Tags    

Categories  Tamil Horoscope அனுபவஜோதிடம் ஜோதிட பாலபாடம்

ஜோதிடபாடம்: 10

Jun 6

அண்ணே வணக்கம்ணே !
வாத்யார் வேலை நமக்கு சின்ன வயசுலருந்து “அச்சுதல”யான வேலை தான். அதுல சந்தேகமே இல்லை. ஒன்னாங்கிளாஸ்லருந்து நாமதேன் சட்டாம்பிள்ளை.

ஆறு ஏழாங்கிளாஸ்ல சமூகம்,அறிவியலுக்கெல்லாம் தமிழ்ல டெக்ஸ்ட் புக் கிடையாது.ஆதி காலத்துல ஆரோ புண்ணியாத்மா இங்கிலீஷ்லருந்து தெலுங்குலருந்தோ டப்பிங் பண்ணி நோட்ஸ் கொடுத்து -பசங்க எளுதி வச்சிருப்பாய்ங்க போல. அது அப்படியே ரொட்டேஷன்ல இருக்கும்.

ஒவ்வொரு வருசமும் ப்ரமோட் ஆகி போற பசங்கள்ள எவன்/எவள் கை எழுத்து நெல்லாருக்கோ அதை வாத்யார் பிக் அப் பண்ணி வச்சுக்கிட்டு அடுத்த க்ளாஸ்ல எவன்/எவள் கொஞ்சம் ப்ரைட்டா இருக்கானோ அவன் கிட்டே கொடுத்து டிக்டேட் பண்ண வச்சுருவாரு.

இதுக்கு வருசம் முழுக்க பெசல் க்ளாஸ் உண்டு.அதுல நாம தேன் வாத்தியாரு. ட்ராக் ரிக்கார்ட் என்னவோ சூப்பராதான் இருக்கு.ஆனாலும் ஜோதிட வகுப்பு மட்டும் ஏன் நொண்டியடிக்குதுன்னு கேப்பிக சொல்றேன். வாத்யார் வேலையில ஒப்பேத்தனும்னா குரு நெல்லா இருக்கனும். நம்ம ஜாதகத்துல என்னவோ உச்சம் தேன்.ஆனால் கோசாரத்துல லக்னத்துக்கு விரயத்துல இருக்காரே. ஹும்..இன்னம் ரெண்டு வாரம்தானே சமாளிப்போம்.

கடந்த பதிவுகள்ள கேந்திர,கோண ஸ்தானங்களை பத்தி சொல்லி முடிச்சன்.லேட்டஸ்ட் பதிவுல பணபர ஸ்தானம்னு 2-11 ஆம் பாவங்களை பத்தி சொன்னேன். ஆனால் காலங்காலமா 6-8 பாவங்களையும் பண பரஸ்தானங்கள் ங்கற பட்டியல்ல தான் வச்சிருக்காய்ங்க. ஆனால் நான் இந்த 6-8 ஐயும் துஸ்தானங்கள்ங்கற பட்டியலுக்கு மாத்திரலாம்னு இருக்கன்.
இந்த ஆறாமிடத்தையே எடுத்துக்கங்க. எதிரி,கடன்,நோய் ,வழக்கு விவகாரங்களை காட்டற இடம் இது. இதனால எப்படி பணம் வரும்?

சந்திரபாபு நாயுடு மக்கள் எதிரி. நான் மக்கள் நண்பன். நண்பனுக்கு எதிரி நமக்கு எதிரி தானே.நாம இந்தாளு போக்கு சரியில்லை. விவசாயத்தை வெட்டிங்கறான். விவசாயி மகன் வேற வேலைக்கு போகனுங்கறான். கடன் தொல்லை தாங்காம விவசாயி தற்கொலை செய்துக்கிட்டா “அரசு நஷ்ட ஈட்டுக்காக ” சாகறாங்கறான்னு உண்மைய சொன்னா அவர் என்னவோ ஹை டெக் போலவும் நாமதேன் பழைய பஞ்சாங்கம் போலவும் சனம் நக்கலடிச்சாய்ங்க. நம்ம கிட்ட இல்லாதது என்ன? அந்தாளுக்கிட்ட இருக்கிறது என்னனு பார்த்தன். கொய்யால கம்ப்யூட்டர் தானேன்னு அதை பிடிச்சன்.
இன்னைக்கு கம்ப்யூட்டரும் இன்டர்னெட்டும் தான் நமக்கு அன்ன தாதா.

கடன் வாங்கினா காசு கிடைக்கும். நோய் வந்தா காசு வருமா? ஆந்திர மானிலம் நெல்லூர் மாவட்டத்துல 30 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வந்திருக்கே. மெடிக்கல் ரீ இம்பர்ஸ்மென்ட்ல “வேலை” காட்டி அரசுப்பணத்தை ஆட்டைய போட்டிருக்கானுவ. இன்னைக்கு 30 பேரும் சஸ்பெண்ட்.

வழக்கு நம்ம பக்கம் செயிச்சா பணம் வரும் .வராம போயிருமா?

இதோட விட்டிருந்தாலும் பரவால்ல. தாளி 8 ஆமிடத்தை கூட பண பர ஸ்தானத்துல சேர்த்திருக்காய்ங்க. எட்டுன்னா மரணம். மரணத்தால காசு வருமா?செத்தவருக்கு சொத்து பத்து இருந்து நேர் வாரிசு இல்லாம போயி, நமக்கு அவரு ஒன்னு விட்ட ரெண்டு விட்ட சொந்தமா இருந்தா சொத்தே வருமில்லையா?

எட்டுன்னா கொலை வெறி தாக்குதல். உசுரு தக்குச்சின்னா எக்ஸ்கிரேஷோ கிடைக்குமில்லை. எட்டுன்னா ரிஸ்க். ரிஸ்கோட அளவை பொருத்து காசு பணமும் கூடுமில்லையா? எட்டுன்னா சிறை. நம்மை தப்பான காரணத்தால ஐ மீன் சரியான காரணமில்லாம செயில்ல போட்டுட்டாய்ங்கனு வைங்க. நாம வழக்கு போட்டா பைசா கிடைக்குமில்லை.
இப்படியெல்லாம் விளக்கம் சொன்னாலும் இந்த பட்டியல்ல இருந்து 6-8 பாவங்களை நீக்கிர்ரன். இதே போல
அடுத்த பட்டியல் ஆபோக்லிமம். இதுல 3,12 பாவங்களை கொடுத்திருக்காய்ங்க.

12ங்கறது விரயத்தை காட்டும். திங்கறது,தூங்கறது,கில்மா இதெல்லாம் 12 ஆம் பாவத்தை பொருத்த மேட்டரு.
உணவுக்கு ருசிய கொடுக்கிறது நம்ம பசி, நம்ம உடல் ஆரோக்கியம். இது ரெண்டுமில்லாம எவ்ள பவித்ரமான பதார்த்தத்தை ,எவ்ள ருசியா பக்குவப்படுத்தி தின்னுன்னாலும் வேலைக்காகாது .வீண் விரயம் தான்.

அடுத்து தூக்கம். தூக்கத்தை கொடுப்பது இன்னிசையோ, அம்ச தூளிகா மஞ்சமோ ,ஏ.சியோ இல்லை. உடல் உழைப்பு. நாம எவ்ள கடுமையா உழைச்சோமோ அதுக்கேத்த தூக்கம் தான் கிடைக்கும்.

அடுத்தது கில்மா. கில்மாவுல மஜாவ கொடுக்கிறது கில்மாவா? நெவர். உங்க பிரம்மச்சரியம். நீங்க எந்த காஞ்சு கிடந்தா அந்தளவுக்கு மஜா. பார்க்கவே பார்க்காதவன் பார்த்தாலே போதும் ஆர்காசம்.

ஆக இதுக்கெல்லாம் அடிப்படை என்ன? அசலான உண்மை என்னன்னு தெரியாதவுக சோத்துக்கும்,தூக்கத்துக்கும் கில்மாவுக்கும் சகட்டுமேனிக்கு செலவழிச்சுக்கிட்டு கிடப்பாய்ங்க. அபப்டி செலவழிக்கிறதெல்லாம் வீண் விரயம் தானே. அதனால இந்த 12 ஆம் பாவத்தை இந்த பட்டியல்ல இருந்து நீக்கி துஸ்தானங்கள்ங்கற பட்டியல்ல சேர்த்துர்ரன். (ஜோதிட விதிகளை வகுத்த ரிஷிகள் மகரிஷிகள் மன்னிக்கட்டும்)

ஆக மிச்சம் இருக்கிறது 3 ஆம் பாவம். இதை வேணம்னா ஆபோக்லிம ஸ்தாங்கள்ங்கற பட்டியல்லயே விட்டுரலாம். 3ங்கறது இளைய சகோதரஸ்தானம்,கர்ண ஸ்தானம் (காது),சங்கீத ஞானம், பயணங்கள் இதை எல்லாம் காட்டுமிடம்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொன்னதெல்லாம் அந்த காலம். அப்படியும் ஏதோ ஒன்னு ரெண்டு தம்பி இருந்தா பரவால்ல.வத வதன்னு இருந்தா சொத்து தகராறுதேன்.

இசை ? அப்பப்போ ரிலாக்ஸ் பண்ணிக்க யூஸ் பண்ணிக்கிட்டா பரவால்ல.இல்லின்னா எல்லா உணர்வுகளும் மென்மையாகி -இந்த கொடூரமான யதார்த்த உலகத்தை புரிஞ்சுக்க முடியாம பொளப்பு நாறீரும். அடுத்து பயணங்கள். ஏதோ தினசரி அஞ்சு பத்து கிமீ னா பரவால்ல. தினசரி அம்பது கி.மீலாம் ட்ராவல் பண்ணா ஆசனத்துல கட்டி வந்துரும். ஆஸ்மா வந்துரும். அடுத்து இந்த 3 ஆம் பாவம் காட்டற மேட்டரு தகிரியம். அஞ்சுவதஞ்சுதல் அறிவுடைமைன்னு வள்ளுவரே சொல்லி வச்சிருக்காரு.

இதனாலதேன் ஜோதிட விதிகள்ள கூட 3 ஆமிடத்துல பாவி இருந்தா நல்லதுன்னு சொல்லியிருக்கு. ஸ் அப்பாடா .. இந்த பண பர ஆபோக்லிம ஸ்தான பஞ்சாயத்தை முடிச்சுட்டம். அடுத்தது துஸ்தானங்கள் இதை நாளையிலருந்து நோண்டி நுங்கெடுக்கலாம். உடுங்க ஜூட்டு

S Murugesan
murali krishna says:

appo moondraam ida guru thandamaa ?. enakku guru rasiathipathi aagi (meenam) kadaga lagnathil irunthu moondraam idathil kanniyil guru thanithu irukiraar !

S Murugesan says:

வாங்க முரளி கிருஷ்ணா !
ரெம்ப அவசரப்படறிங்க. கடகலக்னத்துக்கு குரு ஆரு? 6-9 க்கு அதிபதி.இவர் 3 ல நின்னா என்ன பலன்?

6-3 ல் நின்றால் இளைய சகோதரம் காது பாதிக்கும், வித் இன் தி சிட்டி ஜர்னி பண்ணும் போது எதுனா பிரச்சினை வரலாம்.

9-3 ல் நின்றால் இது அப்பாவை பாதிக்கும். மிஞ்சிப்போனா சேமிப்பு,முதலீடு,வெளி நாட்டு தொடர்பில் பாதிப்பை தரும். (பாதிப்பு=ஒரே வேலைய நாலு தாட்டி செய்றது -நாலு தாட்டி அலையறது)

இதுக்கே டெப்ரஸ் ஆயிட்டா எப்பூடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *