செம மேட்டரு :10 (ஆறாம் பாவம்)

அண்ணே வணக்கம்ணே !
எந்த யோக  ஜாதகத்துலயும் எந்த பாவமும்/எந்த கிரகமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்காது.அதே சமயம் 100% ஆப்பு ஃபுல்லாவும் இருக்காது (தாங்கமுடியாதில்லை) . இந்த யதார்த்தத்தை மனசுல வச்சுத்தான் இந்த தொடரை எழுதிக்கிட்டு வரேன்.
கரும்பு ருசியா இருக்குன்னு வேரோட பிடுங்கிட்டா அடுத்த நடவு கனவாயிரும். அட டீக்கடையில மட்டுமில்லை வீட்ல டீ சாப்டும் போது கூட கடைசியில கொஞ்சம் விட்டுரனும்.இல்லின்னா நாஸ்திதான்.
இதுவரை மொத அஞ்சு பாவங்களை பைசல் பண்ணிட்டம். இன்னைக்கு ஆறாம் பாவம். இது தாய்மாமனையும் -எதிரிய,கடனை  காட்டற இடம். இந்த 3 ஐட்டத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன?
ஆரம்பத்துல நம்முதெல்லாம் தாய் வழி சமுதாயம். அப்பா டம்மி பீஸு. தாய்மாமன் தான் கார்டியன். தாய்மாமன் நெல்லா ரன்னிங்குல இருந்து சவுண்ட் பார்ட்டியா இருந்தா அக்கேஷ்னலா நம்ம அம்மா கேட்ட சமயம் வந்து என்ட்ரி கொடுத்து வேண்டியதை செய்து கொடுத்துட்டு பூடுவாரு. இதுக்கு நம்ம ஜாதகத்துல புதன் ஃப்ரூட் ஃபுல்லா இருக்கனும்.
அப்படியே இருந்தாலும் தாய்மாமன் நமக்கு பண்றதெல்லாம் ஒரு கடன் மாதிரி தான். அவருக்கு மண்டை வீங்கின பொண்ணு இருக்கலாம், அவளை கண்ணாலம் கட்டி கடன் தீர்த்தாகனும். கடன் தீர்க்கலின்னா விரோதம் தான் வரும்.
ஒரு வேளை கடன் தீர்க்க மாமன் பொண்ணை கட்டிக்கிட்டாலும் இம்சை.அந்த இம்சையால நோய் பாதிப்பும் வரலாம்.
ஒரு வேளை பல சினிமாக்கள்ள வடிவேலு கணக்கா தண்ட சோறா இருந்து -இலவச இணைப்பா நம்ம அம்மாவோடவே “வாழ” வந்த பார்ட்டியா இருந்தா? நாளைக்கு பையன் படிச்சு பெரியாளாயிட்டா நாம கார்வார் பண்ண முடியாதுன்னு கூட இருந்தே பான்,பீடா,பீடி,சிகரட்,சரக்கு,சூது,சுந்தரிகள்னு நம்மை கெடுத்து குட்டிச்சுவராக்கவும் சான்ஸ் இருக்கு.
இந்த மாதிரி வெட்டியா சுத்தி காசு பணத்தை எல்லாம் வேட்டு விட்டுக்கிட்டிருந்தா கடன் ஆட்டோமெட்டிக்கா வரும்ல. கடன் காரனுக்கு சமயத்துக்கு செட்டில் பண்ணலின்னா விரோதமும் வரும்.இத்தினி ஆட்டம் போட்டா பாடி காட்பாடியாகாம இருக்குமா என்ன? (நோய் பாதிப்பு)
இப்பம் புரியுதா?  தாய்மாமனை ஏன் ஆறாம் இடத்துல சேர்த்தாய்ங்கன்னு? மத்த பாவங்களை பத்தி சொல்லும் போது பாவம் கெட்டிருந்தால்னு ஆரம்பிக்கலாம். ஆனால் இந்த பாவ மேட்டர்ல மட்டும் பாவம் பலம் பெற்றிருந்தான்னு ஆரம்பிக்கனும்.
இது துஸ்தானங்கறதால கெடனும்.கெட்டாதான் யோகம். புரியுதா?
இப்ப சரியா ஆரம்பிக்கிறேன். லக்னாத் ஆறாம் பாவம் பலம் பெற்றிருந்தா கடன்,நோய்,வழக்கு வில்லங்கம்லாம் பெண்டு கழட்டும். இந்த மேட்டர்ல எப்படி சாலாக்கா கழண்டுக்கறதுன்னு விரிவா அடுத்த பதிவுல சொல்றேன்.
முக்கிய அறிவிப்புகள்:
1.தவிக்க முடியாத காரணங்களால் கட்டண சேவைக்கான கட்டணங்கள் மா(ஏ)ற்றப்பட்டுள்ளன. விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்
2.ராமாயண காலத்துல பெரியார் வாழ்ந்திருந்தா? அப்படிங்கற கற்பனையோட ஒரு திரைக்கதைய ஆரம்பிச்சிருக்கன். தடை வர்ரதுக்குள்ள படிச்சுரனும்னா இங்கே அழுத்துங்க.
3.ரெட் பிக்ஸ் வழியாக வழங்கிய சனிப்பெயர்ச்சி பலனை பார்க்க இங்கே அழுத்துங்க.
4.நம்ம ஆன்மீக முயற்சிகள் பற்றி உங்களுக்கு ஒரு ஐடியா இருக்கும்னு நினைக்கிறேன். 1986 ஜனவரி முதல் ராம  நாம ஜெபம். 2000 டிச.23 முதல் புவனேஸ்வரி அம்மனின் மாயா பீஜத்தை ஜெபிச்சுக்கிட்டிருக்கம். இதை ஆரம்பிச்சு இன்னைக்கு 2014 டிச 23 க்கு எத்தனை வருசம் ? 14 முடிஞ்சு 15 ஆ ? 13 முடிஞ்சு  14 ஆ ? சின்ன கன்ஃபீஸ்.
உடுங்க ஜூட்டு

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *