Tags     

Categories  ஜெயேந்திரர்

கிங்கராச்சாரி வழக்கு அப்பீலுக்கு சூனா பானா கட்டை

பெரியர்அண்ணே வணக்கம்ணே !
நீங்க ஜோதிடபதிவை எதிர்ப்பார்த்து வந்திருந்தால் சாரி. இந்த கிங்கராச்சாரிய பத்தின பதிவு இது .( எமனோட தூதர்களை கிங்கரர்கள்னு சொல்வாய்ங்க. ) நாம எல்லாத்தையும்  மறந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு பார்த்தா ஊஹூம்.
நுணலும் தன் வாயால் கெடும்ங்கற மாதிரி எதையோ ஒன்னை செய்து நம்ம வாய்க்கு அவல் கொடுத்துர்ராய்ங்க. பாண்டிச்சேரி சிறப்பு நீதிமன்றத்துல நடந்த சங்கர்ராமன் கொலைவழக்குல நவம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வருது. பிப்ரவரி 27 க்குள்ளே அப்பீல் செய்திருக்கனும். செய்யல.
அந்த வழக்கை நடத்திய அரசு வக்கீல் தீர்ப்பு வந்த உடனே அப்பீல் செய்யனும்னு குறிப்பெழுதிப்புட்டாரு.ஆனாலும் அப்பீல் செய்யப்படல. தாமதமா கவர்னருக்கு ஃபைல் அனுப்பறாய்ங்க.அன்னார் கை எழுத்து போடறாரு. போட்டதும் அவருக்கு ஆப்பு வருது. பதவி காலி.
பதவி இழந்த பிறவு இன்னா மேட்டருன்னே தெரியாது .கை எழுத்து வாங்கிட்டாய்ங்கனு நாலு காலையும் தூக்கிர்ராரு.ஆனாலும் மோதி அரசு கவர்னர் பதவியை ரீஸ்டோர் பண்ணல.
கொய்யால மானமா போயிருந்தா சரித்திரத்துல சின்ன பாரா கிடைச்சிருக்கும்.விபிசிங்குக்கு கிடைச்சாப்ல. சரி ஒழிஞ்சு போவட்டும். இப்பம் லேட்டஸ்ட் டெவலப்மென்ட் என்னடான்னா  நம்ம சூனா பானா சனாதிபதிய சந்திச்சு மனு கொடுக்கிறாரு.
கிங்கராச்சாரி வழக்கை அப்பீல் செய்யக்கூடாதுன்னு ஒரு மனு. (மொதல்ல இந்த மனுங்கற வார்த்தைய தூக்கனும் -நமக்கு மனுஸ்மிருதிதான் ஞா வருது) .ஒடனே சனாதிபதி அதை லா மினிஸ்ட் ரிக்கு அனுப்பறாரு.அவிக உடனே லீகல் ஒப்பீனியன் கேட்டு அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பறாய்ங்க.
முதல் கோணல் முற்றும் கோணல்னு ஒரு பழமொழி இருக்கு. மம்மி காலத்துல  நடக்குது சம்பவம். பெசல் ஃப்ளைட் போட்டு அன்னாரை அள்ளிட்டு வர்ராய்ங்க.
காந்தி தாத்தா சொல்லி வச்சிருக்காராம். நோக்கம் மட்டும் இல்லை நோக்கத்தை அடைவதற்கான வழியும் பர்ஃபெக்டா இருக்கனும்னு. இங்கே நோக்கமும் டுபாகூர். ஜெயேந்திரரோட என்னமோ பிரச்சினை. அந்த கடுப்புல -அவரை வழிக்கு கொண்டு வரது தான் நோக்கம்.
சரி நோக்கம் தப்பா கூட இருக்கட்டும். அதை செயல்படுத்தும் போதாச்சும் பர்ஃபெக்டா செய்திருக்கலாம். மம்மிக்கு எதிலயும் அவசரம் (இப்போ ராமசாமி மாதிரி)
நேர் பட பேசுல ஒருத்தர் சொல்றார். அவர் என்ன ஓடிப்போயிர போறாரா? எதுக்கு அந்த அவசரம்?” ஒடனே தியாகு சார் கவுண்டர் கொடுக்கிறாரு. ஏற்கெனவே ஒரு தாட்டி ஓடிப்போனவருதானே. வரலாறு முக்கியம் அமைச்சரே.
அவரே இன்னொரு மேட்டரை சொல்றாரு ஆந்திரா ஹை கோர்ட்ல இதே பார்ட்டி மேல ஒரு கேஸ் விசாரணையின் போது ஜட்ஜு சொன்னாராம் “பாவம் ஜெயேந்திரர் திரௌபதி வஸ்திராபரண ஸ்டேஜ்ல” இருக்காருன்னு.
தியாகு சொன்னார் ” வஸ்திராபரணம் பண்ணதே அன்னார் தானு அனுராதாரமணன் சொல்லியாச்சு” வரலாறு முக்கியமில்லையா?
தூத்தெறிக்க இந்த கிராக்கிய பத்தில்லாம் எழுதினா  நம்ம ரேஞ்சு காலியாயிரும் போல. அதனால பழைய பதிவுகளின் தொடுப்புகளை கீழே கொடுத்து தொலைச்சுர்ரன்.
மன்சன்னா மாறனும் பாஸ்.. இந்த பழைய பதிவுகளை படிச்சிங்கனா நாம எந்தளவு மாறியிருக்கம்னு தெரியும்.எவ்ளதான் ட்ரை பண்ணாலும் அதை மாதிரி எழுதமுடியாதுனு தோனிருச்சு.அதான் பழைய பதிவுகள்.

பதிவு: 1

பதிவு:2

பதிவு:3

பதிவு:4

பதிவு:5

பதிவு:6
வண்டவாளங்களை தண்டவாளத்தில ஏத்தியிருக்கேன். இதை எல்லாம் சும்மா ஒரு க்ளான்ஸ் பார்த்தாலே போதும். உடனே வலது கைய வித்தாவது சுப்ரீம்ல ஒரு பில் போட்டுரலாம்னு தோனும்.

உடுங்க ஜூட்.

print

463 total views, 1 views today

S Murugesan
kumar says:

100000%%% correct words….

S Murugesan says:

பாஸ் !
நம்ம ஊர்ல சேட்டுங்க கைப்பணத்தை செலவு பண்ணி பாம்லெட் எல்லாம் அடிச்சு சங்கர நேத்ராலயாவுக்கு சனத்தை அனுப்புவாய்ங்க. இப்படி பல வருசமா செய்றாய்ங்க.

ஒரு சேட்டு ஒரு தலித் பெண்ணோட கணவருக்கு கண்ல ஏதோ இன்ஃபெக்சனுன்னு ஃபோன் எல்லாம் போட்டு சொல்லி அனுப்பிச்சாரு. அங்கன சில்லறையா ரூ.20 ஆயிரம் கேட்டாய்ங்களாம்.

சங்கராச்சாரி தான் அப்படின்னா சங்கர நேத்ராலயாவுமா?

S Murugesan says:

இந்த மேட்டர்ல லேட்டஸ்ட் அப்டேட் என்னன்னா……….. கிங்கராச்சாரிக்கு எதிரா அப்பீல் பண்ண போதுமான ஆதாரம் இல்லைன்னு அட்டர்னி ஜெனரல் ஒப்பீனியன் கொடுத்துட்டாரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *