சனிப்பெயர்ச்சி பலன் (2014-2017)

ஜெயா

அண்ணே வணக்கம்ணே !
ராசியும் வாழ்வும் தொடர் ஒரு ஓரமா வந்திட்டிருக்கு. சிம்மம் டு கும்பம் ஃபினிஷ் ஆச்சு. மீனம் டு சிம்மம் பெண்டிங். இந்த ராசி பலன்,சனி பெயர்ச்சில்லாம் மெட் ராஸ் ஐ மாதிரி வர வேண்டிய நேரத்துல கரீட்டா வரனும்.

எனக்கென்னமோ ஏற்கெனவே ஒரு தபா எழுதினதாவே ஞா . இருந்தாலும் நீங்கள் கேட்டவை ஸ்டைல்ல சனி பெயர்ச்சி பலன் இந்த பதிவுல தந்திருக்கன்.

1.மேஷம்:
இவிகளுக்கு சனி 10,11 க்குடையவர். சனி எட்டில் வருவதால் வேலை அழுத்தம் அதிகரிக்கும். இதனால் கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். மூத்த சகோதரம் பாதிக்கும். பெரிய/சிறிய இரும்பு பொருள் காணாமல் போய் அதனால் பெரும் சிக்கல்கள் வரலாம். விபத்து/தாக்குதலுக்கும் வாய்ப்பு .வீண் பழி விழலாம்.
2.ரிஷபம்:
இவிகளுக்கு சனி 9,10 க்குடையவர் . சனி ஏழுக்கு வருவதால் அன் மேரீட் சனத்துக்கு அப்பா வழி உறவில் திருமணம் நடக்கலாம். மேரீட் சனம் வயதில் மூத்த பெண்ணுடன் நெருக்கம் காட்டலாம். சிலர் பார்ட்னர் ஷிப்ல எதையாவது செய்ய போயி முட்டிக்கிட்டு அவதிப்படலாம்.
3.மிதுனம்:
இவிகளுக்கு சனி 8,9 க்குடையவர் .இவர் ஆறில் வருவதால் சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி நடக்கும். அப்பா/அப்பாவழி உறவு நோய் வாய்படலாம்/அல்லது அவருக்கு சிக்கல்/அல்லது அவருடன் தங்களுக்கு முட்டல் மோதல் ஏற்படும். மேற்கு திசை நோக்கிய தூர பயணத்தில் சிக்கல் வரலாம்.
4.கடகம்:
இவிகளுக்கு சனி 7-8 க்குடையவர் இவர் ஐந்தில் வருவதால் அவமானம்,அவப்பெயர்,குழந்தைகளுக்கு உடல் நலக்கேடு வரலாம். கடந்த பிறவியின் காதலி /மனைவி தற்சமயம் லாஜிக் இல்லாம லைஃப்ல என்டர் ஆகி பல்பு வாங்கலாம். இதை உலகம் நீச ஸ்த்ரீ சகவாசம்னு பார்க்கும். அன் மேரீட் சனம் தங்கள் தகுதிக்கு மிக குறைந்த பெண்ணை மணக்க வேண்டிய கட்டாயம் வரலாம்.
5.சிம்மம்:
இவிகளுக்கு சனி 6-7 க்குடையவர். இவர் 4 ல் வருவதால் தாய்க்கு நோய், வீட்டுக்கடன்,வாகன கடன் சிக்கல் தரலாம். அன் மேரீடா இருக்கிற சிலருக்கு தாய் வழி உறவில் வரன் அமையலாம். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர வாய்ப்பு. டூ வீலர்ல டபுள்ஸ் ஏத்தாதிங்க. வீட்டு ஓனர் கிட்டே சூதானமா நடந்துக்கங்க.
6.கன்னி:
இவிகளுக்கு சனி 5-6 க்குடையவர். இவர் 3 ல் வருவதால் அட்வென்சரஸா,அக்ரசிவா ரோசிப்பிங்க. செயல்படுவிங்க. அதனால அல்லல் அலைச்சல் ஏற்படும்.இளைய சகோதரம் நோய் வாய்படலாம்/அல்லது அவர்களுடன் /அல்லது அவர்களுக்கு சிக்கல் வரலாம். உங்க காது டமாரம் ஆகலாம்.

எச்சரிக்கை:

அந்தோ பரிதாபம் -ஜெ நிலை இந்த தலைப்புல ஒரு வில்லங்க பதிவு . அம்மா பதவியில இருந்தா என்ன மருவாதி.பதவியில இல்லின்னா என்ன மருவாதின்னு தனிப்பிரிவு அதிகாரிகள் பட்டவர்த்தனமா காட்டியிருக்காய்ங்க.பதிவை படிக்க இங்கு அழுத்தவும்

7.துலா:
இவிகளுக்கு சனி 4-5 க்குடையவர் .இவர் இரண்டில் வருவதால் விற்க முடியாம தவிச்ச பூர்வீக வீடு/லொடக்காணி வண்டிய விக்க முடியலாம். தாய்/தாய் வழி உறவுகள் தாராளமா உதவி பிற்காலத்தில் சிக்கல் ஏற்படுத்துவர். கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருக்கிற பார்ட்டி அடிமாட்டு ரேட்டுக்கு ஒரு பழைய சொத்து குறித்த ஆஃபர் கொடுப்பார். ஆனால் அதனோட பலன் கைக்கு வர 2014 நவம்பர் 2 முதல் ஒன்னேகால் வருசம் ஆகலாம்.டேக் கேர்.
8.விருச்சிகம்:
இவிகளுக்கு சனி 3-4 க்குடையவர். இவர் ஜன்மத்துல வர்ரதால சகோதரம்,பயணங்கள்,தாய்,வீடு,வாகனம் குறித்த கவலை தூக்கத்தை கெடுக்கும். தொழிலில் கவனம் சிதறும். கடுமையான மலச்சிக்கல் (பைல்ஸ் வரை கூட போகலாம்) தலை முடி உதிர்தல், முகத்தில் எண்ணெய் .
9.தனுசு:
இவிகளுக்கு சனி 2-3 க்குடையவர் இவர் விரயத்தில் வருவதால் வாய கொடுத்து மாட்டிக்காதிங்க.கொடுக்கல் வாங்கல்ல மன்னிக்க முடியாத தாமதம் ஏற்படும். குடும்ப செலவுகள் திணறடிக்கும். இளைய சகோதரத்தால்/ தேவையற்ற பயணங்களால் வீண் விரயம்,அல்லல்,அலைச்சல் ஏற்படும்.
10.மகரம்:
இவிகளுக்கு சனி லக்னம் மற்றும் தன பாவாதிபதி. இவர் 11 ல் வருவது நல்லதே. ஆனால் இருமனப்போக்கு அதிகரிக்கும், பேச்சை புரட்டி பேசி அதனால் லாபம் அடைய பெறலாம். இன்னொரு ஃபேமிலியை சப்போர்ட் பண்ணவேண்டி வரலாம். ரெம்ப கணக்கு பார்ப்பிங்க, ரெம்ப சிக்கனமா இருக்க பார்ப்பிங்க. மனித உறவுகள் பாழ்படாம பார்த்துக்கங்க.
11.கும்பம்:
இவிகளுக்கும் சனிதான் லக்னாதிபதி +விரயாதிபதி. இவர் 10 க்கு வருவது நல்லதே. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படலாம். சேல்ஸ் லைன்ல இருந்தா இன்னம் நல்லது. அது ஐரன் ஸ்டீல் ஆயில் அக்ரிகல்ச்சர் மாதிரி சனி காரகமா இருந்தா இன்னம் நல்லது. வேலை நிதானமாத்தான் நடக்கும். கூலி/லாபம் கைக்கு வர தாதமதமாகலாம்.
12.மீனம்:
இவிகளுக்கு சனி 11,12 க்குடையவர் .இவர் 9 க்கு வராரு. இதனால அப்பாவின் செயல்பாடுகளில் ஒரு வித மந்தத்தன்மை ஏற்பட்டுரும். அவரு டபுள் மைண்டடா இருப்பார். தூர பயணங்கள் லாபத்தையும் -நஷ்டத்தையும் மாத்தி மாத்தி தரும். ரெம்ப நாளா நிலுவையில் இருந்த பெருந்தொகை /பழைய சொத்து கைக்கு வந்து படக்குனு செலவாயிரும்.
எச்சரிக்கை:
நம்ம பெசல் பரிகாரம் தான். அந்தந்த ராசிக்காரவுக கமெண்ட்ல வந்து கேட்டா சொல்ல உத்தேசம்

14 Replies to “சனிப்பெயர்ச்சி பலன் (2014-2017)”

Thanigaivel

18/10/2014 at 1:28 pm

ஐயா, வணக்கம்,

எனது ராசி & லக்னம் – தனுசு , நட்சத்திரம் – மூலம்.

பரிகாரம் சொல்லுங்களேன். !!!

Reply

  S Murugesan

  18/10/2014 at 3:27 pm

  வாங்க தணிகை வேல் !
  அடுத்த ராசிக்காரவுகளுக்கும் மறு பதிவுல வரும்.

  Reply

MARUTHAPPAN

17/10/2014 at 2:15 pm

amma got bail sir

Reply

  S Murugesan

  17/10/2014 at 3:02 pm

  வாங்க மருதப்பன் !
  ம்..அப்டேட் பார்த்துக்கிட்டு தான் இருந்தன்.

  Reply

ponnusamy

15/10/2014 at 1:04 pm

சகோ!
பதிவு இன்னும் காணலியே!

Reply

  S Murugesan

  16/10/2014 at 7:44 pm

  வாங்க பொன்னுசாமி !
  பரிகார பதிவு மோஸ்ட்லி இந்த இரவு தயாராயிரும்

  Reply

vreega

15/10/2014 at 12:32 pm

அண்ணா துலாம் பற்றி இன்னும் விளக்கமா சொல்லுங்கோவன். பரிகாரம் என்ன? நான் ஒரு ஒரு கட்டிடம் ( வீட்டோடு சேர்ந்த ஒரு தொழில் ) ஓன்று விற்க முயற்சித்து கொண்டு இருகிரன். சரி வரவே இல்லை. எப்போது சரி வரும்.

Reply

A.S. Kumar

14/10/2014 at 6:20 pm

அண்ணே ,

ரொம்ப நன்றி. இன்னும் நிறைய சொல்லுங்க. வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடீங்க.

Reply

Lavanya

14/10/2014 at 5:02 pm

sir ..kanya lagnam, kataka rasi ..pls recommend remedies ..
Also for mesha lagna, meena rashi

Reply

  S Murugesan

  14/10/2014 at 5:20 pm

  அம்மாமாரே ! அய்யாமாரே !
  அம்பேல் ..இந்த பலன் வரை இன்னைக்கு படிச்சு வைங்க.

  நாளைக்கு 12 ராசிக்கும் பரிகாரம் தனிப்பதிவாவே போட்டுர்ரன்.

  Reply

Srinivasan

14/10/2014 at 4:12 pm

Sir, Please parikaaram for Meena Raasi, Rishaba Lakhnam

Reply

Raja Gopal

14/10/2014 at 2:54 pm

Pls let me know more details for Mirugasirisam

Reply

satya

14/10/2014 at 1:08 pm

Sir parigaaram for kumba rasi satyam nakshtram with simma lagnam , please!

Reply

  S Murugesan

  14/10/2014 at 2:00 pm

  Welcome Sathya !
  wear safari suits are pant & Shirt with same colour. Use steel ornaments.Have bath only after returning from duty .

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.