செம்ம மேட்டரு : 13 (ஏழாம் பாவம்)

நம்ப முடியவில்லை

அண்ணே வணக்கம்ணே ! எந்த யோக ஜாதகத்துலயும் அவயோகம் ஒளிஞ்சிருக்கும். எந்த அவயோக அகராதி பிடிச்ச ஜாதகத்துலயும் யோகம் ஒளிஞ்சிருக்கும். எந்த ஜாதகத்துலயும் எந்த பாவமும் 100 சதம் ஃப்ரூட் ஃபுல்லா இருக்காது/அதே சமயம் 100% ஆப் ஃபுல்லாவும் இருக்காது. இதான் விதி. இந்த விதியை அடிப்படையா வச்சுத்தேன் இந்த தொடரையே ஓட்டிக்கிட்டிருக்கன்.

மொத்தமுள்ள 12 பாவங்கள்ள ஆறு பாவங்களை அனலைஸ் பண்ணிட்டம். இது ஏழாமிடம். இந்த 12 கட்டங்களை நிமிர்த்தி நிற்க வச்சு -பக்கத்துலயே ஒரு மனிதனோட படத்தை வச்சு பாருங்க. இந்த 7 ஆமிடம் மனித உருவத்தின் தொப்புளுக்கு நேர வரும்.

தொப்புள்ங்கறது பம்பரம் விடற/ஆம்லெட் போடற சமாசாரம் இல்லிங்கோ. இன்னொரு உசுரோட லோக்கல் நெட் ஒர்க் இணைப்பை தந்த கனெக்டிங் கார்ட்.
இந்த அண்ட சராசர பிரபஞ்சம் எம்மாம் பெரிசுன்னு உங்களுக்கு தெரியும்.இங்கே ஒவ்வொரு உசுரும் தன்னை மிக தனிமையா உணரும்ங்கற போது இன்னொரு உசுருடனான இணைப்பு எப்படியா கொத்த ஆறுதல்?

மனித உடலின் புவியீர்ப்பு மையம் தொப்புள். எல்லா நாடி நரம்பும் இங்கன வந்து பை பாஸ் ஆகுதுன்னு சொல்றாய்ங்க.
காயத்ரி மந்திரம் சரியா உச்சரிக்கப்பட்டா மொத்த அழுத்தமும் தொப்புள் பகுதியில் தான் ஏற்படும். இன் ஆக்டிவா இருந்த நாடி நரம்பெல்லாம் ஆக்டிவ் ஆகும்.

படைப்பின் ஆதி உயிரான அமீபா சக உயிருன்னு ஏதுமில்லாம காலம்,தூரம்,போட்டி,பொறாமை ,பாதுகாப்பின்மைன்னு எந்த இழவும் இல்லாம தன்னில் தான் மூழ்கி சிவனேன்னு இருந்ததே.. அந்த நிலைய ஒரு தாட்டி கற்பனை பண்ணி பாருங்க. எப்போ சக உயிர்னு இன்னொரு அமீபா வந்ததோ அப்பமே அதனோட நிம்மதிக்கு ஆப்பு வந்துருச்சு.காலம்,தூரம்,போட்டி,பொறாமை ,பாதுகாப்பின்மைன்னு எல்லா பிரச்சினையும் வந்துருச்சு.

ஏறக்குறைய இந்த நிலை கர்ப வாசத்தில் ஏற்படுது. ( இரட்டை குழந்தைகள் மேட்டர்ல ஹேண்ட்ஸ் அப்) இந்த நிலையில் லைஃப் கார்டே தொப்புள் கொடி தான்னு சொல்லனுமா என்ன?

ஒரே மூலத்தில் இருந்து பல உசுரா பிரிஞ்ச ரெண்டு உசுரு கு.பட்சம் உடல் ரீதியா இணையும்/இணைந்து வாழும் நிலை (பத்து மாசம்) இப்படித்தான் சாத்தியமாகுது. இதுக்கும் தொப்புள் கொடி தான் ஆதாரம்.

ஏழாமிடம் தொப்புளை மட்டுமில்லை உங்க வாழ்க்கை துணையையும் காட்டுது. தொப்புள் கொடி ஒரு தாயையும் -சிசுவையும் இணைக்குதுன்னா தாலிக்கொடி வளர்ந்த ரெண்டு குழந்தைகளை இணைக்குது.

இந்த அண்ட சராசர பிரபஞ்சம் எம்மாம் பெரிசுன்னு உங்களுக்கு தெரியும்.இங்கே ஒவ்வொரு உசுரும் தன்னை மிக தனிமையா உணரும்ங்கற போது இன்னொரு உசுருடனான இணைப்பு எப்படியா கொத்த ஆறுதல்? (ரிப்பீட்டு)

லக்னம் உங்களை காட்டுது -லக்னாத் ஏழாமிடம் வாழ்க்கை துணையை காட்டுது. கோழிக்கறி,கருவாடு,நண்டுன்னு அடிச்சு சகட்டுமேனிக்கு உள்ளே தள்ளினா காது மடல்லாம் சுடும், கண் எரியும். சமாளிச்சு தூங்கி எந்திரிச்சா தொப்புளை சுத்தி ஒரு வலி ஏற்படும்.

அப்பம் சிகிச்சைக்கு ரெண்டு வழி இருக்கு. ஒன்னு செக்குல ஆட்டி எடுத்த தேங்கா எண்ணெய் ஒரு கரண்டி வாய் வழியா உள்ளாற அனுப்பனும். அல்லது தொப்புள்ள கொஞ்சம் வெளக்கெண்ணெய் விட்டுரனும்.

இதான் 1-7 க்கு இடையிலுள்ள தொடர்பு. லக்னம் உங்களை காட்டும் , 7 மனைவியை காட்டும். உங்கள் செயல்பாடுகள் மனைவியை பாதிக்கும், மனைவியின் செயல்பாடுகள் உங்களை பாதிக்கும்.

தீர்வு மனைவி வழியா உங்களை வந்து சேர்ந்தா உங்க பிரச்சினை ஓவர். உங்கள் வழியா தீர்வு மனைவியை சென்றடைஞ்சா அவிக பிரச்சினை ஓவர்.
தியரிட்டிக்கலா பார்த்தா லக்னத்துல உள்ள கிரகம் ஏழை பார்க்கும் -ஏழுல உள்ள கிரகம் லக்னத்தை பார்க்கும். இதனால “சகவாச தோஷம் “காரணமா உங்க சரீர தர்மங்கள் மனைவிக்கும் /அவிக சரீர தர்மங்கள் உங்களுக்கும் தொத்திக்கும்.

உங்க கல்யாண குணங்கள் அனைத்தும் உங்க மனைவிக்கும்/அவிக குண நலன் யாவும் உங்களுக்கும் வந்துரும். ஒருவகையில பார்த்தா இந்த பாவத்தை பாவ பலனை கரீட்டா டாக்கிள் பண்ணா டூ இன் ஒன் கணக்கா உங்கள்+உங்கள் வாழ்க்கை துணையில் பிரச்சினைகள் பைசல் ஆயிரும்.
அது எப்படிங்கறத அடுத்த பதிவுல பார்க்கலாம்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *