Tags     

Categories  பகவத்கீதை

இலவச மின் நூல் :பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

DSC_9123 - Copy

இந்த தொடர் எழுதப்பட்ட காலக்கட்டம் வேறு. ஆனால் சமீபக காலமாய் அஃதாவது திருவாளர் மோதி அவர்கள் பிரதமரான பிறகு காவி கூட்டம் ஆட்டை கடித்து ,மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக செம அலப்பறை.

இந்த வரிசையில் “பகவத்கீதையை தேசீய நூலாக அறிவிக்கும் முயற்சிகள்” இன்றைக்கு ஹாட் டாப்பிக். இந்த தொடர் என் வலைப்பூவில் எழுதப்பட்டது. இதை காலத்தின் கட்டாயம் கருதி மின் நூலாக தந்திருக்கிறேன். அதற்கான முன்னுரையே இங்கு பதிவாக போடப்பட்டிருக்கிறது.

மின் நூல் தரவிறக்க சுட்டி பதிவின் இறுதியில். இனி முன்னுரை .

தலைப்பை பார்த்ததும் இந்தாளு பெரியாரிஸ்டு போல, நாத்திகன் போலனு நினைச்சுராதிங்க. ராமகிருஷ்ண பரம ஹம்சர்ல ஆரம்பிச்சு ஓஷோ வரை என் செல்லங்கள் அனேகர். இதரர் போல டைம் பாஸ் சாதகன் நானல்லன். எதுவாக இருந்தாலும் “இறங்கி பார்த்துர்ரது” நம்ம ஸ்டைல்.

நான் கண்ணனை ஏத்துக்கறேன். புராணங்கள் காட்டும் கண்ணனை அல்ல. என் உள்ளுணர்வு எனக்கு காட்டிய கண்ணனை.ஆனால் கீதையை ஏற்கவில்லை. கண்ணனின் வாழ்வை அடிப்படையாக வைத்து கீதையை அணுகினேன். பாலகுமாரன் கதையில் பாலகுமாரன் இருப்பார். சுஜாதா கதையில் சுஜாதா இருப்பார். ஆனால் கீதையில் கண்ணன் இல்லை என்பதே என் ஆராய்ச்சி முடிவு.

இதைத்தான் சாங்கோபாங்கமாக அவா விரலை எடுத்து அவா நொள்ளை கண்ணை குத்தியிருக்கன். கீதை இடை செருகல் அல்ல, கண்ணனின் ஆத்மா கீதையில் இருக்கிறது என்று ஆருனா நிரூபிச்சா ஏத்துக்க இப்பவும் தயாரா இருக்கன்.

இந்தியா என்பது பல்வேறு இன,மத,சாதி மக்கள் இணைந்து வாழும் ஒரு நிலப்பகுதி. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் பலம். அதை விட்டு ஒரே மதம்,ஒரே மொழி,ஒரே கட்சி,ஒரே ஆட்சியாளர் என்ற லட்சியங்களோட இப்பம் ஒரே மத நூல் என்ற கயவாளித்தனத்தையும் காவி கும்பல் தன் அஜெண்டாவில் சேர்த்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கீதையின் நிஜ சொரூபத்தை -அசலான நோக்கத்தை கு.பட்சம் பிராமணரல்லாதோரும் ,சூத்திரர்களும் , சில நூறு அக்கிரகாரத்து அதிசயங்களும் புரிந்து கொண்டாலன்றி இந்த விபத்தை தவிர்க்கவே முடியாது.

எனவே தான் இந்த மின் நூல் முயற்சி. யாரேனும் இதன் அச்சு வடிவத்தை கொண்டு வர நினைத்தாலோ – தமது வலைதளத்தில் பிரசுரிக்க முன் வந்தாலோ மகிழ்வேன். நான் எதிர்ப்பார்ப்பதெல்லாம் முன் கூட்டிய தகவல் மட்டுமே.

மற்றபடி வக்கீல் நோட்டீஸ் வழங்க துடிக்கும் அன்பர்களுக்காக என் தபால் முகவரி : #17-201,கும்மர தெரு,சித்தூர் ஆ.மா 517001. திட்டியோ ,மிரட்டியோ மகிழத்துடிப்பவர்களுக்கான எனது மெயில் முகவரி: swamy7867@gmail.com.

அடுத்து ஆர்ரா இவன் விஜாரிங்கறவுகளுக்காக அவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக என் வலைதளத்தில் என்னை பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கின்றன .http://www.anubavajothidam.com

மின் நூலை தரவிறக்க இங்கு அல்லது இங்கு அழுத்தவும்

print

831 total views, 1 views today

S Murugesan