Tags     

Categories  அனுபவஜோதிடம் ராசியும் வாழ்வும்

உங்கள் ராசியும்-உங்கள் வாழ்வும்

DSC_7835அண்ணே வணக்கம்ணே !
ராசிங்கறது ஜஸ்ட் சந்திரன்   நின்ன ராசி தான். 9கிரகங்கள்ள சந்திரனும் ஒரு கிரகம் தானே. ராசிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? சந்திரன் =மனோகாரகன். எண்ணம் போல் மனம் மனம் போல் வாழ்வு. மனோகாரகனாகிய சந்திரன் ரெண்டே கால் நாள்ள பொட்டிய தூக்கற பார்ட்டியா இருந்தாலும் அந்த ரெண்டு நாள்ள பெரிய பெரிய வேலையா கொடுத்துர கூடியவரு.இதனாலதான் அஷ்டம சனிக்கு பயப்படாதவுகளும் சந்திராஷ்டமத்துக்கு பயப்படறாய்ங்க.
நானே பல சந்தர்ப்பத்துல சொல்லியிருக்கன். வெறும் ராசிய வச்சு ஜல்லியடிக்க கூடாதுன்னு. ஆனாலும் பல தரப்பு சனம் படிக்கிற வெப்சைட்ல ராசிய வச்சு கதை பண்றது தான் சரியான ஃபார்முலா.ஆகவே மகாசனங்களே ..இன்னைலருந்து 12 நாள் ஜஸ்ட் ராசிய வச்சு வாழ்வின் போக்கு எப்படி இருக்கும்னு சொல்லப்போறேன்.
எச்சரிக்கை:
இதெல்லாம் ஒரு குத்துமதிப்பா சொல்றதுதேன். லக்னாதிபதிய விட ராசியாதிபதி வலிமையோட நின்னு -ராசியிலருந்து கணக்கிடும் போது அந்தந்த பாவங்களுகு  அதிபதிகளா வர்ர கிரகங்கள் பல்பு வாங்காம -அஸ்தங்கதம் ஆகாம -ராகு கேதுவோட சகவாசம் பண்ணாம – சொந்தக்கால் நிற்கிறது,ஆட்சி உச்சம்னு இருந்தா இந்த பலன்லாம் நூத்துக்கு நூறு கூட நடக்கலாம்.
ஒரு ஆசாமி எப்பயும் சொந்த வீட்லருந்துதானே புறப்படனும். அதனால நம்ம ஜன்ம ராசியான சிம்மராசியிலருந்தே ஆரம்பிக்கிறேன்.
1.ராசியாதிபதி சூரியன் என்பதால்:
தன்னம்பிக்கை தற்பெருமை ,தானகுணம்,உஷ்ண கோளாறு,தூக்கமின்மை ,கண்டிப்பு இத்யாதி குணங்களிருக்கலாம்.
2.ராசிய பொருத்து தனபாவாதிபதி புதன் என்பதால்:
கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் இருக்கும்.(பேச்சு-எழுத்து) கணிதம், மருத்துவம்,ஜோதிடத்துல ஈடுபாடு. பல தரப்பட்ட மக்களோடு தொடர்பு இருக்கலாம்.ரிப்போர்ட்டிங்,கமிஷன் ,டீலர் ஷிப்,புத்தக வெளியீடு இத்யாதியில பணம் பார்க்கலாம்.
3.சகோதராதிபதி சுக்கிரன் என்பதால்:
சகோதிரிகள் இருக்கலாம்.அல்லது பெண் தன்மை வாய்ந்த சகோதரன் இருக்கலாம். இசையில் ஈடுபாடு ,கில்மாவுக்காக ரிஸ்க் எடுக்கிற தன்மை இருக்கலாம்.
4.மாத்ரு ஸ்தானாதிபதி செவ் :
தாய்க்கு ரத்தம்,எரிச்சல்,கோபம்,உஷ்ணம் தொடர்பான வியாதிகள் வரலாம். மின்சாரம்,நெருப்பு இத்யாதியால் பிரச்சினை வரலாம். வீடு-வீட்டுமனை -ரியல் எஸ்டேட் தொடர்பா பிரச்சினை வரலாம். வாகன வகையிலயும் சில்லறைக்கு (அடிபடறதுங்கோ) வாய்ப்பிருக்கு. ஒழுங்கா படிக்கலின்னாலும் லாஜிக்கை வச்சு சனத்த மிரட்டுவாய்ங்க.
4.புத்ரஸ்தானாதிபதி குரு:
பெண் குழந்தைகள் இருக்கலாம்.ஆண் குழந்தைக்கு வாய்ப்பு ரெம்ப குறைவு.முன் யோசனை,சேமிப்பு,முதலீடுகளில் ஆர்வம் இருக்கலாம். நடுவயதில் நல்ல பெயர்,புகழ் கிட்டும்.தியானம்,யோகத்தில் ஈடுபாடு.
6.ரோகஸ்தானாதிபதி சனி:
மலச்சிக்கல் முதல் பைல்ஸ் வரை சான்ஸ் இருக்கு. நரம்பு மண்டலத்துல பிரச்சினை வரலாம். கால் தொடர்பாவும் சிக்கல் வரலாம்.கொடுக்கல் வாங்கல்ல தாமதம் ஏற்படலாம். கோர்ட்டு கேஸுன்னு போனாலும் ரெம்ப இழுக்கும்.
7.களத்ர ஸ்தானாதிபதி சனி:
மனைவி கொஞ்சமா படிச்சிருக்கலாம், நோயாளியாவோ -சண்டைக்காரியாவோ இருக்கலாம். ப்ளாக் ப்யூட்டியா இருந்தா நீங்க அதிர்ஷ்டசாலி. பார்ட்னர்ஷிப்ல தொழில் செய்து பல்பு வாங்குவிங்க. வேலைக்காரன் திருடுவான்.போட்டியா தொழில் துவங்குவா ன்.
8.அஷ்டமாதிபதி குரு:
வயிற்று கோளாறு (வாயு) இருக்கலாம்,மறதி உண்டு.எவ்ள வருமானம் வந்தாலும் எப்பவும் டெஃப்சிட்லயே இருப்பிங்க.திடீர் திடீர்னு பெரிய மன்சங்களோட தகராறு வந்துரும். அடுத்தவுக மேட்டருக்காச்சும் கோர்ட்,போலீஸ் ஸ்டேஷன்லாம் பார்த்தே ஆகனும்.
9.பாக்யாதிபதி செவ்:
அம்மாவுக்கு சொன்ன அதே பிரச்சினைகள் அப்பாவுக்கும் வரலாம். உங்களுக்கு அப்பாவோட ஒத்து போகாம போயிரலாம்.அல்லது நீங்க வளர வளர அவரோ ரெப்புட்டேஷன் குறையலாம். சொத்து தகராறுக்கும் சான்ஸ் இருக்கு.
10ஜீவனாதிபதி சுக்கிரன்:
கலைகளில் ஈடுபாடு ஏற்படும்.ஆனால் இது ஓவர் டோசானா பொளப்பு கெட்டுரும்.சாக்கிரதை பொம்பள மேட்டர்ல கெட்டபேரு வரலாம். தாய்க்குலத்தால வேலைக்கே ஆப்பு வரவும் வாய்ப்பிருக்கு. வீடு,வாகனம் மாதிரி சுக்கிர காரக தொழில்ல இருந்தா கண்ணாலம் தாமதமாகலாம்.பொஞ்சாதியோட ஒத்துப்போகாது.
11.லாபாதிபதி புதன்:
தனபாவாதிபதி புதன்ங்கற தலைப்புல சொன்ன துறைகள்ள காசு பார்க்கலாம். அல்லது உங்கள் மூத்த சகோதரம் இந்த துறைகளில் இருக்கவும் வாய்ப்பிருக்கு.
12.விரயாதிபதி சந்திரன்:
சாப்பாடு,தூக்கம்,கில்மாவில் ஒரு ரெகுலேஷன் இருக்காது. செலவு மேட்டர்லயும் திடீர் சிக்கனம்.திடீர் ஊதாரித்தனம் இருக்கும்.பேலன்ஸ் பண்ண பாருங்க.

print

1,968 total views, 1 views today

S Murugesan

Thank you very much for this information, I have been very helpful

என் ராசிக்கான பொதுப்பலன் தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன், இப்பொழுது தளம் கண்களுக்கு எரிச்சல் இல்லாமல் இருக்கிறது. நானும் ஜோதிடத்தை படிக்க விரும்புகிறேன், ஆனால் தொடங்கும் போதே ஏகப்பட்ட குழப்பங்கள், தெளிவின்மை பிரச்சினை இருக்கிறது ஆனால் எல்லாவற்றிற்கும் இனையத்தில் பதில் கிடைப்பதில்லை எனக்கு தங்களின் ஸ்கைப் ஐடி தரமுடியுமா? குறைந்த பட்சம் சந்தேகங்களை தங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியுமே! நான் என்னுடைய ஜாதகத்தை அனுப்பலாமா என்று கேட்டிருந்தேன் அதற்கு தங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை, நேரமின்மை பிரச்சினையாக இருக்கும் என நினைக்கிறேன், எனக்கு ஜோதிடம் கற்று கொடுப்பீர்களா, இதன் அடிப்படையை எனக்கு புரிய வைப்பீர்களா?

அன்புடன்
ஞானசேகர் நாகு

S Murugesan says:

வாங்க ஜி.எஸ்.ஆர் !
12 ராசிக்கும் தொடர்ந்து எழுத உத்தேசம். ஆத்தா என்ன நினைக்கிறாளோ? தளம் இதே அமைப்பில் தொடரும்.உங்க சந்தேகங்களை இங்கயே எழுதுங்க.முடிஞ்சவரை க்ளியர் பண்றேன்.ஜாதகம்? இப்பமே ஹவுஸ் ஃபுல் .கொஞ்சம் பொறுங்க.சொல்றேன்.ஜோதிடம் கற்று கொடுக்கத்தான் இத்தனை பதிவுகள். தேடி பிடிச்சு படிங்க. (பழைய பதிவுகள் பக்கத்துக்கு போங்க) அடிப்படை உங்களுக்கே புரியும்னு நினைக்கிறேன்.புரியலின்னா கேளுங்க.ட்ரை பண்றேன்.

வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *