உங்கள் ராசியும் -வாழ்க்கையும் : தனுசு

Mummy daddy 1

அண்ணே வணக்கம்ணே !
ஜஸ்ட் ராசிய அடிப்படையா வச்சு டோட்டல் லைஃப் ஸ்டைலை சொல்லிக்கிட்டு வர்ரம். இந்த பலன்லாம் மெட்டீரியலைஸ் ஆகலின்னா உங்க மைண்ட் செட் ,உங்கள் விருப்பங்கள்,உங்க முன்னோர் நிலை இதை போல இருக்க வாய்ப்பிருக்கு.( சந்திரன் மனோகாரகன் -சப் கான்ஷியஸ்லருந்து அன் கான்ஷியஸ் மைண்ட் வரை இவரோட ஆட்சி தான் -பூர்வ ஜென்ம ஞா உங்க சப் கான்ஷியஸ்ல இருக்கலாம்லியா?) இந்த வரிசையில இன்னைக்கு தனுசு ராசி.

1.லக்னாதிபதி குரு என்பதால்:
நல்ல ஞா சக்தி ,ப்ளானிங்,பக்தி , முன் யோசனைல்லாம் இருக்கும். எதிர்காலத்துல நாலு பேருக்கு நல்லது சொல்லப்போற பார்ட்டிங்கறதால -இளமையில கொஞ்சம் அப்படி இப்படி அனுபவங்களை சேர்த்திருக்கலாம். நல்ல நிறம்,நடுத்தர உயரம் இருக்கலாம்.

2.வாக்குஸ்தானாதிபதி சனி:
பேச்சு மட்டும் கொனஷ்டையா வந்துரும். சிலர் அமுக்கன் என்றோ -முத்து சிந்திருமோ என்றும் பெயர் வாங்கலாம்.கொடுக்கல் வாங்கல்ல தாமதம் ஏற்படும். சில்லறை வருமானத்தை கூட முதலீடு பண்ணிட்டு அவதிபடலாம். குடும்பம் அல்லது உடன் பிறந்தவர்கள் ஒரு வித வறுமை நிலையில் இருக்கலாம்.அல்லது அதீத சிக்கனர்களாய் இருக்கலாம்.

3.சகோதராதிபதி சனி:
தைரிய சாலிங்கதான்.ஆனால் ரெம்ப லேட்டா கொதிப்பாய்ங்க. கடைசி சந்தானமாவோ /கடைசி ஆண் சந்தானமாவோ இருக்கலாம்.உங்க உள்ளூர் பயணம் தொழிற்பேட்டைஅல்லது இரும்படிக்கிற இடம் ,எருமை வளர்க்கும் இடம் ,குல தெய்வ கோவில்களை தாண்டி செல்வதாய் இருக்கலாம்.

4.மாத்ருஸ்தானாதிபதி குரு:
அம்மாவுக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும்.பெயர்,உடல் வாகு,நிறம்,முக ஜாடை இப்படி. அரசியல்,பொருளாதாரம், நிர்வாகம்,பேங்கிங் இத்யாதிய முக்கிய படிப்பா படிச்சிருக்கலாம். புராணம்,இதிகாசம்னு ரெம்ப மெனக்கெடுவிங்க. இதுக்கு அம்மாவும் ஒரு காரணமா இருக்கலாம். வீடு நிறைய சாமி படம்,சாம்பிராணி புகைக்கு வாய்ப்பு.வீடு கோவிலை ஒட்டி இருக்கலாம்,கோவில் இடத்துல இருக்கலாம்.கவர்ன்மென்ட்/கம்பெனி வாகனத்தை உபயோகிக்க வாய்ப்பிருக்கு. ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணலின்னா நடுவயசுல நெஞ்சு வலி கூட வரலாம்.

5.ஐந்துக்குடையவர் செவ்:
உங்கள் தோற்றம் உங்கள் வயதை விட 10 வயது கூடுதலா தோன்றலாம்.ஆனால் மைண்ட் செட்? செம யூத்து.அதுவும் போட்டி/விவகாரம்னு வந்துட்டா ரெம்ப சில்லறைத்தனமா இறங்கிருவிங்க.மனைவிக்கு குறை பிரசவம் நடக்கலாம். அல்லது குழந்தைகளில் ஒருவர் உடல் நலன் திடீர்னு காபரா பண்ணிரலாம். ரியல் எஸ்டேட்ல ஆர்வம் இருக்கும்.கை கொடுக்கும்.

6.ஆறுக்குடையவர் சுக்கிரன்:
ஒங்க சோஷியல் ஸ்டேட்டஸுக்கு சம்பந்தமே இல்லாத பெண்ணோட உங்க பேர் உச்சரிக்கப்படலாம்.டேக் கேர். அல்லது ஊருக்கு உபதேசம் பண்ணிட்டு நீங்க லக்சரி மாயையில சிக்கிருவிங்க.கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் கூட வரலாம்.

7.ஏழுக்குடையவர் புதன்:
எவ்ள உத்தமர்களா இருந்தாலும் -ஜஸ்ட் நட்புதானேனு டீல்ல விடாம டாக்டர்,ஆடிட்டர்,சோசியர்,சந்தேகத்துக்குரிய பெண்களின் சகவாசங்களை அவாய்ட் பண்ணிருங்க. பிசினஸ் உங்களுக்கு உதவாது .(நிர்வாகத்துல புலி -ஆனால் சேல்ஸ் ப்ரமோஷன்,பப்ளிக் ரிலேஷனுக்கு சரிப்பட்டு வரமாட்டிங்க)

8.எட்டுக்குடையவர் சந்திரன்:
பப்ளிக் ஒப்பீனியன் உங்களுக்கு சாதகமா இருக்காது .என்னருந்தாலும் நீங்க சுப்பீரியர்ஸை கையில வச்சுக்கிட்டு ரிமோட்கண்ட் ரோல் மூலமா ஒர்க் அவுட் பண்ண வேண்டியதுதான். மனம் -நுரையீரல்-சிறு நீரகம் இதுல ஏதோ ஒன்னு பாதிக்கலாம். டேக் கேர். மேலும் எதை எல்லாம் செய்யக்கூடாதுன்னு உங்களுக்கே உங்களுக்கு நல்லா தெரியும்.ஆனால் அன்னியன் மாதிரி அதை எல்லாம் செய்துக்கிட்டிருப்பிங்க.வெளிய தெரிஞ்சா இமேஜ் காலியாயிரும் பாஸூ.

9.ஒன்பதுக்குடையவர் சூரியன்:
அப்பா தொழிலை தொடர்ந்து செய்யலாம். அல்லது சுற்றி சுற்றி செய்யும் வேலை,ஓப்பன் ஏர்ல வேலை ,மலை,மலை சார்ந்த பகுதியில் வேலை செய்யவேண்டி வரலாம். லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல பங்கெடுக்கவும் சான்ஸிருக்கு. எஸ்காம் கூட கை கொடுக்கலாம். இதே போல சூப்பர்வைசர், டீம் லீடர், குவாலிட்டி கண்ட் ரோல் இத்யாதிக்கும் சான்ஸ் இருக்கு. ஆனா இந்த மேட்டர்ல பொஞ்சாதி ,நண்பர்கள்,பார்ட்னர்ஸ் பேச்சை கேட்காதிங்க.

10.பத்துக்குடையவர் புதன்:
ஒங்களுக்கு யாவாரம் தெரியாது பாஸ். கமிஷன், டீலர் ஷிப்,ஏஜென்சி ,ஸ்கூல் நடத்தறதுலாம் வேண்டாம். ( வேணா நீங்க டீச் பண்ணலாம் ) உங்கள் மக்கள் தொடர்பெல்லாம் எம்.ஜி.ஆர் வேலைக்கு தான் உதவும்.

11.லாபாதிபதி சுக்கிரன்:
லேடீஸ் மேட்டர்ல பொம்மை பார்க்கலாம்னு நெருங்கினா தலையில கட்டிருவாய்ங்க. தாய்க்குலத்தோட ஈஷிக்கிறதும் வேணாம் முறுக்கிக்கிட்டு போறதும் வேணா. அவிக உங்களுக்குள்ள இருக்கிர ஜீனியஸை தான் விரும்பறாய்ங்க. உங்கள இல்லை.

12விரயாதிபதி செவ்:
உங்க கிட்டே எத்தனையோ ப்ளஸ் பாய்ண்ட் இருக்கு இண்டியா மிலிட்டரி,பாக்கிஸ்தான் மிலிட்டரிக்குஒரே நேரத்துல டேக்கா கொடுக்கிற ஸ்கெட்ச் இருக்கு. நிர்வாக திறமை இருக்கு.குட் வில் இருக்கு,ஜீனியஸ் இருக்கு, சமூகத்துல மதிப்பு மருவாதி எல்லாம் இருக்கு. ஆனால் உங்க கோபம் எல்லாத்துக்கும் ஆப்பு வச்சிருது. பத்து ரூவா உங்களுக்கு நஷ்டமேன்னாலும் ப்ரதர்ஸை சுமுகமா வச்சுக்கங்க. ஷுகர் வராம பார்த்துக்கங்க. வந்தா கால் காலி.(முக்கியமா பாதம்)

2 Replies to “உங்கள் ராசியும் -வாழ்க்கையும் : தனுசு”

Daran

01/10/2014 at 9:37 pm

10 -புதன் – என்ன தொழில் செய்ய கூடாதுன்னு சொன்னீங்க. என்ன செய்ய்யலாம்னு சொல்லவே இல்லையே?

எம் ஜி ஆர் தொழில்னா என்ன?

Reply

  S Murugesan

  01/10/2014 at 10:24 pm

  வாங்க தரன் !
  நல்ல கேள்வி. Gold,ஃபைனன்ஸ்,பாலிட்டிக்ஸ்,வங்கி,நீதி துறை,என்.ஜி.ஓ , எண்டோன்மென்ட் போர்ட், சேமிப்பு,முதலீடு தொடர்பானவை ஓகே.

  கண்டிஷன்ஸ் அப்ளை:
  காலாகாலத்துல கண்ணாலம்,குழந்தை குட்டி இருந்தால் மட்டும்.

  அல்லது போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,எரி பொருள்,ரியல் எஸ்டேட்.

  கண்டிஷன்:
  ஏற்கெனவே கட்டி,கொப்புளம்,சர்ஜரி,தீவிபத்து,விபத்துல சிக்கியிருக்க கூடாது. சகோதர வர்கம் நல்ல நிலையில இருக்கனும்

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *