ஸ்ரீ அம்மன் சத நாமாவளி :பொருள் விளக்கம் 4

1bike27/4/2014
அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல சொன்னாப்ல அல்ட்டிமேட் சொல்யூஷனா ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பொருள் விளக்கத்தையே தொடர்கிறேன்.
41.காளிகாயை
நாம தமிழ்,தெலுங்குல தான் காளினு சொல்றம். சமஸ்கிருத்துல “காலி”  “காலி மா” .தமிழ்ல காலிங்கற வார்த்தைய வசவா உபயோகிக்கிறோம். காலிங்கற வார்த்தையின் வேர் சொல் “கால்” இதற்கு காலம், காலன் என்ற இரண்டு அருத்தம் வருது.
சூல் = கரு , சூலி = கருவுற்றவள், சூலம் =ஆயுதம், சூலி = சூலம் தாங்கியவள். இதை போல காலத்தை காலனை தரித்தவள், தாங்குபவள் காளி.
காலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள் காளி. ராமகிருஷ்ணர் காளி உபாசகர். “சாதகனின் சாதனையின் தீவிரத்தை பொருத்து  அவனது சூழல்,உற்றார் பெற்றோர் ஏன் அரசர்களின் மனம் கூட மாறும்”னு சொல்றாரு.
அடிக்கடி “ஹும்..கலிகாலம்” ” ஹும் கலி  முத்திப்போச்சுங்கறாய்ங்க. ஆனால் காளி நினைச்சா சாதகனை பொருத்தவரை கலியுகத்தை கூட திரேதாயுகமாவோ ,திரிஷாயுகமாவோ மாத்திர்ராள்.
42.காமாக்ஷ்யை
காம =விரும்பத்தக்க , க்ஷ/க்ஷி =கண்கள் உடையவன்/உடையவள்.விசாலாக்ஷி =அகலமான விழிகளை கொண்டவள் ,மீனாக்ஷி = மீனை போன்ற கண்களை கொண்டவள் .
வேணம்னா  தமிழ்ல காமாட்சின்னு தானே சொல்றம். அதனால காம+ஆட்சி = காமத்தை ஆட்சி செய்பவள்/காமத்தை கொண்டு ஆட்சி செய்பவள்னும் அடிச்சு விடலாம்.
43.கன்யகாயை
ஜஸ்ட் 7 பெயர்களுக்கு மிந்தி தான் ஜனன்யைனு படிச்சம். ஜனனி =தாய்.  ஒருத்தி தாயாகிறாள்னா தன் கன்னித்தன்மையை இழந்தாத்தான் தாயாக முடியும். ஆனால் கோடானு கோடி உயிர்களை பெற்ற ஜகத் ஜனனி அதெப்படி கன்னியா இருக்க முடியும்? கன்னியெனில் தாயாக முடியாது – தாய் எனில் கன்னியாக இருக்க முடியாது . என்ன ஒரு அழகான முரண். அரசியல்ல எதிரியை தூற்ற “முரண் பாடுகளின் மொத்த உருவம்”னு சொல்வாய்ங்க.
ஓஷோ சொல்லும் நொடிக்கு நொடி வாழ்தல் சாத்தியமானால் தாயானபின்னும் கன்னியாவே தொடரமுடியும். பல ஆன்டிங்க  இன்னமும் ஸ்டெல்லா மெரீஸ் கணக்கா கொஞ்சி கொஞ்சி பேசறதை பார்க்கிறிங்களா இல்லையா?
ஸ்ரீ தேவி ஆஃப்டர்  ஆல் மனிதப்பிறவி . ஒரு படத்துல என்டிஆருக்கு பேத்தியா நடிச்சு பிறவு அவருக்கே சோடியாவும் நடிச்சாய்ங்க.
நாகேஸ்வர்ராவுக்கு சோடியா நடிச்சதும் அதே ஸ்ரீ தேவி தான். பிறவு நாகார்ஜுனாவுக்கு சோடியா நடிச்சதும் அதே ஸ்ரீ தேவி தான்.
ஒரு மனிதப்பிறவிக்கே இது சாத்தியம்னா  அந்த ஸ்ரீதேவிக்கு பாட்டியை எல்லாம் படைச்ச ஆத்தாவுக்கு எது தான் அசாத்தியம்.  லூஸ்ல உடுங்க.
44.குமார ஜனன்யை
குமாரன்/குமரன் = முருகன் , முருகனை பெற்றவள்
45.காலாயை
கால்= காலம்/எமன் ( ஏற்கெனவே பார்த்திருக்கம்)

46.காலாதீதாயை

காலமாகவும் இருக்கிறா. காலனாகவும் இருக்கிறா. இவற்றிற்கு அதீதமானவளாவும் இருக்கா.

47.கர்ம ஃபல ப்ரதாயை
நம் செயல்களுக்கான பலனை தருபவள்.

48.காம கோடி பீடஸ்தாயை
காமம் =விருப்பம்;   கோடி விருப்பங்களை பீடமாய் கொண்டு வீற்றிருப்பவள். நம் ஒவ்வொரு விருப்பத்தின் மீதும் பீடமிட்டு அமர்ந்திருப்பவள் அவளே. விருப்பங்கள் உழைக்க தூண்டுகின்றன. கருமம் (வினை) செய்ய தூண்டுகின்றன.அதற்கான பலனை தருபவளும் அவளே. அதே சமயம்  விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நாம எடுக்கிற “ஸ்ட்ரெய்ன் “நம்  பூர்வ கருமங்களை  ஒழிக்கின்றன. விருப்பத்தின் உருவில் நம்மை தூண்டி -பூர்வ கருமங்களை ஒழிக்கவும் அவளே உதவுகிறாள்.

49.லலிதா பரமேஸ்வர்யை
நாம தமிழ்ல கலைகளை  நுண்கலைகள், மென் கலைகள்னு சொல்றமில்லையா அதை போல தெலுங்குல லலித களலுன்னு சொல்வாய்ங்க. லலிதம் ங்கற வார்த்தைக்கு மென்மையான,அழகான இப்படி அர்த்தம் சொல்லலாம்.
பரம =அல்ட்டிமேட்? முழுமையான (பரம திருப்தி -பரமானந்தம்) இகம்-பரம்ங்கற கோணத்துல பார்த்தா அவ்வுலக/இவ்வுலகத்துக்கு வெளியிலான , ஈஸ்வரி = தலைவி
ஆக மென்மையான பரலோக தலைவி?

50.லீலா வினோதின்யை
லீலா = ஒரு நோக்கமும் அற்ற செயல்? வினோதம் =புதுமை /பொழுது போக்கு . இந்த படைப்புக்கோ -படைப்பின் போக்கிற்கோ எதாவது நோக்கம் இருக்குனு நம்பறிங்களா? ஊஹூம். எல்லாமே ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் – போய்க்கிட்டே இருக்கு.
பிறவிச்சக்கரத்தை பொருத்தவரை என்னை மாதிரி பார்ட்டிங்க.. எல்லாமே ஒரு பர்ஃபெக்சனை நோக்கி போயிட்டிருக்குன்னு சொல்றம். இந்த பிறவிச்சக்கரத்தின் இலக்கு முக்தின்னு சொல்றம்.
ஆனா  எது எப்பம் வேணம்னா யு டர்ன் எடுத்துக்கலாம்.சொல்லவே முடியாது. ஒரு ஃபேக்டரிய எடுத்துக்கங்க. ஒரு ப்ராடக்ட் ஃபினிஷ் ஆகனும்னா எத்தனையோ ஸ்டேஜை தாண்டவேண்டியிருக்கு. எங்கயோ ஒரு இடத்துல பல்பு வாங்கிட்டா மறுபடி அது ஸ்க்ராபுக்கு போயிருது. அடியை பிடிடா பரதப்பட்டான்னுஆயிருது.
இதெல்லாம் நமக்கு வேணம்னா  வேதனையா இருக்கலாம்,சாதனையா தோனலாம்.ஆனால் ஆத்தாவுக்கு? இதெல்லாம் ஜஸ்ட் ஒரு ஃபன். லீலா.வினோதம் தான்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *