Tags    

Categories  புத்தக பரிசு

ரூ.2 ஆயிரம் விலையுள்ள நூல்கள் பரிசு

DSC_1189
அண்ணே வணக்கம்ணே !
இந்த வருசம் பிப்ரவரி மாசம் ஏக்தம்ல 4 புக்ஸ் பப்ளிஷ் பண்ணம். ஞா இருக்கில்லை. நூல் தலைப்புகள்:
1.ஜோதிடம் 360 (மறுபதிப்பு)
2.ஜோதிடமும் தாம்பத்யமும்
3.ஆண் பெண் வித்யாசம்
4.பணம் பணம் பணம்
விக்காத புஸ்தவங்களை பரிசா தர்ராரு போலனு நினைச்சுராதிங்க. 1000 பிரதி சூட்டோட சூடா வித்து போயிருச்சு.
ரீ ப்ரிண்ட் போட்ட 1000 பிரதியில 800 பிரதி ஓடியே போயிருச்சு. இப்பமும் வாரத்துக்கு ரெண்டு செட் ஆச்சும் வித்துக்கிட்டு தான் இருக்கு.
இந்த நூல்களை பரிசா கொடுக்க முன் வந்ததற்கு அசலான காரணம் வேற இருக்கு.

இந்த  நூல் பரிசை நீங்க பெறனும்னா ஒரு 15 மினட் செலவழிக்கனும்.
நீங்க நம்ம வெப்சைட்டை  ரெகுலரா படிக்கிற பார்ட்டிதான்னு தெரியும். இல்லின்னா இந்த பதிவே உங்க கண்ல பட்டிருக்காதே.
ஆனால் இப்பம் ஒரு வாசகரா/ஒரு ஜோதிட ஆர்வலரா இல்லாம ஒரு விமர்சகரா  ச்சொம்மா அப்படி ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க.
நம்ம சைட்ல உங்களுக்கு ரெம்ப பிடிச்ச 10 விஷயம். அறவே பிடிக்காத 10 விஷயங்களை லிஸ்ட் அவுட் பண்ணி கமெண்ட் போடுங்க.
கருத்து சொல்ற அத்தனை பேருக்கும் பரிசு கொடுக்க ஆசைதான். ஆனால் தற்போதைக்கு 10 பேருக்கு மட்டும் பரிசு கொடுக்கறதா முடிவு செய்திருக்கன்.
என் தேர்வுக்கான அளவு கோல்:
1.உண்மைத்தன்மை
2.ஜோதிடவியல் பெயரிலான அக்கறை
3.ஒளிவு மறைவற்ற தன்மை
ஆகிய 3 விஷயங்கள் தான்.  உங்கள் நடை/எழுத்து பிழை இத்யாதில்லாம் கணக்குல வைக்கிறதா இல்லை.  தூள் பண்ணுங்க.
சுதந்திர தினத்தன்று எல்லா கமெண்டையும் ஒரு பார்வை பார்த்துட்டு  சிறந்த பத்து கமெண்ட்ஸை தேர்வு செய்து பட்டியலை ஒரு கமெண்டா போட்டுர்ரன். அவிக மட்டும் தங்கள் போஸ்டல் அட் ரசை என் மெயிலுக்கு தெரிவிச்சா போதும். இன்டியா போஸ்ட் ரெஜிஸ்டர்ட் பார்சல் மூலம் புக்ஸ் உங்களுக்கு அனுப்பப்படும்.
இதான் டீல் . நான் ஓகே. நீங்க ஓகேவா?

S Murugesan
murali krishna says:

ஸார், இந்த பதிவை ரொம்ப நாளாக எதிர்பார்த்திருந்தேன் . பரிசுக்காக அல்ல !. ஆனால் என்னுடய கருத்துக்களை தெரிவிக்க ஒரு வடிகாலாக ! ஏன் எனில் எனக்கு தங்களிடம் பிடித்ததும் இருக்கிறது பிடிக்காததும் இருக்கிறது !.
பிடித்தது
1) அனுபவ ஜோதிடம் என்ற பொருத்தமான தலைப்புக்காக !. நீங்கள் எழுதுவது புத்தங்களை பார்த்து மட்டும் இல்லாமல் அனுபவ ரீதியாக எழுதுவதால் !.
2) உளவியல் ரீதியான அலசல்களும் நன்று !.
3) தற்போதைய உலக இயலும் வருவதால்.
4) கிரஹங்களின் காரகத்துவதை மேற் சொன்ன ரீதியில் அலசுவதால் !.
5) சில சொந்த அனுபவங்களை கூறி அதன் மூலமாகவும் அலசுவதால்!.
அடுத்து பிடிக்காததை எழுதுகிறேன் ! அது நிறையவே இருப்பதால் !
1) உங்களின் தமிழ் நடை. புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது, நான் சென்னை வாசி தான் !. இருந்தாலும் பேச்சு தமிழ் வேறு ! எழுத்து தமிழ் வேறு அல்லவா ?.அதனால். நடையை மாற்றுங்கள் !.
2) website-ஐ இன்னும் தெளிவு படுத்தவும் ! index தேவை !. கலர் மாற்றம் தேவை (light colours)! font size ஒரே மாதிரியாக இருப்பது நல்லது.
3) பதிவுகளின் தொடர்ச்சி இன்னும் மெருகு ஏற வேண்டி இருக்கிறது !. ஒரு தலைப்பை ஆரம்பித்தால் அதை முடித்து விட்டு அடுத்த தலைப்புக்கு செல்வது நல்லது !. குழப்பம் இல்லாமல் இருக்கும் !. ஒரே தலைப்பில் இரண்டு மூன்று பதிவுகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் தலைப்பு திடீர் என மாறும் போது ஏதோ தடை படுவது போல் இருக்கிறது !.
4) பகுத்தறிவு என்ற பெயர் ஜோதிடத்துக்கு இப்போது பொருந்தாது என்றே தோன்றுகிறது ! அதனால் பகுத்தறிவு வேண்டாம் என்றே தோன்றுகிறது !.ஆன்மீகம் பக்தி போன்றவையும் பதிவில் வருவதால் !
5) ஆன்மீகம், பக்தி இவை ok !. இவைகளோடு கிரஹங்களும் அதற்குண்டான தெய்வங்களையும் பரிஹாரங்களையும் பற்றி எழுத வேண்டுகிறேன் !.
6) தனிப்பட்ட ஜாதக அலசல்கள் தேவை !. ஒரு EXPERIMENT மாதிரி வைத்து கொள்ளலாம் !
7) பெயர்ச்சி பலன்கள் அவ்வப்போது தேவை !.
8) science and astrology என்ற தலைப்பில் அறிவியல் சார்ந்த தகவல்கள் ஜோதிடத்தில் எவ்வாறு எடுத்து கொள்ள படுகின்றன என்பது போன்ற பதிவுகள் இருந்தால் மட்டுமே அது பகுத்தறிவு தோய்ந்த ஜோதிதமாக கருதபடும்.

வாய்ப்பினை வழங்கியதற்கு நன்றி !

வணக்கம் சார்,

நீங்கள் புத்தகத்தை எனக்கு கொடுத்தாலும் சந்தோஷம், இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பெரிதாய் வருத்தம் இருக்க போவதில்லை, உங்களின் பெரும்பாலாண படைப்புகளின் தலைப்புகள் பதிவிற்குள் உள்ளே இழுத்து வருவதாய் இருக்கும்

ஆனால் பலமுறை நான் படிக்க முடியாமல், அல்லது புரிந்துகொள்ள முடியாமல் போய்விடுவேன், தங்களின் எழுத்து நடை இயல்பாக புரிந்துகொள்ள முடிவதில்லை,

பெரும்பாலன விஷயங்கள் கைதேர்ந்த ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்றே நம்புகிறேன், என்னைப்போல படிக்க நினைப்பவர்களுக்கு நிச்சியம் தங்கள் எழுத்துக்கள் உபயோகபட்டிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன், இந்த விஷயத்தை உங்கள் தளம் வரும்போதெல்லாம் சொல்ல நினைப்பேன், ஆனாலும் ச்சும்மா வாதங்களை வைக்க விரும்பாமல் மேலும் எப்படி எழுதுவது உங்கள் தனிப்பட்ட உரிமை சார்ந்த விஷயமாக கருதுவதால் என் கருத்துகளை பதிவு செய்வதில்லை… இன்று கூட கவர்ச்சியான தலைப்பு பார்த்து தான் வந்தேன், ஆனாலும் நீங்கள் புத்தகம் வழங்குவீர்களா என்பதை விட நீங்கள் எப்படியான எழுத்து நடையை கையாண்டு இருப்பீர்கள் என்பதை நினைத்தால் தான் படிப்பதில் அயற்சி ஏற்படுகிறது,

ஆனாலும் அடிக்கடி ஆப்ரேஷன் இந்திய என நினைக்கிறேன் அதற்காக மாநில முதல்வர்களில் இருந்து மத்திய அமைச்சர் வரை கடிதமும் மின்னஞ்சல்களுகும், முதல்வரின் தனிப்பிரிவும், கவணயீர்ப்பும் நிச்சியம் பாரட்டுக்குரியதே…

S Murugesan says:

வணக்கம் ஜி.எஸ்.ஆர் !
//நீங்கள் புத்தகத்தை எனக்கு கொடுத்தாலும் சந்தோஷம், இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பெரிதாய் வருத்தம் இருக்க போவதில்லை//
இன்னொருவரும் இதையே தான் குறிப்பிட்டிருக்கிறார். பலன் கருதா கருமம். இந்த அப்ரோச் பிடிச்சிருக்கு.
// உங்களின் பெரும்பாலாண படைப்புகளின் தலைப்புகள் பதிவிற்குள் உள்ளே இழுத்து வருவதாய் இருக்கும்//
ம்.. இந்த கல்யாணகுணம் எல்லா வலைஞர்களுக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன். இது ஓவரா போகும் போது வின்னர்ல வடிவேலு சொல்றாப்ல -ஓப்பனிங் என்னமோ நல்லாருக்கு .ஃபினிஷிங் சரியில்லையேப்பா”ன்னு ஆயிரும்.
என் விஷயத்திலும் இதற்கு சான்ஸ் இருக்கிறது.
//ஆனால் பலமுறை நான் படிக்க முடியாமல், அல்லது புரிந்துகொள்ள முடியாமல் போய்விடுவேன், தங்களின் எழுத்து நடை இயல்பாக புரிந்துகொள்ள முடிவதில்லை,//
இதையே முரளி கிருஷ்ணாவும் சொல்லியிருக்கிறார். திடீர்னு மாறினா இன்னொரு க்ரூப் இதே கமெண்டை போடுவாங்க. அதனால கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேன்.
//பெரும்பாலன விஷயங்கள் கைதேர்ந்த ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்றே நம்புகிறேன், என்னைப்போல படிக்க நினைப்பவர்களுக்கு நிச்சியம் தங்கள் எழுத்துக்கள் உபயோகபட்டிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன், இந்த விஷயத்தை உங்கள் தளம் வரும்போதெல்லாம் சொல்ல நினைப்பேன், ஆனாலும் ச்சும்மா வாதங்களை வைக்க விரும்பாமல் மேலும் எப்படி எழுதுவது உங்கள் தனிப்பட்ட உரிமை சார்ந்த விஷயமாக கருதுவதால் என் கருத்துகளை பதிவு செய்வதில்லை//
அப்படியா? எல்லோரும் படிக்க வேண்டும் என்றால் ராசிபலன் மட்டும் தான் எழுத வேண்டும்.ஆனால் அதில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை.
என்னை பொருத்தவரை நான் ஜனரஞ்சகமா எழுதறேங்கற போக்குல சப்ஜெக்டை ரொம்ப டைல்யூட் பண்றேனோன்னு அப்பப்போ தோன்றும்.
இதை ஓவர் கம் பண்ணத்தான் ஒரு முறை பிரச்சினையும் கிரகமும்னு ஒரு தொடர் ஆரம்பிச்சேன்.ஜாதகம் இல்லைன்னாலும் அவிகவிக நிலைமைய/பிரச்சினைய வச்சே அதுக்கு எந்த கிரகம் காரணம் -அதுக்கு என்ன பரிகாரம்னு சொல்றது கான்செப்ட்.ஆனால் வரவேற்பில்லாததால் டீல்ல விட்டுட்டன்.
நீங்க சொல்றதும் பாய்ண்டுதான். இனி அலார்ட்டாய்க்கிறேன்.
//… இன்று கூட கவர்ச்சியான தலைப்பு பார்த்து தான் வந்தேன், ஆனாலும் நீங்கள் புத்தகம் வழங்குவீர்களா என்பதை விட நீங்கள் எப்படியான எழுத்து நடையை கையாண்டு இருப்பீர்கள் என்பதை நினைத்தால் தான் படிப்பதில் அயற்சி ஏற்படுகிறது,//
மன்னிக்கனும் பாஸ். வெப்சைட்ல எந்த நடையில் எழுதப்பட்டதோ அதே நடையில் தான் புத்தகமும் வெளி வந்திருக்கிறது.
இப்படி டிஃப்ரன்ட் ஸ்டைல் மெயின்டெய்ன் பண்றதுனாலதான் காப்பி பேஸ்ட் கிராக்கிங்க கிட்டருந்து என் எழுத்து தப்பிச்சிருக்கு. அப்படியும் ஒன்னு ரெண்டு பார்ட்டி கா-பே செய்து செமர்த்தியா மாட்டினாங்க.

//ஆனாலும் அடிக்கடி ஆப்ரேஷன் இந்திய என நினைக்கிறேன் அதற்காக மாநில முதல்வர்களில் இருந்து மத்திய அமைச்சர் வரை கடிதமும் மின்னஞ்சல்களுகும், முதல்வரின் தனிப்பிரிவும், கவணயீர்ப்பும் நிச்சியம் பாரட்டுக்குரியதே… //
ரொம்ப நன்றி. இந்த டோட்டல் மேட்டர் ஜஸ்ட் என் குற்ற உணர்ச்சியை ஓவர் கம் பண்ணவே செய்றதுதான். என்னைக்கோ ஒரு நாள் பத்திக்கிட்டு நாட்டுக்கும் நல்லது நடந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்.

S Murugesan says:

வாங்க ஜி.எஸ்.ஆர் !

எது காரணம் கருதி வெளியிட வேண்டாம் என்றீர்களோ அதை நீக்கி பிரசுரித்திருக்கிறேன். மற்றபடி என் மெயில் பாக்ஸை சலித்து விட்டு உங்கள் மெயிலுக்கே என் பதிலை தருகிறேன்.

S Murugesan says:

வாங்க முரளி கிருஷ்ணன் !

வெளிப்படையான உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

//1) உங்களின் தமிழ் நடை. புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது, நான் சென்னை வாசி தான் !. இருந்தாலும் பேச்சு தமிழ் வேறு ! எழுத்து தமிழ் வேறு அல்லவா ?.அதனால். நடையை மாற்றுங்கள் !.//

பலரும் -இதை சொல்கிறார்கள். ஆனால் 2000 முதல் 2009 வரை இலக்கண தமிழ் பேர் சொல்லாததால் இந்த பேட்டைக்கு வந்துவிட்டேன்.

பார்ப்போம். முடிந்தவரை இனி கொச்சை நீக்கி எழுத ட்ரை பண்றேன்.

//2) website-ஐ இன்னும் தெளிவு படுத்தவும் ! index தேவை !. கலர் மாற்றம் தேவை (light colours)! font size ஒரே மாதிரியாக இருப்பது நல்லது.//

இது போன்ற டெக்னிக்கல் விஷயங்களில் நான் சமர்த்தன் அல்ல.ஆனாலும் முயற்சி செய்கிறேன்.

//3) பதிவுகளின் தொடர்ச்சி இன்னும் மெருகு ஏற வேண்டி இருக்கிறது !. ஒரு தலைப்பை ஆரம்பித்தால் அதை முடித்து விட்டு அடுத்த தலைப்புக்கு செல்வது நல்லது !. குழப்பம் இல்லாமல் இருக்கும் !. ஒரே தலைப்பில் இரண்டு மூன்று பதிவுகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் தலைப்பு திடீர் என மாறும் போது ஏதோ தடை படுவது போல் இருக்கிறது !.//

ஒரே தலைப்பில் தொடரும் போது வருகைகள் குறைவதை கவனித்தே தலைப்பை மாற்றுகிறேன். தொடரையும் பாதியில் கை கழுவுகிறேன்.

//4) பகுத்தறிவு என்ற பெயர் ஜோதிடத்துக்கு இப்போது பொருந்தாது என்றே தோன்றுகிறது ! அதனால் பகுத்தறிவு வேண்டாம் என்றே தோன்றுகிறது !.ஆன்மீகம் பக்தி போன்றவையும் பதிவில் வருவதால் !//

ம்.. மேம்போக்காக பார்க்கும் போது சரி என்று தான் தோன்றும். ஆனால் ஜோதிடம்-பக்தி-ஆன்மீகம் இவற்றுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் இடையில் மயிரிழை கோடுதான் இருக்கிறது. அந்த கோட்டை தாண்டி அப்பால் சென்று விடக்கூடாது என்று தான் இந்த கமிட்மென்ட்.

//5) ஆன்மீகம், பக்தி இவை ok !. இவைகளோடு கிரஹங்களும் அதற்குண்டான தெய்வங்களையும் பரிஹாரங்களையும் பற்றி எழுத வேண்டுகிறேன் !.//

இந்த வகை பரிகாரங்கள் அனைவருக்கும் ஒர்க் அவுட் ஆகாது.

நான் முதல்முறை திருவண்ணாமலை செல்லும் போது கூட வந்த நண்பனுக்கு சொன்னேன் “ஒரு வேளை நான் அங்கயே தங்கிட்டா வீட்டுக்கு தகவல் கொடுத்துரனும் ”

எல்லோருக்கும் என்னை போன்ற தில் இருக்காது. எனவே எப்படி போனார்களோ அப்படியே திரும்பி வந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

காசு பணம் நேரம் எல்லாம் வெட்டி. இதனால் தான் இதை கடைசி பட்சமாக வைத்துள்ளேன்.

//6) தனிப்பட்ட ஜாதக அலசல்கள் தேவை !. ஒரு EXPERIMENT மாதிரி வைத்து கொள்ளலாம் !//

ஓரளவு அலசியிருக்கிறேன்.இப்படி மோடி ஜாதகத்தை அலசப்போய் “நடு நிலை தவறி” செய்த கணிப்புகள் ஊத்திக்கிட்டு செமை மொக்கை.

//7) பெயர்ச்சி பலன்கள் அவ்வப்போது தேவை !.//

ஹிட்டுக்காகவாச்சும் எழுதித்தானே ஆகனும்.ஆனால் எனக்கு இதில் பெரிதாக நம்பிக்கையில்லை.

//8) science and astrology என்ற தலைப்பில் அறிவியல் சார்ந்த தகவல்கள் ஜோதிடத்தில் எவ்வாறு எடுத்து கொள்ள படுகின்றன என்பது போன்ற பதிவுகள் இருந்தால் மட்டுமே அது பகுத்தறிவு தோய்ந்த ஜோதிதமாக கருதபடும்.//

ம் நல்ல யோசனை .இனி எழுதப்பார்க்கிறேன்.

//வாய்ப்பினை வழங்கியதற்கு நன்றி !//

நான் தான் பாஸ் நன்றி சொல்லனும். மிக்க நன்றி.

sakthivel says:

//1) உங்களின் தமிழ் நடை. புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது, நான் சென்னை வாசி தான் !. இருந்தாலும் பேச்சு தமிழ் வேறு ! எழுத்து தமிழ் வேறு அல்லவா ?.அதனால். நடையை மாற்றுங்கள்

நான் இதற்க்கு ஒப்புக்கொள்ளவில்லை…
வழக்கு தமிழ் ஒவ்வோரிடத்திற்க்கும் உள்ளது தான் அதை கொச்சை என்பது சரியில்லை ஒரு எழுத்தாளருக்கு அவர் எப்படி எழுதினால் மக்களை போய் சேரும் என நினைக்கிறாரோ அவர்க்கு அந்த சுதந்திரம் வேண்டும்.

8) science and astrology என்ற தலைப்பில் அறிவியல் சார்ந்த தகவல்கள் ஜோதிடத்தில் எவ்வாறு எடுத்து கொள்ள படுகின்றன என்பது போன்ற பதிவுகள் இருந்தால் மட்டுமே அது பகுத்தறிவு தோய்ந்த ஜோதிதமாக கருதபடும்.//

பகுத்தறிவு என்பது வெறுங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மட்டுமே என்பது தவறு மொழி இயலும் தத்த்துவமே கூட பகுத்த்தறிவு தான்…

அதனால் அறிவியல் சார்ந்த அறிவும் ஆராச்சி முறைகளும் மட்டுமே சரி என்பது தவறு என்பது என் நிலை…

S Murugesan says:

வாங்க சக்தி வேல் !

தமிழ் நடையில் இனி லேசான மாற்றம் படிப்படியாக வரும். ஜோதிடவியல் சொல்லும் விஷயங்கள் விஞ்ஞான பூர்வமாகவும் இருப்பதை நிறையவே சொல்லலாமே.

நிற்க. பிடித்த பிடிக்காத 10 விஷயங்களை பட்டியலிட்டால் நலம்.

sakthivel says:

Sorry I’m not able to write so much in tamil…
In short this is what I like…

I appreciate your intention of bringing astrology to common man’s world of understanding

I like the your posts as they are honest and straight forward

I like the esoteric connections that you make between the seemingly unrelated

The underlying principle of your posts is the karma theory is of my keen interest.

I like your attitude towards nature and the motherliness!!

I appriciate your approach to decribe a context through a story.. I believe it is best way to reach the minds of the reader.

The posts are broad…and generalist .. and has good pallette

Now the things I do not like

the changing format of the blog

Need a good indexing system

may be some analysis examples for backup and contextual interpretation would help new comers… and ametuers

it will be nice if you could quote some times from vedas? as when you say it normally it may look too ordinary, but the value of what is said is immense. You may dislike Brahmins not the vedas!!

I would like to see more on personal realisation and astrology!! as each person is an individual, how one can realise oneself in astrology and how it could help in finding out the unknown qualities about oneself!!

S Murugesan says:

சக்திவேல்!
தங்கள் கருத்துக்கள் மீதான என் விளக்கங்கள்:
// I appreciate your intention of bringing astrology to common man’s world of understanding//
இன்னொருத்தர் சொல்லியிருக்கிறத பார்த்தா இன்னமும் ட்ரை பண்ணனும்.பண்றேன்.
// I like the your posts as they are honest and straight forward//
நிறைய பொய் பித்தலாட்டம்லாம் செய்து வெறுத்து இந்த ஸ்கூலுக்கு வந்துட்டன் பாஸ்.
// I like the esoteric connections that you make between the seemingly unrelated//
கேயாஸ் தியரி ..
// The underlying principle of your posts is the karma theory is of my keen interest.//
தியரி ஆஃப் கர்மாவ நானும் ஒப்புத்துக்கறேன்.ஆனால் அடிப்படை தேவைகள் ,ஜீவாதார தேவைகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லேங்கறதை ஜோதிட ரீதியா உணர்ந்திருக்கேன். விளக்கியும் இருக்கேன். உதாரணமா சுக்கிரன். உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸுக்கு காரகன்.இவர் வருடத்தில் 10 மாதங்கள் அனுகூலம் தான்.
// I like your attitude towards nature and the motherliness!!//
இயற்கையே தாய் தானே. காலம் காலமா மனித குலம் செய்து வந்த அட்டூழியங்களுக்கு இப்பத்தான் அவள் லேசா முனக ஆரம்பிச்சிருக்காள்.
// I appriciate your approach to decribe a context through a story.. I believe it is best way to reach the minds of the reader.//
ஒரு சகோதிரி இதை அவாய்ட் பண்ண சொல்லியிருக்காங்க.
// The posts are broad…and generalist .. and has good pallette//
நன்றி.
// Now the things I do not like : the changing format of the blog//
நம்முது கடக லக்னமாச்சா லக்னாதிபதி ரெண்டே கால் நாளைக்கொருக்கா ராசி மாறிர்ராரு. ரெம்ப போரடிக்குதா மாத்திர்ரன். இனி மாத்த மாட்டேன்.
// Need a good indexing system//
இது டெக்னிக்கல் மேட்டரு .தெரிஞ்சுக்கிட்டு செய்துரலாம் .பிரச்சினை இல்லை.
// may be some analysis examples for backup and contextual interpretation would help new comers… and ametuers//
செய்துருவம்.
// it will be nice if you could quote some times from vedas? as when you say it normally it may look too ordinary, but the value of what is said is immense. You may dislike Brahmins not the vedas!!//
ஹ..ஹா நாம பிராமணர்களை வெறுக்கல பாஸ் ! பிராமணீயத்தை தான் எதிர்க்கிறேன்.வேதங்கள்? ராகுல் சாங்கிருத்யாயாவின் வோல்க்கா முதல் கங்கை வரை படிங்க. புரியும்.
// I would like to see more on personal realisation and astrology!! as each person is an individual, how one can realise oneself in astrology and how it could help in finding out the unknown qualities about oneself!!//
நல்ல பாய்ண்ட் . இனி இந்த ரூட்லயும் பயணம் இருக்கும்.

surya says:

MURUGESAN ANNA ,
பரிசு வேண்டி அல்ல, ரொம்ப நாளா சொல்ல நினைத்த உண்மை.
பிடித்த பத்து.
1.எல்லா விஷயங்களையும் மறைக்காமல் பகிர்தல். 2. ஜோதிடத்தை எளிமாயாக சொல்லுதல்.3. நியாயமான பரிகாரம்
4.எழுத்தில் உள்ள chitoor இநொஸெந்ஸ். 5. thavarai ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மை. 6.தாய்மை, தாய்ப்பாசம் பிரதிபலிக்கும் [கட்டுரைகள். 7.பெண்களை மட்டம் தட்டி எழுதாத நல்ல ஆண்மகன்.
8.மனோதத்துவம் தெரிந்த ஜோதிடர்.9.இலவச ஜோதிட சேவை 10. உலகத்துக்கு நன்மை செய்ய துடித்திடும் குணம். (தன்னோட சொந்த பிரச்சனைகளை மறந்து) .
இப்ப பிடிக்காத 10.
1.சுய பிரதாபம். (நம்மூது கடக ……..)
2.ஜீந்ஸ் அணிந்த வேஷம் podum ஃபோடோ.
3.தொடர்ச்சி அற்ற பதிவுகள்.
4. அரைத்த மாவையே அறைக்கறது
5.ஆமை போன்ற ஆடியோ பேச்சு.
6. மேலோட்டமான ஜோதிட குறிப்புகள். ( ஜாதகத்தில் பிறந்த நேரம் சரி செய்வீங்க்களா)
7.ஆபரேஶந் இந்தியா போன்ற நகைச்சுவை.
8.தேவையற்ற நண்பர்களின் கதைகள். 9. அரசியல் சவால்கள், கூக்குரல்* (யாரு கேக்க போறா)10. ஜோதிட ஆசான் ஆனது.

ANBU SAGODHARI
SURYA.

S Murugesan says:

சூர்யா அவர்களே !
தங்கள் கருத்துக்கள் மீதான என் விளக்கங்கள் :
//MURUGESAN ANNA ,
பரிசு வேண்டி அல்ல, ரொம்ப நாளா சொல்ல நினைத்த உண்மை.//
பரிசு தான் முக்கியம் என்றால் எத்தனையோ போட்டிகள் இருக்கின்றனவே.. சொல்ல நினைத்ததை சொல்ல இதை ஒரு வாய்ப்பாக கருதியிருக்கிறீர்கள் என்பது நன்றாகவே புரிகிறது.
//பிடித்த பத்து.
1.எல்லா விஷயங்களையும் மறைக்காமல் பகிர்தல். //
பொய் சொல்ல நிறைய ஞா சக்தி இருக்கனும். (மெயின்டெய்ன் பண்ணனுமே) நம்ம கேசு இந்த விஷயத்துல ரெம்ப சோனி.
சப்ஜெக்டுங்கறிங்களா? நம்ம கிட்ட இருக்கிறதே நாலணா சரக்கு . இதுலயும் கஞ்சத்தனம் பண்ணா சொல்ல ஒன்னுமே மிஞ்சாதே.அதனாலதான் போட்டு உடைச்சிர்ரம்.
//2. ஜோதிடத்தை எளிமாயாக சொல்லுதல்.//
இன்னொரு பார்ட்டி புரியவே இல்லைன்னிருக்காரு. அடுத்து எளிமைப்படுத்தறேன்னு சப்ஜெக்டை ரெம்பவே நாறடிச்சுட்டிங்கனு இன்னொரு பார்ட்டி சொல்லாம இருந்தா நலம்.
//3. நியாயமான பரிகாரம்//
சுய லாபம் கருதாத பரிகாரம்னு சொல்ல வரிங்க போல. நிறைய ஜோதிடர்கள் பரிகாரம் பண்ணி தர்ரதையே முழு நேர தொழிலா வச்சிருக்காங்க. பெரிய நெட் ஒர்க் இருக்கு. இவர் அனுப்புவாரு. இவருக்கு உண்டானதை அவிக அனுப்பி வைப்பாங்க. நமக்கு ஆலோசனை கட்டணம் வாங்கறதுலயே பெரிய கில்ட்டி. நமது இன்ன பிற திறமைகள் அங்கீகரிக்கப்படாததால – இதை தொடர்ரம்.
//4.எழுத்தில் உள்ள chitoor இநொஸெந்ஸ். //
இது நாம லைஃப்ல பட்ட நாயடிக்கு பிறகு வந்தது. அதற்கு முன் நாமளும் எல்லாவிதமான லௌகீக அறிவுகளோடு தான் இருந்தம். அவற்றால் ஒன்றும் பேரல. அதான் கட்சி மாறிட்டம்.
இன்னொசென்ஸ் ! சூப்பர் வோர்ட். இன் – நோ -சென்ஸ் என்று பிரிக்கலாம். இதையே இன்னோ -சென்ஸ்னும் பிரிக்கலாம். இன்னோ என்றால் உள்ளார்ந்த சென்ஸ் என்றால் அறிவு.
//5. thavarai ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மை.//
பெருந்தன்மை என்ற வார்த்தை தவறை ஒப்பு கொள்வதை போனா போறதுன்னு ஒப்புக்கறாப்ல காட்டுது. தன்மை என்ற வார்த்தையே போதும்.
லைஃப் இஸ் ட்ரயல்ஸ் அண்ட் எர்ரர். தவறை ஒப்புத்தக்கறதும் ஒரு சுய நலம். திருத்திக்கலாம்ல.
// 6.தாய்மை, தாய்ப்பாசம் பிரதிபலிக்கும் [கட்டுரைகள்//
வீரத்தின் உச்சம் என்ன தெரியுமா அகிம்சை : இது மன்மதன் அம்பு படத்துல கமல் வசனம். காதலின் உச்சம் என்ன தெரியுமா? தாய்மை போற்றுதல். (இது நம்ம பஞ்ச்)
// 7.பெண்களை மட்டம் தட்டி எழுதாத நல்ல ஆண்மகன்.//
ம்.. அந்தளவுக்கெல்லாம் நான் இல்லிங்க.
நான் தொடர்ந்து சொல்வது ஒரு பெண்ணுக்குள் 3 பெண்கள் இருக்கிறார்கள் . 1.இவ்வுலகில் ஊடாடும் பெண் 2. லேசாக சுரண்டினாலும் அவளுள் ஒளிந்து – தொடர் வலிகளால் வலுப்பெற்று வெளிப்பட காத்திருக்கும் பேய் மகள் 3. உலகையே வாரி அணைத்து காக்க வல்ல உலக தாய் .இவள் வெளிப்பட ஆண் குழந்தையாக வேண்டும்.
//8.மனோதத்துவம் தெரிந்த ஜோதிடர்.//
ம்..
//9.இலவச ஜோதிட சேவை //
இதுவும் ஒரு வித கில்ட்டி கம்ப்ரஷன் ப்ரோக்ராம் தான்.
//10. உலகத்துக்கு நன்மை செய்ய துடித்திடும் குணம். (தன்னோட சொந்த பிரச்சனைகளை மறந்து) .//
இதுவும் ஒரு வித சுய நலம் தான். இவனுவ பண்ற தப்புகள் நம்ம செமர்த்தியா பாதிக்குதே . இதெல்லாம் திருத்தப்பட்டுவிடாதா? திருத்த முடியாதா என்ற மடமையே இதன் மூலம்.
//இப்ப பிடிக்காத 10.
1.சுய பிரதாபம். (நம்மூது கடக ……..)//
நம்ம ராசி சிம்மமாச்சுங்களா.. என்னதான் கண்ட் ரோல் பண்ணாலும் இந்த குணம் போக மாட்டேங்குது. இனி அடக்கி வாசிப்பம்ல.
//2.ஜீந்ஸ் அணிந்த வேஷம் podum ஃபோடோ.//
ம்.. இந்த தலைமுறையில எந்த ஆணும், பெண்ணும் எந்த வயதிலும் 30 போலவே மெயின்டெய்ன் பண்றாங்க. நான் மேற்படி பை.தனங்களுக்கு இறங்குவது ரொம்பவே கிழவாடி ஆயிட்டாப்ல ஒரு ஃபீல் வரும் போது. மேலும் என் லட்சியங்கள் ரொம்ப காஸ்ட்லி . இவற்றை எதிர்கால சந்ததிகளுக்காக பதிவு செய்யவே -மக்களிடம் கொண்டு செல்லவே லட்சங்கள் தேவை. அது சினிமா அல்லது டிவியில் கிடைக்கும் என்ற நப்பாசை. அதற்கான மார்க்கெட்டிங் முயற்சிகள் என்றும் சொல்லலாம்.
மேலும் சனம் இப்பமே குருவா ஏத்துக்கிட்டேன் .பூஜையறையில வச்சுக்க 10×12 ஃபோட்டோ கொடுங்கனு கேட்கிறாய்ங்க . கண்ணால பத்திரிக்கை அனுப்பி ஆசி கேட்கிறாய்ங்க. ஆருக்காச்சும் குருவாயிட்டம்னா நாம கத்துக்கறது ஃபணால் ஆயிரும். ஜோதிடர்னா ஜோதிடத்தோட நிக்கனும்ங்கறது நம்ம பாலிசி .
இந்த இம்சைகளில் இருந்து தப்பவும் ஜீன் தேவைப்படுகிறது.
//3.தொடர்ச்சி அற்ற பதிவுகள்.//
இதை இன்னொருவரும் சொல்லியிருக்காரு. காரணமும் சொல்லியிருக்கன்.ஆனாலும் இதையும் தவிர்த்தே ஆகவேண்டும். தற்போதைய தொடரை முடித்து விட்டு பிட்டு பிட்டாவே எழுத ஆரம்பிச்சர்ரன்.
4. அரைத்த மாவையே அறைக்கறது
இது எனக்கே பல முறை தோன்றியிருக்கிறது. ஆனாலும் என்ன செய்ய? இருப்பது 12 பாவங்கள் -9 கிரகங்கள் தானே. சனம் இதுக்குள்ளயே சிக்கி தவிக்கிறாய்ங்களே..
ஆனால் ஒன்னு இது எனக்கே அல்லாது உங்களை போன்றவர்களுக்கும் தெரிந்து போனதால் இனி புது புதுசா கொண்டு வரேன்.
5.ஆமை போன்ற ஆடியோ பேச்சு.
நமக்கு மிமிக்ரில ஆர்வம் உண்டு. கண்ட குரல்களை மிமிக்ரி செய்து எப்படி பேசினாலும் யாரோ ஒருவருடைய சாயல் தெரிந்து விடுகிறது. முக்கியமா இன்று ஒரு தகவல்/கிருபானந்தவாரியார் சாயல் தெரியும். எதிரில் ஆள் இல்லாம,குறிப்பில்லாம ,திங்க் பண்ணிக்கிட்டே பேசறதால இந்த எஃபெக்ட். இனி குறிப்புகளோட பீட்ஸோட பேசறேன்.
//6. மேலோட்டமான ஜோதிட குறிப்புகள். ( ஜாதகத்தில் பிறந்த நேரம் சரி செய்வீங்க்களா)//
இந்த மேலோட்டமான குறிப்புகளுக்கே ஒருத்தர் ஒன்னம் புரியறதில்லைனு புகார் செய்திருக்காரு. பிறந்த நேரம் சரி செய்றது? இதை எல்லாம் ஆரம்ப காலத்துல வெறி பிடிச்சாப்ல செய்திருக்கமுங்க. இப்ப எங்கே நேரம் இருக்கு.
//7.ஆபரேஶந் இந்தியா போன்ற நகைச்சுவை.//
ஏங்க அம்மா உணவகம் ,அம்மா மருந்தகத்தை விடவா இது காமெடியா இருக்கு? இதுலயும் நாம பூட்டகேஸ் தான்.
//8.தேவையற்ற நண்பர்களின் கதைகள்.//
இன்னொருவர் இதே பாய்ண்டை பிடித்த அம்சமாகுறிப்பிட்டிருக்காரு
//9. அரசியல் சவால்கள், கூக்குரல்* (யாரு கேக்க போறா)//
ஜூன் 21 ஆம் தேதி வணிகவரித்துறைய தனியாருக்கு கொடுக்கனும்னு தெலுங்குல பதிவு போட்டேன். நேத்திக்கு செக் போஸ்டை தனியாருக்கு கொடுக்கலாம்னு யோசிக்கிறதா மந்திரி சொல்லியிருக்காரு.
ஊதறதை ஊதி வைப்போங்கறதுதான் என் நோக்கம். இதுவும் ஒரு கில்ட்டி கம்ப்ரெஷன் ப்ராசஸ் தான்.
//10. ஜோதிட ஆசான் ஆனது.//
இதை நானே உணர்ந்துதான் அம்பேல் ஆயிட்டனுங்கோ .
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இவற்றை மனதில் வைத்தே இனி என் பயணம் தொடரும்.

S Murugesan says:

வணக்கம் சூர்யா ,
மிக்க நன்றி. என் விரிவான பதிலை பிறகு தருகிறேன்.

S Murugesan says:

வாங்க சக்தி வேல் !
மிக்க நன்றி. விரைவில் என் விரிவான பதிலை தருகிறேன்.

KAB says:

நான் தங்கள் பதிவுகளை 2010 ல் இருந்து வாசிக்கி
உங்க நடையிலே சொல்ல டிரை பண்ணிருக்கம்
1.சனம் ஜோசியம்னா என்னன்னு குழம்பிட்ருக்கும் போது உங்க பதிவுகள் ஜோசியம்னா இதுதாண்டா அப்பிடின்னு அசால்ட்டா போடுறது
2.வெறுமனே தியரிடிகலா போட்டு டர் குடுக்காம ப்ராக்டிகலான விஷயங்கள சொல்றது
3. மன்ச வாழ்க்கைய ஜோசியம்ற ஒரே கண்ணாடில பாக்காம மனோ தத்துவம் ஆன்மிகம் னு அலசி பாக்குறது
குறைகள்னா பெர்சா ஒன்னுமில்லா சின்னதா சிலது

1. ஜோசியம்கறதே ஒரு மாறி பூடகமான சப்ஜெக்ட் அதையே உங்களோட வித்யாசமான ரைட்டிங் இன்னும் பூடகமாக்கிருது…( நமக்கு ஓகே ஆனா நம்ம நண்பர ஒங்க பதிவுகள படிக்க சொல்லி மொக்க வாங்கிட்டம் )

சில சமயம் ரெண்டு மூனு சப்ஜெக்ட் போட்டு கலவையா தர்ரதுனால அசலான மேட்டர பிரிச்சு கொஞ்சம் சிரமங்கோ….

கன்டினிவ் பண்ணுங்க…நன்றி.

S Murugesan says:

வாங்க கே.ஏ.பி !
சாதிக்கு பத்தா சொல்விங்கனு பார்த்தன். பெட்டர் லேட் தேன் நெவர். இன்னம் கொஞ்சம் முக்கி எழுதிருங்க.

வணக்கம் சார்,
தாங்கள் அனுப்பிய ரூ 500 மதிப்பிலான நான்கு புத்தகங்கள் நேற்று கிடைத்து விட்டது ஆனால் நான் தற்போது வெளியில் இருப்பதால் குறைந்தபட்சம் ஒரு மாதங்களுக்கு பின் தான் அதை படிக்க தொடங்க ஆரம்பிப்பேன், நிச்சியம் தங்களின் புத்தகத்தை படித்து முடிக்கும் போது என் புரிதல் குறித்தான கருத்தையும் தங்களின் தளத்தில் பதிவு செய்வேன்..

தாங்கள் சொன்னபடியே புத்தகம் அனுப்பி விட்டீர்கள், வாழ்த்துகளுடன் என் நன்றி!

அன்புடன்
ஞானசேகர் நாகு

S Murugesan says:

ஜி.எஸ்.ஆர் !
தகவலுக்கு நன்றி.வாய்ப்பு கிடைக்கும் போது படிங்க. உங்க விமர்சனத்தையும் ஒளிவு மறைவில்லாம எழுதுங்க.

surya says:

Received your books. Thankyou once again.

S Murugesan says:

வாங்க சூர்யா !
தகவலுக்கு நன்றி. புத்தகங்கள் பற்றிய விமர்சனத்தையும் எதிர்ப்பார்க்கலாம்ல?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *