புத்தக சந்தை அனுபவங்கள்: யோசனைகள்

20260605_230655

அண்ணே வணக்கம்ணே !
மொத மொத புத்தக சந்தைக்கு புறப்படும் போது -அப்பம் அமிஞ்சிக்கரை தான் வென்யூ – கொள்ளைக்கு புறப்பட்ட ராபின் ஹூட் கணக்கா புறப்பட்டேன். கிடைச்சதை எல்லாம் சுருட்டிக்கிட்டு வந்துரனும்.புரட்டிட்டு சனத்துக்கு வாரி வாரி கொடுக்கனும் -இதான் எண்ணம்.

இப்பல்லாம் எவனும் பெருசா ரோசிச்சு சொந்தமா எழுதறதில்லை .ஐ மீன் கடந்த 20 வருசமாவே. பத்து வருசம் மிந்தி நாலு புஸ்தவம் படிச்சு ஒன்னு எழுதுவானுவ. இப்பம்லாம் நாலு சைட் பார்த்து எழுதிர்ராப்ல இருக்கு. எல்லாமே ரிப்பீட்டு தான். பத்திரிக்கையில வர்ர துணுக்குகள் உட்பட மறு ஒளிபரப்பு தான். டீட்டெய்ல்டா படிக்கவும் சில உருப்படிகள் இருக்கு.இல்லேங்கல. அதனால் படிப்புங்கறது ரெண்டாம் பட்சம் .புரட்டுதல் கட்டாயம்.

பெருசா அள்ள நினைச்சும் ஸ்பாட்டுக்கு போன பிறவு தான் தெரிஞ்சது.அங்கன வித்த மெது பக்கோடா மாதிரியே புஸ்தவங்களும் செம காஸ்ட்லி. அ நியாய ரேட்டு .வாங்கறவன் குறைவு. வாங்காதவனோட பங்கையும் வாங்கறவன் தலை மேல போடறது.

அப்பம் கிட்டத்துல பெருசா செலவும் கிடையாது நிறையவே வாங்கினேன். இந்த முறை ? மவளோட சீமந்தம் (ஜன23) டெலிவரி (பிப்ர.15).தமிழக அரசு மாதிரியே நிறைய பொருளாதார நெருக்கடி. ஆனாலும் பார்த்துர்ரதுன்னு கிளம்பிட்டன்.

20260605_230723

மொதல்ல கடேசி நாள் தான் போக (வர) நினைச்சன். இன்னொரு பார்ட்டி “யோவ் ..இன்னைக்கு அமாவாசை நிறைஞ்ச நாளு ..இன்னைக்கே போய்யா”ன்னு ரேக்கிவிட்டாரு. (அன்னாருக்கு வாசியோகம்னு ஒரு புஸ்தவம் தேவை .அவரோட அவசரம் அவருக்கு )
“தென் பாண்டி சீமையிலே “ன்னு பி.ஜி.எம் ஒலிக்க கிளம்பினேன்.வேலூர் வரை ஆந்திர அரசு போ.கழக பஸ்ஸு. காதலிய சந்திக்க புறப்பட்ட இளவட்டம் கணக்கா நேர கொண்டு விட்டுட்டான்.

வேலூர்ல டீ அடிச்சு தம் போட்டு சென்னை பஸ்ஸை பிடிச்சன். பரவால்ல நெல்லாவே அடிச்சு ஓட்டினாரு டிரைவர்.ஆனால் நமக்குத்தேன் பூந்தமல்லி வரை கூட தாங்கல்ல. கடுப்பாகி இறங்கிட்டன்.

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு மறுபடி வேற பஸ் பிடிச்சு அமிஞ்சிகரை -சென்ட்ரல்-கிண்டின்னு அலைக்கழிஞ்சு கடேசில ஆட்டோ பிடிச்சு ஒய்.எம்.சி.ஏ. (டிரைவர் ரூ.150 கேட்டாரு -நாம கறாரா எண்பதுன்னா வரன்னு சொல்ல மீட்டர் போட்டுர்ரன்னாரு -ரூ.108 ஆச்சு )

பார்க்கிங்ல டூ வீலர் சாஸ்தியா -கார் சாஸ்தியான்னு பட்டிமன்றமே நடத்தலாம். புஸ்தவம் வாங்க கார்ல வர்ராய்ங்கன்னா தமிழகமே கேரளா கணக்கா மாறிருச்சு.எல்லாம் அறிவு கொழுந்தாயிட்டாய்ங்கன்னு நினைச்சுராதிங்க.

வேணம்னா பந்தயம் கட்டறேன். 90 சதவீதம் சனம் கோலம்,விரதம்,சமையல்,சோசியம் தான் வாங்கியிருப்பாய்ங்க. மிச்ச 10 சதவீதம் தான் மத்த எல்லா “மாஸ்டர் பீஸையும்”வாங்கியாகனும் போல.

வழி எல்லாம் நடை பாதை கடைகள். ஊசி முதல் கார் க்ளீனர் வரை. நேரத்தோட வந்திருந்தா ஆராய்ஞ்சி,பீராய்ஞ்சிருக்கலாம் .ஊஹூம்..நாமளே லேட் என்டரி. இரவு 8.45 பாஸ் ! அதனால ஜஸ்ட் பாஸாகி உள்ளாற பூந்துட்டன். டிக்கெட் வாங்கி (குலுக்கல் ப்ராசஸ் ஆரம்பிச்சுருச்சு) உள்ளாற போறேன்.மொதல்ல எதிர்ப்பட்ட பார்ட்டி கிழக்கு பதிப்பகம் பத்ரி .

( கொய்யா .. நெல்ல சகுனம்)

20260605_233637

நாம வாங்க நினைச்ச புஸ்தவம்லாம் 500 ரூவாய்க்கு மேலத்தான். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நமீதா கணக்கா ரெம்பவே டிஸ்டர்ப் செய்தாலும் விடறா முருகேசா எமர்ஜென்சிக்கு பிறகு வந்ததெல்லாம் டிஃபென்ஸ் வாதங்களாவே இருக்கும்.பொய்யை மெய்யே போல எழுத பார்த்திருப்பாரு.லூஸ்ல விடுன்னு கழண்டுக்கிட்டேன்.

அந்த மினிட்டே எதையெல்லாம் ஏறெடுத்து பார்க்க கூடாதுன்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டன். ஜோதிட மூல நூல்கள். (தெலுங்குல பக்காவா வந்தாச்சு) . வி.வி.ராவ்னு ஒரு பட்சி பழசையும் தன் அனுபவத்தையும் விஸ்கி சோடா கணக்கா கலக்கி சூப்பரா எழுதினதையே படிச்சுட்டம்.ஆகவே உரைங்கற பேர்ல பீலா விடற மூல நூல்கள் வேண்டவே வேண்டாம்னு டிசைட் பண்ணிட்டம்.சொந்த சரக்குகள் வேண்டவே வேண்டாம். கூடவே சுஜாதா,கல்கி,சாண்டில்யன்,பாலகுமாரன் இப்படி சென்சார் பண்ணிட்டு தான் புஸ்தவமே வாங்கினேன்.

எம்.ஆர் ராதாவின் சிறை சிந்தனைகள் ,ஃபிடல் காஸ்ட்ரோ,பெரியார் வாழ்க்கை வரலாறுகள் வாங்கினன்.அம்பேத்கர்,புதுமை பித்தன்,ஜெயகாந்தன் இப்படி ஆத்தர் வைஸ் பொறுக்கினேன்.ஓஷோ புக்ஸ் எல்லாம் டைட்டில் மாத்தி புதுசு போல அச்சடிச்சிருந்தாய்ங்க. வாங்கல. ஆருக்கும் கொடுத்தாலும் இருக்கட்டும்பா பிறவு வாங்கிக்கறேங்கற ரேஞ்சுல எல்லாமே நான் ஃபிக்சன் தான். ஆனால் சுயமுன்னேற்ற வகையறாவுக்கு தடா. அதெல்லாம் பெரிய உட்டாலக்கடி.

இடையில திருமாவளவனை பார்த்தேன் . பக்கத்துல நாலே பேர். மனுஷ்ய புத்திரன். லேசான மேக்கப்போட பெரிய கூட்டத்தோட மல்லு கட்டி முடிச்சு – செவ் கிழமை சலூன் காரர் மாதிரி ரிலாக்ஸ்டா அசட்டு சிரிப்போட இருந்தார்.

வெளிய வரும்போதுதான் ஆதிஷாவ பார்த்தன்.ஒரு செல்ஃபி. அங்கருந்து கேட்டு-பூந்தமல்லி பஸ் பிடிச்சு – பூந்தமல்லியில டிஃபன் அடிச்சு -வேலூர் -வேலூர்லருந்து சித்தூர்.

Athisha

மத்தபடி வாங்கியிருக்கிற புஸ்தவங்களை புரட்டவே 3 மாசம் ஆகும் போல (டைட் ஷெட்யூல் பாஸ்) அப்பப்போ விமர்சனமும் வெளிவரும் .
இந்த மொக்கைக்காக வலையுலகம் காத்திருக்குன்னு இந்த பதிவை போடல. மத்தவிக அது நொட்டை -இது நொள்ளைன்னு குற்றப்பட்டியல் தான் வாசிப்பாங்க. நாம ? நம்ம ரூட்டே டிஃப்ரன்ட். அடுத்த புத்தக சந்தைக்கான ப்ளூ ப்ரிண்டே மைன்ட்ல ரெடியாயிருச்சு.

பபாசி காரவுக ஃபாலோ பண்றாப்ல இருந்தா ஒரு போஸ்ட் கார்டு போட்டு மின் கூட்டி தெரிவிச்சா சந்தோசப்படுவன்.

1.பு.க.காண்ட்சின்னா சென்னையில தான் நடத்துவங்கறது அராஜகம் -தமிழகத்தின் மையம் திருச்சிங்கறதால திருச்சில நடத்தலாம்.
2.ஒவ்வொரு பதிப்பக காரவிகளும் தனி தனியா ஸ்டால் போடறத விட கேட்டகிரி வைஸ் ஸ்டால் போடலாம் உ.ம் சமையல்,கோலம்,விரதம், சரித்திரம்,ஆன்மீகம் இப்படி .அல்லது ரிலையன்ஸ் ஃப்ரெஷ் மாதிரி பில் போட பத்து பேரை வச்சுட்டு ஒரே கூரையில காரியத்தை முடிச்சுரலாம்.
3.தீபாவளி சீட்டு மாதிரி பதிப்பக காரவிக சீட்டு போடலாம். வட்டியில்லாம கடனும் கிடைக்கும்.விற்பனையும் எகிறிக்கும்.
4. நுழைவு சீட்டையும் 3 மாசம் மிந்தியே ஆன்லைன்ல விற்கலாம். எல்லா நாளும் வர்ர பார்ட்டிகளுக்கு பெசல் டிக்கெட். நு.சீட்டு பின்னாடியே பதிப்பகங்கள்-ஸ்டால் நெம்.விவரம் -ஒரு மேப்
5.இந்த வருச விற்பனை பட்டியல வங்கிகளுக்கு சமர்ப்பிச்சு வங்கி கடனோட அதே புத்தகங்களை ரீ ப்ரிண்ட் பண்ணலாம். வட்டி குறையறதால விலை குறைச்சு விற்கலாம்.
6.அந்த காலம் போல மலிவு பதிப்பை கொண்டு வரனும்.
7.கலைஞர் மாதிரி சவுண்ட் பார்ட்டிங்க – வை.கோ மாதிரி கொள்கை வாதிங்களாச்சும் காஸ்ட் ப்ரைசுக்கே புக்ஸ் விக்கலாம்.
8. கு.பட்சம் 10 இடத்துல டச் ஸ்க்ரீன் .புஸ்தவம் பேரை அடிச்சா எந்த ஸ்டால்ல கிடைக்கும்னு தெரியறாப்ல.
9.திறந்தவெளியில கூட்டம் போடறாய்ங்க. மொத்தமா 200 பேர் கூட இல்லை.ஆனால் மைக் செட் வச்சு ஊருக்கே ஒலிபரப்பறாய்ங்க. அந்த 200 பேருக்காக டெம்ப்ரரியா சவுண்ட் ப்ரூஃப் ஹால் ஏற்பாடு பண்ணலாம்.
10.பார்வையாளர்களின் கருத்து கேட்க சின்சியரா ஏற்பாடுகள் செய்யனும். பாத்ரூம்,கக்கூஸு பத்தி இல்லிங்கோ. நீங்க தேடி கிடைக்காத புக் என்ன? இத்யாதி.

மைன்ட்ல இன்னம் நிறைய இருக்கு. இதுவே வெட்டி. ஆருனா கேட்டா -குறிப்பா பிரச்சினைய சொல்லி கேட்டா தீர்வுகள் தரேன்.
உடுங்க ஜூட்டு .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *