வாழ்வும் – சாவும்

swacha Bharath

அண்ணே வணக்கம்ணே !
என்னடா இது அண்ணன் வாரத்துக்கொரு பதிவு தானே போடுவாரு. மூனே நாள்ள முந்திரி கொட்டை மாதிரி இன்னொரு பதிவு வருதுன்னு ஆச்சரியப்படாதிங்க. ஜன,20 ராத்திரி, ஜன 21 காலை போட வேண்டிய முக நூல் பதிவுகளை தான் இப்ப வலைப்பதிவா பார்க்கிறிங்க.

இந்த மேட்டர் எப்பமோ ஃபீல் ஆச்சு, ஞாநி ,மகிழ்நன் போன்றவர்களுக்கு சொல்லியும் இருக்கேன். நீள பதிவுகளை முக நூல்ல போடாதிங்க. வலைப்பதிவா போட்டு தொடுப்பை மட்டும் இங்கே கொடுங்கன்னு .ஏன்னா முக நூல்ல புதிய பதிவுகள் போட போட பழைய பதிவுகள் பின் தங்கிரும். பழைய பதிவை தேடி பிடிக்கிறதும் சிரமம். அது கடல்ல கலந்த கஸ்தூரி மாதிரி ஆயிருது.ஆனால் வலைப்பதிவு அப்படி இல்லை. ஈசிலி ட்ரேசபிள்.

ஆனால் ஏனோ தெரியல எண்ணம் செயலாகாம இத்தனை நாள் ஆத்தோட போயிட்டம். முக நூல்ல இப்ப இருக்கிற பெரிய சவால் யார் வேணா யாரோட ப்ரொஃபைலை வேணம்னா டுபாகூருன்னு புகார் பண்ணி முடக்கிரலாம். மிந்தில்லாம் முக நூல் டேட்டாவ டவுன்லோட் பண்ண நினைச்சா படக்குன்னு பண்ணிரலாம்.இப்பம் அதுவும் கஷ்டமாய்ருச்சு .முக நூலுக்கு மாற்றா எவன் வந்தாலும் உருப்படறதில்லைங்கறது உபரியான சோகம்.

நேத்திக்கு தி.சா,ராஜூன்னு ஒரு மேஜர் எழுதின புஸ்தவம் ரெம்பவே டிஸ்டர்ப் பண்ணிருச்சா உ.வ பட்டு முக நூல்ல நாலு வரி போடலாம்னு வந்து அப்டியே ஸ்டிக் ஆன் ஆயிட்டன். பாவேந்தரின் பாரதினு தலைப்பை வச்சுக்கிட்டு தன் ஆர்.எஸ்.எஸ் சரக்கை எல்லாம் இறக்கியிருக்காரு ஆசிரியர். இதுல பாரதிகவிதையில வேத கருத்துக்கள்னு ஆராய்ச்சி வேற. மிடியல.

பொதுவா விடியற சமயத்துல தூங்கிருவம்.இன்னைக்கு அதுவும் போச். மதியம் தூங்கி பேலன்ஸ் பண்ண பிறவு ஒரு நிறைவு .
இது இப்டியே போச்சுன்னா சீக்கிரமே சங்குதான். சங்குக்கு நாம பயப்படறதில்லை. எப்படியும் செரியான வாழ்க்கைய தான் வாழமுடியல. செரியான சாவையாவது தா என்பது தான் நம்ம பிரார்த்தனை.சங்குக்கு பயப்படலின்னாலும் நோய் நொடிக்கு பயப்படனுமே.நமக்கு அல்லாபத்தி உட்பட எல்லா பத்திகளோட லூப் ஹோல்ஸும் தெரிஞ்சுருச்சா நோய்களை விட டாக்டர்ங்க மேட்டர்ல ரெம்ப பயம்மா இருக்கு .

நாம ஏற்கெனவே ஆத்தாவோட தீவிர கண்காணிப்புல இருக்கம். ஒரு நாளைக்கு 3 ஜாதகம், ரெண்டு கட்டு பூபால் பீடி,நாலு பர்க்லி சிகரட், ரெண்டு வேளை உணவு இதான் கோட்டா. ஓவரா போனா பல்ப் மாட்டிக்குது.

ஸ்டாலின் ஃபிட்னஸுக்கு மெனக்கெடறாருன்னா அதுக்கு ஒரு சுய நல காரணம் இருக்கு. நம்மை பொருத்தவரை அரசியலுக்கு நாம போனா எல்லா மவனும் ஒன்னா சேர்ந்து போட்டு தள்ளிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாய்ங்க. போட்டு தள்ற வரையாச்சும் ஃபிட்டா இருக்கனுமில்லையா பாஸ் !
நாம அரசியல்ல இன்னம் பிறக்கவே இல்லை . இனி எப்ப வளர்ந்து தவழ்ந்து அதுவரைக்கும் இந்த பாடி காட்பாடியாயிராம பார்த்துக்கனும்ல.
மேலும் நமக்கு சுய மரியாதை சாஸ்தி. முழங்கால் சிப்பி பேர்ந்தப்பமே செம கடுப்பாயி சாயிபாபாக்கெல்லாம் அல்ட்டிமேட்டம் கொடுத்து ஒரே ராத்திரியில க்யூர் பண்ணிட்டாருன்னு வைங்க.

பாரதியாரை காந்திக்கு அறிமுகம் செய்தப்போ அவரு ” இந்த பட்சிய பத்திரமா பார்த்துக்கங்க”ன்னாராம். புதுவையில பாரதி தாசன் தான் அவருக்கு காவலாம். ஒரு காலத்துல நமக்கும் போஷகர்கள் இருந்தாய்ங்க. இன்னைய தேதிக்கு நமக்கு ஆரும் காவலில்லை. (ஆத்தா பார்த்துப்பான்னு காட்டடி அடிச்சிக்கிட்டிருக்கம்)

சென்னை நண்பர்கள் எல்லாம் ஃபோன் பண்ணா நீங்க என்ன பண்றிங்க பலான பஸ்ஸை பிடிச்சுன்னு தான் கான்வர்சேஷனையே ஆரம்பிக்கிறாய்ங்க. இதெல்லாம் வேலைக்காகாது. நமக்கு ஜியாக்ரஃபிக்கல் நாலெட்ஜூ சூன்யம்.இதுல நேவிகேஷன் ப்ராப்ளம் வேற.

நமக்கு உள்ளூர்லயே/வீட்லயே தலைக்கு மேல வேலை இருக்கு. வேலை செய்தா காசு வரும்.காசு வந்தா நம்ம பழைய வேலைகளை எல்லாம் கொஞ்சமா ஒழுங்கு படுத்தலாம். புக் ஃபேருக்கு போனா செலவுதேன்.

ஆத்தா படக்குன்னு நமக்கு டிக்கெட்டு போட்டுட்டாள்னா நம்ம படைப்புகள் எல்லாமே அல்பாயுசுல போயிரும். நம்ம எழுத்தெல்லாம் உசுரை பணயம் வச்சு சேகரிச்ச குன்ஸு பாஸ்.. ஒவ்வொருத்தரும் உசுரை பணயம் வச்சுத்தான் தெரிஞ்சுக்கனும்னா அது சேடிசமாயிரும்.
இப்பமே கத்த வித்தையை எல்லாம் இறக்கிட்டாப்ல ஒரு ஃபீல்.ஆனால் பல பதிவுகள் அரைகுறையா விட்டிருக்கம்.நிறைய தொடர்களை திராட்டுல விட்டிருக்கம்.

கூகுளாண்டவர் புண்ணியத்துல தகவலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. தகவலை ப்ராசஸ் பண்ணி ஸ்க்ரூட்டினி பண்ற சாஃப்ட்வேர் மைன்ட்ல இல்லின்னா பொளப்பு நாறீரும்.

இங்கே எல்லாருமே தாங்கள் நம்பினதை மட்டும் ஃபோக்கஸ் பண்ணி மத்ததை எல்லாம் அவுட் ஆஃப் ஃபோக்கஸ்ல வச்சிர்ராய்ங்க. அவனவனுக்கு ஒரு உலகம். இங்கே தேவை ஒரு ஒருங்கிணைப்பு.முன்னுரிமைய நிர்ணயிக்கிற விவேகம்.

இது வரனும்னா டார்வின் சித்தாந்தந்தம், ஆந்த்ரபாலஜிலருந்து வரனும் .கற்காலம்,புதிய கற்காலம், சஞ்சார வாழ்க்கை,ஸ்திர வாசம்,வர்ணாசிரம தர்மம், ரஷ்ய புரட்சி,பிரெஞ்சு புரட்சி, சுதந்திர போராட்டம், நேரு,இந்திராவுல ஆரம்பிச்சு மோதி வரை எல்லாத்தையும் டச் பண்ணிக்கிட்டு வந்தாதான் ஒரு ஜோக்கை கூட கரீட்டா புரிஞ்சுக்க முடியும். இல்லின்னா தகவல் வெள்ளத்துல உண்மை அடிச்சிக்கிட்டு போயிரும்.

ஆரோ சாமியார் பத்து பெத்துக்கங்கன்றாரு, எங்க ஊரு சந்திர பாபு நிறைய பெத்துக்கங்கன்றாரு. இதை எல்லாம் புரிஞ்சுக்கனும்னா ஒரு அடிப்படை புரிதல் இருக்கனும்.

முக நூல் மாதொருபாகனை தூக்கி பிடிச்சிட்டிருக்கும் போது ஒரு பக்கி பாலகுமாரனோட ஆனந்த வயலை கொண்டு வந்து நுழைக்குது.
பாவேந்தரின் பாரதி புஸ்தவத்துல பாவேந்தரும் பாரதியும் கெஸ்ட் ரோல் தான். கொய்யால வீர சாவர்க்கர்லருந்து எல்லா கஸ்மாலத்தையும் கொண்டு வந்து சேர்த்திருக்காரு மேஜர். இந்த புஸ்தவத்துக்கு ஆந்திர அரசாங்கத்தோட லைப்ரரி ஆர்டர் கூட கிடைச்சிருக்குன்னா/ அல்லது ஏதோ ஃபவுண்டேஷன் காரன் டொனேட் பண்றான்னா நெட் ஒர்க் எந்த அளவுக்கு வேலை செய்திருக்குன்னு கெஸ் பண்ணி பாருங்க.

இந்த மாதிரி சமூகத்துல எவ்ள அலார்ட்டா இருந்தாலும் வேஸ்டுதேன். பார்ப்பம். நம்முது ரெம்ப சிம்பிள் ப்ரப்போசல். எப்படியும் பிரளயம் நிச்சயங்கறாய்ங்க.அதும்பாட்டு வரட்டும். அதுக்குள்ற ஒரு ஆதர்ச வாழ்க்கை இந்த நாட்டு மக்களுக்கு கிடைச்சுரனும். பிரளயத்துல சனம் சாகட்டும். ஆனால் மிஸ் மேனேஜ்மென்டால /சைட் எஃபெக்ட்ஸால சாகப்படாது .

பலி கொடுக்கிற ஆட்டுக்கு கூட செமர்த்தியா தீனிபோட்டு மஞ்ச தண்ணில குளிப்பாட்டி மாலைல்லாம் போடறாய்ங்கல்ல. அப்படி ஒரு கோரிக்கையத்தான் ஆத்தா கிட்டே வச்சிருக்கன். லெட் அஸ் வெய்ட் அண்ட் சீ.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *