செம மேட்டரு : 16 (சந்திரகாரக பெண்கள்)

அண்ணே வணக்கம்ணே !
செம மேட்டருங்கற தலைப்புல 12 பாவ பலனையும் எப்படி மேனேஜ் பண்றதுன்னு ஒரு தொடர் எழுதிக்கிட்டு வர்ரம். மத்த பாவம்லாம் ஒன்னு அல்லது ரெண்டு பதிவுல முடிஞ்சுருச்சு . இந்த 7 ஆம் பாவம் மட்டும் கு.பட்சம் 9+9 பதிவுகளுக்கு இழுக்கும் போல.

லக்னாத் 7 ஆம் பாவம் தொப்புளை காட்டும். இதுதான் உடலின் மையம். கழைக்கூத்தில் குழந்தைய கொம்பு மேல வச்சு தூக்கும் போது தொப்புள் பகுதி தான் லேண்டிங் பாய்ண்டுங்கறத கவனிச்சிருப்பிங்க.

அதே போல பிரச்சினைகள் வந்து ஒரே தூக்கா தூக்ககும் போது – இந்த ஏழாம் பாவம் காரகம் வகிக்கும் பொஞ்சாதிங்கற கிராவிட்டி பாய்ண்ட் கரீட்டா இருந்தா -ஐ மீன் கான் க்ரீட்டா இருந்தா ஜமாளிச்சுரலாம். இறங்கி வந்த பிறவு ஜமாய்ச்சுரலாம்.

ஆனால் பொஞ்சாதி மேட்டர்ல பல்பு வாங்கியே பல சரித்திரங்கள் சாக்கடையாகியிருக்கு. கமலா நேரு கொஞ்சம் ஹெல்த்தியா இருந்திருந்தா நேருவோட ஆட்டிட்யூடே வேறயா இருந்திருக்கும்.இந்திராவின் மண வாழ்வு கொஞ்சம் பெட்டரா இருந்திருந்தா ..இப்படி சொல்லிட்டே போகலாம்.

ஆனானப்பட்ட நெல்சன் மண்டேலாவ கூட அவிக சம்சாரம் டைவர்ஸ் பண்ணிருச்சுன்னா நாம எல்லாம் எதுல கணக்கு? அறிவு ஜீவி -நடமாடும் கம்ப்யூட்டர் சுஜாதாவையே அவரோட சம்சாரம் மொக்கை பண்ணிட்டாய்ங்க.அதுவும் அவரு டிக்கெட் போட்ட பிறவு .

இதனாலதேன் இந்த ஏழாம் பாவத்தை 18 பதிவுககள்ள அனலைஸ் பண்ணலாம்னு டிசைட் பண்ணிட்டன். சுஜாதாவே சொல்வாரு .நாட்ல உள்ளள புருசன் பொஞ்சாதிகளை ரெண்டு க்ரூப்பா பிரிச்சுரலாமாம். ஒன்னு பிரிஞ்சுட்டவிக ரெண்டு பிரிய முடியாதவிக.

மொக்கை போதும்னு நினைக்கிறேன். கடந்த பதிவுல சந்திர காரகம் கொண்ட பெண்களால் வரும் பிரச்சினைகளை சொன்னேன். அதுக்குண்டான பரிகாரங்களை இப்ப பார்த்துரலாம்.

1.என்விரான்மென்ட்ல புகை,தூசு,சூடு இல்லாம பார்த்துக்கனும்.
2.மனரீதியா அழுத்தம் கூடவே கூடாது. அப்படியே இருந்தாலும் அதுக்கொரு அவுட்லெட்டைதேர்வு செய்துக்கனும் (சீரியல் பார்க்கும் போது அழுதா ஆரும் கண்டுக்கமாட்டாய்ங்க)
3.ஊஞ்சலாடலாம் – அக்வேரியம் வச்சுக்கலாம் . இதை அறையின் வடகிழக்குமூலையில் சுவற்றிலேயே ரேக் மாதிரி வச்சு அதுல வைக்கனும்.
4.வெள்ளை – நீல நிற ஆடை நல்லது. அதில் மீன்,சுறா,படகு இத்யாதி கடல் தொடர்பான உருவங்கள் பொறித்திருந்தால் சூப்பர்.
5.மேற்படி உருவங்கள் பொறித்த டாலர் அணியலாம். கீ செயின் இத்யாதி உபயோகிக்கலாம்.
6.எதையும் ரெண்டே கால் நாளைக்கு மேல ப்ளான் பண்ணவே கூடாது.
7.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புது புது இடங்கள்,புது புது மனிதர்களை சந்திக்கனும்.
8.குளிர் பானங்கள்,மோர்,லெமன் மாதிரி விஷயங்களை தவிர்க்கவும். சுத்தமான குடி நீரை எவ்ள வேணா அருந்தலாம்.
9.இவிக எதை அழுத்தமா நம்பறாய்ங்களோ அதை விமர்சிக்க கூடாது .(கண்டதையும் நம்பினா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒன்னை மட்டும் விட்டுட்டு மத்ததை எல்லாம் கிளிச்சு எஜுக்கேட் பண்ணனும்)
10.மூன் லைட் டின்னர் சாப்பிடலாம். பவுர்ணமி அல்லது வளர்பிறை தினங்களில்.
11. சீதோஷ்ண நிலையில் அதீத குளிர்,அதீத வெப்பம் இருக்கும் நாட்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
12.ஆண்கள் ஸ்படிக மாலை அணியலாம்.பெண்கள் முத்து மாலை அணியலாம்.
13.மனோ சக்தியின் மகிமை/மனதின் இயற்கையை பேசும் சினிமா, புத்தகங்கள் அதிகம் பார்ப்பது /படிப்பது நல்லது.

எச்சரிக்கை:

Announcement

12 பாவங்கள் – 9 கிரகங்கள் பற்றிய பரம ரகசியங்கள் உட்பட எல்லா விஷயங்களையும் 21 நூல்களாக வெளியிட இருக்கிறேன். முன் பதிவெல்லாம் கிடையாது. புத்தகங்கள் அச்சானதும் கிடைக்கும்.
இந்த ப்ராஜக்டை கையில எடுக்கனும்னா ஏற்கெனவே வெளியிட்டு நிலுவையில் இருக்கும் 100+ செட் புக்ஸ் க்ளியர் ஆகனும்.
இதனால ரூ.200 க்கு விற்பனையாகி வந்த இந்த 4 நூல்கள் கொண்ட செட்டை வாங்குவோர்க்கு இன்னொரு செட் இலவசமா கொடுக்க முடிவு பண்ணியிருக்கன். (கூரியர் கட்டணம் ரூ.50 தனி)
இந்த சலுகை பிரதிகள் உள்ளவரை மட்டுமே . மேலதிக விவரங்களுக்கு swamy7867@gmail.com

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *