ஸ்ரீ அம்மன் சத நாமாவளி :பொருள் விளக்கம் 6

Appu 2அண்ணே வணக்கம்ணே !

இந்த பதிவிலும் ஸ்ரீ அம்மன் சத நாமாவளி -பொருள் விளக்கம் தொடருது.

அதுக்கு மிந்தி ஒரு சின்ன  மேட்டர்.
ஜோதிடம் கற்றுவருபவர்களுக்கு உபயோகமா ஒரு சின்ன வேலை செய்திருக்கன்.சில ஜாதகங்களை அனலைஸ் பண்ணி -ஆடியோவாத்தான் – போஸ்ட் பண்ணியிருக்கன். ஆர்வம் உள்ளவர்கள் டவுன் லோட் பண்ணி தங்கள் ஜோதிட புலமையை இலவசமா  கூர் தீட்டிக்கலாம்.
ஜஸ்ட் ஒரு நாமாவுக்கு பொருள் சொல்ற முயற்சியில ராஜயோக ரகசியமே அவுட் ஆயிருச்சு.கேட்ச் பண்ணிக்கோங்க. சத நாமாவளிக்கு போயிரலாமா?
*பரமந்த்ர சேதினி
பர = பிறரின்  ; மந்த்ர =மந்திரங்கள் ; சேதினி =அழிப்பவள்.அதாவது பிறரின் மந்திரங்களை தாக்கி அழிப்பவளேனு அருத்தம் சொல்லலாம்.
மந்திரத்துல மாங்கா விழாதும்பாய்ங்க. மனம் ஒன்றானால் மந்திரம் தேவையில்லைம்பாய்ங்க. இது ரெண்டையும் க்ளப் பண்ணி ரோசிங்க. அலைபாயும் மனம் மந்திரம் ஜெபிச்சாலும் மாங்காய் விழாது. அதே நேரத்துல மனம் குவித்து சிந்திப்பவர்கள் மந்திரம் சொல்லாவிட்டாலும் மாங்காய் விழும்.
ஒரு வேளை மனம் குவித்து சிந்திக்கக்கூடியவர்கள் மந்திரமும் ஜெபித்தால் ?
ஆக மந்திரம்ங்கறது ஒரு ஃபோர்ஸ்/சோர்ஸ் . பிறர் நம்மை காரணமே இல்லாம வெறுக்கலாம் – நாம நாசமா போகனும்னு நினைக்கலாம். அட மந்திரமே கூட ஜெபிக்கலாம். அப்ப நம்ம நிலைமை என்ன?
அவிக மந்திரங்களை ஆத்தா அட்டாக் பண்ணி ஒன்னும் இல்லாம பண்ணிருவா. இங்கே ஒரு விஷயத்தை ஞா படுத்தனும்..
நீங்க தப்பான ஆளு – எக்ஸ் பார்ட்டி சரியான ஆளுன்னு வைங்க .ஆத்தா பரமந்த்ர சேதினியா உங்களுக்கு வேலை செய்யாம போகலாம். ஆனால் எக்ஸ்பார்ட்டிக்கு கட்டாயமா ஒர்க் அவுட் பண்ணிருவா. ஆகவே சரியான ஆளா மாற பாருங்க.
*பரபல விமர்த்தின்யை
பிறருடைய பலத்தை அழிப்பவள் . மேற்படி நாமாவுக்கு கொடுத்த விளக்கமே போதும்னு  நினைக்கிறேன்.
*பரப்ரம்ஹ ஸ்வரூபினி
பிரம்மனுக்கும் பிரம்மாவுக்கும் வித்யாசம் தெரியுமில்லை.பிரம்மான்னா மும்மூர்த்திகளில் ஒருத்தரு. ப்ரம்ஹம்னா இந்த மும்மூர்த்திக்கெல்லாம் தாத்தா. பிரம்மத்துக்கு உருவம் -நோக்கம் -செயல் இப்படி பலது கிடையாது.படைப்பின் மூலம் – அசைவு -முடிவு எல்லாத்துக்கு காரணமான பவரை பிரம்மம்னு சொல்றாய்ங்க. அந்த பரபிரம்மத்தின் உருவாகவும் அவளே இருக்கிறாள்.
*ராஜ ராஜேஸ்வர்யை
ராஜாவுக்கெல்லாம் ராஜா ஆரோ அந்த ராஜாவுக்கும் ஈ ஸ்வரி  ஆத்தாதான். Eswar(i) ங்கற வார்த்தையில swarங்கறதை மட்டும் ஆராய்ச்சி பண்ணா பதவி ஏற்றுக்கொள்/பட்டம் சூடிக்கொள்னு அருத்தம் சொல்லனும்.ஆமாவா? இல்லையா?
*சச்சிதானந்த ஸ்வரூபினி
சத்+சித்+ஆனந்தம். சத் =நல்ல/பாசிட்டிவ் ; சித் =மனம் . நல்ல மனதில்  திகழும்  ஆனந்தமும் அவளே
*சூக்ஷ்ம்னா த்வார மத்யாயை
மூக்கோட ரெண்டு துவாரங்கள் தெரியுமில்லையா? இதுல சுவாசம் நடக்கிறதை வலது  புறம்னா சூரிய நாடி -இடது புறம்னா சந்திர நாடின்னு சொல்றாய்ங்க. (இடா,பிங்களான்னும் சொல்வதுண்டு).
எச்சரிக்கை:
பெண்கள் விஷயத்துல இந்த செட் அப் தலைகீழா மாறுதுங்கோ.
சுவாசம் இது ரெண்டுலயும் மாறி மாறி நடக்கும். மனசு அலைபாய்வது குறைய குறைய சுவாசத்தின் வேகம் குறையும்.மனசு ஒரே பாய்ண்ட்ல “ஜாம்”ஆயிருச்சுன்னு வைங்க. சுவாசமே நின்னுரும். அந்த நேரம் சுவாசம் இன்னொரு வழிக்கு பை பாஸ் ஆயிருது.அதான் சூக்ஷ்ம்னா நாடின்னு சொல்றாய்ங்க.
எட்டுங்கற எண்ணை தலையில தட்டி மல்லாக்க போட்டு ,காலால  லெஃப்டுக்கு ஒரு உதைவிடுங்க.
இப்படியே மேல மேல  நிறைய எட்டுக்களை  ஒன்னு மேல ஒன்னா  லேண்ட்  ஆக செய்தாச்சுன்னா அதான் முதுகெலும்பு.
எட்டுல இருக்கிற ரெண்டு பூஜ்ஜியங்கள் வழியா நிறைய கேபிள் கனெக்சன்லாம் இருக்கு. ஒன்னு அவுட் கோயிங் -அடுத்தது இன் கமிங்குனு அனாட்டமி சொல்லுது.
யோக சாஸ்திரத்துல மேற்படி 2 பூஜ்ஜியத்துக்கும் இடையில ரெம்ப மைன்யூடா ஒரு பூஜ்ஜியம் இருக்கிறதாவும் அதுவழியாத்தான் குண்டலி ட்ராவல் பண்ணுதுன்னும் சொல்றாய்ங்க.
இதான் சூக்ஷ்ம்னா துவாரம். துவாரம்னா துளைன்னு அருத்தமில்லிங்ணா. கதவுன்னு அருத்தம். மனசிலாயி?

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *