ஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம்: 5

41x23அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடத்தை விட பரிகாரம் பவர் ஃபுல்.பரிகாரத்தை விட பக்தி பவர் ஃபுல். பக்தியை விட பக்தி செலுத்தப்படும் ஆத்தா பவர்ஃபுல். அந்த ஆத்தாவ விட நாமதேன் பவர் ஃபுல்.

ஏன்னா நாம நினைச்சா (உங்களையும் சேர்த்து சொல்றேன் பாஸூ) ஆத்தாவையே கிண்கினி முழங்க நம்ம வீட்டுக்குள்ள அலைய விடலாம். (கொஞ்சம் தம் கட்டி இந்த நாமாக்களை பொருள் உணர்ந்து ரோசிங்க போதும் )

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி -பொருள் விளக்கம் தொடருது.

51.மார்க்கண்டேய வரப்ரதாயை
மார்கண்டேயனுக்கு வரம் கொடுத்தவளே -மார்க்கண்டேயன் கதை தெரியுமில்லை? அது சரி மார்க்கண்டேயனுக்கு வரம் கொடுத்தது சிவன் தானே. இதுல ஆத்தாவ மார்கண்டேயனுக்கு வரம் கொடுத்தவளேன்னு எப்படி சொல்றது? இதானே கேள்வி. அய்யா சாமி மாரே.. அர்த நாரீஸ்வரர்னா என்ன? 50-50 .ஐயா கொடுத்தாலும் அது அம்மா கொடுத்தமாதிரி.அம்மா கொடுத்தாலும் அது அய்யா கொடுத்தமாதிரி ஓகேவா உடுங்க ஜூட்டு.

52.மஹா மாயா ஸ்வரூபின்யை
மாயா..ங்கற வார்த்தைக்கு பொருள் சொல்லனும்னா இருக்கிறாப்லயே இருக்கும்.ஆனால் இருக்காது- இருக்காது ஆனால் இருக்கிறாப்லயே ஒரு ஃபீல் ஆகும்னு சொல்லலாம்.. இந்த விதிக்கு சம கால உதாரணம் சொல்லனும்னா மோடி அலையயை சொல்லலாம்.
சாதாரணமா மாயாங்கற வார்த்தைய ஜேஜிக்கும் -பக்தனுக்கும் இடையில் தடையா இருக்கக்கூடிய வஸ்துவா சொல்வாய்ங்க.
இங்கே பார்த்தா அந்த மாயா ரூபத்துல இருக்கிறதே ஆத்தாதான். மாயா ஸ்வரூபினியும் அவளே ஞான ஸ்வரூபினியும் அவளே.
அவளே அவளை மறைக்கும் மாயாவாகவும் இருக்கிறாள்.அவளே அந்த மாயாவை கிழித்தெறியும் ஞானமாகவும் இருக்கிறாள்.

53.மோஹின்யை
இதன் வேர் சொல் மோகம். மோகிக்க செய்பவள் மோகினி. ஆதி யோகி சிவன். மரணம் கோலோச்சும் இடுகாட்டில் வசிப்பவன். பிணங்களை எரித்த சாம்பலையே பூசி ,பாம்புகளை அணி கலனாய் அணிந்து பேயாட்டம் போடும் பேயாண்டி.அவரையே ஜொள் விடவைக்கனும்னா என்னா மாதிரி கவர்ச்சி இருக்கனும்.

53.மீனாக்ஷ்யை
மீன் போன்ற கண்கள் கொண்டவள் . தூங்காத கண்களை கொண்டது மீன். ஆத்தாவும் BPO கணக்கா நைட் ட்யூட்டி பார்க்கிறவளாச்சே. ( நன்றி: வாரியார்)

54.மஹோதர்யை
பெரிய வயிறு கொண்டவள். அத்தனை உயிர்களையும் பெறுபவளும் அவளே. விழுங்கி முடிப்பவளும் அவளே.

55.மணி த்வீப பாலிகாயை
த்வீபம் = தீவு ,பாலிகா = ஆள்பவள். எல்லாம் சரி மணி த்வீபம் எங்க இருக்கு? மணி பூரகம்னா? ஊஹூம். ஒரு வேளை சஹஸ்ராரத்தை ஒரு தீவா சொல்லியிருக்கலாம்.

56.மஹிஷாசுர மர்த்தினியை
மஹிஷம் =எருமை எருமை தலை கொண்ட அசுரனை கொன்றவளே.எருமைத்தலைங்கறது உருவகம். எருமை போன்ற அசமஞ்சனா இருந்த பார்ட்டிய போட்டுதள்ளியிருக்கலாம். ( நமக்குள்ளயும் ஒரு எருமை இருக்குங்கோ..அதான் ஈகோ -அதை சம்ஹாரம் பண்ண சொல்லி கேட்போமே

57.நித்யாயை
புனரபி மரணம் -புனரபி ஜனனம் . உறங்குவது போலும் சாக்காடு -உறங்கி விழிப்பது போலும் பிறப்பு -இதெல்லாம் நமக்குத்தேன்.ஆனால் ஆத்தா ? நெவர் . அதனாலதேன் அவள் நித்யா.

58.ஓம்கார ரூபின்யை
இதை பத்தி எழுதனும்னா ரெம்ப கஷ்டம்.சொம்மா.. ஓஷோ சொன்ன ஒரு வரியை சொல்லி அம்பேல்.
“ஓம் உங்களால் உச்சரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. உங்களில் ஒலிப்பது. கேட்கப்பட வேண்டியது”
அந்த ஓம் என்ற ஒலிக்கு உருவம் கொடுத்தா அதான் ஆத்தா.

59.பாசாங்குச தாரின்யை
பாசம் =(எம) பாசம் , அங்குசம் = ஆனைய ஹேண்டில் பண்றாய்ங்களே அது பாஸூ. இதை எல்லாம் கையில வச்சிருக்கறவள்.
இப்பல்லாம்  இலங்கையில கூட ஆத்தா நிராயுதபாணியாதான் வராள். மிஞ்சிப்போனா பெப்பர் ஸ்ப்ரே.

60. பஞ்ச தசாக்ஷர்யை
சமஸ்கிருதத்துல உள்ள அம்பது எழுத்துக்களாவும் இருக்கிறவள்னு அருத்தம். சகலத்திலும் இருப்பவள்,சகலமாக இருப்பவள். (தெலுங்குல சகலம்னா-உடைந்த-முறிந்த- பாகங்கள்னும் ஒரு அர்த்தம் வருது) நாம நம்ம பேட்சுல உள்ள உதவாக்கரைய ஸ்க்ராப் னு சொல்றமே அந்த ஸ்க்ராபும் ஆத்தாவோட உருவம் தான்.

61.பூர்ணாயை
பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை தின்னிருப்பிங்க. அரிசி மாவுல கன்டெய்னர்.அதுக்குள்ளாற ஷுகர் லெவல்ஸை விலைவாசி கணக்கா உயர்த்தக்கூடிய இனிப்பு.அதை கூட பூரணம்னு சொல்றாய்ங்க. அதுவும் சேர்ந்ததுதான் கொழுக்கட்டை.

சகலத்திலும் -சகலமாவும் இருக்கிற ஆத்தா கொழுக்கட்டைக்குள்ள பூரணமா இருக்கமாட்டாளா என்ன?

பாய்ண்டுக்கு வந்தா பூரணம்னா முழுமைன்னு அருத்தம். இங்கே உள்ள ஆண்,பெண் எல்லாமே அரைகுறை . ஆணில் பெண்மை குறைவு ,பெண்ணில் ஆண்மை குறைவு .

ஆனால் ஆத்தாவுல டெஃபிஷியன்சிங்கற பேச்சே கிடையாது. முழுமைன்னா சாதா முழுமை இல்லிங்கோ. முழுமைன்னா அதுலருந்து எதையாச்சும் பிச்சுட்டா அது முழுமையா தொடர முடியாது.

ஆனா ஆத்தா அப்டி இல்லை. கச்சா முச்சான்னு அவளோட மகோதரத்துலருந்து கோடி கோடியா உசுருங்க வந்துக்கிட்டே இருந்தாலும் முழுமையாவே தொடரும் முழுமை.

ஓம் | பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே | பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ||

9 Replies to “ஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம்: 5”

Mrs.nithya

06/05/2014 at 7:17 pm

Very nice..

Reply

Ram

06/05/2014 at 4:53 pm

Super

Reply

piyes

05/05/2014 at 10:32 pm

சகோ!, தஙளுடைய பதிவுகளை ஒரு ஸீக்வன்சா படிக்கணும். பதிவுகள் மாற்றி படிக்கும்போது ரொம்பவும் குழப்புது. வழி சொல்லுங்களேன்.
-peeyes

Reply

  S Murugesan

  06/05/2014 at 3:21 am

  வாங்க !
  என்ன செய்ய .. சித்தன் போக்கு சிவன் போக்கு கணக்கா அப்பப்போ ஸ்பார்க் ஆறத அப்பப்போ அடிச்சு விட்டுர்ரன். என்னையும் தான் குழப்புது.

  பார்ப்பம் ..கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்ட பிறகு ஒரு ஆளை போட்டு வரிசையா போஸ்ட் பண்ண வைப்போம்.

  Reply

sakthivel

05/05/2014 at 12:59 pm

Sacred geography of India, by Diana Eck has very good commentery on this!!

Reply

sakthivel

05/05/2014 at 10:08 am

murugesan iyya,

indha link

Reply

  S Murugesan

  05/05/2014 at 11:16 am

  சக்தி!
  பகிர்வுக்கு நன்றி.பார்க்கிறேன்.

  Reply

sakthivel

05/05/2014 at 10:01 am

mani dweepam anda sarasarangaLaiyum adakiya perandam, bhoomi, sooriya kudumbam, palvazhi mandalam, matra kodanu kodi mandalagalai.. adakiyathu.. indha perandame oru theevaaga varnikka padugirathu… idhu manidweepam

edhai aalbhaval amma!!!

Reply

  S Murugesan

  05/05/2014 at 11:16 am

  வாங்க சக்தி!
  ம்.. நீங்க சொல்ற பொருள் மிஸ்டிக்கா ,அழகா இருக்கு.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *