டிவி டாக் ஷோ : அட..அனுபவங்கள்

letter to jail

அண்ணே வணக்கம்ணே !
புதிய தலைமுறை டிவிலருந்து கால் வந்தது. டாக் ஷோல கலந்துக்கறோம்னு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டு அனல் காட்டியிருந்தம். உள்ளுக்குள்ள உதறல் தான். ஏன்னா ஏற்கெனவே ஒரு தபா ஆடிஷனோட நின்னு போச்சு (அதுல நாம ஜட்ஜி தெரியும்ல?)

அப்பம் சுஜாதா கதை மாதிரி மனசுக்குள்ள கன்னுக்குட்டி உதைச்சதால மொதல்ல கலந்துக்குவம்.பிறவு டிவி பேரை சொல்லலாம்னு சூதானமாத்தான் இருந்தம். ஆனாலும் இளையராசாவோட மொத ரிக்கார்டிங்குல கரண்ட் கட் ஆன மாதிரி அது ஆடிஷனோட நின்னு போச்சு (இது ஷூட்டோட நின்னுருமோன்னு சம்சயம் -ஏன்னா அதான் பதிவை படிக்க போறிங்கல்ல)

அதுக்கு மிந்தி ஒரு இன்ஃபர்மேஷன் .மம்மி செயில்ல இருக்கற மேட்டர் தெரியும்ல. நம்ம மானில கனவுகள்,தேச கனவுகள் எல்லாத்தையும் கட்டு கட்டி கூடவே நாம வெளியிட்ட புக்ஸோட ரெண்டு செட்டும் வச்சு பரப்பன அக்ரஹாரா செயில் முகவரிக்கு அனுப்பிட்டன் (கூரியர் தான் -நாளைக்கு போய் சேர்ந்துரும்ல) விவரங்களுக்கு அம்மாவுக்கு ஆப்பு பதிவை படிங்க.

இப்ப டாக் ஷோவுக்கு போயிரலாமா?
தலைப்பு என்னமோ மொதல்ல சினிமா சமூகத்தை சீர்த்திருத்துகிறதா?சீரழிக்கிறதான்னு தான் சொன்னாய்ங்க( ஃபோன் தகவல்) பிறவு பார்த்தா தணிக்கைக்கு பிறகும் சில அமைப்புகள் சினிமாக்களுக்கு எதிர்ப்பது சரியானு மாத்திட்டாய்ங்க.

இத்தனைக்கும் டிவி காரவுக மட்டுமல்லாம ஒருங்கிணைப்பாளரும் ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி விவரமா சொல்லியும் கலந்துக்கிட்டவுக அப்டேட்டே ஆகல போல. செம சொதப்பல். தொகுப்பாளர் பொன் ராம் வசதியா உட்கார்ந்துக்கிட்டு அரசியல் வாதிகளை உட்கார விடாம செய்றதுலதான் சமர்த்தர் போல. நீயா நானா கோபின்னா ஆருனா சொதப்பினா தாட்சண்யமே இல்லாம முகம் எல்லாம் பல்பா உட்கார்ந்திருக்கிற நம்ம மாதிரி பார்ட்டிகளுக்கு கொடுக்க சொல்லிருவாரு. பொன் ராம் எல்லாம் எடிட்டிங்குல பார்த்துக்கலாம்னு லூஸ்ல விட்டாரு.

மதியம் ரெண்டு மணிக்கு வந்தா போதும்னு சொன்னாய்ங்க. நாம கிழவாடியாயிட்டமில்லியா சரியா 1.45 க்கு உள்ளாற நுழைஞ்சுட்டம். சனம் அஞ்சுமணி வரை வந்துட்டே இருந்தாய்ங்க. இதுல வராதவிகளுக்கு ஃபோன் மூலமா ரிமைண்டர் வேற. (முருகேசா நீயும் யூத்தாயிர்ரா -அதானே உன் ஸ்டைலு)
செட்ல கொண்டு உட்கார வச்சு லைட்டிங் ,கேமரா ஆங்கிள்ல்லாம் சரி பார்க்கவே அஞ்சாயிருக்கும் போல. அந்த வெளிச்சத்துல ரா -பகல் கூட தெரியல பாஸ் ! வெளிய வந்தப்போ இரவு 7.30.

சிறப்பு அழைப்பாளர்களா மதுபான கடை இயக்குனர் கமலக்கண்ணன் -அந்த பட ப்ரொட்யூசரு (இவருக்கு இதே பதிவுல வச்சிருக்கன் ஆப்பு), த.மு.மு.க தலீவரு ,பா.ம.க வழக்கறிஞர் பாலு.

ஒரு வழியா ஆங்கர் பொன் ராம் வந்து தொண்டைய செருமி செருமி டேக்ஸ் எடுத்துக்கிட்டிருந்தாரு. பிறவு ஆற அமர ப்ரோக்ராம் ஸ்டார்ட்.
பராசக்திலருந்து கத்திவரைன்னு ஆரம்பிச்சாரு ( புரியுதா?) எல்லாம் செரி இந்த நிகழ்ச்சில நாம என்ன ஸ்டாண்ட் எடுத்துக்கிட்டம்னு சொல்லவே இல்லையே. தணிக்கைக்கு பிறகு(ம்) சில அமைப்புகள் எதிர்ப்பது சரியேங்கறது நம்ம ஸ்டாண்டு.

ஏன்னா புதன் இரவு ஸ்ரீரங்கத்து தேவதைகளை புரட்டிக்கிட்டிருந்தனா -பயம் வந்துருச்சு -தாளி படைப்பாளி எல்லாம் தன் சாதி,மதத்தை தாண்டி வராத நிலையில தான் இருக்காங்க போலனு தோனிருச்சு. ஸ்ரீரங்கத்து தேவதைகள் சினிமாவா வந்தாச்சுன்னா என்னாகும்? இந்தி எதிர்ப்பு போராட்டத்துல ஒரு இந்தி போர்டை தார் பூசி அழிச்சா ரூ.40 கொடுத்தாய்ங்களாம்.

மொத ரவுண்டுல ( புதன் இரவு கம்ப்ளீட்டா லூஸ் பண்ண தூக்கம், பயண களைப்பு எல்லாத்தையும் மீறி பெட்டராவே பெர்ஃபார்மென்ஸ் கொடுத்தம்)
அதன் சுருக்கம் கீழே:

பலரும் தலைப்பையே உள் வாங்காம “பழைய தலைப்புலயே ” பேசிட்டிருந்ததால ..தணிக்கை முடிந்த சினிமாக்களுக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது முறையானு பேசிட்டிருக்கம். இது சன நாயகம். தணிக்கை அதிகாரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. அது ஒரு இன்னொரு கவர்மென்ட் ஆஃபீஸு. அவிகளுக்கு மக்களோட நாடி துடிப்பு மென்மையான உணர்வுகள் தெரிந்திருக்கும்ங்கற அவசியமும் கிடையாது.அவிக சர்ட்டிஃபிக்கேட் ஏற்படுத்த போற விளைவுகளும் தெரியாது.அதுக்கு அவிக பொறுப்பும் ஆக மாட்டாய்ங்க.

சினிமா ஒரு விஷுவல் மீடியா. தினத்தந்தியில “பள்ளிக்கூடம்”ங்கற வோர்டை யூஸ் பண்ணக்கூடாதுன்னு ஆதித்தனார் எளுதியிருக்காரு (ஏன்னா சில ஏரியாவுல வன்னியரை இழிவு செய்ய பிரயோகப்படுத்தும் பதம் அது) .

ஓரளவு படிக்க தெரிஞ்ச வாசகனுக்கே எதை கொடுக்கனும் -எதை கொடுக்கக்கூடாதுன்னு அலார்ட்டா இருக்க வேண்டிய தேசம் இது. ஜஸ்ட் பார்க்க மட்டும் தெரிஞ்ச பார்வையாளன் மேட்டர்ல எவ்ளோ அலார்ட்டா இருக்கனும்.

பஞ்சேந்த்ரியானாம் நைனம் ப்ரதானம். மனிதன் கண் வழியாத்தான் சாஸ்தி தெரிஞ்சுக்கறான்.அவன் சக்தி எல்லாம் கண்வழியா தான் செலவழிஞ்சு போகுது.அதனாலதான் தியானத்துல கண்ணை மூடுங்கறாய்ங்க.

சினிமாவ விடுங்க. ஒரு கவிதை .”தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை எரித்திடுவோம்”னு பாரதியார் எழுதிப்புட்டாரு.அவனவன் தீப்பந்தத்தோட கெளம்பியிருந்தா என்ன கதி?

மேலும் மன்சனோட பாடியிலயே சில மென்மையான பாகங்கள் இருக்கு. உ.ம் மூக்கு லேசா கை பட்டாலே கொட கொடனு கொட்ட ஆரம்பிக்கும்.அதுக்கு காரணமானவன் நான் ஒன்னும் பண்ணல கை பட்டுது அவ்ளதான்னா விட்டுருவாய்ங்களா?

(இதுக்கு தேன் மதுபான கடை ப்ரொட்யூசர் -மூக்குல பட்டா ஒன்னும் ஆகாதுன்னாரு – பாடிக்கு நஷ்டமில்லை தான் -ஆனால் அந்த ரத்தத்தை அவனை சேர்ந்த ஆட்கள் பார்த்தா என்னா மாதிரி பதற்றம் வரும் – எப்படி வெடிக்கும்? மேலும் கிரைம்ல ப்ளீட் ஆனா தனி செக்சன். இல்லின்னா நியூசென்ஸ் கேஸுதான்.இதை எல்லாம் ஆருனா அவருக்கு சொல்லி வைங்கப்பு )

சென்சார் அதிகாரி ஆஃபீஸ்ல உட்கார்ந்திருப்பாரு. ப்ரொட்யூசர் ,டைரக்டர்லாம் ஏசி ரூம்ல செல்லோட உட்கார்ந்திருப்பாய்ங்க. தியேட்டர்ல ஆரு இருப்பாய்ங்க? வயசாளி மேனேஜர், பார்ட் டைமா டிக்கெட் கொடுக்கிற மிடில் க்ளாஸ் யூத், கேட்டாண்டை ஒரு ஊனமுற்றவன் இருக்கலாம். படம் பார்க்க ஆண்,பொண்,குழந்தை குட்டி எல்லாம் வராய்ங்க.

எதுனா வில்லங்கம் நடந்தா ஆரு பொறுப்பு? மேட்டரு மொதல்ல நீங்க சொல்ற சோ கால்ட் அமைப்புகள் டேபிளுக்கு தான் வரும்.அவிக தான் ஃபயர் இஞ்சினுக்கு ஃபோன் போடனும், அவிக தான் ஆம்புலன்ஸுக்கு போன் போடனும்.அவிக மக்கள் மத்தியில்,மக்களுக்காக,மக்களோட இருக்காய்ங்க.
அவிகளுக்கு தெரியும் எது சேரும் -எது சேராதுன்னு ..”

நாம வாய வச்ச முகூர்த்தமா -அல்லது பொன் ராம் நம்ம கருத்தை கோட் பண்ணி பேசினதுல கிடைச்ச உற்சாகமா தெரியல.. மொதல்ல பம்மினவுகள்ளாம் முனிசிப்பாலிட்டி குழாயடில குடத்தை செருகிற மாதிரி கருத்து செருகல ஆரம்பிச்சிட்டாய்ங்க. ஒரே படத்தோட கண்ணாலம் கட்டி ஃபாரின்ல செட்டில் ஆன ஹீரோயின் கதையா போச்சு நம்ம கதைநாம பேசினதையே வெட்டி ஒட்டி – நிகழ்ச்சி பூரா விரவி விடவேண்டியது எடிட்டரின் வேலை.

எதிர்கட்சியில நீல சட்டை போட்ட ஒரு இளைஞர் கில்லி. கொய்யால சினிமாவுக்கு முன்னே இங்கே சாதி இல்லியா? மதம் இல்லியா? தீண்டாமை இல்லையா? வன் புணர்வு இல்லியா? பால்ய விவாகம் இல்லையா?னு சிக்ஸர் மேல சிக்ஸர்.

நமுக்கு மைக் கிடைச்சிருந்தா ” கண்ணா ! சினிமா காரனோட புத்தியும் – பேப்பர் காரன் புத்தியும் ஒன்னு. ரயில் சேஃபா போய் சேர்ந்தா நியூஸ் கிடையாது – லவ்ஸ் பண்ணி கண்ணாலம் கட்டி குழந்தை பெத்து ஒழுங்கா வாழ்ந்தா அது கதை கிடையாது.

ரயில் விபத்தானா நியூஸ் போடுவான் பேப்பர் காரன். எவனோ எங்கயோ பொண்ணுக்கு ஆசிட் அடிச்சா அதை கதை பண்ணுவான் சினிமா காரன்.
விதிகளை விட்டுட்டு விதி விலக்குகளை கட்டி அழற கூட்டம் அது. சமுதாயத்துல கறை இருக்கு இல்லேங்கல.அதை ஏன் மஞ்ச ஸ்கெட்ச் பேனால ஹைலைட் பண்றிங்க. அது விதிவிலக்குகளே விதிகளோங்கற மயக்கத்தை உருவாக்குதே.

மேற்படி நீல சட்டை இளைஞர் முக நூலிலும் செயல்படும் பிரபல இடது சாரி எழுத்தாளர் E,kumaresan சாரோட பையனாம். புலிக்கு பிறந்தது புல்க்கா சாப்பிடுமா? கங்கிராட்ஸ் !

மத்தபடி தொப்புள்ள ஆம்லெட், பம்பரம் சமைஞ்சது எப்படி மாதிரி சரித்திர புகழ் பெற்ற வாதங்கள் (தலைப்புக்குள்ளயே வராது) அந்த கால உ.சு.வாலிபன் ,சண்டியர்,விஸ்வரூபம்னு ஜல்லி. வன்முறைய ,ஆபாசத்தை ஏன் எதிர்க்கமாட்டிங்கனு கேள்வி.

வசந்த மாளிகையில சிவாஜி செத்துப்போறதா வச்சாய்ங்களாம்,மறுவாரம் மாத்திட்டாய்ங்க. ஏதோ ஒரு மோகன் படம் பப்பாதிய மாத்தி ஓட்டினாய்ங்கனு கேள்வி.சென்சார் சர்ட்டிஃபை பண்ணியாச்சுல்ல ஏன் மாத்தினாய்ங்க.மக்கள் கருத்து பாஸூ..

புத்ரகாமேஷ்டி யாகத்தை விஷுவலா காட்டமுடியுமா? தியேட்டரை கொளுத்திருவாய்ங்க. ஏசு பிறப்பை படமா எடுக்கறோம்னுட்டு ஊருசனம் கன்னி மேரிய காச்சறதை அப்படியே காட்டமுடியுமா? அட நபிகள் நாயகம் படத்தை போட்டதுக்கு ஆளுங்கட்சி பத்திரிக்கையே என்னா மாதிரி பேதியாக வேண்டி இருந்தது.
அன்னைக்கு ஏன் எதிர்க்கலன்னு ஒரு பாய்ண்ட் வரும் .அட அன்னைக்கு சூத்திரன் தூங்கிக்கிட்டிருந்தான் .இன்னைக்கு விழிப்புணர்வு வந்திருக்கு. கேட்கறம்.

கலை ,கருத்து சுதந்திரம்னு ஒரு வாதம். புலிக்கும் புலிமார்க் சீயக்காய் தூளுக்கும் என்ன சம்பந்தமோ அந்த சம்பந்தம் தான் சினிமாவுக்கும் -கருத்து சுதந்திரத்துக்கும்.
அட கலைன்னே ஒரு பேச்சுக்கு வச்சுக்குவம்.கலைஞன்லாம் அப் நார்மல் .அவன் மனோராஜ்ஜியத்தை நடத்தறான்.லோக ராஜ்யம், அந்த மக்களோட போக்கு அவனுக்கு தெரியாது. நாலு கவர்மென்டு அதிகாரி சர்ட்டிஃபேகேட் கொடுத்துட்டாய்ங்கனு அப்டியே சனங்க கிட்டே கொண்டு போனா என்ன ஆகும்?

ஃபோர் வீலர்,லேப்டாப்னு தயாரிக்கிறாய்ங்க. அவிக கம்பெனிலயே குவாலிட்டி கண்ட் ரோல் டிப்பார்ட்மென்ட் இருக்கும். ஆராருக்கோ ஓட்டி காட்டி பர்மிஷன் வாங்கியிருப்பாய்ங்க. வெளிய வந்ததும் தீப்பிடிக்குது,பேட்டரி வெடிக்குது. மொத வெடிப்பு பத்தி சொன்னப்போ அவன் என்ன சொல்றான் . நீ சரியா மேன்யுவல சரியா படிக்கல, பீச்சாங்கையில பிடிக்கலனு சமாளிக்கிறான்.பத்து உசுரு பலியான பிறவு ரீகால் பண்றான். ரீப்ளேஸ் கொடுக்கறான். சினிமா மாஸ் மீடியா .லட்சக்கணக்குல வெட்டி -கொளுத்தி செத்த பிறவு என்னாத்த ரீகால் பண்றது?

ஓகே பாஸ்.. இன்னம் சென்னை களைப்பு மிச்சம் இருக்கிறாப்ல இருக்கு.கண்ணை கட்டுது.மேலும் நீங்க கமெண்ட்ல வந்து எதுனா கேட்டா -எதிர்கருத்தை முன் வச்சா இதை வளர்க்கலாம். அதுவரை உடுங்க ஜூட்டு ..

டிஸ்கி:
அந்தப்பக்கம் மாரியாத்தா காளியாத்தா ரேஞ்சுல ஒரு அம்மாவ உட்கார வச்சாலும் – இந்த பக்கம் த்ரிஷா லுக்ல ஒரு பாப்பா (அசப்புல என் மவ மாதிரியே இருந்துச்சு)

3 Replies to “டிவி டாக் ஷோ : அட..அனுபவங்கள்”

gulam mohammed

06/04/2015 at 4:58 pm

சூப்பர் அண்ணே இது மாதிரி ஒரு போஸ்ட் தான் தேடிட்டு இருந்தேன்

Reply

MARUTHAPPAN

04/10/2014 at 8:18 am

when the program will be telecast. date and time req. we will watch and if required we will raise the questions

thx
S.MARUTHAPPAN

Reply

    S Murugesan

    04/10/2014 at 11:21 am

    வாங்க மருதப்பன் !
    ப்ரோக்ராம் பேரு உரக்க சொல்லுங்கள் – இது இந்த சீரிஸ்ல மொத ப்ரோக்ராம்ங்கறதால புதியதலைமுறையிலயே இது பற்றிய அறிவிப்பு வரலாம். கலந்து கொண்டவன் என்ற முறையில் ஃபோன் மூலம் தகவல் தெரிவிக்கவும் சான்ஸ் இருக்கு.பார்ப்பம்..

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.