கிரன் பல்பு இதுல பார்லர் வேற எதுக்குன்னு சொன்னம். கேட்டா தானே.

இது மட்டுமா லவ்ஸ் வேற. அப்பங்காரன் ( என்னை தான் சொல்றேன்) ரேஷ்னல் டைப்புங்கறதால சக்ஸஸ் ஆயிருச்சு. கண்ணாலம். தாம் தூம்னு நடந்தது. சீமந்தம் அதுவும் இதே ரேஞ்சுதேன்.இதுல வயசு காரணமா இந்த ஃபேன்சி,லக்சரில எல்லாம் கொஞ்சம் மோகம்.
இப்பம் என்ன ஆச்சு?

ஃபிப்.15 டெலிவரி டேட் கொடுத்து ஆறாம் தேதியே பனிக்குடத்தை உடைச்சு லேசா கீறி பிரசவம் பண்ணிட்டானுவ. கொசுறா கொளந்தைக்கு ஹார்ட்ல ப்ராப்ளம்னு 6 மணி நேரம் சர்ஜரி வேற.

மவ,மாப்ள ரெண்டு பேருமே பத்து தாண்டல. (குரு பல்பு ) ஏதோ ஸ்டுடியோ -பார்லர்னு வச்சு பைசா புரட்ட ஆரம்பிச்சாய்ங்க. ஏரியாவுல ஒரு கெத்து ,பந்தா (குரு =செல்வாக்கு) பொறந்த கொளந்தையும் ஆண் குழந்தை (குரு) , மேலும் குரு =இதயம்.

நான் என்ன சொல்றேன்னா கிரகபலம்ங்கறது ஒரு பேலன்ஸ். அதை ஓவர் ட்ராஃப்ட் இல்லாம மெயின்டெய்ன் பண்ணுங்கங்கறேன்.சனம் கேட்குதா? ஊஹூம். சீமந்தத்துக்கு 3 சவரன் போடுங்கறாரு சம்பந்தி (குரு =ஸ்வர்ண காரகன்)

ஜாதகங்கறது டூ இன் ஒன். அடக்கி வாசிச்சா அதுவே டெபிட் கார்ட், அரக்க பரக்க செலவழிச்சா அதுவே கிரெடிட் கார்ட்.

என்னமோ போங்க பாஸ் ! கர்பமான நாள்ல இருந்தே சி.எம்.சி வேணா -எங்கம்மா கொன்னு போட்ட மவனுவன்னு தலைபாடா அடிச்சுக்கிட்டன்.கேட்கல.
இதுல அஞ்சாம் மாசம் ஜூரம்னு போனா ப்ரெய்ன் ஃபீவரா இருக்கலாம்னு பேதியாக்கி ஒரு 25 ஆயிரம் கலெக்சன் பார்த்துட்டானுவ.

இந்த முறையும் போனது டெஸ்டுக்குத்தேன். பெட் காலியா இருந்ததோ ? தியேட்டர் காலியா இருந்ததோ? இல்லை அந்த வார டார்கெட் ரீச் ஆகலியே போட்டு அறுத்து என் தாலியையும் சேர்த்து அறுத்துட்டானுவ. இதுக்கெல்லாமும் கிரகத்தை காரணமாக்கறது கேணத்தனமில்லையா?
இவ்ளோ அழும்புக்கும் காரணம் என்ன? சி.எம்.சிங்கற எண்ணம். அந்த எண்ணத்தை தந்தது வேணம்னா கிரகமா இருக்கலாம்.ஆக்செப்ட் பண்ணது? மாப்ளையோட ஈகோதானே.இதுக்கும் கிரகத்துக்குமென்ன சம்பந்தம்?

செரி அடுத்த பதிவுல 9 வகை பெண்கள்/மனைவிகள்+பிரச்சினைகள்+பரிகாரம் தொடரை தொரலாம். உடுங்க ஜூட்டு .

S Murugesan
Ajay Kannan says:

ஐயா,
“உண்மையிலயே தோஷம் பரிகாரம் ஆகனும்னா அந்த தோஷத்தோட எஃபெக்டை நீங்க அனுபவிச்சிரனும்”- னு சொல்லியிருக்கீங்க. அப்ப உதாரணத்திற்கு சனியுடைய எஃபக்ட் 2வருசத்திற்கு இருக்கும்னு தெரிஞ்சுகிட்டு வாலன்டியரா நாம அந்த பலன்களை முன்கூட்டியே அனுபவிச்சுட்டா, balance இருக்கும் நாட்களை சனி influence சும்மா விட்டுவிடுமா ?!கிரகங்களின் Influence என்பது ஒரு continuous source of energy supply தான……கிரகங்களுக்கு Memory power இருந்தால்தான ஆல் அனுசரிச்சு ஒருத்தன் முன்கூட்டியே பலன் அனுபவிச்சட்டானா-னு பார்த்து அது Decide செய்யும்?!….ஆனா கிரகங்களுக்கு memory power இல்ல. ஆனாலும் பலன் Account வெச்ச மாதிரிதான் நடக்குது. அப்ப எந்த அடிப்படைல நன்மை தீமை நடக்குது !!…..
கூட்டிக்கலித்து பார்த்தால் எல்லாம் இறைவன் செயல், பிரபஞ்ச விதிதான ?!!!……..யார் இதை மாற்ற முடியும் !!!!……….
உங்கள் கருத்து ?…..

S Murugesan says:

அஜய் கண்ணன் !
அவனருளாலே அவன் தாள் வணங்கி -ங்கறாப்ல கிரகங்களோட சிங்கரனைஸ் ஆகி -பரிகாரத்தை தொடர்ந்து செய்துவந்தா ஒர்க் அவுட் ஆகுது பாஸ் !

என் மவளோட மவன் ஹார்ட்ல பிரச்சினையோட பிறந்தான். வெறி பிடிச்சாப்ல ஒழிக்க ஆரம்பிச்சன். என்னாச்சு ? பரிகாரம் ஓவர் டோஸ் ஆகி என்னென்னமோ அற்புதங்கள்ளாம் நடந்துருச்சு.

நம்மாளுங்க எப்படின்னா கடப்பாறையை முழுங்கிட்டு சுக்கு கஷாயம் குடிச்ச கணக்கா பரிகாரம் பண்ணுவாய்ங்க..இதெல்லாம் வேலைக்காகாது ..

Ajay Kannan says:

சார், இந்த கோட்சார சனிக்கு எப்படி டேக்கா கொடுக்கிறது ?!…..நான் மகர ராசி, விருட்சக லக்னக்காரன்…ராசி கட்டத்துல சனி 2ல இருக்கு….கோட்சார சனி இப்ப விருட்சகத்துல இருக்கு….அதுமட்டுமில்லாம மகர ராசிய 3 ஆம் பார்வையா சனி பார்க்குது…..நல்ல பரிகாரமாக சொல்லுங்க சார்…..!…கொஞ்சம் டேக்கா கொடுக்க முயற்சி பன்றேன்….!!

Ajay Kannan says:

Sir வணக்கம்,
உங்கள் Blog ல் இருக்கும் சுக்கிரன் சமாச்சாரம் எல்லாம் படித்தேன்..comment post செய்தேன்..But comments visible ஆகவில்லை..any technical pbm ?..

S Murugesan says:

வாங்க அஜய் கண்ணன் !
அப்படில்லாம் ஒன்னுமில்லையே.கமெண்ட் மாடரேஷன் வச்சிருக்கன். நான் அப்ரூவ் பண்ணதுமே விசபிள் ஆயிரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *