Tags      

Categories  அனுபவஜோதிடம் ராசி பலன் ராசியும் வாழ்வும்

உங்கள் ராசியும்-உங்கள் வாழ்வும் (துலாம்)

libra

அண்ணே வணக்கம்ணே !
ஜஸ்ட் ராசிய வச்சு -அதன் படி அமையும் பாவாதிபதிகள் யாருங்கற வச்சு பலன் சொல்லிக்கிட்டு வரேன். இந்த பலன்லாம் உங்களுக்கு ஸ்தூலமா நடக்கலின்னாலும்  இதுல வர்ர நல்ல பலன் களை கனவு கண்டிருப்பிங்க – தீய பலன் கள் நடந்துருமோனு பயந்துக்கிட்டே வாழ்ந்திருப்பிங்க.ஏன்னா ராசிக்கு அடிப்படை சந்திரன் -சந்திரன் தான் மனோகாரகன்.
உங்க ராசிய திராட்டுல  விட்டுட்டு  விருச்சிகத்துக்கு ஜம்ப் ஆயிட்டதுக்கே செம காண்டாயிருப்பிங்க. உங்க பொறுமைய சோதிக்க விரும்பல. மேட்டருக்கு வந்துர்ரன்.
1.லக்னாதிபதி சுக்ரன் என்பதால்:
அழகு,ரசனை,வண்ணங்கள்,சுவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பார்ட்டி நீங்க. ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்,டெக்ஸ்டைல்ஸ்ல  ஆர்வம் இருக்கலாம்.கலைகளில் ஈடுபாடு, சாட்டிங், டூர்,பிக்னிக்,பார்ட்டி,ஃபங்சன்ல ரெம்ப ஆக்டிவா பார்ட்டிசிப்பேட் பண்ணுவிங்க.

2.தனபாவாதிபதி செவ்
சகட்டுமேனிக்கு செலவழிப்பிங்க. காசு தீர்ந்து போனா காச் மூச் னு கத்துவிங்க.ஆட்டைதூக்கி மாட்ல போட்டுக்கிட்டிருப்பிங்க. ஒவ்வொரு சம்பாதனையும் ஒரு விரோதத்தை கொண்டுட்டு வரும். வாதம்,விவாதம்லாம் தண்ணி குடிச்ச பாடு. ஃபேமிலில ஒரு ராணுவ ஒழுங்கு. (ஜாலியா வும் இருக்கலாம்னாலும் அதுக்கும் உங்க கமாண்ட் தேவை) அடிக்கடி கண்கள் சிவக்கலாம்.

3.சகோதராதிபதி குரு என்பதால்:
காசு மேட்டர்ல தகிரியமா ரொட்டேஷன் பண்ணாலும்  செய்த பிறவு உள்ளுக்குள்ள ஒரு உதறல் இருந்து கிட்டே இருக்கும். இந்த உதறலே உங்க பக்திக்கு கடைக்கால். ப்ரதர்ஸ்/சிஸ்டர்ஸ் பட்டம் வாங்கியிருக்கலாம், கோர்ட்,வங்கி மாதிரி நீதி,நிதி தொடர்பான துறையில இருக்கலாம் (அரசியல்லயும் இருக்கலாமுங்கோ).சிட்டிக்குள்ள வண்டில எல்லா டாக்குமென்ட்ஸும் பக்காவா வச்சிருங்க.கூடவே பச்ச நோட்டும்.

4.மாத்ரு பாவாதிபதி சனி:
தாய்க்கு தீர்காயுள், அவிகளோட இவிக உறவு ? மேலோட்டமா பார்த்தா மெக்கானிக்கலா இருக்கும், அண்டர் கிரவுண்ட்ல? டன் கணக்கா அன்பிருக்கும். வீடு? தொழிற்பேட்டைய ஒட்டி இருக்கலாம் அல்லது இரும்படிக்கிற இடம் ,எருமை வளர்க்கும் இடம் ,குல தெய்வ கோவில்களை ஒட்டி இருக்கலாம். ரெம்ப பழசா,புராதனமானதா ,தூசு தும்பு நிறையற பொசிஷன்ல இருக்கலாம். வண்டி? இதுவும்செகண்ட் ஹேண்ட் அல்லது அவுட் டேட்டட் மாடலா இருக்கலாம்.கல்வி? டெக்னிக்கல் லைனுக்கு மாறியிருந்தா ஓகே.இல்லின்னா கஷ்டம் தான்.

5.பஞ்சமாதிபதி சனி:
குழந்தை பிறப்பில் தாமதம். அவர்கள் வளர்ச்சியில் சிக்கல் (வயதுக்கேத்த வளர்ச்சி இல்லாம போகலாம்) சோம்பேறியா இருக்கலாம். மந்த புத்தியா இருக்கலாம். மலச்சிக்கல் முதல் பைல்ஸ் வரை சான்ஸ் இருக்கு. நரம்பு மண்டலத்துல பிரச்சினை வரலாம். கால் தொடர்பாவும் சிக்கல் வரலாம்.  உங்கள பொருத்தவரை “எங்கே நிம்மதி”ன்னு மனசு ஹம் பண்ணிக்கிட்டே இருக்கும். எங்கே அவப்பேர் வந்துருமோங்கற பதைப்புலயே வண்டி ஓடும். நல்ல பேர் மட்டும் ரெம்ப தாமதமா கிடைக்கும். ஒரு தலித் நண்பர் /கால் தொடர்பான ஊனமுள்ள நபர் வாழ்விலும் தாழ்விலும் தொடர்பார்.

6.ரோகாதிபதி குரு:
என்ன தான் கூடுதல் வருமானத்துக்கு ஸ்கெட்ச் பண்ணிக்கிட்டு -ரொட்டேட் பண்ணிக்கிட்டே இருந்தாலும் கடேசியில கடன் தான் நிக்கும். வயிறு தொடர்பான சிக்கல் வேற அப்பப்போ கடுப்பாக்கும். தங்க நகைகள்? அடகுக்கடைக்கும் -வீட்டுக்கும் ஷட்டில் அடிச்சிட்டே இருக்கும்.திடீர் திடீர்னு பெரிய மன்சங்களோட விரோதம் வந்துரும். அவா மேட்டர்ல இன்னம் லொள்ளுதான்.

7.களத்ராதிபதி செவ்:
விரோதமாகிப்போன உறவு குடும்பத்துல பெண் எடுக்கலாம்/புது உறவா இருந்தா ஆரம்பத்துல முட்டல் மோதல் அதிகம். கடேசி முட்டும் மாமனார் ,மாமியார் மேட்டர்ல முறுக்கிக்கிட்டே கூட வாழ்ந்துருவிங்க. மனைவி சேப்பா, ரெம்ப யங்கா இருக்கலாம் (வயசு அல்லது ரூபம்) . அவிகளுக்கு ரத்தம்,எரிச்சல்,கோபம்,உஷ்ணம் தொடர்பான வியாதிகள் வரலாம். மின்சாரம்,நெருப்பு இத்யாதியால் பிரச்சினை வரலாம். உங்களுக்கும் தொப்புளை சுத்தி வலி/கட்டி/கொப்புளம் வர வாய்ப்பிருக்கு.

8.அஷ்டமாதிபதி சுக்கிரன் என்பதால்:
வாழ்க்கைய அனுபவிக்க வேண்டியதுதான். அதுக்கு ஒரு அளவிருக்கு . (தூக்கம் ,உணவு, செக்ஸ் இத்யாதி) ஓவரா போயிட்டா ரெண்டுபக்கமும் ஏத்திவிட்ட கேண்டில் மாதிரி சீக்கிரமே முடிஞ்சுரும்.திங்க முடியாத, தூங்க முடியாத வியாதிகள் வந்து தாம்பத்யத்துலயும் ஆர்வம் குறைஞ்சுருமுங்கோ..

9.பாக்யாதிபதி புதன் என்பதால்:
அப்பா வைசிய லட்சணங்களுடன் இருப்பார் ( கமர்ஷியலி கேல்க்குலேட்டட்) ,வியாபாரம்,மிக்சட் செக்டர்,போர்ட் ,கார்ப்பரேஷன் மாதிரி துறையில இருக்கலாம். அக்கவுண்ட்ஸ்/ஆடிட்டிங்/மருத்துவம்/கல்வித்துறையிலயும் பணி /தொழில் புரியலாம். சேமிப்புல கூட லாபம் எதிர்பார்ப்பிங்க. சிலருக்கு அப்பாவழியில கடைகளுடன் கூடிய வீடு பூர்விக சொத்தா கிடைக்கலாம். அல்லது பஜார் தெருவுல வீடு. வைஷ்ணவ தலங்களை தரிசிக்க வாய்ப்பிருக்கு. தூர தேச தொடர்புகளுக்கிடையில் தரகு வேலை பார்த்தும் காசு பார்ப்பிங்க.

10.ஜீவனாதிபதி சந்திரன்:
தொழில் மழை மாதிரி. பேஞ்சா பேஞ்சு கெடுக்கும், காஞ்சா காஞ்சு கெடுக்கும். ஒன்னு செம ஓட்டம்.இல்லை நொண்டியடிக்கிறது. சிலர் கடுப்பாகி தொழிலையே கூட மாத்திபார்ப்பிங்க.அதுலயும் இதே நிலைதான் ஏற்படும். பலர் மக்களுடன் நேரடி தொடர்புடைய துறைகளில் இருப்பிங்க. சிலர் தண்ணீர்,படகு,மீன் தொடர்பான துறை அல்லது ஃப்ளோட்டிங் பாப்புலேஷனை நம்பியிருக்கிற தொழில்.

11.லாபாதிபதி சூரியன்:
அப்பா தொழிலை தொடர்ந்து செய்யலாம். அல்லது சுற்றி சுற்றி செய்யும் வேலை,ஓப்பன் ஏர்ல வேலை ,மலை,மலை சார்ந்த பகுதியில் / ரிமோட் வில்லேஜ் ஏரியாவுல/புதசா டெவலப் ஆகிற காலனிகள் பகுதியில வேலை செய்யவேண்டி வரலாம். லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல பங்கெடுக்கவும் சான்ஸிருக்கு. எஸ்காம் கூட கை கொடுக்கலாம். இதே போல சூப்பர்வைசர், டீம் லீடர், குவாலிட்டி கண்ட் ரோல் இத்யாதிக்கும் சான்ஸ் இருக்கு.

12.விரயாதிபதி புதன்:
பப்ளிக் ரிலேஷனை ஒரு அசெட் போல மெயின்டெய்ன் பண்ணுவிங்க. இதுக்காக தாராளமா செலவழிப்பிங்க. எல்லா ஃபீல்டை பத்தியும் கு.பட்ச இன்ஃபர்மேஷன் தெரிஞ்சு வச்சுக்கனும்னு மெனக்கெடுவிங்க. இதுக்காவ புக்ஸ், டிவிடி,மனிதர்களுக்காக செலவழிப்பிங்க. ஊட்ல பொஞ்சாதி எதுக்குங்க இதுக்கு போயி இவ்ள செலவுன்னா “இதெல்லாம் இன்வெஸ்ட்மென்டுமா”ம்பிங்க.

print

2,659 total views, 1 views today

S Murugesan

வணக்கம் சார், ஒரு ஜாதகம் எப்படி எழுதுறது இதுக்கு சாப்ட்வேர் இருக்கு அதெல்லாம் விட்டுருங்க, புதுசா ஒரு ஜாதகம் எப்படி எழுதுறது அதில் எப்படி 12 கட்டங்களில் எது எங்க வரும்னு கணிக்கிறது நட்சத்திரம், ராசி, லக்னம் இதெல்லாம் எப்படி கணிக்கிறது சொல்லிக்கொடுங்க

நீங்க இதுக்காக ஒரு விளக்கம் கொடுக்க நினைச்சா நீங்கள் செய்ய வேண்டியது இதுக்கு பதில் எழுதுற நேரத்தில் (Live time) ஒரு குழந்தை பிறந்ததா வச்சுகிட்டு அதுக்கு ஜாதகம் எழுதுறது எப்படினு கொஞ்சம் விளக்கமா தெளிவா என்னைப்போல அப்ரண்டிஸ்களுக்கு புரியற மாதிரி இருக்கனும்.

அன்புடன்
ஞானசேகர் நாகு

S Murugesan says:

வாங்க ஜி.எஸ்.ஆர் !
ஜாதகம் எழுதறது பத்தி எழுதனும்னா தொடர் தான் போடனும். இருந்தாலும் சுருக்கமா சொல்ல ட்ரை பண்றேன். வெய்ட் !

சார் இதை நீங்க எழுத ஆரம்பிச்சுட்டா ரொம்ப சந்தோஷம், உங்க தொடக்கத்தை எதிர்பார்த்துகிட்டு இருக்கிறேன், இதில் இருந்து நிறைய சந்தேகங்கள் வரும் சொல்லப்போனால் எனக்காக வேண்டியே நிறைய பதிவுகள் எழுத நேரம் நிறைய ஒதுக்க வேண்டியிருக்கும்.

நீங்களாக எழுத முடியாது என்று சொன்னால் ஒழிய நான் உங்களை விடுவதாய் இல்லை!

அன்புடன்
ஞானசேகர் நாகு

S Murugesan says:

வாங்க ஜி.எஸ்.ஆர் !
ஜாதகம் எழுதறது ரெம்ப சிம்பிள். பஞ்சாங்கத்தை பக்கத்துல வச்சுக்கிட்டு சொல்லிக்கொடுக்கனும்னா 15 நிமிஷம் போதும். ஆன் லைன்ல சொல்லி தரனும்னா பஞ்சாங்கத்துல உள்ள சில பக்கங்களை ஸ்கான் பண்ணி காட்டனும்.

செய்துரலாம். But it may take some time ! ஜோதிட ஆலோசனை,வலைப்பதிவு,முக நூல் பதிவு,தெலுங்கு வலைதளபதிவுனு ஓடிக்கிட்டிருக்கன்.

ரவுண்ட் தி க்ளாக் செய்தாலும் தீரமாட்டேங்குது. செய்துரலாம்.

chakra says:

வணக்கம்

என் பெண்ணிற்கு 3ல் – குரு + சனி ரிஷபத்தில் இருக்கிறார்கள். லக்னம் – மீனம்.

தாங்கள் அறிவுரை கூற வேண்டும். எவ்வாறு நம்பிக்கை கூறி வளர்ப்பது. கடவுள் நம்பிக்கை இருக்கிறது. குங்குமம் இட்டு கொள்ளாமல் வெளியே செல்ல மாட்டாள். ஆனால், அவள் நம்பிக்கை இழக்கும் நிலைக்கே எல்லாம் நடக்கின்றன . நன்றாக படித்தாலும் மதிப்பெண் பெற முடியவில்லை.

தங்கள் அறிவுரை வேண்டும்

S Murugesan says:

அம்மா !
உங்க கேள்வியிலயே பதில் இருக்கு. கடவுள் நம்பிக்கை இருக்கிற வரை அது முழுசா போயிர்ர மாதிரிதான் எல்லாம் நடக்கும். பெரியாரை அறிமுகப்படுத்துங்க. பிறகு பாருங்க. எல்லாமே தலை கீழா மாறும்.

chakra says:

மிக்க நன்றி சார் !

ஒரு சந்தேஹம் – இது வரை என் வாழ்கை முழுவதும் தெய்வமே எல்லாம் என்று இருந்து விட்டு, இப்போது தெய்வம் இல்லை என்று நடக்க சொல்லிகொடுக்க சிறு குழப்பமாக இருக்கிறது .. எனக்கு மனம் முழுவதும் ஸ்லோகங்கள் சொல்லியே பழக்கம்.

தங்களிடம் மீண்டும் ஒரு விண்ணப்பம் – அவளை எப்படி மாற்றுவது – she is very argumentative by nature – ஏன் புதிதாக பேசுகிறாய் என்று கேட்பாள் !

தெய்வம் வழிபடாமல் இருப்பது ஒன்று தான் வழியா !!

S Murugesan says:

அம்மா !
சனி வக்ரம்ங்கறத ஏன் மொதல்லயே சொல்லல. நாத்திகம்லாம் கேன்சல்.

chakra says:

sir

can you advise if saturn is vakram in 3rd house rishabam for Meena lagna, and will your advise be the same..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *