ஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம் நிறைவு பகுதி

HeaderImage

அண்ணே வணக்கம்ணே !
“உன்னை பார்க்கவேண்டும் பழகவேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனசுல”னு ஒரு பாட்டு வரும். அதை போல அதை எளுதிரனும் இதை எளுதிரனும்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. ஆத்த மாட்டாத துவங்கிர்ரம் .டீல்ல விட்டுர்ரம்.அதும் கொட்டுவாய்ல விட்டுர்ரம்.
இந்த சத நாமாவளி மேட்டரையே எடுத்துக்கங்க கடந்த அத்யாயத்துல கடைசியா விளக்கின நாமா சூக்ஷ்ம்னா த்வார மத்யாயை. கொஞ்சம் தம் கட்டி அடுத்த நாமாவுக்கு போயிருந்தா “சர்வ ஸ்வதந்த்ராயை ” ங்கற நாமாவை முடிச்சிருக்கலாம். இந்த நாமா மேட்டர்ல ஏற்கெனவே நமக்கு படுபயங்கர அனுபவம் உண்டு.
இந்த நாமாக்களை டைப் அடிச்சு ,லேமினேட் பண்ணி வச்சிருந்த காயிதத்தை தொலைச்சுட்ட பாவத்துக்கு லாஜிக்கே இல்லாம சுதந்திரம் இழந்து 6 மாசம் நாயடி . anyhow..இந்த நாயடிதான் ஒரு பொற்காலத்துக்கு ஸ்டார்ட்டிங் பாய்ண்ட் ஆச்சுங்கறது வேற கதை.ஆனால் நாயடி நாயடிதானே.
போன பதிவுலயே கொஞ்சம் தம் கட்டி சர்வ ஸ்வதந்த்ராயைங்கற நாமாவுக்கு விளக்கம் சொல்லி போட்டிருந்தா நம்ம பாடி அக்னி நட்சத்திரத்துக்கு பைண்ட் ஆகி -ச்சூ சூச்சூ வராம அவதிப்பட்டிருக்க மாட்டோமோ என்னமோ?
சர்வ ஸ்வதந்த்ரான்னா 100% சுதந்திரமானவளேனு அருத்தம்.. காற்றுக்கென்ன வேலி,கடலுக்கென்ன மூடிங்கற மாதிரி இதுவரை பட்டியலிட்ட நாமாக்களோ -இனி விளக்கப்போற நாமாக்களோ அவற்றுக்கான விளக்கங்களோ அவளை பைண்ட் ஓவர்பண்ண முடியாது.
அனாமிகான்னாலும் அவள் தான். நூறு பேரால ,ஆயிரம் பேரால ஸ்தோத்திரம் பண்ணாலும் அவள் தான். கன்யாகாயைன்னாலும் அவள் தான் ,குமார ஜனனி,கணேச ஜனனின்னாலும் அவள் தான்.
அடுத்த நாமா ஸ்ரீ சக்ர வாசினி.
இந்த சக்கரங்களை பொருத்தவரை பலர் பலவிதமான வியாக்யானங்கள் கொடுத்திருக்கலாம். நானே கூட மாயா பீஜம் ஜெபிக்க ஆரம்பிச்ச புதுசுல ஸ்ரீ சக்ரம்லாம் வச்சு ட்ரை பண்ணியிருக்கன். கடைகள்ள கண்ட சக்கரங்களை வச்சு பூஜை பண்ற சனங்களை “கொய்யால இதெல்லாம் எம்ப்டி சிடி மாதிரி . இதுக்குண்டான மந்திரத்தை நீ லட்சம் தடவை ஜெபிச்சா தான் அந்த மந்திரத்தை சொல்றா தகுதி ஏற்படும். அதுக்கு பிறவு லட்சம் தடவை ஜெபிச்சா வேணம்னா இந்த சக்கரம்லாம் ஒர்க் அவுட் ஆகலாம். இல்லின்னா இதுகள வச்ச இடம் வேஸ்ட்,காசு வேஸ்ட், ஊதுவத்தி வேஸ்டுன்னு பெரியார் தனமா பகுத்தறிவு (?) பிரச்சாரம்லாம் செய்திருக்கன்.
எனக்கென்னமோ போக போக இந்த சக்கரம்லாம் ஸ்தூலமான மேட்டர் இல்லை. குண்டலி எழுச்சி பெற்று ஒவ்வொரு சக்கரத்தை டச் பண்ணும் போது இந்த சக்கரம் போன்ற காட்சிகள் சாதகனுக்கு தெரிஞ்சிருக்கலாம். அந்த சமயம் அவனோட உடல் சில பல அதிர்வுகளை உணர்ந்திருக்கலாம். ஞாபகத்துக்கோ அல்லது பிறரின் பால் கருணை காரணமாவோ ஞாபகத்துலருந்து இந்த சக்கரங்களை வரைஞ்சிருக்கலாம். தகட்டுல கீறி கொடுத்திருக்கலாம்ங்கற மாதிரி ஹஞ்ச் வந்துருச்சு. எப்படியோ ஸ்ரீ சக்கரம் தான் எல்லா சக்கரங்களுக்கும் தாத்தா. ஒரு வேளை குண்டலி சஹஸ்ராரத்தை தொடும் போது இதன் வடிவம் சாதகர்களுக்கு மனக்கண் முன்னேதோன்றியிருக்கலாம்.
இந்த ஸ்ரீ சக்கரத்துல வசிப்பவள் ஸ்ரீ சக்கர வாசினி. ஓகேவா.
ஸ்வயம் ப்ரகாசாயை
சந்திரன் சூரியனோட ஒளிய கடன் வாங்கி பிரகாசிக்கிறாப்ல இல்லாம சுயமாகவே பிரகாசிப்பவள்
சுர பூஜிதாயை
அசுரன்னா தெரியும் இதுக்கு எதிர்பதம் சுரன். தேவர்களால் பூஜிக்கப்படுபவள். கச கசாவை ப்ராசஸ் பண்ணி ஒரு திரவம் தயாரிச்சு அதை அவாள் குடிப்பாளாம்.அதுக்கு சுரபானம்னு பேரு. சுர பானத்தை அருந்துவோர் சுரர்கள்.அருந்தாதவர்கள் அசுரர்கள்னு கூட சொல்லலாம்.
சுந்தர்யை
சுந்தரம்னா அழகுனு அருத்தம். ஆத்தாவ விட அழகான குட்டி வேற ஆரா இருக்க முடியும்? சிவனை ஆதியோகிம்பாய்ங்க. சுடுகாட்ல பிணத்தை எரிச்ச சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கிட்டு ,பூத கணங்களோட க்ரூப் டான்ஸ் ஆடற பார்ட்டி ஈஸ்வரன். அந்த ஈஸ்வரனே கவுந்துட்டாருன்னா ஆத்தா எப்பேர்கொத்த பர்சனாலிட்டியா இருக்கனும். ரோசிங்க.
சுக தாயின்யை
சுகத்தை தருபவளே.
சனகாதி முனி ஸ்துதாயை
ராமாயணத்துல வர்ர ஜனக மஹர்ஷியும் இந்த சனக முனியும் ஒருத்தரா இல்லை வேற வேறயா தெரியல. சனகர் முதலான முனிவர்களால் போற்றிப்புகழப்படுபவளேனு அருத்தம்.
சிவானந்த சாகராயை
சிவனோடு இணைந்திருத்தல் ஆனந்தம். அந்த ஆனந்தம் கடல் போன்றது. அந்த கடலாகவே இருப்பவள் அவள்.
சிவமானச ஹம்சின்யை
சிவனோட மனசுல இருக்கிற அன்னப்பறவை. ( பாலோட தண்ணிய சேர்த்து வச்சாலும் அதை பிரிச்சு பாலை மட்டும் குடிச்சுட்டு தண்ணிய விட்டுர்ர பறவை அன்னம்)
இதை கொஞ்சம் லிபரலா பார்த்து அர்த்தம் சொன்னா இந்த உலகத்துல உள்ள ஒவ்வொரு ஆணும் சிவன். அவன் மனசுல நின்னு கொஞ்சமாச்சும் நல்லது கெட்டதை பிரிச்சு பார்க்க உதவறது ஒரு பெண் தான். (அது அவன் அம்மாவா இருந்தாலும் சரி ,மனைவியா இருந்தாலும் சரி,சகோதிரியா இருந்தாலும் சரி) . ஒரு ஆணின் வாழ்வில் மனதில் பெண்ணே இல்லின்னா அவனால நல்லது கெட்டதை பிரிச்சு அறியவே முடியாம கூட போயிரலாம்.
சகல சௌபாக்ய ப்ரதாயை
எல்லா வளங்களையும் தருபவள்
ஸ்வமந்த்ர ஃபல ப்ரதாயை
நாம ஜெபிக்கிற மந்திரங்களுக்குண்டான பலனை தருபவள்
சர்வாரிஷ்ட நாசின்யை
அரிஷ்டம்னா தரித்திரம்.ஏழ்மை. எல்லாவிதமான ஏழ்மையையும் அழிக்க வல்லவள்.
சர்வபாப ஹரிணி
ஹரி என்றால் பிடுங்குவது,பறிப்பது,திருடுவதுன்னு பல அர்த்தம் வருது. எல்லா பாவங்களையும் பிடுங்கி எறிபவள்
சர்வ சங்க்ஷோப பரிஹாராயை
சங்க்ஷோபம்னா கிரைசிஸ். எல்லா கிரைசிஸுக்கு ஒரு சொல்யூஷனை கொடுக்க வல்லவள்.
சர்வ ஸ்தம்பின்யை
எல்லாவற்றையும் நிறுத்தவல்லவள்.
சர்வதுக்க விமோசன்யை
எல்லா வித துக்கங்களுக்கும் விமோசனம் தரவல்லவள்.
சர்வ துஷ்ட பயங்கர்யை
துஷ்டனை கண்டால் தூர விலகுனு நாமெல்லாம் விலகி விலகி போறதாலயே துஷ்டர்கள் ஓவர் கான்ஃபிடன்ட் ஆயிர்ராய்ங்கங்கறது வேற கதை. ஆனால் அந்த துஷ்டர்களையும் பீதியில பேதியாக்க வல்லவள் அவள்.
த்ரிவிக்ரம பத கிராந்தாயை
வாமன அவதாரம் கதை தெரியும்ல? மூனடி மண் கேட்டு விஸ்வரூபம் எடுத்துர்ராரு விஷ்ணு. அந்த வடிவத்துக்கு விக்கிரம அவதாரம்னு பேரு. அடிமுடி அறிய வொணா அண்ணாமலையோனேங்கறமே அதே செனேரியோ தான். ஆனால் அவள் அந்த விக்கிரமனின் பாதங்களை சொந்தமாக்கிக் கொண்டவள்.
(அன்யா க்ராந்தம் -பிறருக்கு சொந்தமாக்குதல்)
த்ரிகால ஞான ப்ரதாயை
காலங்கள் மூன்று. கடந்த காலம், நிகழ்காலம்,எதிர்காலம், இந்த முக்காலங்களையும் பற்றிய ஞானம் எல்லாருக்கும் இருந்தா உலக வாழ்க்கையில இத்தனை சிக்கல்களுக்கு இடமே இல்லை. உங்களுக்கு முக்காலம் பற்றிய அறிவு வேணம்னா இந்த சத நாமாவளியை பொருள் உணர்ந்து படிங்க.மனசுல நிறுத்துங்க.
பின்னே ஏன் பாஸ் மோடி மேட்டர்ல எல்லாம் ஊத்திகிச்சுன்னு கேப்பிக. ஆத்தா என்னமோ கொடுத்துக்கிட்டே தான் இருக்கா. பைப் லைன்ல இந்த ஈகோ வந்து அடைச்சுக்கிருச்சு. முக்கால ஞானத்துக்கு தடை ஸ்டாண்ட் எடுத்துர்ரதுதான். நாம பாட்டுக்கு ஒரு ஸ்டாண்ட் எடுத்துட்டு எதிர்காலத்தை கணிக்க ஆரம்பிச்சா இப்படித்தான் ஊத்திக்கும்.
துரிதா பஹாயை
துரிதா – சுறு சுறுப்பான பஹா = கைகள் .சுறு சுறுப்பான கைகளை கொண்டவள்.
தேஜோ ப்ரதாயை
ராத்திரி நல்ல சரக்கா ஏத்திக்கிட்டு மறு நாள் பத்து மணி வரைக்கும் தூங்கி எழுந்தா முகம் களையா இருக்கும்(?)
இன்னைக்கு ராத்திரி ரெண்டுல ஒன்னு தீர்த்துரனும்யானிட்டு குப்தயோகி கணக்கா ராத்திரி முழுக்க ஜெபம்,தபம்னு செய்துகிட்டு இருந்தா முகம் “தேஜஸ்” ஆயிரும். இந்த தேஜசை தருபவள் அவள்.
பிரம்மச்சரியத்தால இந்த தேஜஸ் ஏற்படும்னு சொல்றாய்ங்க.ஆனால் இன்னைக்கிருக்கிற என்விரான்மென்ட்ல பிரம்மச்சரியம் சாத்தியமில்லை. அப்படியே சாத்தியமானாலும் சைக்கியாட் ரிஸ்ட் கிட்டே கன்சல்ட் பண்ணவேண்டி வந்துரும்.
வைஷ்ணவ்யை
இருக்கிறது ஒரே சக்தி.அது தன்னை மூன்றா பிரிச்சு பார்வதி,சரஸ்வதி,லட்சுமியா வெளிப்படுத்திக்குது. லட்சுமிக்கு தான் வைஷ்ணவின்னு பேரு. விஷ்ணுவின் மனைவி வைஷ்ணவி.
வித்யாயை
வித்யான்னா கல்வி. கல்விக்கடவுளான சரஸ்வதியாகவும் அவளே இருக்கிறாள்.
வாராஹி மாத்ரே
வராகம் = பன்றி , பன்றி முகத்தை உடையவள் வாராஹி. மறைந்திருக்கும் விஷயங்களை வெளிய கொண்டு வரனும்னா அதுக்கு வாராஹி அருள் தேவை. (உ.ம் எதிர்காலம்)
//சித்தர்களின் வாக்குப்படி சப்த கன்னியர்கள் என்பவர்கள் ஆதி சக்தியின் தேவகணங்களாய் அவளது கோட்டைக்கு காவல் இருப்பவர்கள். மிக சூட்சுமமாக இருக்கும் இவர்கள் ஏழு பேரும் ஏழுவிதமான அம்சங்களை உடையவர்கள்.// நன்றி: தினகரன் ஆன்மிக மலர்
விசாலாக்ஷ்யை
அகன்ற விழிகளை கொண்டவள்
விஜய ப்ரதாயை
வெற்றியை தருபவள்
விஸ்வரூபிணி
இந்த படைப்பின் வடிவாக வெளிப்படுத்திக்கொண்டிருப்பவளே
விஜய சாமுண்டேஸ்வர்யை
சண்டன்,சாமுண்டன் என்ற அரக்கர்களை சம்ஹரித்து வெற்றி செல்வியானவளே
யோகின்யை
சிவன் ஆதியோகின்னா அவனில் பேர் பாதியா இருக்கும் அவளும் யோகினி தானே
யத்ன கார்ய சித்திப்ரதாயை
முயன்ற காரியம் சித்தியடைய /வெற்றியடைய உதவுபவளே..

print

1,522 total views, 1 views today

5 Comments

  1. ramanan 06/06/2014 Reply
    • S Murugesan 07/06/2014 Reply
  2. Mrs.Nithyaa 04/06/2014 Reply
    • S Murugesan 04/06/2014 Reply
  3. sakthivel 03/06/2014 Reply

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *